புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
73 Posts - 77%
heezulia
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
238 Posts - 76%
heezulia
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_m10தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:48 am

அம்மா என அழைக்கப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதே பெயரில் ஏராளமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றிலும் இந்தத் திட்டங்கள், வெற்றிகரமாக மக்களைச் சென்றடைந்துள்ளன. அம்மா என்ற பெயரில் ஜெயலலிதா படத்துடன் முன்வைக்கப் படும் இவை, அடித்தட்டு மக்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் மலிவு விலையில் தரமான பொருள்களை விற்கும் இந்தத் திட்டங்கள், அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கும் மறைமுகமாக உதவுகிறது.

அண்மைக் காலமாக விஸ்வரூபம் எடுத்து வரும் அம்மா திட்டங்களின் சிறு தொகுப்பு இங்கே:


அம்மா உணவகம்!

விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து ஏழை, எளிய மக்கள் விடுபட்டு மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் 15 அம்மா உணவகங்கள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.

தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவ மனை, கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் அமைப் பதற்கான கட்டமைப்பு பணிகள் நடந்துவருகின்றன. மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உண வகங்களும், இதர மாநகராட்சி களில் தலா 10 அம்மா உணவகங் களும் செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் தற்போது 294 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இதன் அடுத்த கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம் 200 அம்மா உணவகங்கள், ஏற்கெனவே அம்மா உணவகங்கள் நிறுவப்பட்ட மதுரை, வேலூர், திருநெல் வேலி மற்றும் தூத்துக்குடி தவிர்த்து ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவ மனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள் உள்பட மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்கள் திறக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 294 அம்மா உணவகங்களுடன் புதிதாகத் திறக்கவுள்ள 360-ஐயும் சேர்த்து, இனி மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும் என்று முதல்வர் ஜெயலலிதா, தமது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் உள்ள அம்மா உணவகங்களை எகிப்து அதிகாரிகள் சமீபத்தில் பார்வையிட்டனர். அங்கு சத்தான உணவுகள் சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரிக்கப்படுவது குறித்து அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த 2 அம்மா உணவகங்களுக்கும் விரைவில் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கும் க்வெஸ்ட் நிறுவனம் கூறியது.

இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மேலும் கலவை சாதங்களும் மாலையில் சப்பாத்தியும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:49 am

அம்மா குடிநீர்!

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கப்பட்டு, அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா 21.6.2013 அன்று அறிவித்தார்.

அதன் முதற்கட்டமாக, திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் ஆகும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் அளவு பிளாஸ்டிக் பாட்டில்களாக நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பாட்டில் ஒன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

1 லிட்டர் குடிநீர் பாட்டில் ரெயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், அம்மா குடிநீர் குறைந்த விலையான 10 ரூபாய்க்கு விற்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் செயல்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக மேலும் 9 இடங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தில் பெறப்படும் அதிக அளவு நீரினைக் கருத்தில் கொண்டு மேலும் ஓர் 'அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்' அமைக்கப்படும். இதன் மூலம், நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.



தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:49 am

அம்மா உப்பு!

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் மூன்று வகைகளில் தயாரிக்கப்பட்டுள்ள "அம்மா உப்பு' பாக்கெட்டுகளின் விற்பனையை 2014 ஜூன் 11 அன்று முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னை, வேலூர், கடலூர், நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், பிரபல சூப்பர் மார்க்கெட்டுகள் முதல் தெருமுனை மளிகைக் கடைகள் வரை தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள விற்பனை முகவர்கள் மூலம் ஜூன் 18 அன்று வரை 86 டன் அம்மா உப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் அம்மா உப்பு விநியோகம் செய்ய இதுவரை 29 மாவட்டங்களில் விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தங்கள் பணியை தொடங்கி உள்ளனர். இவர்களைத் தவிர சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அமுதம் அங்காடிகள் மற்றும் பிற மாவட்டங்களில் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டுகளில் அம்மா உப்பு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 6 டன் உள்பட தமிழகம் முழுவதும் வெளிச்சந்தை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ள 86 டன் அம்மா உப்பில், 10 டன் அளவுக்கு விற்பனை ஆகி உள்ளது. மூன்று வகையான உப்புகள் விநியோகம் செய்யப்பட்டாலும் சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, ஒப்பீட்டளவில் சற்று அதிகம் விநியோகம் செய்யப்படுகிறது என உப்பு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:50 am

அம்மா மருந்தகம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2014 ஜூன் 26 அன்று (26.6.2014) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 90 லட்சம் ரூபாய் செலவில் கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 அம்மா மருந்தகங்களைத் திறந்து வைத்தார்.

மேலும், கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்; ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்; மதுரை மாவட்டம் - பேரையூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் கே.கே. நகரில் அமைந்துள்ள மதுரா கோட்ஸ் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை; சேலம் மாவட்டம் - செர்ரி ரோட்டில் அமைந்துள்ள சேலம் என்.ஜி.ஓ. கூட்டுறவு பண்டக சாலை மற்றும் தாரமங்கலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; சிவகங்கை மாவட்டம் - காரைக்குடியில் அமைந்துள்ள சிவகங்கை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; விருதுநகர் மாவட்டம் - சிவகாசி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய இடங்களில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் அமைந்துள்ள 9 அம்மா மருந்தகங்களையும் திறந்து வைத்தார்.

ஜெயலலிதா திறந்து வைத்துள்ள அம்மா மருந்தகங்கள், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், மார்க்கெட் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளைச் சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கணினி பயிற்சி பெற்ற விற்பனையாளர்களோடு வெளிக்கொணர்வு முறை மூலம் மருந்தாளுநர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.



தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:50 am

அம்மா திரையரங்கம்!

வீடுதோறும் இலவச தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசு கேபிள் டிவி தொடங்கி, சில பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது. இவற்றில் எந்நேரமும் திரைப்படங்கள் பார்க்க வாய்ப்புகள் உள்ளன. இலவச மடிக்கணினிகளையும் பலர், குறுந்தகடு மூலம் திரைப்படம் பார்க்கப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மக்களுக்குத் திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவம் குறைந்து வருகிறது. மேலும், வர்க்கரீதியாக திரையரங்குகள் மக்களை பிரித்துள்ளன. சென்னையில் இயங்கும் மாயாஜால், சத்யம் போன்ற மல்டி பிளக்ஸ்களிலும் சிட்டி சென்டர் போன்ற மால்களில் இயங்கும் திரையரங்குகளிலும் ஒரே பிரிவைச் சார்ந்தவர்களே படம் பார்க்கின்றனர். அடித்தட்டு மக்களை அங்கு காண முடிவதில்லை.

இது ஒரு புறம் என்றால் எளிய மக்களின் கொண்டாட்ட வெளிகளாக இருந்த சிறிய திரையரங்குகள் நஷ்டத்தால் இடிக்கப்பட்டு கல்யாண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸாகவும் உருமாறி வருகின்றன. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் இயங்கும் அம்மா திரையரங்குகளை உருவாக்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி முன் வைத்துள்ளது.

இந்த திரையரங்கங்களில் சிறுமுதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:50 am

அம்மா காய்கறி கடை!

வெளிச்சந்தையில் தாறு மாறாக உள்ள காய்கறிகளின் விலையை கட்டுக்குள் வைக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பசுமையான காய்கறிகளை அளிக்கவும் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், போரூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 30 பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு காய்கறி கடைகளை 2013 ஜூன் 20ஆம் தேதி, முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

பண்ணைப் பசுமை நுகர்வோர் கூட்டுறவு காய்கறி கடைகளுக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், அந்த கடைகளுக்கு காய்கறிகளை துரிதமாகவும், பறித்தவுடனேயே கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊட்டி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எந்த இடைத்தரகர்களும் இல்லாமல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 18 டன் முதல் 20 டன் வரையான, பசுமையான காய்கறிகள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு காய்கறி கடைகளுக்கு நாள்தோறும் கொண்டு வரப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் வாடகை கனரக வாகனங்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால், பொருள் செலவும், கால தாமதமும் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க, 3 கனரக வாகனங்கள், நடமாடும் காய்கறிகடைகள் நடத்த 2 கனரக வாகனங்கள் என, மொத்தம் 5 கனரக வாகனங்களும் வாங்க, 70 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.

பண்ணை பசுமை நுகர்வோர் கடையின் மூலம் 2014 ஜூன் 15ஆம் தேதி வரை, 3,578.673 டன் காய்கறி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.9.9 கோடி ஆகும்.



தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:51 am

அம்மா தங்கும் விடுதிகள்!

குறைந்த கட்டணத்தில் பூரண பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய 'அம்மா தங்கும் விடுதிகளை' அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முதல் கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

சென்னை மாநகருக்கு படிப்பு, வணிகம், அரசு அலுவலக பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிமித்தமாக வெளியூர்களிருந்து வருவோர் பார். இவ்வாறு வருபவர்கள் ஒரு நாள் சென்னையில் தங்க நேரிட்டால் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் கொடுத்துத் தங்க வேண்டிய நிலை உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு வெளியூர்களிலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் மாணவர்கள், பெண்கள், அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினர்களும் தங்குவதற்கும், அவர்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பதற்கும் வசதியாக ‘அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்’ அமைக்கப்படும் என்று 2014 பிப்ரவரி மாதம் நடந்த 2013-14ஆம் ஆண்டிற்கான மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.

இதே போன்று கிராமப்புறங்களில் இருந்து சென்னைக்கு வந்து தனியாக தங்கி படிக்கும் மற்றும் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு குறைவான கட்டணத்தில் நிறைவான பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘அம்மா மகளிர் தங்கும் விடுதி’ அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

‘அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்’ மற்றும் ‘அம்மா மகளிர் தங்கும் விடுதி’ அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது இடம் தேர்வு செய்யும் பணி நிறைவு அடைந்துள்ளது.

‘அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்’ மற்றும் ‘அம்மா மகளிர் தங்கும் விடுதி’ அமைப்பதற்காக ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அதாவது ஒரு கி.மீ. சுற்றளவு எல்லைக்குள் கட்டப்படும். அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகளில் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் ஒரு நாள் தங்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

வெளியூர்களிலிருந்து வருபவர்கள் இந்த விடுதிகளில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னரே தொலைபேசியில் அழைத்துத் தங்கள் வருகையைப் பதிவு செய்துகொள்ளலாம். விடுதிகளில் தங்குபவர்கள் அம்மா உணவகத்தில் மலிவான விலையில் சாப்பிட்டுவிட்டு, விடுதிகளில் தங்கி தங்களுடைய பணிகளைத் தொடரலாம். அனைத்தும் மலிவாக இருப்பதால் வெளியூருக்குப் பணம் செலவழித்து வந்தது போன்ற ஒரு உணர்வே ஏற்படாது. இந்தத் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.



தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:51 am

அம்மா திட்டம் (விரைவு பட்டா வழங்கும் திட்டம்)

மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற அம்மா திட்டம், மக்கள் அதிகாரிகளைத் தேடி மனுக்கள் கொடுத்து அதற்குரிய பரிகாரங்கள் பெறக் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வருவாய்த் துறை அலுவலர்களே வாரத்திற்கு (வியாழக்கிழமை) ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து அங்குள்ள மக்களின் குறைகளை மனுக்களாக எழுதிப் பெற்று, தகுதி உள்ள நபர்களுக்கு அன்றைய தினமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்தல், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் அன்றைய தினமே வழங்கப்படுகிறது.

அரசு விரைவுப்பட்டா மாறுதலுக்காக பல ஆண்டு காலம் அலைந்து அவற்றைப் பெறுவதற்குக் காலத்தையும், நேரத்தையும் வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக விரைவுப் பட்டா மாறுதல் முகாம் நடத்தப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய அம்மா திட்டங்களால், ஏழை மக்கள் அம்மம்மா என வியந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய திட்டங்கள், மேலும் பல துறைகளிலும் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. எந்தெந்தப் பொருட்களையும் சேவைகளையும் அம்மா பெயரால் வழங்கலாம் என அனைத்து அமைச்சகங்களும் தீவிரமாக யோசித்து வருகின்றன.

தொகுப்பு: அண்ணாகண்ணன்



தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 29, 2014 12:46 pm

சாதனைகள் தொடரட்டும்..!
-
வரவேற்போம்..!!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக