புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
90 Posts - 71%
heezulia
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_m10சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம்


   
   
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 29, 2014 6:20 pm

சோழன் கால் பதித்த மலேசியக் கடாரம்
மாத்தளை சோமு
இராஜேந்திர சோழன் காலத்தில் எத்தனையோ போர்களைத் தன் ஆட்சிக் காலத்தில் நடத்திய போதும் அவன் வடக்கே சென்று கங்கையையும், கடல் கடந்து கடாரத்தையும் வெற்றி கொண்டமைதான் அக்கால மக்கள் மனதையும், புலவர்கள் மனதையும் கவர்ந்து நின்றன.
கல்வெட்டுக்கள் பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்று அவனைப் புகழ்ந்தன. கலிங்கத்துப் பரணியில் புலவர் செயங்கொண்டார்,
களிறு கங்கை நீ கருண்ண மண்ணையில்
காய்சினத் தொடே கலவு செம்பியன்
குளிரு தெண்டிரைக் குரைக டாரமுங்
கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும்
என்றும், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்,
தண்டேவிக்
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
கங்கா புரிபரந்த கற்பகம்
என்றும்
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர் கோன்
என்றும் இராஜேந்திரனைப் புகழ்ந்தனர்.
சோழன் கடாரம் வென்றது வரலாறு. வீசும் காற்றை நம்பிக் கப்பலை ஓட்டிக் கடாரம் போய்ச் சேர சில நூறு நாட்களாவது ஆகும். அவ்வாறு போய்ப் புதிய தேசத்தில் போர் செய்வது சுலபமானதன்று. ஆயினும் இதனைச் செய்ய நாடு பிடிக்கிற நோக்கத்திற்கு அப்பால் வேறு காரணங்கள் வலுவாய் இருப்பதாக வரலாறு கூறுகின்றது.
சோழர் காலத்திலும் தமிழரின் வர்த்தகம் கடல் தாண்டி நடந்திருக்கிறது. கடாரம் எனும் பகுதியிலும் கடல் தாண்டிய வாணிகம் மேலோங்கி அரபு, சீனா வர்த்தகர்களின் வர்த்தகச் சந்தையும் அவர்களோடு தமிழ் வர்த்தகர்களின் வர்த்தகமும் கொடி கட்டிப் பறந்தன.
தொடக்கத்தில் சோழ ராச்சியமும் கடார ராச்சியமும் தம்முள் நட்புக் கொண்டிருந்தன. ஆனால், காலப் போக்கில் கடாரத்தை ஆண்டு வந்த ஸ்ரீவிசய நாட்டின் அதிகாரிகள் தமிழ் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டதை ஒற்றர்கள் மூலமும், வர்த்தகர்கள் மூலமும் அறிந்த சோழ மன்னன் இராஜேந்திர சோழன் கடல் வழியே படையெடுப்பைக் கடாரத்தின் மீது மேற்கொண்டு கடாரத்தை வென்றான்.
கடாரம் சோழ மன்னன் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழரின் கடல் தாண்டிய வர்த்தகம் மட்டுமல்ல; வேறு நாட்டவர்களின் வர்த்தகமும் தடையின்றி நடந்தது. கடாரம் என்ற கடற்கரைப் பிரதேசத்தைப் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பட்டினப்பாலையில்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்
என்ற வரிகள் சொல்லப்படும் காழகம் என அதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் கருதினார். காழகம் எனத் தமிழின் சங்க இலக்கியம் சொன்ன நிலமே கடாரம் ஆகும். அந்தக் கடாரமே இன்று மலேசியாவின் மேற்குக் கரையின் தென்பக்கத்திலுள்ள கெடா மாநிலமாகும். அக் கெடா மாநிலத்தில் சோழன் ஆட்சி செய்ததற்கான சான்றுகளாகப் புராதனச் சின்னங்கள் குவிந்து கிடக்கும் இடம்தான் பூஜாங் பள்ளத்தாக்கு ஆகும்.
பூஜாங் எனும் மலாய் மொழிச் சொல் நாகப்பாம்பினைக் குறிக்கும். புஜங்க எனும் சமஸ்கிருத மொழிச் சொல்லோடு தொடர்புடையதென்றும் மெர்போக், பூஜாங் ஆகிய பெரிய ஆறுகளின் ஓடுபாதை பெரிய ஒரு நாகப்பாம்பின் உருவத்தை ஒத்த காரணத்தால் அந்த ஆறுகள் பாய்ந்து ஓடும் பள்ளத்தாக்கிற்குப் பூஜாங் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
லெம்பா பூஜாங் என மலாய் மொழியில் அழைக்கப்படும் இந்த பூஜாங் பள்ளத்தாக்கு ஏறக்குறைய ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புடையதாகும். அந்தப் பெரிய நிலப்பரப்பில் பாய்ந்து ஓடும் ஆறுகளுள் மெர்போக், பூஜாங், மூடா, சிம்போர், பாசிர் எனப்படும் ஆறுகளும், மெர்போக் கெச்சில் எனப்படும் சிற்றாறும் அடங்கும். மேற்கூறிய ஆறுகளில் மிகப்பெரிய ஆறுகளாக விளங்குபவை கிழக்கிலிருந்து மேற்கில் மலாக்கா நீரிணையை நோக்கிப் பாயும் மெர்போக் ஆறும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடி மெர்போக் ஆற்றோடு கலக்கும் பூஜாங் ஆறுமாகும்.
பூஜாங் வெளியில் ஓடும் ஆறுகளின் கரையோரத்தில் புராதனச் சின்னங்களின் சிதைவுகள் நிறையவே இருக்கின்றன. பூஜாங் பள்ளத்தாக்கு 10-ஆம் நூற்றாண்டில் பன்னாட்டு வணிகர்களின் கப்பல்கள் வந்து நிற்பதற்குத் தோதான துறைமுக வசதிகள் கொண்ட கரையோர நகரமாய் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.


இராஜேந்திர சோழன் தமிழகத்திலிருந்து படை திரட்டி வந்து இந்த இடத்தைக் கைப்பற்றினான் எனறால் அது முக்கியமான இடமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இன்றைக்கு இந்தப் பள்ளத்தாக்கில் கிடைத்து வரும் பழங்காலப் பொருள்கள் இந்தப் பள்ளத்தாக்கு சிற்பக்கலை, நெசவுக்கலை, கட்டடக்கலை முதலியவற்றில் நாகரிகம் படைத்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் ஒரு நாகரிக வெளிப்பாடுகள் நிறைந்த பன்னாட்டுத் துறைமுகமும் அதனை நிர்வகிக்கிற அமைப்பும் இருந்ததைத் தெளிவு படுத்துகிறது.
பூஜாங் பள்ளத்தாக்கை ஒட்டி உணவு உற்பத்தியில் நெல் முதலிடம் வகித்ததையும், இரும்பு, பொன் முதலிய பொருள்கள் கிடைத்துள்ளன என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். காழகம் என்பதில் காழ் எனும் வேர்ச்சொல்லில் உருவானது எனப் பார்க்கிற போது, இரும்பு உற்பத்தியில் பூஜாங் வெளி சிறப்புப் பெற்றிருக்கிறது.
பூஜாங் பள்ளத்தாக்கு 14-ஆம் நூற்றாண்டு வரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமாகவும், செழிப்பும் வனப்பும் நிரம்பிய பகுதியாகவும், கடல் வர்த்தகப் பகுதியாகவும் விளங்கியிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த கடலோடிகளும், வர்த்தகர்களும், பூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தங்கியிருந்தபோது தங்கள் கலாச்சாரத்தையும், மதச் சடங்குகளையும் கடைப்பிடித்திருக்கிறார்கள். இதன் தாக்கம் அக்கால கட்டத்தில் அங்கிருந்தவர்களையும் தழுவியிருக்கிறது.
இந்தியாவிற்கும், சீனாவிற்குமிடையே கப்பல் பயணம் மேற்கொள்கிறவர்கள், வீசும் பருவக் காற்று மாற்றத்திற்காகக் காத்திருக்கவும், ஓய்வெடுக்கவும், பாதுகாப்புத் தேடியும் இப் பூஜாங் பள்ளத்தாக்குத் துறைமுகத்தையே தேர்ந்தெடுத்தனர்.
பூஜாங் பள்ளத்தாக்கில் சைவசமய வழிபாட்டுச் சின்னங்கள், சிதைவுகளில் இருந்து கண்டெடுக்கப்படுவது போல் புத்த மதச் சின்னங்களும் கண்டெடுக்கப் படுகின்றன. கி.பி. 4 முதல் 10-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் புத்தமதத்தைச் சார்ந்தவர்களால் வழிபாட்டுத் தலங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான புராதனச் சின்னங்களும், கலைப்பொருள்களும் சிவன், விநாயகர், துர்க்கை ஆகிய உருவங்களைக் கொண்ட தெய்வச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டு அகழ்வாய்வு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைத்துள்ளனர். சிதைந்த நிலையில் பூஜாங் பள்ளத்தாக்கில் தென்பட்ட முதல் ஆலயம் 1840-இல் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
50-க்கும் மேற்பட்ட சிறு வழிபாட்டுத் தலங்கள் சிதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டன. சாந்தி (சாண்டி) என அழைக்கப்படும் வழிபாட்டுத்தலங்கள், மரணமடைந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக வழிபடவும், மதச்சடங்குகள் மேற்கொள்ளவும் அப்போது பயன்பட்டிருக்கின்றன.
மலாய்ப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைத் தலைவராக 1969&ஆம் ஆண்டில் பொறுப்பேற்றிருந்த டாக்டர் இராம சுப்பையா, மலாய்ப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வு குறித்து ஒரு கட்டுரையை சிங்கப்பூர் தமிழ் முரசு வெளியிட்ட ஆண்டு மலரில் எழுதினார். அதில் அவர், மலாய்ப் பல்கலைக்கழகம் தமிழனுடைய தொடர்பு இந்நாட்டில் எவ்வளவு இருந்தது? அவன் விட்டுச் சென்றது என்ன? என்று கண்டுபிடிக்க விழைந்து 1958&ஆம் ஆண்டு பத்து மாணவர்களடங்கிய குழு ஒன்றைக் கெடாவிற்கு அனுப்பி வைத்தது. இக்குழுவிற்குத் தலைவர்களாக வரலாற்று விரிவுரையாளர்களான எச்.ஏ. லாம், டாக்டர் வாங் கங் வூ ஆகிய இருவரும் சென்றனர்.
இக்குழு கெடா மலையின் தென்பகுதியில் உள்ள பத்துபகாட் ஆற்றின் கரையிலே உள்ள மெர்போக் எனும் கிராமத்தில் தங்கித் தன் வேலையைத் தொடங்கிற்று. இக்குழுவில் நானும் ஒருவனாகச் சென்றேன். பத்து பகாட் ஆற்றங்கரையிலே தோட்டம் ஒன்று கவனிப்பாரற்றுக் காடாக மாறியிருந்தது. எங்களுடைய முதல் வேலை காட்டை அழிக்க வேண்டியதாக இருந்தது.
காட்டை அழித்ததனால், அங்கு தமிழன் கட்டிய கோயிலைக் கண்டுபிடித்தோம். அது பாழடைந்த நிலையில் இருந்தது. அக்கோயில் 40 அடி சதுரமாகவும், கருவறை 20 அடி சதுரமாகவும் அமைந்தது. அக்கோயில் கருங்கல்லாலேயே கட்டப்பட்டிருந்தது. இக்கோயிலுக்கு மற்றும் ஒரு சிறப்பு, குளிர்ந்த நீர்வீழ்ச்சியின் அருகில் இருப்பதாகும். தமிழன் தெய்வத்தையும், இயற்கையையும் எவ்வளவு தூரம் இணைந்து வழிபட்டான் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இக்கோயிலையடைய மூன்று பெரிய தளங்களைக் கடந்து செல்ல வேண்டும். இக்கோயிலின் விமானம் அல்லது மேல்தளம் கருங்கல்லாலேயே கட்டப்பட்டிருந்திருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.
இன்றைக்கு ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளும் நடைபெற்று வரும் பூஜாங் பள்ளத்தாக்கு உருவம் மாறிக் கடற்துறைமுகம் இல்லாது இருக்கின்ற போதும் சோழர்களின் வரலாற்றில் அவர்களின் புகழைக் கடல் தாண்டி உலகறிய வைத்த பூமி. அந்தப் பூமியை அப்போது ஆண்ட கடார மன்னன் சூளாமணிவர்மன், சோழப் பேரரசோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தான்.
சூளாமணிவர்மனின் வேண்டுகோளை ஏற்ற சோழ மன்னன் சோழர்களின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய நாகப்பட்டினத்திற்குக் கடாரத்திலிருந்து வருகை தரும் பௌத்த சமய யாத்திரிகர்களின் நன்மைக்காக சூளாமணிவர்ம விஹாரம் எனும் பெயரில் பௌத்த விஹாரம் ஒன்று கட்டினான். அதனைப் பராமரிக்கச் சோழநாட்டைச் சேர்ந்த ஆனைமங்களம் எனும் ஊரில் விளையும் உணவுப் பொருள்கள் நிரந்தர மானியமாக வழங்கப்பட்டுள்ளன. இது சோழ மன்னரின் செப்பேட்டில் செய்தியாகப் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாகச் சோழ மன்னன் இருந்தபோதும், பிற நாடுகளையும், பிற சமயங்களையும் மதித்துப் போற்றுகின்ற நாகரிகம் மிகுந்தவனாக இருந்தது தெரிய வருகின்றது. இத்தகைய பண்பு கொண்ட மன்னன்தான் சோழநாட்டு வணிகர்களின் நலனுக்காகக் கடாரத்தைக் கைப்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான்.
நாடு பிடிக்கிற நோக்கம் அவனுக்கு இருந்திருக்கவில்லை. ஆக, கடாரம் என்பது ஒரு புராதன நிலம் மட்டுமல்ல, தமிழ் மன்னனான சோழனின் கடற்படைப் பராக்கிரமத்தையும், கடல் தாண்டி ஆட்சி செய்கிற பல்துறை வலுவையும், தமிழ் வணிகர்களையும், தமது நாட்டு வர்த்தகத்தைப் பாதுகாக்கிற நோக்கத்தில் சோழர்கள் காலூன்றியதையும், தமிழரின் பண்பாடு, கலை, வர்த்தகம் கடல்கடந்து வேரூன்றியதையும் காட்டும் அடையாளமாக இன்றைக்கும் இருக்கின்றது.

நன்றி: ஒம் சக்தி பிரசுரம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக