ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

+12
Muthumohamed
கிருஷ்ணா
மாணிக்கம் நடேசன்
jawhar
thesa
ராஜா
ரூபன்
செரின்
sankareeswaran
Tamilzhan
rasan
சிவா
16 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா Sat Feb 21, 2009 11:07 am

ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?
இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!

சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா...

யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா Sat Feb 21, 2009 11:07 am

இதைத்தவிர,

மாரியாத்தா, காளியாத்தா, பச்சையம்மா, சுடலை மாடன், சவுடம்மா, தொட்டம்மா, காட்டேரி, ரத்தக் காட்டேரி, பில்லலு காட்டேரி இப்படி பல பல பெயர் களைக்கூறி ஆடுவதைப் பார்த்திருக்கிறோம்.

இந்த ஆட்டங்களின் போது, சிலர் மற்றவர்களுக்கு நடந்த, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சித்தரிக்கின்றனர். (ஓரிரு வரிகள் மட்டும்). அதை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சம்மதமாக தோன்றும் போது சரியாகிவிடுகிறது. அதாவது கடந்த காலத்தை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார்கள் என கூறுகிறோம்.

சிலர் ஆட்டங்களின்போது, மற்றவர்களை அதிகப்படியாய் துன்புறுத்து வதைப் பார்க்கிறோம். குறிப்பாக பளார் என அறைவது, ஹும்.. பேசாதே! நான் சொல்வதைச் செய் எனக்கூறி.. வேப்பிலை வைத்து ஆடுவதையும், சில நேரங்களில் தன்னைத்தானே வருத்திக் கொள்வதையும் கீறிக்கொள்வதையும், கத்திகையில் ஏந்திக்கொண்டு ஆடுவதையும் கண்டிருக்கிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், சிலர் ஆடும்போது நன்மை ஏற்படுகிறது, சிலர் ஆடும்போது தீமை (காயம்) ஏற்படுகிறது.
இதை வைத்தே மக்கள் நல்ல பேய், கெட்ட பேய் என வகைப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

இந்த நம்பிக்கையில்.. ஆதிவாசியி லிருந்து அல்ட்ரா மாடர்ன் மனிதன் வரை அடக்கம். இங்கே கல்விக்கு, பணத்திற்கு, பட்டத்திற்கு, நாட்டிற்கு, வீட்டிற்கு, ஜாதிக்கு மதத்திற்கு என்று வித்தியாசம் கிடையாது.எல்லா மதங்களிலும் இந்த பேய் அல்லது ஆவி போன்றவற்றின் ஆதிக்கம் அதிக அளவில் ஆளுகை செய்கிறது.

கிறித்தவ மதத்தில், கோயில்களில் ஆராதனை நடக்கும்போதே சில பெண்கள் உளர ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்களை கட்டுப்படுத்த தண்ணீர் தெளித்து- ஜெபித்து அடக்குவதைப் பார்த்திருக்கிறோம்.இதை அசுத்த ஆவி என்கின்றனர்.

முஸ்லீம் நண்பர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தொழுகை செய்யும் பள்ளியிலோ, அல்லது வேறு கூடும் இடங்களிலோ அவர்களுக்கு இதுபோன்று ஆவி வந்து ஆடுவது கிடையாது. ஆனா லும் சில பெண்கள் அல்லது ஆண்கள் வழக்கத்திற்கு மாறாக சேஷடைகள் செய்தால் அவைகளும் அவர்கள் இமாம் அல்லது அசரத் என்ற குருக்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் ஊதி கட்டுப்படுத்துகிறார்கள் (வாய் மூலம் ஊதி அல்லது ஓதி) நல்ல ஆவியை நல்ல ஜானி என்றும், கெட்ட ஆவியை கெட்ட ஜானி என்றும் இவர்கள் அழைக்கிறார்கள்.

ஆக, மொத்தத்தில் அனைத்து மதத்தினரும் பேய், அசுத்த ஆவி அல்லது ஜானி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்..
-இது நடைமுறை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா Sat Feb 21, 2009 11:07 am

கெட்ட ஆவி என்று ஒன்று இருந்தால் நல்ல ஆவி என்று இருக்க வேண்டுமல்லவா?

அது எங்கே இருக்கிறது? இது நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி இந்தக் கேள்வியைக் கேட்டால் தெரியும்! எங்கே? சற்றே சிந்தியுங்கள் பார்க்கலாம்!

கெட்ட ஆவியை படிக்க சுடு காட்டுக்குப் போகவேண்டும் என்றால், நல்ல ஆவியை பிடிக்க வாழும் நாட்டுக்குள் வரவேண்டும்.
சுடுகாட்டில் கிடைப்பது இறந்தவர் சடலம். வாழும் நாட்டில் கிடைப்பது ஜாவிப்பவரின் உடல்.

இப்போது இவற்றின் வித்தியாசம் என்ன என்று சற்றே உள்நோக்கு வோமா?

இறந்தவர் உடலின் உள்ளேயும், கண் மூக்கு, வாய், இதயம், நுரையீரல், வயிறு, கை, கால் போன்றவை இருக்கிறது
ஜாவனுடன் இருப்பவரின் உட லிலும் அதே கண், மூக்கு, வாய், இதயம், நுரையீரல், வயிறு, கை, கால் போன்றவை இருக்கிறது.
இவற்றில் என்ன இல்லை? என்பதுதான் கேள்வி!
அசைவு இல்லை, சலனம் இல்லை.

துடிப்பு இல்லை, நடிப்பும் இல்லை.

ஊக்கமும் இல்லை, ஆக்கமும் இல்லை.

மொத்தத்தில் எதுவும் இல்லை.

அப்படியெனில் இந்நாள் வரை இத்துணை இயக்கங் களையும், நடத்தல், மூச்சு விடுதல், பேசுதல், படுத்தல், இச்சை அல்லது அனிச்சை செயல்கள்- போன்றவற்றை செயல்படுத்த நமது உடலில் எங்கும் வியாபித்திருக்கும் ஆவி ஒன்று இருந் திருக்க வேண்டும் ! அதுதான் ஜாவ ஆவி அல்லது நல்ல ஆவி அல்லது பரிசுத்த ஆவி!
இந்த ஆவி நல்ல விதமான ஆரோக்கியமாக செயல்பட்டு வந்தால் நமக்கு உதவும் ஆவிதான்.

இது நமக்கு எதிராக அல்லது வித்தியாசமாக அல்லது வழக்கத்திற்கு மாறாக செயல்படும்போது அது கெட்ட ஆவி, வேண்டாத ஆவி, அச்சுறுத்தும் ஆவி (இறுதியில் பேய்) என பெயர் பெறுகிறது.
இந்த நல்ல ஆவியின் ஆரோக்கிய நிலை சீர் கெட்டுப்போனால், .... கெட்டுப்போய்விடுகிறது? எதினால் சீர் கெடுகிறது?..

பல நோயினால் இருக்கலாம்!

பல சந்தேகங்களினால் இருக்கலாம்!

பல சூழ்நிலைகளினால் இருக்கலாம் அல்லவா?

உங்கள் மனம் இதற்கு என்ன சொல்கிறது? இது வெறும் அறிவுப்பூர்வமான கேள்வி மட்டும்தானே! இந்த விளக்கம் நல்ல ஆவிக்கும் கெட்ட ஆவிக்கும்; உள்ள வித்தியாசத்தை மட்டுமே தரும் (தத்துவம்)
ஆக, மொத்தம் ஒவ்வோர் உடலிலும் ஆவி ஒன்று (ஜாவ ஆவி) உலாவிக் கொண்டிருக்கிறது. உயிருள்ள வரையில் என்பது தெரிகிறது.

நமது வாழ்க்கை நிகழ்ச்சிகளை, நாம் மறக்க சில காலம் தேவைப்படுகிறது. அதுவரை இறந்தவர்களின் நினைவு வருகிறது. அவ்வளவுதான்.

மாறாக, சிலர் ஒருநாள், நான் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு இருந்தேன். அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தூக்குப்போட்டு இறந்து போனாள் அதன் பிறகு இரவில் தினமும் ச்சல்..ச்சல் என்ற சத்தம் வருகிறது.. அஹாஹா.. என சிரிப்பது, வா..வா.. என அழைப்பது போன்ற ஒலியை கேட்டேன் எனவும் கூறுகின்றனர்.

காரணம், அந்த வீட்டில் போய் படுக்கும்போதே, ஏற்கனவே ஒரு பெண் தூக்குப்போட்டு இறந்தது ஞாபகத்தில் இருக்கும். ஒருவர் மறந்து தூங்கினாலும் அவரின் ஆழ்மனதில் உள்ளே மறைந்து ஒளிந்திருக்கும் பய, அபய குரல் கத்தின கத்து, கூக்குரல் போன்றவை மீண்டும் முன் சுயநினைவுக்கு வந்து, கனவில் தோன்றி.. பாடாய் படுத்திவிடும். இதைத்தான் பேய் வந்து கூப்பிட்டது என்று கூறுகிறோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா Sat Feb 21, 2009 11:08 am

சற்று மாறாக, யோசித்துப் பார்ப்போமா?

கனவில் வந்தது ஓர் அழகிய பெண், வெள்ளை சேலை உடுத்தி தலை முடியை நீண்ட தூரமாய் பறக்கவிட்டு, உங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதைப் போல கனவு கண்டாலோ அல்லது பகல் கனவில் திளைத்துப்போனாலோ- அதை பேய் என்று கூறாமல் மோகினி என்று கூறுகிறார்கள்.

இன்னும் கிராமப்புறங்களில் பெண்கள் ஆடினால் பேய் என்றும், ஆண்கள் ஆடினால் முனீஸ்வரன் என்றும், ரத்த வாந்தி எடுத்தால் காட்டேரி என்றும், அதிகளவி மாதவிலக்குத் தோன்றினால் ரத்தக் காட்டேரி என்றும், ஒருவன் தன் மனைவியை விட்டு மாறிமாறி மற்ற பெண்களுடன் அதிகளவு தொடர்பு கொண்டுவந்தால் மோகினி பிசாசு என்றும், கருச்சிதைவு ஏற்பட்டால் பில்லலு காட்டேரி பிடித்திருக்கிறது என்றும், நீல நிறமாக மாறும் குழந்
தைகள் அல்லது பெரியவர்களாய் இருப்பின் நாகாத்தம்மா, நாகராஜா போன்ற பேய் பிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இயற்கையான மரணத்திற்குப் பிறகு யாரும் பேயாக உலவுவதாக கூறுவதில்லை. ஆனால் துர்மரணம், அகால மரணம், தூக்கு, நீரில் மூழ்கி இறத்தல், கழுத்தை நெரித்து அல்லது அறுத்து, குத்தி, அடித்து கொலை செய்தல், தற்கொலை செய்துகொள்ளல்,
மண்ணெண்ணெய், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லுதல், ரயில் தண்ட வாளங்களில் தற்கொலை, விஷ மருந்து சாப்பிட்டு இறத்தல் போன்ற பல்வேறு யுக்திகளை கையாளுகிறவர்கள் இறந்த பின்னர் மட்டுமே பேய் பிசாசு போன்ற பேச்சே வருகிறது. காரணம், பயத்தால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக அலைக் கழிக்கப்படுகின்றனர். நிஜத்தில் பேய் என்று ஒன்றும் இல்லை.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பார்கள்.

மனம் பயந்து போனால் பேயுமாகலாம்! இதனால்தான் மிரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்று!

-ஒரு பெண் கோயிலுக்குச் சென்றவுடன் ஆடு வதைக்கண்டால்.. அவளுக்கு கற்ர ஆராதனை காட்டி அடக்குவது வழக்கம். காரணம் கற்ரத்தில் உள்ள காம்பா என்ற ரசாயனப் பொருள் அவளின் மூளை செல்லை தூண்டிவிட்டு, பின்பு சரிசெய்கிறது. இது வெறும் ஹிஸ்டீரியா என்று சொல்லப்படுகிற நிலை மட்டுமே!

இந்த ஹிஸ்டீரியா, ரத்த சோகை உள்ள ஆண்- பெண் இருவருக்கும் வரலாம். ஆனால் பெண்களுக்கு அதிகம். ரத்தப் போக்கு என்பது மாதவிலக்கின்போது வெளியாகும். அளவு அதிகமானால் பேய் பிடித்து ஆடுபவர்கள் போல செய்யலாம். அல்லது உளறுவது அல்லது அதிக கோபப்படுவது அல்லது பொருட்களை தூக்கி எறிவது அல்லது தன் குழந்தையைகூட அளவுக்கு மீறி அடிப்பது போன்றவை தோன்றலாம்.

மன விரக்தியினால், கணவனை இழந்ததினால், அல்லது நெருங்கிய உறவினர்கள் இறந்ததினால், நண்பர்களின் மரணம், அல்லது காதல் தோல்வி போன்றவற்றுக்குப் பிறகும் ஏற்படலாம். இவற்றுக்கு எல்லாம் தீர்வு உண்டு. இது விஞ்ஞான காலம்- அஞ்ஞானத்துக்கு இடம் கொடுக்காமல்- மெய்ஞானத்தை அறிந்து கொள்ளல் அவசியம்.

அடுத்து சிலர் குறி சொல்கிறார்களே, நான் தஞ்சாவூரிலிருந்து வருகிறேன், ஆனால் வேலூர் பாலாற்றங்கரையிலே இதைப் பற்றி கரெக்டாக சொல்கிறார்களே எப்படி எனக் கேட்கலாம்!

சிலருக்கு சற்றே ஈ எஸ். பி. மைண்ட் உள்ளது எனக் கூறுகிறார்கள். இதற்கு எக்ஸ்ட்ரா சென்சேஷன் பர்செப்ஷன் என்று பெயர்.
பொதுவாக குறி கேட்க வருபவர்கள் ஒரே வகையான மனோநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குறியில் நம்பிக்கை உடையவர்கள் தாம்.

குறி சொல்பவர்கள் அடுக்கடுக்காக கூறும்பல அறிகுறிகளில் இவர்களுக்கு சரியாக உள்ளதை இவர்களே டிக் அடித்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.சாமி ஆடுதல் என்பது அதிகளவு உணர்ச்சி வசப்படுதல் மட்டுமே! அது வேறுவேறு நிலைகளில் அமைகிறது.

சிலர் பயங்கரமாக மற்றவர்களை அடிப்பது, கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுவது, அழிக்கும் நோக்கத்துடன் ஆடுபவர்களை கேரளாவில் உள்ள சொட்டாணிக்காரா என்ற இடத்திலுள்ள பகவதி கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள சுவற்றில் பேய் பிடித்தவரின் கைகளை வைத்து ஆணி அடித்து விடுவது வழக்கம். பின்பு அவர்கள் தெளீவு பெறுவதும்- பேய் விட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர்.

இது முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை-எனக்கூறலாம். அழிக்கும் குண முடைய பேயை ஒரு சடன் ஷாக்ட்ரிட்மெண்ட் கொடுப்பதன் மூலம் (ஆணி அடித்தல்) வேகமான மென்டல் வைப்ரே ஷன்ஸ் உண்டாகிற சரிசெய்வது ஆகும்.

ஒரு பெண், மூன்று முறை சரியாக மூன்றாம் மாதத்தில் கருச்சிதைவுக்கு ஆளாகிறாள் என்றால், அவளுக்கு பில்லலு காட்டேரி பிடித்திருக்கு- அதை ஓட்டினல்தான் கருதரிக்கும் என்று கூறுவது மடத்தனம்.

மூன்று முறை தொடர்ந்து அபார்ஷன் ஆனால் அது தொடர் அபார்ஷன் என்று பெயர். தைராய்டு போன்ற சுரப்பிகள் மற்றும் ஒவேரியன் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் இதுபோன்ற கருச்சிதைவு தோன்றுவது வழக்கம்.

சரியான காரணத்தை கண்டறிந்து மருத்துவம் செய்தால், பில்லலு காட்டேரி ஓடியே போய்விடும்!

மாதவிலக்கின்போது பெண்களுக்கு சில சமயம் கட்டுப்படுத்த முடியாத அளவு உதிரப்போக்கு தோன்றுமாயின் அது கர்ப்பப்பை கட்டியின் காரணமாகவோ, நீர்ம கட்டியின் காரணமாகவோ இருக்கலாமே தவிர, ரத்தக்காட்டேரிதான் காரணம் என எப்படி சொல்ல முடியும்.

குழந்தை பிறந்தவுடன் பெண்களின் உடம்பில் 75% சக்தி உடனடியாக குறைந்துவிடுகிறது. அது சில மாதங்களில் படிப்படியாக தேற்றப்படுகிறது. இந்த நிலையில் அவள் மனம் (கணவனால்- உறவினரால்- மாமனார்-மாமியார் போன்றவர்களால்) நல்ல மகிழ்ச்சியான நிலையில் இல்லாமல் இருக்குமானால் அந்நேரங்களில் ஹிஸ்டீரியா போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அப்போது நான் எங்கே இருக்கேன்! நீ யார்? என்று கணவனைப் பார்த்துக் கேட்பது போன்றவை தோன்றும். இதை பெர்ப்பியூரல்மேனியா என்றே கூறுகிறார்கள்.

இப்படி பெண்களின் வாழ்க்கையில் பல கால கட்டங்களில் இவர்கள் ரத்தத்தை இழந்து, ஹிஸ்டீரியா போன்ற நிலைக்கு தள்ளப்படுவதினால், பெண்களுக்கு மட்டுமே பேய் பிடிக்கிறது என்ற பட்டப் பெயரையும் கொடுத்துவிடுகிறார்கள். (ஆண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள்)

சில ஆண்கள் குழந்தைகளை அடிப்பதும், உதைப்பதும் (கண்டிப்பு என்ற பெயரில்) கட்டி வைத்து அடிப்பதும்கூட ஆண் ஹிஸ்டீரியாதான்.

மனைவியின் ரத்தத்தை ஊசியில் இழுத்து, பிராந்தியில் குடித்ததாக ஆண்களின் கதைகளைப் படிக்கிறோம். இது ஆண் பேயில்லையா?
பேய் வாங்கி பிசாசுகிட்டே கொடுத்தேன் என்பார்கள். அப்படியானால் பேயை பிடித்துக் கொண்டு வருபவர்கள் யார்?

இனியாவது பெண்கள் பேய் பிடித்து ஆடுகிறார்கள் என்று சொல்லாமல் அவர்கள் ஆடுவதற்கான உண்மையான காரணத்தை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வோமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by rasan Wed Mar 25, 2009 4:57 pm

supperrrrrrrrrrrr sivaaaaaaaaaaaaaa
avatar
rasan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan Wed Mar 25, 2009 5:13 pm

நன்றிகள் சிவா.....பேய் இல்லைனு ஒரு கருத்தை சொல்லி இப்படி பேய் ஆட்டிங்களே...!!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா Wed Mar 25, 2009 5:16 pm

உங்களுக்கு தினமும் பேய் ஓட்ட வீட்டில் மந்திரவாதி(மனைவி) இருக்கிறார்களா? இனிமேல்தான் தேடவேண்டுமா?

பார்த்தால் இன்னும் இல்லையென்றே தோன்றுகிறது, ஏன்னா இன்னும் ரொம்ப சந்தோஷமாவே இருக்கீங்களே?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan Wed Mar 25, 2009 5:38 pm

சிவா wrote:உங்களுக்கு தினமும் பேய் ஓட்ட வீட்டில் மந்திரவாதி(மனைவி) இருக்கிறார்களா? இனிமேல்தான் தேடவேண்டுமா?

பார்த்தால் இன்னும் இல்லையென்றே தோன்றுகிறது, ஏன்னா இன்னும் ரொம்ப சந்தோஷமாவே இருக்கீங்களே?
ஏன் இவ்வளவு வ்ருத்தமா கேட்கிறிங்க.? உங்களுக்கு ஆயிடுச்சா.?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா Wed Mar 25, 2009 6:21 pm

அந்த சோகக்கதையை ஏன் ஞாபகப்படுத்தறீங்க!
சரி சரி அடுத்த டாபிக் என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran Thu Apr 09, 2009 1:02 pm

பேய் என்பது உண்மையா பொய்யா இது ஆராய்சிக்குட்ப்பட்ட செய்தி. ஆனால் என்னை பொருத்தமட்டிலும் இது உண்மையே... தேவுடியாவாக இருந்தாலும் நரு ரோட்டில் அழைத்தால் நான் பத்தினி, உத்தமி, தொட்டால் எரியும் என்ரெல்லாம்..சரி சாமியாடினால் மற்றவர்கள் மதிப்பார்கள்.. இதை சமுக அந்தஸ்தாக கருதியும், வய்ய என்னியவர்கலையும் பழி திர்ப்பதாகவே வைத்துக்கொள்வோம்..!

ஆனால் பேய்யாடிய பெண் நிலை தெரியுமா.. அப்படி இருந்தும் ஆடினால் என்ன காரனம்..? வேண்டும் என் ஆடுகிரார்கலோ.. இல்லை.. இல்லை இதில் நிறைய அனுபவம் உண்டு.. இது ஒரு உனர்வு...செக்ஸ்க்கும் நீன்ட தொடர்பு உண்டு.. 1000 ஏன் 1008 விங்ஙானம் ஒன்ரும் செய்ய இயலவில்லை... ஒரு உடுக்கை சத்தத்தில் அட்க்கி ஒடுக்க முடியும்.. என்ன நம்பிக்கை இல்லையா.. சரி... பேய் பிடித்தவர்கலை கொண்டு வாருங்கள்.. நான் குனப்படுத்துகிரேன்.. இது சத்தியம்.. பொய் சாமி எது உண்மையான் சாமி எது என நான் சொல்கிரேன்.. நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லவே.. என்னை தொடர்பு கொல்ல 0162310890 (அ) sankareeswaran@gmail.com
avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum