ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று.... ஜூலை

+6
Syed Sardar
ayyasamy ram
ஜாஹீதாபானு
Dr.S.Soundarapandian
Aathira
விமந்தனி
10 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by விமந்தனி Tue Jul 01, 2014 9:42 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Dbfv5gd7QOKBZ5sqXrye+July-1

1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.

1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.

1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.

1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.

1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.

1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது.

1876 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.

1881 - உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.

1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.

1921 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1932 - ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.

1933 - சீனர்களின் குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது.

1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.

1960 - இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.

1960 - கானா குடியரசானது.

1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது.

1962 - பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி விடுதலை அடைந்தது.

1967 - ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது.

1970 - அதிபர் யாஹ்யா கான் மேற்கு பாகிஸ்தானில் மாகாணங்களை அமைத்தார்.

1976 - மடெய்ரா தீவுகளுக்கு போர்த்துக்கல் சுயாட்சியை வழங்கியது.

1978 - அவுஸ்திரேலியாவின் வட மண்டலம் அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.

1979 - சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.

1990 - கிழக்கு ஜெர்மனி டொச் மார்க்கை தனது நாணய அலகாக ஏற்றுக் கொண்டது.

1991 - பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.

1997 - மக்கள் சீனக் குடியரசு ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.

2002 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

2002 - தெற்கு ஜெர்மனியில் இரண்டு விமானங்கள் வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

2004 - காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.

2006 - கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.


வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by ஜாஹீதாபானு Wed Jul 23, 2014 12:59 pm

தொடர் பகிர்வுக்கு நன்றி விமந்தினி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by விமந்தனி Wed Jul 23, 2014 3:03 pm

ஜாஹீதாபானு wrote:தொடர் பகிர்வுக்கு நன்றி விமந்தினி

நன்றி பானு!


வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by விமந்தனி Thu Jul 24, 2014 12:01 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 24

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Mp79QUrWSkuIy7oAMrWn+July-24

1505 - போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.

1567 - இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஜேம்ஸ் மன்னனாக்கப்பட்டான்.

1911 – பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார். இது பழைய இன்கா பேரரசின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்டது.

1915 - சிக்காகோவில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 845 பேர் உயிரிழந்தனர்.

1923 - கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.

1924 - பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்டது.

1931 - பென்சில்வேனியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

1943 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1969 - அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

1974 - சைப்பிரசில் துருக்கியரின் படையெடுப்பின் பின்னர் சைப்பிரசின் இராணுவ அரசு கவிழ்க்கப்பட்டு, நாட்டில் மக்களாட்சி மீளமைக்கப்பட்டது.

1977 - லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1982 - ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர்ர் கொல்லப்பட்டனர்.

1991 - இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

2001 - கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளிளால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.

2007 - லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.


வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by T.N.Balasubramanian Thu Jul 24, 2014 5:37 am

புதிய தினம் உதயமாகும் நேரத்தே
உங்கள் பதிவும் உருவாகிறது ,
உங்கள் தொழில் பக்தி,
பாராட்டப் பட வேண்டிய ஒன்று , விமந்தினி !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by விமந்தனி Fri Jul 25, 2014 12:02 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 25

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Q6cUUxewR5mgbekbhcsJ+July-25

1261 - கொன்ஸ்டன்டீனபோல் நகரை நிக்காயர்கள் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர்.

1547 - இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினான்.

1593 - பிரான்சின் நான்காம் ஹென்றி புரட்டஸ்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினான்.

1603 - ஸ்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்தானியாவின் முதலாவது மன்னனாக முடி சூடினான்.

1799 - எகிப்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 ஒட்டோமான்களை சமரில் வென்றான்.

1868 - வயோமிங் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1894 - முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.

1898 - புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்பு ஆரம்பமானது. முதலாவது
அமெரிக்கப் படையினர் குவானிக்கா துறைமுகத்தில் தரையிறங்கினர்.

1907 - கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் வந்தது.

1908 - அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.

1925 - சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது.

1934 - ஆஸ்திரிய அதிபர் எங்கல்பேர்ட் டொல்ஃபஸ் நாசிகளினால் கொலை செய்யப்பட்டார்.

1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் இடம்பெற்ற நோர்மண்டி சண்டையில் 5,021 கனேடியர்கள் கொல்லப்பட்டனர்.

1973 - சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.

1983 - கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1984 - சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற ரஷ்யாவின் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1993 - இஸ்ரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது.

1993 - மண்கிண்டிமலை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.

1993 - தென்னாபிரிக்காவில் சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் 11 மதகுருக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

1994 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையில் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948ம் ஆண்டு முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.

1997 - கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும்.

2000 - பிரான்சின் கொன்கோர்ட் சுப்பர்சோனிக் விமானம் பாரிசில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்லப்பட்டனர்.

2007 - பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.


வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by விமந்தனி Fri Jul 25, 2014 12:13 am

T.N.Balasubramanian wrote:புதிய தினம் உதயமாகும் நேரத்தே
உங்கள் பதிவும் உருவாகிறது ,
உங்கள் தொழில் பக்தி,
பாராட்டப் பட வேண்டிய ஒன்று , விமந்தினி !

ரமணியன்


நன்றி ஐயா! அப்படியும் ஒரு சில நாட்களில் கடை பிடிக்க முடியாமல் போய்விடுகிறது.... சோகம் சோகம்


வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by விமந்தனி Sat Jul 26, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 26

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 CHsQiDcQR9el3m65wHbc+July-26

811 - பைசண்டை பேரரசன் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.

1139 - முதலாம் அபொன்சோ போர்த்துக்கல்லின் முதலாவது மன்னனாக முடிசூடி லெயோன் பேரரசில் இருந்து விடுதலையை அறிவித்தான்.

1788 - நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.

1803 - உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.

1847 - லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1848 - மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.

1891 - டெஹீட்டி பிரான்சுடன் இணைந்தது.

1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் உக்ரைனின் லுவிவ் நகரை நாசிகளிடம் இருந்து கைப்பற்றினர். அந்நகரில் இருந்த 160,000 யூதர்களில் 300 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது வி-2 ஏவுகணை பிரித்தானியாவைத் தாக்கியது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போட்ஸ்டாம் என்ற இடத்தில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றிற்கிடையில் போட்ஸ்டாம் உடன்பாடு எட்டப்பட்டது.

1945 - ஹிரோசிமாவில் போடப்படவிருந்த அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிஸ் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டினியான் தீவை அடைந்தது.

1952 - எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் இரண்டாம் புவாட் மன்னன் ஆக்கப்பட்டான்.

1953 - கியூபா பூரட்சி: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

1956 - அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.

1957 - குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.

1957 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1958 - எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.

1963 - மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1965 - மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.

1971 - அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.

1974 - ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.

1994 - எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின்
முடிவெடுத்தார்.

2005 - டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.


வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by விமந்தனி Sun Jul 27, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 27

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 0FgCG1K2RwOoF4fc6YkR+July-27

1214 - பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.

1549 - பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.

1627 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.

1794 - பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.

1862 - சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.

1865 - வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.

1880 - இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.

1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

1929 - மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை

1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.

1953 - கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும்,
உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

1955 - ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.

1975 - விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1983 - வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1990 - திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.

1997 - அல்ஜீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 - உக்ரைனின் லுவிவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீதூ வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.

2007 - பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.


வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by விமந்தனி Mon Jul 28, 2014 10:09 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 28

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 MNedV5pGRQWpgf16atm4+July-28

1493 - மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

1540 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தொமஸ் குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மணந்தான்.

1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து.

1609 - பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர்.

1794 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.

1821 - பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1914 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன.

1915 - ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.

1945 - அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

1957 - ஜப்பானின் இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் கொல்லப்பட்டனர்.

1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.

1976 - சீனாவில் டங்ஷான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 242,769 பேர் கொல்லப்பட்டனர். 164,851 பேர் காயமடைந்தனர்.

1996 - வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2005 - ஐரியக் குடியரசு இராணுவம் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக் கொண்டு வருவதாக அறிவித்தது.

2005 - இங்கிலாந்து, பேர்மிங்காம் நகரைச் சூறாவளி தாக்கியதில் £4,000,000 பெறுமதியான சொத்துகக்ள் சேதமடைந்தன. 39 பேர் காயமடைந்தனர்.

2006 - ஈழப்போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.


வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by ayyasamy ram Mon Jul 28, 2014 11:02 am

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று.... ஜூலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum