ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

JE (Japanese Encephalitis) வைரஸ்!

3 posters

Go down

JE (Japanese Encephalitis) வைரஸ்!  Empty JE (Japanese Encephalitis) வைரஸ்!

Post by சிவா Thu Jul 03, 2014 6:29 pm

பினாங்கு மாநிலம் தாசேக் கெலுகொர் பகுதியில் 12 வயது மாணவன் ஒருவனுக்கு கொசுக்களின் மூலம் பரவும் ஜேஇ (Japanese Encephalitis) என்ற ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, சுயநினைவு இன்றி ஆபத்தான நிலையில் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த மே 18 -ம் தேதி காய்ச்சல் அதிகமாகி, கப்பளா பத்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இது குறித்து பினாங்கு சுகாதாரதுறை இயக்குனர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராஹிம் கூறுகையில், “அச்சிறுவன் தற்பொழுது சுயநினைவு இழந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் பினாங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இக்கிருமி, பாதிக்கப்பட்ட க்யூலெக்ஸ் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் மிக விரைவாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மேலும், பினாங்கு மாநில அரசு அக்குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள பன்றி பண்ணைகளிலிருந்து அக்கிருமி பரவுகிறதா என தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

அத்துடன், பன்றிப் பண்ணைக்கு இரண்டு கிலோமீட்டர் அருகே உள்ள பள்ளிகளில் இந்த நோய் குறித்து ஆய்வு நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்துள்ளனர்.


Last edited by சிவா on Mon Jul 21, 2014 3:43 am; edited 3 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

JE (Japanese Encephalitis) வைரஸ்!  Empty Re: JE (Japanese Encephalitis) வைரஸ்!

Post by சிவா Thu Jul 03, 2014 6:29 pm

பினாங்கில் 2 வயது சிறுமிக்கு ஜெஇ வைரஸ்!

கியூ லெக்ஸ்’ எனும் ஒரு வகை கொசுக்களால் ஏற்படும் மூளை வீக்கம் நோய், பினாங்கில் ஏற்கனவே சிறுவன் ஒருவனைத் தாக்கியிருந்த நிலையில், தற்போது 2 வயது சிறுமியையும் தாக்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாகான் ஜெர்மாலில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்த போது அவருக்கு ஜெஇ வைரஸ் தாக்கியுள்ளது கண்டரியப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 24 -ம் தேதி, எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அச்சிறுமிக்கு ஜெஇ வைரஸ் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என பினாங்கு மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராகிம் தெரிவித்தார்.

கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த ஜூன் 13 -ம் தேதி, அச்சிறுமி செபராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கவலைக்கிடமான நிலையில் பினாங்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அச்சிறுமியில் நிலை ஓரளவு அபாயக்கட்டத்தை தாண்டியவுடன் கடந்த ஜூன் 18 -ம் தேதி பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இதனிடையே இந்நோயின் தாக்கம் குறித்து கருத்துரைத்த சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், பன்றி, குதிரை போன்ற விலங்குகளிலிருந்து பரவும் இக்கிருமி, ‘கியூலெக்ஸ்’ எனும் கொசு கடிப்பதன் மூலம் மனிதர்களிடையே பரவுகிறது என்றும், இந்த நோய்க்கான காய்ச்சல் அறிகுறிகள் எளிதில் புலப்படுவதில்லை என்றும் நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் மலேசியாவில் இது நாள் வரை இந்நோய்க்கு 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 4 மரண சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்றும் சுப்ரா குறிப்பிட்டார்.

மலேசிய சுகாதார அமைச்சு, மலேசிய கால்நடை துறையுடன் இணைந்து இந்நோயைக் கட்டுப்படுத்த பல தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் சுப்ரா தெரிவித்தார்.


JE (Japanese Encephalitis) வைரஸ்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

JE (Japanese Encephalitis) வைரஸ்!  Empty Re: JE (Japanese Encephalitis) வைரஸ்!

Post by விமந்தனி Thu Jul 03, 2014 11:38 pm

கடவுளே! இதென்ன புது வைரஸ் கிளம்புகிறதே...? சோகம் 


JE (Japanese Encephalitis) வைரஸ்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonJE (Japanese Encephalitis) வைரஸ்!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312JE (Japanese Encephalitis) வைரஸ்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

JE (Japanese Encephalitis) வைரஸ்!  Empty Re: JE (Japanese Encephalitis) வைரஸ்!

Post by ஜாஹீதாபானு Fri Jul 04, 2014 5:17 pm

அதிர்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

JE (Japanese Encephalitis) வைரஸ்!  Empty Re: JE (Japanese Encephalitis) வைரஸ்!

Post by சிவா Mon Jul 21, 2014 3:44 am

ஜப்பானிய என்செபலிடிஸ் - 12 நாட்களில் 49 பேர் பலி

சிலிகுரி: திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கத்தில், கடந்த, 12 நாட்களில், 'ஜப்பானிய என்செபலிடிஸ்' எனப்படும் மூளை வீக்கத்தால் ஏற்படும் காய்ச்சல் நோயால், 49 பேர் இறந்துள்ளனர். மேலும், 41 பேர் நோய் பாதிப்பால், சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், ஒன்பது பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை என, எதிர்க்கட்சிகள்தெரிவிக்கின்றன.


JE (Japanese Encephalitis) வைரஸ்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

JE (Japanese Encephalitis) வைரஸ்!  Empty Re: JE (Japanese Encephalitis) வைரஸ்!

Post by சிவா Mon Aug 04, 2014 2:18 am


வட மேற்கு வங்கத்தில் மூளையழற்சி நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 121-ஐ எட்டியது

‘ஜப்பான் மூளையழற்சி’ நோய் எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்காள மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இருவர் இறந்துள்ள நிலையில் மேலும் நான்கு பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க சுகாதாரத்துறை சேவைமைய இயக்குனர் பிஸ்வரஞ்சன் சத்பதி தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் இந்நோயால் பலியாகியுள்ள 20 பேரையும் சேர்த்து, ஜனவரி மாதம் தொடங்கி இந்த வருடம் மட்டும் 141 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது வட மேற்கு வங்கத்தில் உள்ள ஏழு மாவட்டங்களின் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்த மருத்துவத்துறை அதிகாரிகள் கொல்கத்தாவில் இந்நோய் யாரையும் தாக்கவில்லை என்று தெரிவித்தனர்.


JE (Japanese Encephalitis) வைரஸ்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

JE (Japanese Encephalitis) வைரஸ்!  Empty Re: JE (Japanese Encephalitis) வைரஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum