புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
69 Posts - 41%
heezulia
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
3 Posts - 2%
manikavi
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
2 Posts - 1%
prajai
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
320 Posts - 50%
heezulia
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
22 Posts - 3%
prajai
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
3 Posts - 0%
manikavi
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புயல் ஒன்று பூவானது Poll_c10புயல் ஒன்று பூவானது Poll_m10புயல் ஒன்று பூவானது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயல் ஒன்று பூவானது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 5:39 pm


இன்ஸ்பெக்டர் குமார் அவசரமாக, ஸ்டேஷனுக்குள் நுழைந்தவன், ''முருகேசன்...'' என்று, சத்தமாக கூப்பிட்டான்.

''எஸ் சார்.''

''நான் இல்லாதப்ப யாராவது வந்தாங்களா?''

''ஆமா சார்; நம்ப தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தக்காரர்ன்னு சொல்லி, ஒருத்தர் வந்தாரு. நீங்க இல்லன்னதும் ஏதோ போன் போட்டாரு; அப்பறம் போய்ட்டாரு சார்.''

''அந்தாளு, வெட்டுக்கிளிய பாத்தானா?''

''இல்ல சார்; தூக்கத்துல எழுப்பவேண்டாம்ன்னு போய்ட்டாரு.''

இன்ஸ்பெக்டர் குமார், லாக்கப் அறைப்பக்கம் சென்றான். ஒரு கண்ணில் கட்டு போடப்பட்டிருந்த வெட்டுக்கிளி என்ற அந்த ரவுடி, தூங்கிக் கொண்டிருந்தான். களைப்பினால்   அல்ல; முதல் நாள் இன்ஸ்பெக்டர் குமார் கொடுத்த அடி, உதையின் தாக்கத்தினால், மயக்கம் கலந்த தூக்கத்தில் இருந்தான்.

''அந்த பேப்பர்ல கையெழுத்து போட்டானா?''

''மொதல்ல போடமாட்டேன்னு சொன்னான் சார். அப்பறம், இன்னொரு கண்ணையும் பஞ்சர் பண்ணிடுவாருன்னு சொன்னதும், போட்டுட்டான்.''

''குட்; முதல்ல போட்ட எப்.ஐ.ஆர்., காப்பிய எடுத்துக்கிட்டு வாங்க,'' என்றவன், அடுத்த நாள் காலை, வெட்டுக்கிளியை கோர்ட்டில் ஒப்படைக்க ஏதுவாக, பைல் தயார் செய்ய ஆரம்பித்தான்.

அப்போது, அவனது மொபைலிலிருந்து, 'அச்சம் என்பது மடமையடா...' பாடல் ஒலிக்க, போனை எடுத்தான். அது, அவன் காதல் மனைவி நிஷா.

''ம்... சொல்லுமா.''

''நம்ப ஸ்ரேயா ஸ்கூல்லேர்ந்து வரலிங்க; ஆனா, ஸ்கூல் பஸ் வந்திடுச்சு,'' என்று சொன்ன நிஷாவின் குரலில் பதற்றம்.

அதைக் கேட்டதும், சிறிது அதிர்ச்சியானான் குமார். ஆனாலும், அதை மறைத்து, ''பச்... மொதல்ல எல்லாத்துக்கும் பதட்டப்படறத நிறுத்து; அடுத்த பஸ்ல பாத்தியா,'' என்று கேட்டான்.

''அதுலயும் வரலைங்க.''

''என்னது வரலயா... பஸ்ல வர்ற ஆள்கிட்ட கேட்டியா?''

''கேட்டேங்க; உங்க பொண்ண பாக்கல, லீவுன்னு நெனைச்சேன்னு சொல்றாங்க,'' என்றாள் உடைந்த குரலில்.

''சரி பயப்படாத; எங்கயும் போயிருக்க மாட்டா. ஏதாவது கேம்ஸ்ல இருப்பா; நான் ஸ்கூல கான்டாக்ட் செய்திட்டு, உடனே லைன்ல வர்றேன்; தைரியமா இரு.''

ஸ்கூல் நம்பரை தொடர்பு கொண்டான் குமார். பிரின்சிபிள் மேடம், ''இரண்டு நிமிடம் காத்திருங்க,'' என்று சொல்லி, பின்பு சொன்னாள்... ''சார்... அவ கிளாஸ் முடிஞ்சதும், பஸ்ல போய்ட்டான்னு சொல்றாங்க; இங்க எங்கயும் இல்லயே சார்.''

''அவ வீட்டுக்கு வரலயே மேடம்; ப்ளீஸ் தேடிப் பாருங்க. நான் இப்ப வறேன்.''

சட்டென்று எல்லா வேலைகளையும் விட்டு விட்டு, பள்ளியை நோக்கி புறப்பட்டான் குமார். முருகேசன் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். இடையில் நிஷாவின் அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டிந்தது. போனை எடுத்தால் அவளிடம் என்ன சொல்வது... எடுக்காவிட்டால் நிஷாவின் பயம் அதிகரிக்குமே என்று குழம்பி நிற்கையில், அவனது அலுவலக மொபைல் போனில், ஒரு அழைப்பு வந்தது.

''எஸ்... இன்ஸ்பெக்டர் ஹியர்,'' வண்டியை ஓரங்கட்டினான். ''என்னய்யா குமாரு... டென்ஷனா இருக்கா,'' என்று, நக்கலாக ஒரு குரல் கேட்டது.

''ஏய் யாரு நீ, உனக்கு என்ன வேணும்?''

''ம்... எனக்கு ஒண்ணும் வேணாம்; உனக்குதான் உன் பொண்ணு வேணும். கரெக்டா,'' என்று கேட்டு, சிரித்தது அந்த குரல். அவன் சொல்வதை பார்த்தால்... ஸ்ரேயா ஏதாவது விபரீதத்தில் மாட்டியிருப்பாளோ... ஐயோ கடவுளே! ஏழு வயது குழந்தை என்ன செய்யும்... கை, கால் படபடக்க, பீதியில் உறைந்தான் குமார்.

சில நொடிகள், எதுவும் பேசத் தோன்றவில்லை. இன்னொரு மொபைலில் நிஷாவின் தொடர் அழைப்புகள். குமாரின் மனம் அச்சத்தின் உச்சியில் இருந்தது. நொடிகள் நகர நகர, அவன் மூளை, தற்போது பணிவே துணை என்று, அறிவுறுத்தியது. கஷ்டப்பட்டு மங்கிய குரலில், ''ஹலோ, யாரு நீங்க... எம்பொண்ணு எங்க இருக்கா,'' என்று தணிந்த குரலில் கேட்டான்.

''அட... இன்ஸ்பெக்டர் பம்முறாரே! அதிசயமா இருக்கு. ம்... என்னவோ பெரிய ஹீரோ கணக்கா எல்லார்கிட்டயும் கை ஓங்குற... எவனா இருந்தா எனக்கென்னன்னு திமிரா திரியற... ஹலோ மாமு, ஒண்ணு தெரிஞ்சுக்க... செத்து பொழைக்கறது எங்களுக்கு புதுசில்ல. ஆனா, உனக்கு, உன் பொண்ணுக்கு... ம்...மொதல்ல நான் சொல்றத கேக்கிறியா... இல்ல பருப்பாட்டம், சி.ஐ.டி., வேலை செய்யப் போறியா?'' அந்தக் குரல் கிண்டலும், பயமுறுத்தலுமாக கேட்டது.

''ஐயோ ப்ளீஸ்... நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்; எம் பொண்ணு எங்க இருக்கான்னு சொல்லு,'' என்று கேட்டு, பதறினான் குமார்.

''இப்ப நான் சொல்றத கேளு; உம்மவ எங்ககிட்டதான் இருக்கா. இது வரைக்கும் ஒண்ணும் ஆவல. ஆனா, மவனே... நீ, ஏதாவது போலீஸ் புத்திய காமிச்ச... அப்பறம் பார்ட் பார்ட்டா பார்சல் வரும்,'' போன் குரல் உறுமியது.

''ஐயோ... வேண்டாம்; நீ சொல்லு,'' மீண்டும் பதறினான்.

''நீ உடனே அரைமணி நேரத்துக்குள்ள ஒரு முணு லட்சம் பொரட்டி வை. அப்பறம் நாங்களே உன்னை கூப்டறோம். பயப்படாத... ஆனா, எதுனாச்சும் ரிஸ்க் எடுத்த ஜாக்கிறத...'' மிரட்டிய போன் குரல், கட்டாகியது.

குமாருக்கு தெளிவாக புரிந்தது. யாரோ ஸ்ரேயாவை கடத்தியிருக்கின்றனர். கடந்த மூன்று மாதமாக ஏரியாவில் பல ரவுடிகளை கண்ணில், விரல் விட்டு ஆட்டியிருக்கிறான். அந்த குரூப்பின் வேலையாகக் கூட இருக்கலாம். ஆனால், போனில் எச்சரித்ததுபோல், ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை குமார். ஸ்ரேயாவை சீக்கிரமே காப்பாற்ற வேண்டும். மொபைலில் விடாது நிஷா கூப்பிட, எடுத்தான்.

''என்னங்க... ஸ்ரேயா ஸ்கூல்லதானே இருக்கா?'' என்று, படபடத்தாள் நிஷா.

என்ன பதில் சொல்வது... வேறு வழியின்றி பொய் சொன்னான்.

''பயப்படாத நிஷா, குழந்தைக்கு லைட்டா காய்ச்சலாம்; பக்கத்துல டாக்டர் கிட்ட அழைச்சுகிட்டு போய்ருக்காங்களாம்...''

குமார் முடிக்கும் முன்பே, ''ஐயோ... ஜுரமா,'' என, அலறத் துவங்கினாள் நிஷா. குழந்தை மீது வைத்திருக்கும் பாசம், அவளை அப்படி அலறச் செய்தது. குமார் உணர்வுகளை கட்டுப்படுத்தி, ''தோ பாரு நிஷா பதறாத. நான் இப்ப ஸ்கூலுக்கு போய், கூட இருந்து, குழந்தைய அழைச்சுகிட்டு வர்றேன். புரியுதா... நீயும் பயந்து, மத்தவங்களையும் பயமுறுத்தாத,'' என்றான்.

''எனக்கு என்னவோ மனசு, 'படபட'க்குதுங்க. நானும் வர்றேங்க.''

''உனக்கு அறிவில்ல... அப்ப நான் எதுக்கு போறேன். இன்னும் அரைமணியில குழந்தையோட வர்றேன்.''

போனை துண்டித்தான் குமார். மனைவியை சமாளித்தாயிற்று; அடுத்து மூணு லட்சம் எப்படி புரட்டுவது... அதுவும் உடனே... சட்டென அவன் சமீபத்தில் வாங்கியிருந்த அரைகிரவுண்ட் நிலப்பத்திரம் தன் அலுவலக மேஜையில் வைத்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. நொடியும் தாமதிக்காமல், ஸ்டேஷனுக்கு திரும்பினான். 'சரசர'வென்று, உள்ளே நுழைந்து, தன் மேஜை டிராயரை திறந்தவன், பத்திரத்தை எடுத்தான்.

''என்னாச்சு சார்? நான் ஏதாவது உதவி செய்யணுமா?'' என்று அக்கறையோடு கேட்டார் முருகேசன்.

''ஆமாம். முருகேசன்,

கொஞ்சம் இடைவெளி விட்டு என்னை நீங்க, 'பாலோ' செய்யுங்க. ஜஸ்ட் நடக்கறத மட்டும், 'நோட்' செய்யுங்க. எந்த ரியாக் ஷனும் வேணாம்; எல்லாம் ஒரு சேப்டிக்காக,'' என்று சொல்ல, முருகேசனுக்கு புரியவில்லை; ஆனாலும், ''எஸ் சார்,'' என்றார்.

சட்டென சாதாரண உடைக்கு முருகேசன் மாற, குமார் பத்திரத்தோடு தனக்கு தெரிந்த சேட் வீட்டிற்கு சென்றான். நடுவில் அந்த போன் தகவலையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

சேட் வியந்து, ''என்ன சார் அவசரம்?'' என்றார்.

''பதில் சொல்ல நேரமில்ல; சட்டுன்னு மூணு லட்சம் கொடுங்க. எங்க கையெழுத்து போடணும் சொல்லுங்க,'' என்று, அவசரப்பட்டான்.

அப்போது, வேறு நம்பரிலிருந்து அந்த போன் வந்தது.

''என்ன மாமு... ரெடி செய்திட்டியா, இல்ல வேவு பாக்கறியா?''

''பணம் ரெடி; எங்க வரணும், சொல்லு.''

''பணத்த எடுத்துகிட்டு, நேரா ஊருக்கு வெளியில இருக்கிற முனிஸ்வரன் கோவிலை தாண்டி வர்ற... அங்க ஒரு ஒத்த பனை மரம் இருக்கும். அதுக்கடியில பணத்த போட்டுட்டு, திரும்பி பாக்காம ஸ்கூலுக்கு போ... அங்க உம்பொண்ணு காத்துகிட்டிருக்கும். ஏதாவது சில்மிஷம் செய்த, மவனே... உன் பொண்னோட பாடிதான் கிடைக்கும்.'' அந்த குரல் மிரட்டியது.

''சத்தியமா எதுவும் செய்ய மாட்டேன்; உடனே, வர்றேன்,'' என்று, சொல்லி வெளியே வந்து, காரில் ஏறி, வண்டியை டாப்கியருக்கு தூக்கினான்.

சேட் புரியாமல் நின்றார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில், அந்த மரத்தடியில் பணப்பையைப் போட்டுவிட்டு, ஸ்கூல் நோக்கி பறந்தான்.

ஸ்கூல் வாசலில், ஸ்ரேயா மிரட்சியுடன் தனியாக நின்று கொண்டிருந்தாள். வண்டியில் இருந்து இறங்கிய குமார் ஓடிச் சென்று குழந்தையை அப்படியே வாரி அணைத்து கொண்டான். குழந்தை தேம்ப ஆரம்பித்தது. குமாரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த நேரத்தில் மீண்டும், மொபைலில் அழைத்தாள் நிஷா.

''இதோ, நானும் ஸ்ரேயாவும் வந்து கிட்டிருக்கோம்; பயப்படாத, இந்தா... போனில் ஸ்ரேயாகிட்ட பேசு,'' என்று சொல்லி, குழந்தையிடம் போனை கொடுத்தான். மீண்டும் வண்டி புறப்பட, பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்தான்.

ஸ்ரேயாவை பார்த்ததும், அழுது கொண்டே குழந்தையை கட்டிப்பிடித்துக்கொண்டாள் நிஷா. இனி, அவளுக்கு உண்மை தெரிந்தாலும் பரவாயில்லை.

முருகேசனுக்காக காத்திருந்தான் குமார். அவர் வந்ததும், ''முருகேசன் மாடிக்கு வாங்க,'' என்று, தனியாக அழைத்து சென்றான். பிறகு நடந்தவற்றை கூற, முருகேசன் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார். சிறிதுநேரம் எதுவும் பேச முடியவில்லை; பிறகு முருகேசன் கேட்டார்...

''குழந்தை மேல நீங்க காட்டுற பாசம் இயற்கையானதுன்னு புரியுது சார். ஆனா, அதையும் மீறி, எதுவோ தோணுதே சார். இது மாதிரி சம்பவத்துல ரொம்ப போல்டா கூட வேண்டாம்... ஒரு சாதாரண இன்ஸ்பெக்டரா கூட நீங்க யோசிக்கலயே... ஏன் சார்?'' என்று கேட்டார் முருகேசன்.

''நீங்க நினைக்கிறது சரிதான் முருகேசன். ஆனா, வாழ்க்கைல தொழில்ங்கிறது ஒரு அங்கம். வருமானம் தான், அதுல முதல் குறிக்கோள். குடும்பத்துக்கு ஒரு சோதனை வந்தா, கடமை, தொழில் பக்திங்கிறது அடுத்தபடிதான்; வாழ்க்கை தான் முக்கியம். அதுல நான், ஒரு நல்ல தரமான கணவனா என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்திடிச்சு; அதத்தான் செஞ்சேன். ஒரு இன்ஸ்பெக்டரா யோசிச்சு, ஏதாவது இழப்பு வந்திருந்தா... என் மொத்த வாழ்க்கையும் வீணாய் போயிக்கும். இந்த சம்பவத்துல, நான் ஒரு இன்ஸ்பெக்டரா தோத்திருக்கலாம். ஆனா, ஒரு கணவனா, அப்பாவா ஜெயிச்சிட்டேன்.''

''அப்ப இனிமே உங்க வேலையில பழைய பாணி தொடருமா சார்?''

''கண்டிப்பா தொடரும்; ஆனா, இந்த ஊர்ல இல்ல, வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போகப் போறேன். அங்க இன்னும் பாதுகாப்பா என் வேலையை செய்வேன்,'' என்றான்.

''அப்ப உங்க எதிரிகளுக்கு இது வெற்றியா இருக்குமே சார்?''

''ஆமாம்; இது சினிமா இல்ல; ஹீரோ ஜெயிக்க! யாரு எம்பொண்ண கடத்தினாங்க, எப்படி பணம் இல்லாம மீட்கறதுன்னு நான் யோசிக்காததுக்கு காரணம், இதுல ஒரு பர்சென்ட் தப்பானா கூட, அதனால ஸ்ரேயாவுக்கு சின்ன காயம் வந்தா கூட என் மனைவியாலயும், என்னாலயும் அத தாங்க முடியாது. காரணம், கீழ வாங்க, என் கல்யாண போடடோவ காட்டறேன்... அப்ப புரியும்,'' என்ற குமார் கீழிறங்கி, முருகேசனிடம் அந்த போட்டோவை காட்டினான். அதில் மாலையும், கழுத்துமாக குமாரும், நிஷாவும் இருக்க, நிஷா கையில் ஒரு மழலை!

''சார்... இந்த குழந்தை?'' முருகேசன் ஆச்சரியமாக கேட்க, ''ஆமாம்... நான் காதலிச்சது கணவனை இழந்த, கைக்குழந்தையோட இருக்கற, ஒரு இளம்பெண். இப்ப சொல்லுங்க, இந்த குழந்தை விஷயத்துல நான் கூடுதல் அக்கறை எடுத்து, பணிந்து போனது தப்பா?'' என்று கேட்டான் குமார்.

உண்மையான காரணத்தை புரிந்து கொண்ட முருகேசனால், பதில் சொல்ல முடியவில்லை.

கீதா சீனிவாசன்

மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Fri Jun 13, 2014 6:18 pm

புயல் ஒன்று பூவானது 3838410834 புயல் ஒன்று பூவானது 3838410834 புயல் ஒன்று பூவானது 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 13, 2014 6:27 pm

பணியை விட பாசம் தான் உயர்வு

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
சம்பத்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Postசம்பத் Fri Jun 13, 2014 7:46 pm

புயல் ஒன்று பூவானது 3838410834 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 13, 2014 10:13 pm

கதை அருமை. கடைசி வரிகள் ஒரு வித அழுத்தத்தை கொடுத்தது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 02, 2014 7:38 pm

சூப்பர் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 02, 2014 10:35 pm

குடும்பத்தின் முன்பு மற்றவை எல்லாமே தூசு தான். கதை அருமை.



புயல் ஒன்று பூவானது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுயல் ஒன்று பூவானது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புயல் ஒன்று பூவானது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக