புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
89 Posts - 77%
heezulia
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
254 Posts - 77%
heezulia
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_lcapகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_voting_barகிழங்கு வகை சமையல்கள்! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழங்கு வகை சமையல்கள்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 4:50 pm

First topic message reminder :



உருளைக்கிழங்கு அல்வா

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P103

தேவையானவை: உருளைக்கிழங்கு பெரியதாக - 2, சர்க்கரை - அரை கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, பாதாம் எசன்ஸ் - 5 சொட்டு.

செய்முறை: உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்து, கட்டி இல்லாமல் கைகளால் பிசையவும். சர்க்கரையில் மூழ்கும் அளவு நீர் விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொண்டு, கம்பிப்பாகாக காய்ச்சி, பிசைந்துள்ள கிழங்கையும் அதில் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். கெட்டியானதும் சிறிது, சிறிதாக நெய்யை சேர்த்து கிளறி, கடைசியில் சிறிது குங்குமப்பூ சேர்க்கவும். பின்னர் சிறிது ஆறியதும் பாதாம் எசன்ஸ் விட்டு கிளறவும். இது பாதாம் அல்வாவின் ருசியைக் கொடுக்கும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:11 pm

மினி ஆலு மசாலா

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P122

தேவையானவை:[noguest] சின்ன உருளைக்கிழங்கு - 12, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 1, பட்டை - சிறிது, ஏலக்காய் - 1, கிராம்பு - 1 (மூன்றும் சேர்ந்து பொடித்தது) - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, வேகவைத்த சின்ன உருளை - 2, மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளி - அரை நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - கால் டம்ளர், பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு மூன்றையும் சேர்த்து பொடித்த பொடி, சீரகம், மஞ்சள்தூள், வேகவைத்த 2 உருளைக்கிழங்கு (தோல் உரித்தது), வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். புளி + உப்பை 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்து கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போக வதக்கி, தக்காளியையும் சேர்த்து உருத்தெரியாமல் வதக்கவும். பின் மிளகாய்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி பிறகு புளிக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும். வேகவைத்த கிழங்கை அத்துடன் சேர்த்து கிளறி சற்று கெட்டியானதும் இறக்கி, பொடியாக அரிந்த வெங்காயம் + மல்லித்தழை தூவி பரிமாறவும். இது சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட்-டிஷ் ஆகும்.[/noguest]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:11 pm

உருளைக்கிழங்கு-தேங்காய்ப்பால் சொதி

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P123

தேவையானவை: [noguest]பெரிய உருளைக்கிழங்கு - 2, முருங்கைக்காய் (சிறியதாக) - 1, பச்சை மிளகாய் - 7, வறுத்த பாசிப்பருப்பு - கால் கப், தேங்காய் - 1 மூடி, எலுமிச்சம்பழம் - பாதி மூடி, மல்லித்தழை நறுக்கியது - 3 டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 ஆர்க்கு.

செய்முறை: தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பால் என வடிகட்டி எடுக்கவும். முதல் பால் ஒரு டம்ளரை தனியாக வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வறுத்து மலர வேகவைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும், முருங்கைக்காயையும் நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். சிறிது இஞ்சி, பச்சை மிளகாய் + சீரகத்தை உப்பு சேர்த்து அரைக்கவும். காயை மூன்றாம் பாலில் வேகவிடவும். காய் வெந்ததும் இரண்டாம் பால், வெந்த பாசிப்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து வேகவிடவும்.

சற்று கெட்டியானதும் வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அத்துடன் சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும் முதல் பாலை விட்டு நுரை கூடியதும் (கொதிக்கக் கூடாது) இறக்கி எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து கலக்கிவிடவும்.[/noguest]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:12 pm

உருளைக்கிழங்கு ரோஸ்ட்

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P124

தேவையானவை: [noguest]பெரிய உருளைக் கிழங்கு - 3.

அரைப்பதற்கு: மிளகாய்தூள் - 3 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், பூண்டு - 1 பல், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் - கால் கப், கடுகு - அரை டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை: உருளையை தோலுடன் கழுவி, நீளவாட்டில் சற்று கனமான துண்டுகளாக நறுக்கவும். அதில் அரைத்தவற்றை பிசறவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளித்து அதில் பிசறிய துண்டுகளை போட்டு நன்கு சுருள வேகவைத்து எடுக்கவும் (இது பார்ப்பதற்கு ஃபிஷ் ஃப்ரை மாதிரி இருக்கும்). அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்.[/noguest]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:13 pm

சிறுகிழங்கு ரோஸ்ட்

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P125

தேவையானவை: [noguest]சிறுகிழங்கு - கால் கிலோ.

அரைப்பதற்கு: காய்ந்த மிளகாய் - 7 லிருந்து 8, சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, சின்ன வெங்காயம் - 2.

பிசறுவதற்கு: பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

பொரிக்க: எண்ணெய் - ஒன்றரை கப்

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும். சிறுகிழங்கை மண் போகக் கழுவி குக்கரில் 10 நிமிடங்கள் வேகவைத்து, தோலை உரித்து நான்காக நறுக்கவும். அரைத்த விழுதையும் அரிசி மாவு, உப்பையும் கிழங்கு துண்டுகளில் சேர்த்துப் பிசறவும். 10 நிமிடங்கள் கழித்து வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மொறுமொறுவென பொரித்து எடுக்கவும்.[/noguest]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:14 pm

சேப்பங்கிழங்கு மசாலா

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P126

தேவையானவை: [noguest]சேப்பங்கிழங்கு - 15, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 10 பல், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தூள் உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி வேகவைத்து தோலை நீக்கவும். பின் அதை சற்று கனமான வளையங்களாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாட்டில் மெல்லிய தகடுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிப்பவற்றைப் போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் வேகவைத்த கிழங்குத் துண்டுகளையும் சேர்த்து நன்கு சுருள வேகவிட்டு எடுக்கவும்.[/noguest]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:15 pm

உருளைக்கிழங்கு கட்லட்

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P126a

தேவையானவை: [noguest]பெரிய உருளைக்கிழங்கு - 3, பெரிய வெங்காயம் - 1, நறுக்கிய மல்லித்தழை - கால் கப், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தூள் உப்பு - தேவைக்கேற்ப, மைதா மாவு - 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை பொடித்தது - அரை கப், எண்ணெய் - 2 கப்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்து மல்லித்தழை, மிளகாய்தூள், தூள்உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் மசாலாவையும் போட்டு சூடு வரக் கிளறி ஆற வைக்கவும்.

மைதாவை ஒரு கரண்டி நீர் விட்டு கரைத்து கொள்ளவும். மசாலாவை வேண்டிய வடிவில் செய்து, கரைத்த மாவில் நனைத்து பொட்டுக்கடலை மாவில் புரட்டி வாணலியில் எண்ணெயை சுடவைத்து நன்கு சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.[/noguest]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:16 pm

சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P127

தேவையானவை[noguest]: சேப்பங்கிழங்கு - 5-லிருந்து 6, சின்ன வெங்காயம் - 10.

விழுதாக அரைப்பதற்கு: தேங்காய் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 7-லிருந்து 8, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, ஊறவைத்த பச்சரிசி + கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.

தாளிக்க: எ ண்ணெய் - 5 டீஸ்பூன், மிளகு - 10, வெந்தயம் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, கெட்டி மோர் - ஒன்றரை கப் (தேவைப்பட்டால் மஞ்சள்தூள் 1 சிட்டிகை சேர்க்கலாம்)

செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நீளவாட்டில் நறுக்கவும். அரைப்பவற்றை அரைத்தெடுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி கிழங்கையும் சேர்த்து கிளறவும். கடைந்த கெட்டி மோரில் உப்பையும் அரைத்த விழுதையும் கலந்து, வதக்கியதில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து நுரை கூடி வரும்போது இறக்கி விடவும். (மோர் குழம்பை கொதிக்க விடக்கூடாது).[/noguest]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:19 pm

பொட்டேடோ சாப்ஸ்

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P128

தேவையானவை: [noguest]பெரிய உருளைக்கிழங்கு - 2, துருவிய தேங்காய் - அரை கப், மிளகாய் - 10, பூண்டு - 2 பல், பெரிய வெங்காயம் - 2, சோம்பு - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி சற்று கனமான வளையங்களாக நறுக்கவும். தேங்காய், பூண்டு, வெங்காயம், மிளகாய், சோம்பு, உப்பு இவற்றை விழுதாக அரைக்கவும். உருளையை அரைப்பதமாக உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின் அரைத்ததை கிழங்கின் இருபுறமும் நன்கு தடவவும். அடுப்பில் தோசைக்கல்லை சூடு செய்து அதில் 4 அல்லது 5 துண்டுகளாக பரப்பி அதைச் சுற்றி எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும், மறுபுறமும் திருப்பிவிட்டு ரோஸ்டாக வேகவைத்து எடுக்கவும். இவ்வாறு எல்லாத் துண்டுகளையும் வேகவைத்து எடுக்கவும். சூடான சாப்ஸ் ரெடி.[/noguest]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:24 pm

கருணைக்கிழங்கு லைம் மசியல்

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P129

தேவையானவை: [noguest]கருணைக்கிழங்கு - 4 (நடுத்தர அளவு), பெரிய வெங்காயம் - 1, எலுமிச்சம்பழம் - பாதி மூடி, பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், சோம்பு - சிறிது, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, எண்ணெய் - கால் கப், காய்ந்த மிளகாய் - 1.

செய்முறை: கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். எலுமிச்சம்பழத்துடன் மஞ்சள் தூள், 1 டம்ளர் தண்ணீர் கலந்து, அதில் மசித்த கிழங்கை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிப்பவற்றை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி கரைத்த கிழங்கு மசாலாவை அதில் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். கிழங்கு வெந்து அடிப்பிடிக்காமல் சுருள வெந்ததும் இறக்கி பரிமாறவும். செட்டிநாட்டில் மிக பிரபலமான அயிட்டம் இது.[/noguest]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 5:26 pm

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 P130

தேவையானவை: [noguest]சேப்பங்கிழங்கு - 15, மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய் - 2 கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து நீரை வடித்து விடவும். பின் தோலை நீக்கி, நீளவாட்டில் நான்காக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், இந்தக் கிழங்குத் துண்டுகளை சிறிது சிறிதாக சேர்த்து அரைவேக்காடாக பொரித்தெடுக்கவும். பின் எண்ணெயை வடித்துவிட்டு, வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிதங்களைப் போட்டு தாளித்து வறுத்த கிழங்கு, தூள் உப்பு, மிளகாய்தூள், கறிவேப்பிலை சேர்த்து மொறுமொறுப்பாக வேக வைத்து எடுக்கவும்.
[/noguest]
[thanks]விகடன்[/thanks]



கிழங்கு வகை சமையல்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக