ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராக்கில் சிக்கிய இந்தியர்களை மீட்க ராணுவம் செல்லுமா?

Go down

ஈராக்கில் சிக்கிய இந்தியர்களை மீட்க ராணுவம் செல்லுமா?  Empty ஈராக்கில் சிக்கிய இந்தியர்களை மீட்க ராணுவம் செல்லுமா?

Post by சிவா Wed Jun 25, 2014 4:27 am

புதுடில்லி: ''ஈராக் உள்நாட்டு போரில், இந்தியர்கள் பலர் சிக்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்க, எல்லாவிதமான நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை,'' என, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

போர்க் கப்பல்கள் பராமரிப்பு, கடற்படையில் பணியாற்றும் காமண்டர்களின் பணிகள் மற்றும் கடற்படையில் நிறைவேற்றப்படும், முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, இரண்டு மாதங்களுக்கு முன், கருத்தரங்கு நடைபெறுவதாக இருந்தது. அப்போதைய கடற்படை தளபதி ஜோஷி, மேற்கு பிராந்திய கமாண்டர் சேகர் சின்கா ஆகியோர் ராஜினாமா செய்ததால், இந்த கருத்தரங்கு நடைபெறவில்லை. இந்நிலையில், கடற்படை உயர் அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கு, டில்லி, 'சேனா பவனில்' நேற்று நடைபெற்றது.

இதில், மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி பங்கேற்றார். பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் நிதி ஆதாரத்தில் கணிசமான பகுதியை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, ஒவ்வொரு துறையினரும் கோரி வருகின்றனர். இருப்பினும், மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு கணிசமான தொகை ஒதுக்கீடு செய்யப்படும். ராணுவ துறைக்கு புதிய வடிவம் கொடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள அரசு விரும்புகிறது. ராணுவத்திற்கான ஆயுத கொள்முதல் நடவடிக்கைகள், மந்தகதியில் நடப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த கொள்முதல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். அதற்கான முயற்சியில், ராணுவ அமைச்சகம் தீவிரமாக ஈடுபடும். ஈராக் உள்நாட்டு போரில், இந்தியர்கள் பலர் சிக்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்க, எல்லாவிதமான நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை. இவ்வாறு, அருண் ஜெட்லி கூறினார்.

அதிக நிதி: ஜெட்லி உறுதி

* கடற்படைக்கு, 6,000 கோடி ரூபாய், 16 பல்நோக்கு பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் வாங்குவது உட்பட, பல கொள்முதல் நடவடிக்கைகள், பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ளன; இவை விரைவுபடுத்தப்படும்.

* 'புராஜக்ட் - 75 இந்தியா' என்ற திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் கோடி ரூபாயில், ஆறு நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படைக்கு வாங்க, 1999ம் ஆண்டிலேயே தீர்மானிக்கப்பட்டது. அது அமலுக்கு வரவில்லை. அதனால், இனி, அனைத்து நீர்மூழ்கி கப்பல்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.

* கண்ணிவெடியை கண்டு பிடித்து அழிக்கும், 16 உபகரணங்களை, தென்கொரியாவிடம் இருந்து வாங்க திட்டமிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஒப்பந்த நடவடிக்கை புகார்கள் எழுந்ததால், அவற்றை கொள்முதல் செய்வதும் தடைபட்டுள்ளது.

* ராணுவத்திற்கு தேவையான அனைத்தையுமே, தாமதம் இல்லாமல் துரிதகதியில் வாங்கிக் கொடுக்க, புதிய அரசு முனைப்பாக உள்ளது.

* புதிய திட்டங்களை நிறைவேற்ற, ராணுவ துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் படும்.

17 இந்தியர் பத்திரமாக மீட்பு:

''ஈராக்கில் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த, 17 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்; திக்ரித் நகரில் உள்ள இந்திய நர்சுகள், பத்திரமாக உள்ளனர்,'' என, இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், செய்யது அக்பருதீன் கூறினார்.

அல் - குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதிகள் வசம், ஈராக்கின் பல நகரங்கள் வீழ்ந்துள்ளன. அந்த வகையில், மொசூல் மற்றும் திக்ரித் நகரங்களை, பயங்கரவாதிகள் கைப்பற்றிய போது, மொசூல் நகரில் கட்டட பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருந்த, 40 இந்திய தொழிலாளர்களை பிடித்துச் சென்றனர். அவர்களில் ஒருவர் தப்பி வந்துள்ளார். மீதமிருந்த தொழிலாளர்களில், 17 பேரை, பத்திரமாக மீட்டுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அக்பருதீன் நேற்று கூறினார். எனினும், அவர்கள் எவ்வாறு மீட்கப்பட்டனர்; எங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பன போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

மேலும் அவர் கூறியதாவது: பயங்கரவாதிகள் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள இந்தியர்கள், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மொசூல் நகரில், கட்டட பணி, சுகாதார பணி, டிரைவர் போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். சில நாட்களுக்கு முன், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னமும் ஏராளமான இந்தியர்கள் பயங்கரவாதிகள் பிடியில் உள்ளனர். எனினும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. திக்ரித் நகரில் உள்ள, 46 இந்திய நர்சுகளும் பத்திரமாக உள்ளனர். அங்கிருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

பொறுப்பு உள்ளது!

நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து உள்ளது. அதை சீராக்கி, மீண்டும் வலுவுள்ள பொருளாதாரமாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு, புதிய அரசுக்கு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

விமான தாக்குதல்:

தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வரும் பயங்கரவாதிகள் மீது இதுவரை விமான தாக்குதல் நடத்தாமல் இருந்த ஈராக் அரசு, நேற்று நடத்திய விமான தாக்குதலில், 19 பேர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது. ஈராக் அரசு தரப்பில், கொல்லப்பட்ட, 19 பேர் பயங்கரவாதிகள் என கூறுகிறது. ஆனால், பொதுமக்கள் தரப்பில், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

முயற்சி முறியடிப்பு:

ஈராக்கின் பைஜி நகரில் உள்ள, மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கைப்பற்றும் பயங்கரவாதிகளின் முயற்சியை, ராணுவத்தினர் முறியடித்தனர். அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில், 50 சதவீதத்தை உற்பத்தி செய்யும், அந்த மிகப் பெரிய சுத்திகரிப்பு நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, அந்நாட்டு ராணுவம் விரட்டி அடித்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை அந்த நிறுவனம் மீது தாக்குதல் நடத்தி, கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். நேற்றும் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக, அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1,000 பேர் பலி:

ஐ.நா., அறிவிப்பு: 'இந்த மாதத்தில் மட்டும், ஈராக்கில், 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில், 750 பேர், அப்பாவி பொதுமக்கள்; மீதமுள்ளவர்கள் அரசு படைகள் மற்றும் பயங்கரவாதிகள்' என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மாதம், 5 முதல் 22 வரை, இவ்வளவு அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 700 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum