ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு...

Go down

மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Empty மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு...

Post by ayyasamy ram Mon 14 Jul 2014 - 21:46


---மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... A7oY0i2vSK2y3K6wBWEg+index
-
கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல,
தானமும் தான்.
இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும்
கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து
மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு,
மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று.
-
மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும்,
முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை
கொண்டவனாகவும் இருந்தான்.
-
ஒரு நாள் அவன், கிண்ணத்தில் சந்தனத்தையும்,
வாசனை மிகுந்த மாலையையும் எடுத்துக் கொண்டு,
விலை மாது வீட்டை நோக்கி, சென்று கொண்டிருந்தான்.
-
அப்போது, கல் தடுக்கிக் கீழே விழுந்தவன், அடிபட்டு,
தெருவில் மயங்கிச் சரிந்தான். அவனை யாரும்
கண்டு கொள்ளவில்லை. பின், சற்று நேரத்தில் மயக்கம்
தெளிந்து எழுந்தவனுக்கு, விலைமாது மீது இருந்த
மோகம் குறைந்து, தன் மீதே வெறுப்பு வந்தது.
-
அந்நிலையில், அவன் பார்வையில், ஒரு சிவலிங்கம்
தென்பட்டது. கையில் இருந்த சந்தனத்தை சிவலிங்கத்தின்
மீது பூசி, மாலையைச் சார்த்திவிட்டு, வீடு திரும்பினான்.
-
காலகிரமத்தில் அவன் மரணமடைய, அவனை
யமலோகத்தில் நிறுத்தினர் யமதூதர்கள்.
-
அவனின் பாவ, புண்ணிய கணக்கை பார்த்த சித்ரகுப்தன்,
'நீ செய்த பாவங்களுக்கு, அளவே கிடையாது; அத்துணை
கொடும் பாவங்களை செய்துள்ளாய். ஆனால்,
சிவலிங்கத்திற்கு சந்தனம் பூசி, மாலை சாற்றிய ஒரே ஒரு
புண்ணியம் மட்டும் உள்ளதால், அந்த புண்ணிய பலனாக,
இந்திர பதவியில், மூன்று நாளிகை (72 நிமிடங்கள்) நேரம்
இருக்கலாம்...' என்றான்.
-
அதைக் கேட்டதும் அவன், 'முதலில் புண்ணியப் பலனை
அனுபவித்து விடுகிறேன்; அதன்பின், நரக தண்டனையை
ஏற்றுக் கொள்கிறேன்...' என்றான்.
-
அதனால், அவனை இந்திரப் பதவியில் அமர்த்தினர்.
-
கொடும்பாவியான அவன், தானம் கொடுப்பதன்
மகிமையை உணர்ந்து விட்டதால், மனதை, இந்திர
போகங்களை அனுபவிப்பதில் செலுத்தாமல், அந்தப்
பதவியில் இருந்த சிறிது நேரத்தில், தான - தர்மங்கள்
செய்யத் தீர்மானித்தான். உடனே, இந்திர லோகத்தில்
இருக்கும் காமதேனு உச்சைசிரவஸ், ஐராவதம்,
சிந்தாமணி, கற்பக விருட்சம் என அனைத்தையும்,
முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டான்.
-
குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரம் முடிந்ததும்,
யமதர்மனின் முன் நின்று, 'புண்ணியப் பலனை
அனுபவித்து விட்டேன்; நரகத்தை அனுபவிக்க தயார்...'
என்றான்.-

அதற்கு யமதர்மன், 'இந்திரப் பதவியிலிருந்த போது,
நீ செய்த தானத்தின் பலனாக, உனக்கு நரக வாசம்
போய், ஏராளமான புண்ணியத்தை அடைந்து
விட்டாய். அதனால், அப்புண்ணியத்தின் பலனாக,
கொடைவள்ளலான விரோசனனின் மகனாக
மகாபலியாகப் பிறப்பாய்...' என்ற, வரத்தைக் கொடுத்து
விட்டார்.
-
அதன்படியே, அவன் மகாபலியாக பிறக்க,
அந்த மகாபலியிடம் தான், வாமனர் வந்து, மூன்று
அடி மண் கேட்டார்.
-
தானத்தின் மகிமையை விளக்குவதற்காக சொல்லப்
படும் கர்ண பரம்பரை கதை இது. தானம்
கொடுப்பவர்கள், புண்ணியத்தை, கொடுத்து
வைப்பவர்கள். அவ்வாறு கொடுத்து வைப்போருக்கு
தான், வட்டியும் முதலுமாக எல்லாமே திரும்ப
கிடைக்கும். அதனால், நாமும் இயன்றவரை,
அடுத்தவர்களுக்கு கொடுத்து வைப்போம்.
-
----------------------------------------

--பி.என்.பரசுராமன் (வாரமலர்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum