புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புராதனப் பெருமை கூறும் போராப்புத்தூர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:28 pm



உலக வரலாற்றில் விழுமிய நாகரிக்த்தைப் பெற்றவை எனப் போற்ப்படுகின்ற கிரேக்க, ரோமானிய, எகிப்திய, மாயோன் நாடுகளை விடப் பாரதமே பழமைப் பாரம்பரியப் பண்பாட்டினைத் தொன்று தொட்டுவிடாமல் பேணி வருகிறது என்பது அகிலம் அறிந்த உண்மை. கீழ்த்திசை நாடுகளில் தோராயமாக கி.பி. முதலாம் நூற்றாண்டு முதலே தமிழர்களின் பாரம்பரியம் பதிவாகி இருக்கிறது.

ஆசியாவில் மிகப் பெரும் பரப்பளவிலான தீவுகளைக் கொண்டிருக்கும் நாடு இந்தோனேஷியா! கேட்டாலே பிரமிப்பீர்கள். 13,677 தீவுகளைக் கொண்ட நாடு! சுமத்ரா, ஜாவா, கலிமந்தான், கலாவசி, இரியான் ஜெயா, நூசா தெங்காரா, பாலி ஆகிய தீவுகள் - 19 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டு திகழ்கின்றன. பனி படர்ந்த மலைச் சிகரங்களையும் குமுறிச் சீறி எழும் எரிமலைகளையும் கொண்டிருந்தாலும் இந்தோனேஷியா வளம் கொழிக்கும் நாடு. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் தென்னக இந்து மன்னர்களின் ஆதிக்கத்தில் இருந்தது! 16ம் நூற்றாண்டில் டச்சுக் காலனித்துவ ஆட்சி இந்தோனேஷியாவில் காலூன்றும் வரை கீழ்த்திசை வட்டார, நாடுகள் தமிழக ஆளுமையிலும் கலாச்சாரத்திலும் கட்டுண்டிருந்தன. அந்தச் சுவடுகள் இன்னும் நீடித்தே இருக்கின்றன.

தமிழக மீனவர்கள் அண்டை நாட்டின் அடாவடி அச்சுறுத்தல்களால் இன்று அவதிப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் அன்று தமிழ்நாட்டின் ராஜராஜசோழனின் வலுவான கடற்படை கீழ்த்திசை நாடுகளைக் கடற்கொள்ளையர், ஆக்கிரமிப்பாளர்கள் ஆகியோரிடமிருந்து பாதுகாப்பு வழங்கி வந்தது! அது ஒரு பொற்காலம்! எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் வலுவான திறன் பெற்றிருந்த பேரினமாகத் தமிழர் பேரரசு அரசுரிமை வகித்த சகாப்தம்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் ஜோக்ஜாகர்த்தா நகருக்குச் சுற்றுலாச் சென்றபோது போராபுத்தூரைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தலைநகர் ஜாகர்த்தா வருகிற சுற்றுப்பயணிகள் தவறாமல் காணச் செல்கின்ற இடம். அந்த இடத்தை மீண்டும் போய்க் காண விழைந்ததற்கு காரணம் "இந்தோனேஷியாவில் தமிழர் மரபு' என்ற எனது நூறுக்கு மேலும் சில தகவல்களைப் பெறவே. இந்தத் தடவை மனைவி, மகள், மாப்பிள்ளை, மகன், பேரப்பிள்ளைகள் சகிதம் போராப்புத்தூர் நகர் போய்ச் சேர்ந்தோம்.

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜாக்கர்த்தாவிலிருந்து 42 கிலோ மீட்டரில் (25 மைல்) மத்திய ஜாவாவில் ஜோக்ஜாகர்த்தா, சுராகர்த்தா நகர்கள் இருக்கின்றன. இந்தக் கர்த்தா என்ற அடைமொழிப் பெயர்கள் வரக் காரணகர்த்தா யாரென்று விசாரித்த போது அன்று அவர்கள் மொழியில் சமஸ்கிருத, தமிழ்ச் சொற்கள் பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்ததே! அந்தச் சொற்களை வைத்தே நம் பூர்வீக அடையாளங்களையும் அறிந்துகொள்கிறோம்! பிரதான அல்லது தலைமை நகர் என்பதைக் குறிப்பது இந்தக் கர்த்தா அடைமொழி!

ஜோக்ஜாக் நகரிலிருந்து பழம் பெரும் ஆலயங்கள் இருக்கும் போராப்புத்தூர் 42 கி.மீ. வாடகைக் காரில் வருவதாயின் இந்தோனேஷிய ரூப்பியா இரண்டரை லட்சம் அல்லது யு.எஸ். டாலர் பத்து! அதனை அடுத்து, போராப்புத்தூர் கட்டுமானங்களைக் காணத் தனிக் கட்டணம்! அந்தக் கட்டணத்தில் வழிகாட்டியும் இடம்பெற்றிருந்தாலும் அவரைத் தனியே வேறு கவனிக்க வேண்டி இருந்தது! கட்டணம் செலுத்திச் சீட்டு வழங்கியவர்ளை அடையாளர் காட்டுவதற்காகப் போலும் சீருடை போன்ற துண்டை இடையில் கட்டிக் கொள்ளக் கொடுத்தார்கள். அதனை அணிந்துகொண்டு பீடு நடை போட்டோம்!

போராப்புத்தூர் நகர் வந்தது போன்று, மேலும் ஒரு மணி நேரம் காரில் பயணம் செய்தால் பெரம்பனான் சிவன் ஆலய வளாகத்தை அடையலாம்! அதன் வரலாறே தனி! அங்கே மறுநாள் போகத் திட்டமிட்டிருந்தோம்! அந்த ஆலயங்களைக் காண்பதற்கும் தனியே கட்டணம் கட்ட வேண்டும்.

போராப்புத்தூரில் வழிகாட்டிகள் புத்தரின் வரலாற்றை விலாவாரியாக விவரித்ததைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டே சென்றோம்! ஆனால் அருகில் இருக்கும் பெரம்பனானுக்குப் போனால் நம் நாட்டில் இருப்பது போன்ற வானளாவிய கோயில்கள், கோபுரங்கள், சிவன், நந்தி, கணபதி, திருமால், அம்மன், பிரம்மா விக்கிரகங்கள், சிற்பங்கள் ஆகியவற்றைக் காணும்போது எங்கோ காஞ்சிபுரத்தில் வந்திறங்கியதுபோல் கண்டு அகம் மகிழலாம்! புத்தரின் அவதாரம் பற்றிய செய்திகளை வழிகாட்டிகள் அப்படியே நெட்டுருப் போட்டது போல் மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்கள்! ராமாயணம், மகாபாரதம் சிற்பங்களின் பின்னணிகளைச் சுருக்கிப் புரியும் விதத்தில் கூறுவதென்றாலும் எளிதல்ல! சுற்றுப்பயணிகள் "ஆஹா... அப்படியா?' என்று கேட்டுக்கொண்டே போகிறார்கள். முதலில் போராப்புத்தூரைப் போய்ப் பார்ப்போம்!

முக்திலாங், மேகலாங் சிற்றூர்கள் அருகேதான் இடிபாடுகளுடன் இருந்தன போராப்புத்தூர் ஆலயங்கள். பெயர்களைக் கவனித்தீர்களா? மேகலாங் - மேக மண்டல ஆலயம்! முக்திலாங் - முக்தி தரும் ஆலயம்! போராப்புத்தூர் என்றால் மலை நகர்! கற்றறிந்த அன்பவர்கள் இன்னும் பொருத்தமான விளக்கங்களை இந்த பெயர்களில் இருந்து பெயர்த்தெடுத்து விரிவுரைக்க முடியும் (வைக்கோல் போர் என்பது குவிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பது! குன்றுகள் கொண்ட ஊர் என்பதையே போர் குறிப்பதாகக் கருதலாம்!) உண்மையில் இந்த வட்டாரமே வான் மேகங்கள் தவழும் மலைகளும் நெல் வயல்களும் சூழ்ந்த வளமான ஊர்.

15 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்த இடங்களுக்குச் சென்றிருந்தேன். முன்னர் வந்த போது சரியான சாலை வசதிகள் இல்லை. படிகளில் ஏறிச் சென்று தள வரிசைகளில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைக் காண விரும்பினாலும் அவைச் சீர்குலைந்து இடிந்து சரிந்து விழும் நிலையில் பலவீனமாக அப்போது இருந்தன. பல நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதால் காலத்தின் தாக்கத்தின் விளைவினாலும் பருவ மழை,நில நடுக்கம், எரிமலை வெடிப்பில் வெளிப்பட்ட கந்தகச் சாம்பலின் படிமங்களினாலும் பரிதாப நிலையில் அப்போது இருந்தன. சிலைகள் யாவும் மண்ணும் தூசியும் படிந்து உருத்தெரியாமல் பாதிக்கப்பட்டிருநதன. இந்த அழகான அரும் பெரும் கலைக் கட்டுமானங்கள் மண்ணோடு மறைந்து போய் விடுமோ என்ற ஆதங்கம் காண்போர் ஒவ்வொருவருக்கும் ஏற்படவே செய்தன. அப்படி நிகழவும் செய்தது! 1960களில் எரிமலைச் சாம்பலில் பல ஆலயங்கள் புதையுண்டு போயின! அதனை மீண்டும் மீட்கும் பெரும் பணியை யுனெஸ்கோ மேற்கொண்டது. மாபெரும் ஆலயக் கட்டுமானங்கள் ஆங்காங்கே கவனிப்பாரற்று இடிபாடுகளுடன் சிதறுண்டு கிடப்பதை இன்றும் காண முடியும்!

இப்போதும் கூட ஜோக் நகரிலிருந்து கிழக்கே 9 கி.மீ. வரும்போது, கலசம் என்ற இடத்தில் பூர்வ மார்த்தாணி என்ற கிராமத்தில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பீஸ்வரி (சாம்பசிவ ஈஸ்வரி) என்ற ஆலயத்தை அகழ்ந்து எடுத்திருப்பதாக ஓர் அதிகாரி தெரிவித்தார். 1966ல் ஒரு விவசாயி மண்ணைத் தோண்டியபோது புதையுண்டிருந்த இந்த ஆயலத்தைக் கண்டுபிடித்தாராம். இந்த ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கம் இருக்கிறது. அதே போன்று பெரம்பனான் அருகே நெல் வயல் ஒன்றில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புத்தர் ஆலயமும் குறிப்பிடத்தக்கது. பெரம்பானின் வடகிழக்கே ஒரு மைல் தொலைவில் பிளாஸான் கோயில்தான் அது! இப்படி ஆங்காங்கே இன்னும் விடப்பட்ட வரலாற்றுச் சுவடுகள் வெளிப்பட்டு வருகின்றன!

இந்த உலகத்தில் நிலையின்மையே நிலையற்றது எனக் குறுந்தொகையில் "நில்லாமையே நிலையற்றாகலின்' எனக் கூறப்படும்போது இந்த ஆலயங்கள் மட்டும் நிலைத்து நிற்பது உண்மையில் விந்தையே! மண்ணில் புதையுண்டு போன ஆலயங்களை மீட்டு எடுத்துக் காண்போரைப் பிரமிக்க வைக்கும் விந்தையைச் செயல்படுத்தியவர் சிங்கப்பூரைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர்! இவ்வுலகில் எல்லாமே நிலையற்றவை என நம் இலக்கியங்களும் இறைஞானமும் அறிவுறுத்துகின்றன. ஆயினும் நில நடுக்கமும் எரிமலையும் சூழ்ந்த பகுதியில் அந்த ஆலயங்கள் அவற்றின் தாக்கத்தினால் தவிடு பொடியாகாது தாக்குப் பிடிக்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம் என்ன? அன்றைய வலுவான கட்டுமானத் தொழில் நுட்பத்தில் தமிழர்கள் பெற்றிருந்த பொறி இயல் திறனே! அந்தப் பேராற்றலுக்குச் சான்றாக அந்தக் கட்டுமானங்கள் திகழ்கின்றன! இன்னும் அவை நம் காலத்திலும் நிலைபெற்றிருப்பது நாம் செய்த பெரும் பேறே!

கி.பி. 732ஆம் ஆண்டில் சஞ்சயா என்ற இந்து மன்னன் புரோகா, ஓபெக் ஆகிய இரு நதிகளின் கரையில் மாதரம் என்ற ராஜ்யத்தை அமைத்து ஆட்சி நடத்திய காலத்திலேயே போராபத்தூர் ஆலயக் கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. கி.பி. 750ல் புத்த சமயத்தில் நாட்டம் கொண்ட சைலேந்திர மன்னன் சஞ்சயாவை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். சஞ்சயா அங்கிருந்து தப்பி வேறு ஓர் இடத்தில் தனது ஆட்சியை நிறுவினான். சைலேந்திராவின் வாரிசுகள் பின்னர் சஞ்சயா அரச குடும்பத்துடன் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்! எதிரும் புதிருமாக இருந்த இரு மன்னர்கம் சம்பந்திகளான பிறகு இருவரும் இணைந்து நாட்டை வளப்படுத்தினார்கள். போராப்புத்தூர் புத்த செல்வாக்கையும் பெரம்பனான் இந்து சமய வெளிப்பாட்டுடனும் வியப்பூட்டும் கலைநுட்பத்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதன் பின்னர் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதும் லயத் திருப்பணிகள் தடங்கலின்றித் தொடர்ந்தன. இதன் பிரம்மாண்டமான பணி இன்று போலவே அன்றும் காண்போரைப் பிரமிக்க வைத்தன. சைலேந்திர மன்னன் ஆட்சி காலத்தில், போராப்புத்தூர் கி.பி. 825ல் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. 9 தளங்களில் 2,672 சிற்ப வரிசைகள், 72 ஸ்தூபிகள், வெவ்வேறு பாவனைகளில் 504 புத்தர் சிலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கலைக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

ஸ்ரீசக்ர வடிவத்தில் நான்கு வாயில்களுடன் பதினாறாயிரம் சதுர மீட்டரில் இருக்கும் இந்த ஆலயத்தில் படிப்படியாக உயர்ந்து செல்லும் 9 தளங்களில் இரண்டாம் சுற்றை எட்டும் முன்பே தலை சுற்றத் தொடங்கிவிடுகிறது! நடை தள்ளாடும்! இதையெல்லாம் சமாளித்து மேலே ஒன்பதாவது தளக் கோபுரச் சிகரத்தைத் தொட்டுவிட்டால் அதுவே பௌத்த சம்பிரதாயப்படி நிவாண நிலை! நமக்கு அதுவே மோட்சத்திற்கான மார்க்கம்! ஆனால் அடைய முடியவில்லையே!

இந்தப் பிரம்மாண்டமான வளாக வட்டாரம் ஒரு நூற்றாண்டு காலம் அப்படியே அம்போ எனக் கைவிடப்பட்டு ஊரே காலியாகிவிட்டது! மிகப் பிரம்மாண்டமான சிவ, விஷ்ணு ஆலயங்களைக் கொண்டிருந்த அருகிலிருந்த பெரம்பனான் என்ற ஊரும் கவனிப்பார் இன்றிப் போனது. பரபரப்பாகத் திகழ்ந்த போரா வட்டாரம் திடீரென்று ஓரம் கட்டப்பட்டுவிட்டது! குமுறிக் கொட்டிய பல டன் எரிமலை மணலிலும் சாம்பலிலும் ஊரே புதையுண்டது. பின்னர் அடர்ந்த காடு மண்டி அந்த ஆலயங்கள் இருந்த இடம் காணாமலே போனது விந்தைதானே! எரிமலைப் பேரிடர்கள் ஏற்படுத்திய இழப்புகளும் பட்ட அல்லல்களும் கூறி மாளாது! மக்கள் அங்கே குடியிருக்க அஞ்சி உயிர் பிழைத்தாலே போதும் என்று நடையைக் கட்டினர்! அந்த வட்டாரத்தைக் கைவிட்டு அகன்று மேற்கு நோக்கிப் போய்விட்டனர் என்று கூறப்படுகிறது.

இந்தப் பகுதி பல நூறு ஆண்டுகள் மக்கள் சஞ்சாரமே இல்லாததால் அடர்ந்த வனமாகிவிட்டது. ஆளில்லாத ஊரில் அரசாட்சி ஏது? மத்திய ஜாவாவில் இருந்த அரச நிர்வாகம் மேற்கு ஜாவாவிற்கு மாறிவிட்டது கி.பி. 920 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போராப்புத்தூர், பெரம்பனான் வட்டாரங்கள் ராக்காய் பிக்காதான், ராக்காய் பாலிதுங் ஆகியோரின் ஆட்சி நிர்வாகத்தில் இயங்கத் தொடங்கிய போதே அந்தப் பகுதி வெறிச்சோடிப் போனது! பெரம்பனான், ராகு பொக்கோ, மெந்தூட், பாவொனி ஆகிய பகுதிகள் 10ஆம் நூற்றாண்டில் ஆள் அரவமற்று, அடர்ந்த வனாந்திரமாக மாறிவிட்டன.

அப்போது பெரும்பாலான சிற்பங்களும் ஆலயச் சொத்துக்களும் சூறையாடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் போயிருந்தன. இயற்கையின் தாக்கத்தினால் நேர்ந்த பேரிடர்களினாலும் மண் மேலாக மறைந்து போக இருந்த நிலையில் பாதுகாத்து உதவியவர்கள் டச்சு, ஐரோப்பியக் காலனித்துவ ஆட்சியாளர்களே. சிங்கப்பூரைக் கண்டுபிடித்து பிரிட்டிஷாரின் ஆளுமைக்குள் கொண்டுவந்த சர் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் (1716-1826) மணலில் புதைந்து மனித சஞ்சாரமற்ற வனப் பிரதேசமாக மாறி இருந்த போராப்புத்தூர் ஆலயங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். ஜாவாவில் பிரிட்டிஷ் கவர்னராக இருந்த அவர் 1814ல் செமராங் பகுதியில் பயணம் செய்தார்.

அப்போதுதான் அந்த ஆலயங்களைக் கண்டுபிடித்து அகழ்ந்து எடுத்து வெளிப்படுத்தினார். "இந்தியாவிற்கு வெளியிலே இவ்வளவு பிரம்மாண்டமான மனித உழைப்பில் உருவான கலைப் படைப்பை என் வாழ்நாளில் கண்டதே இல்லை' என்றார் ராபிள்ஸ் பெருந்தகை.

"மனித குலத்தின் மிகச் சிறந்த கலைப் படைப்புகளை நாம் பெற்றிருக்கிறோம். அவற்றைக் காத்திட வேண்டும்' என்று இந்தக் கட்டுானங்களின் சிறப்பை நன்குணர்ந்து, வான் எர்ப் என்ற டச்சுப் பொறியாளர் 1907ஆம் ஆண்டில் உலக நாடுகளுக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபை பௌத்த, இந்து ஆலய வட்டாரங்கள் அனைத்தையும் உலக மரபுடைமைத் திட்டங்களின் கீழ் கொண்டு வந்து சீரமைத்துப் பராமரித்து வருகிறது.

உலகெங்கும் இருந்து அன்றாடம் வரும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இந்தக் கலைப் படைப்பை மட்டுமல்ல அன்றைய தொழில்நுட்பத் திறனையும் பார்த்து வியந்து போகின்றனர்! அதன் பின்னணியில் இருந்தவர்கள் தமிழர்கள் என்னும் போது பெருமிதம் அடைகிறோம்! நம் ஆன்மிகக் கலை ஆற்றலை அறிந்து அவர்கள் மனதார மெச்சும்போது மெய்சிலிர்த்துப் போகிறோம்.

அதுமட்டும் அல்ல, தமிழர்களின் ஆளுமையில் இருந்த உயர்ந்த பாரம்பரியப் பண்பாடும் பரஸ்பர நேயமும் ஆசிய நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கப் பேருதவி புரிந்திருக்கின்றன. ஆட்சி மாற்றங்கள், அரசியல், சமூக சமய வேறுபாடுகள் கால ஓட்டத்தில் நிகழ்ந்தபோதும் தமிழ்க் கலையும் பண்பாடும் காக்கப்பட்டே வந்திருக்கின்றன. இல்லையெனில் அவை இருந்த இடம் எப்போதோ மண்மேடிட்டு மறைந்து போய் இருக்கும்!

- கலையரசு எஸ்.எஸ். சர்மா, சிங்கப்பூர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக