ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

+4
ரா.ரமேஷ்குமார்
மாணிக்கம் நடேசன்
பிஜிராமன்
விமந்தனி
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 Empty வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Post by விமந்தனி Sat Jul 05, 2014 12:16 am

First topic message reminder :

தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும்.
9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை


சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.


கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் எனவும், 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர்.  முற்காலச் சோழர்களில் கரிகால் சோழனும், பிற்காலச் சோழர்களில் , முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் ஆண்ட காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது.


இராஜேந்திர சோழன் ஆட்சியில் சோழ சாம்ராஜ்ஜியம் கி.பி. 1030
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 V1Ad4vU6TtISfndl5oV8+map-1050-chola

இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழ சாம்ராஜ்யத்தில் ஆட்சி செலுத்திய அரசர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள்.

கரிகால் சோழன் – இரண்டாம் நூற்றாண்டு.

முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:

முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014

முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1012 – கி.பி.1044:

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:


பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. இறுதியாக சோழ அரசர்களில் முதலாம் குலோத்துங்கனின் ஆட்சிக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.

இனி,

இதில் சோழர்களின் சிறப்பு, இலக்கியம், சமயம் மற்றும் சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள் குறித்து ஆராய்வோம்.


வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 Empty Re: வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Post by T.N.Balasubramanian Wed Aug 20, 2014 2:00 am

பிஜிராமன் wrote:நான் இன்னும் தஞ்சை பெரிய கோவில் சென்றது இல்லை சோகம் .....விரைவில் செல்ல வேண்டும்...

நன்று விமன்தனி தொடருங்கள்..... . புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075132

பிஜி ராமன் , தஞ்சாவூர் பெரிய கோயில் ,எல்லோரும் நிச்சயமாக பார்க்கவேண்டிய கோயில் . முகப்பு வாசலில் முழு விவரங்கள் , கட்டுமானம் , கட்டிய விவரங்கள் பலபல இருக்கும் . ஒன்றையும் தவற விடாதீர் . குறைந்த நேரத்தில் பார்த்து வராதீர் .
பிரதோஷம் அன்று போய் பாருங்கள் . நந்திக்கு அவர்கள் செய்கின்ற அபிஷேகமும் , அதற்கு அவர்கள் கட்டுவிக்கின்ற மேலாடையும் ,
போய் பார்த்தால் தான் ரசிக்க முடியும் . போய் வந்து பதிவிடவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 Empty Re: வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 20, 2014 5:19 am

பெருமைப் படத்தான் முடியும், இன்று வரலாறாக மட்டும் தான் உள்ளது. தொடர் வளர்ச்சியாக இல்லாமல் போய் விட்டதே. இருந்திருந்தால் உலகிலேயே தமிழன் எங்கேயோ இருப்பான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 Empty Re: வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Post by விமந்தனி Wed Aug 20, 2014 2:16 pm

T.N.Balasubramanian wrote:இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன் .
இப்படி செய்து விட்டீர்களே ! புன்னகை 
எல்லோரும் முன்னேறி கொண்டு இருக்கும் இக்காலத்தில் ,
எங்கள் எல்லோரையும்  பின்னேற வைத்து ,
சோழ காலத்திற்கு கூட்டிச் சென்று,
வியக்க வைத்து விட்டீர்கள் . அன்பு மலர்  அன்பு மலர் 
குலோத்துங்கன்  காலத்தில் கம்பன் இருந்ததாக கேள்வி
விரைவாக விரிவாக கூறுங்கள்    .

ரமணியன்


மிகவும் நன்றி ஐயா. குலோத்துங்கன்  காலத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு திருப்திகரமாக எதுவும் கிடைக்கவில்லை. சீக்கிரமே பதிவிட்டு விடுவேன். வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 1571444738


வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 Empty Re: வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Post by விமந்தனி Wed Aug 20, 2014 2:38 pm

மாணிக்கம் நடேசன் wrote:பெருமைப் படத்தான் முடியும், இன்று வரலாறாக மட்டும் தான் உள்ளது. தொடர் வளர்ச்சியாக இல்லாமல் போய் விட்டதே. இருந்திருந்தால் உலகிலேயே தமிழன் எங்கேயோ இருப்பான்.

ஆமாம். இப்போதைய மிச்சம் இந்த பெருமை மட்டும் தான் ஐயா. சென்ற வாரம் கல்லணை சென்றிருந்த போது மனதில் ஏற்பட்ட பெருமைக்கு பெருமூசெரியத்தான் முடிந்தது.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 79xResDTSYqHRMavWrne+Untitled-1


வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 Empty Re: வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Post by அகிலன் Wed Aug 20, 2014 2:52 pm

ஆண்ட தமிழன் அடிமையாகிப்போனான்.
ஆண்டபோது என்ன பாவம் செய்தானோ?


நேர்மையே பலம்
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 Empty Re: வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Post by விமந்தனி Thu Aug 21, 2014 12:59 am

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 NpTURdBdTHKVfDNsf6Yb+270px-Kulothunga_territories_cl
குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு கி.பி 1120

கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர். இவன் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டான்.

சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார். குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையான நில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.

மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன.

சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.


வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 4 Empty Re: வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum