புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
35 Posts - 43%
heezulia
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
33 Posts - 40%
Manimegala
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
1 Post - 1%
jothi64
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
399 Posts - 49%
heezulia
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
27 Posts - 3%
prajai
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 05, 2014 12:16 am

First topic message reminder :

தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும்.
9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் எனவும், 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர்.  முற்காலச் சோழர்களில் கரிகால் சோழனும், பிற்காலச் சோழர்களில் , முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் ஆண்ட காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது.

இராஜேந்திர சோழன் ஆட்சியில் சோழ சாம்ராஜ்ஜியம் கி.பி. 1030
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 V1Ad4vU6TtISfndl5oV8+map-1050-chola

இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழ சாம்ராஜ்யத்தில் ஆட்சி செலுத்திய அரசர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள்.

கரிகால் சோழன் – இரண்டாம் நூற்றாண்டு.

முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:

முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014

முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1012 – கி.பி.1044:

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:

பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. இறுதியாக சோழ அரசர்களில் முதலாம் குலோத்துங்கனின் ஆட்சிக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.

இனி,

இதில் சோழர்களின் சிறப்பு, இலக்கியம், சமயம் மற்றும் சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள் குறித்து ஆராய்வோம்.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 15, 2014 11:05 pm

விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' (கி.பி.871-907 ) என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான்.

திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்கினான்.
முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953)  

கி.பி 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் ஆதித்த சோழனின் மகனான பராந்தக சோழன். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது .

அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான். பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான். போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான்.

பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான். மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் . தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொன் கூறை வேய்ந்தவன்

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 QGvjksUgRBZrc2kRCgQY+darasuram700

இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான்.

இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான். இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன.

இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான்.  

தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களின் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையவில்லை.

ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான்.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.

அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழ்ந்திருந்தது.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 17, 2014 11:08 pm

முதலாம் இராஜராஜ சோழன் - கி.பி. 985 - கி.பி. 1012

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 44jkXNPFRbKc3mEJ33a0+rajarajan

உத்தம சோழன், கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழரின் மகனாவார். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய உத்தம சோழன் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தார். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் (சுந்தர சோழன்) இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவர் 12 ஆண்டுகள் சோழநாட்டை சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.

இவரைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசர் இராஜராஜ சோழன் அரியணை ஏறினார். இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். இவர் சோழர் குலத்தின் மிக வலிமை மிக்க மன்னராவார்.

முதலாம் இராஜராஜ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று “மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு.

இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 18, 2014 2:42 pm

"வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து" - சோழர்களின் ஆட்சியில் சோழ நாடு, சோழவள நாடு என்றே அழைக்கபட்டு வந்தது என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

தஞ்சை பெரிய கோயில் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது இராஜ ராஜ சோழன் தான். இந்த கோயில் 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. தஞ்சைக் கோவிலே, தமிழனின் அதி உச்ச கட்டிடக்கலையின் சான்றாக அமைந்தது. உலக அதிசயங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Hra74h

இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடையின் கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

கிபி 1003'ல் துவங்கி ஆறேழு ஆண்டுகளில் கட்டிமுடித்த ஆச்சரியம் தஞ்சை பெரிய கோயில்! இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம். பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீஸ்வரர் ஆலயம் என்றும் பேர் பெற்றது. (பிரகதீஸ்வரர் என்பது சமிஸ்கிருதப் - பெயர் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில்). இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம்.

தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவர் இராஜராஜ சோழனே.

கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே! இவ்வளவு பெரிய கோயிலுக்கு நந்தி சற்றுச் சிறியதாக இருக்கிறதே! என்று கருதிய நாயக்க மன்னர்கள், ராஜராஜசோழன் வைத்த நந்தியை அப்புறப்படுத்திப் புதிய நந்தியை வைத்தார்கள். முந்தைய நந்தி, பிராகாரத்துக்குள் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும்.

பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் ராஜராஜ சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். ராஜராஜ சோழன் உயிருடன் இருக்கும் போட்தே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர்.

பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது.

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகி விட்டது.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 21, 2014 9:04 pm

முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044:

சோழர்களின்புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவார். இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னர் ஆவார்.

விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார்.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Imayavarman+Rajendran%5B1%5D

முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் பதவி ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.

இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றி உடன் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குல அரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார்.

தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 21, 2014 10:07 pm

நான் இன்னும் தஞ்சை பெரிய கோவில் சென்றது இல்லை சோகம் .....விரைவில் செல்ல வேண்டும்...

நன்று விமன்தனி தொடருங்கள்..... . புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 10:09 pm

பிஜிராமன் wrote:நான் இன்னும் தஞ்சை பெரிய கோவில் சென்றது இல்லை சோகம் .....விரைவில் செல்ல வேண்டும்...

நன்று விமன்தனி தொடருங்கள்.....  . புன்னகை  

நன்றி பிஜி!

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 10:10 pm

கங்கை கொண்ட சோழபுரம்

தஞ்சை பெரிய கோவிலை போல இங்கே கங்கை கொண்ட சோழபுரத்தை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இராஜேந்திர சோழன் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றிருந்தாலும், இம்மன்னரே விரும்பி சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, 'கங்கை கொண்ட சோழன்' என்பதாகும். இவ்விருதின் பெயரிலேயே  இவர் புதிதாக நிறுவிய தலைநகரான “கங்கை கொண்ட சோழபுரம்” ஆகும்.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 Y4cZrsIQvGWShiuCrCIZ+rajendran-1

மேலை கீழைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன.

கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

இராஜேந்திர சோழனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தனவாம். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தார் என்றும்,  சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும் வரலாறு கூறுகிறது.

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்து, தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டி, கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்வித்தார். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்” ஆனது.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 19, 2014 8:00 pm

முடிந்து விட்டதா??

மிகவும் பயனுள்ள திரி.....அழகான நடையில்....வர்ண வேற்றுமையில் மெனக்கெட்டு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 12:19 am

இன்னும் குலோத்துங்க சோழன் இருக்கிறார் பிஜி. அத்துடன் தான் நம் சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வாருகிறது. குலோத்துங்க சோழனை பற்றின தகவல்கள் எதுவும் முழுமையாக கிடைக்கவில்லை.  வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 1571444738

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 20, 2014 1:46 am

இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன் .
இப்படி செய்து விட்டீர்களே ! புன்னகை 
எல்லோரும் முன்னேறி கொண்டு இருக்கும் இக்காலத்தில் ,
எங்கள் எல்லோரையும் பின்னேற வைத்து ,
சோழ காலத்திற்கு கூட்டிச் சென்று,
வியக்க வைத்து விட்டீர்கள் . அன்பு மலர்  அன்பு மலர் 
குலோத்துங்கன் காலத்தில் கம்பன் இருந்ததாக கேள்வி
விரைவாக விரிவாக கூறுங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக