ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

+9
Aathira
ayyasamy ram
யினியவன்
krishnaamma
ராஜா
soplangi
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
13 posters

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

First topic message reminder :

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Fri Jul 25, 2014 7:07 am

krishnaamma wrote:இன்று தான்படித்தேன் ஐயா புன்னகை அருமையான நடை, தொடருங்கள் படிக்க காத்திருக்கோம் புன்னகை  ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 
மேற்கோள் செய்த பதிவு: 1075470

உங்களுடைய உள்நாட்டு புனித யாத்திரை நன்றாக உள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by விமந்தனி Fri Jul 25, 2014 1:15 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote: நம்மை பழக்கப்படுத்தி ,  கவிதை ரூபத்தில் தன்  கதை கூறி, நம்மை உருக வைத்த MM செந்தில் . சிறப்பு கவிஞர் , மனத்திரையில் தோன்றினார்.  

ரமணியன்


அய்யா, நன்றி.

ஈகரையில் என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்த நீங்கள், கடல் வழி உல்லாச பயணத்திலும் நினைத்துள்ளீர்கள் எனும் போது மகிழ்ச்சி.. ஒரு குடும்ப நபராய் பெருமைப் படுகிறேன்.


சில விஷயங்கள் அடி மனதில் பதிந்து இருக்கும் .
சமயம் வரும்போது கிளர்ந்து மேலெழும் .
அது போல் தான் இதுவும் .
ஈகரையுடன் இணைய முடியாது இருந்த நாட்கள் .
கண்ணில் (கணினி ) இருந்து   மறைந்து இருந்தாலும் ,
கருத்தில் இருந்து மறையா ஈகரையும் உறவுகளும்
 
நன்றி .
ரமணியன்


 நன்றி நன்றி நன்றி


பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by விமந்தனி Fri Jul 25, 2014 1:29 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:நார்வேஜியன் கெட்டவே - பிரமிப்பு + பிரம்மாண்டம்.

உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா  விடை  அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ  என நினைத்துக் கொண்டேன்) .

 சூப்பருங்க  சூப்பருங்க 

ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .

இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும்  ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே

 பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 3838410834


நன்றி விமந்தினி ,
வர்ணனை ,மிகை ஒன்றும் இல்லை என நினைக்கிறேன் .
ரமணியன்


தங்களது யதார்த்தமான வரிகளில் எதுவும் மிகையாய் தெரியவில்லை. அதனால் தான் "அருமை" என்ற ஒற்றை வார்த்தைக்கு மேல் வேறெதுவும் எழுத எனக்கும் தெரியவில்லை ஐயா! நன்றி


பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by krishnaamma Sat Jul 26, 2014 11:34 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:இன்று தான்படித்தேன் ஐயா புன்னகை அருமையான நடை, தொடருங்கள் படிக்க காத்திருக்கோம் புன்னகை  ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 
மேற்கோள் செய்த பதிவு: 1075470

உங்களுடைய உள்நாட்டு புனித யாத்திரை நன்றாக உள்ளது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1075663

நன்றி ஐயா புன்னகை  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by சிவா Sun Jul 27, 2014 3:57 am

யினியவன் wrote:கானா பாலா மாதிரியே நம்ம சிவாவும் நல்லாவே கானா பாடுவார் அய்யா - நீங்க கேட்டதில்லையா?

வார இறுதியில் சுருதி சேர்த்து தாளம் தப்பாம நல்லா பாடுவார் - திங்கள் முதல் வெள்ளி வரை இவரை தபலா போல பாவித்து வாசிக்க ஒரு கூட்டமே கூடிடும் டும் டும் டும்...

ம்ம்ம்ம்.. அப்புறம்...! சொல்லுங்க தல.! கேட்க ஆவலுடன் ஓடோடி வந்துள்ளேன்!  சிரி சிரி சிரி 


பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Sun Jul 27, 2014 9:30 pm

]b]மாஹோ கடற்கரையும்
இளவரசி ஜூலியானா விமானதளமும்
[/b]

தினம் தினம் ,இரவு 12மணி கழிந்து ஓரிரு நிமிடங்களில் , புதிய நாள் உருவாகும் நேரத்தே , இன்றைய வரலாறு பதிவை உருவாக்கும் விமந்தினி போல் , தினம் தினம் கப்பலில் , மாலையில் ,ப்ரீ ஸ்டைல் டெய்லி வருகிறது .மறு நாளைய நிகழ்ச்சிகள்  இடம் பெறுவதுடன் , கப்பல் நிற்குமிடத்தில் பார்க்கவேண்டிய முக்கிய இடங்களை பற்றிய குறிப்புகள் , வாகன வசதிகள் , தவிர்க்கப்படவேண்டிய பொருட்கள் என்று விலாவாரியாக இருக்கும் .

செயின்ட் மார்டீனில் அதிக நேரம் கடலில் குளிப்பதற்கும் , குளித்துக்கொண்டே விமானங்கள் இறங்குதலையும் , கிளம்புவதையும் பார்க்கலாம் என்று தீர்மானித்தோம் . இது மாதிரி  அரிய காட்சிகள் காண , ரசிக்கவே மாஹோ பீச்  வரும் கூட்டம் அதிகம் .

4ம் நாள் .காலை .  கப்பல் செயின்ட் மார்டீன் என்னும் டச்சு அரசு செய்யும் Philipsburg துறைமுகத்தில் நின்றது. இங்குதான் மக்கள் பார்க்க விரும்பும் மாஹோ கடற்கரையும் அதை  ஒட்டி இளவரசி ஜூலியானா  சர்வ தேச விமானதளம் உள்ளது .

செயின்ட் மார்டீன் ஒரு பகுதியை(மேற்கு ) டச்சு அரசும் , மற்றொரு பகுதியை (கிழக்கு ) France  இம் ஆட்சி செய்கின்றன .Marigot துறைமுகம் இவர்களுக்கு சொந்தம் .மொத்தமே 87 சதுர கிலோமீட்டர் உள்ள இந்த தீவை 60:40 என்ற விகிதத்தில் பங்கிட்டு , எல்லைப்புற வழிப்பாடுகள் இல்லாமல் சுமுகமாகவே வாழ்கிறார்கள் . ஆதி காலத்தில் கரிபியன் தீவுகளில் " லுகாயன் இந்தியன்ஸ் " என்ற இந்திய வம்சாவளியினர் இருந்ததாக வரலாறு . இப்போது Bhoolchand ஜுவல்லரி மார்ட் , ஆனந்த் உணவகம் , யோகேஷ் கம்ப்யுடர் சென்டர்  முதலியவைகளில் இந்தியர்கள் கண்ணில் படுகின்றனர் .

காலை உணவை முடித்துக் கொண்டு ,ஸ்விம்மிங் ட்ரஸ் ,Trunk, பீச் டவல் எடுத்துக்கொண்டு வெளி வந்தோம் .5 நிமிட நடை .இந்த துறை முகத்தில் இருந்து லிட்டில் பே (Little Bay ) என்ற  மறு கரை  போக / வர water Taxi சர்வீஸ் . 7 டாலர் டிக்கட் வாங்கினால் அன்றைய தினம் பூராவும் உபயோகப்படுத்தலாம் . அங்கிருந்து மாஹோ பீச்சுக்கு ஷேர் டாக்ஸி என்கிற பஸ் .
Water Taxi யில் கொடுக்கும் டிக்கட் அக்ரிலிக் பேண்ட் போல் கையில் சுற்றி விடுகின்றனர் . கடலில் குளித்தாலும் ,அவை பிய்த்துக்கொண்டு வருவதில்லை. தேதியும் அழிவதில்லை .

எல்லா இடத்திலும் டிப் தருவது வழக்கத்தில் உள்ளது . படகில் NO  TIPS  என்ற போர்ட் இருக்கிறது . இறக்கி விடுமுன் , விளையாட்டாக கூறுகிறார்கள் . " நீங்கள் டிப்ஸ் கொடுத்தால் , நீங்கள் எங்களை இன்சல்ட் பண்ணுவதாக நினைக்கமாட்டோம்." அதன் அர்த்தம் புரிந்ததுதானே நமக்கு .

ஷேர் டாக்சியில் 20 நிமிட பயணம்  மலை வழி பயணம் ஒரு 10 மைல்  இருக்கும் .பார்ப்பதற்கு மனோரம்யமான காட்சிகள் .
கடற்கரையும் விமான தளமும் :
இளவரசி ஜூலியானா சர்வதேச விமானதளத்தின் இறங்குபாதை பீச்சை  ஒட்டியே உள்ளது .

இறங்கும் (touch down ) புள்ளியில் இருந்து 100 அடியில் 12 அடி உயர வேலி ,விமானதள எல்லை என்று காண்பிக்க .அந்த வேலியில் இருந்து 8அடி X 2 இரு பாதைகள் கார்கள் போக வசதியாக .உடனே பீச் ஆரம்பம் .10 அடி தூரம் மணல். பிறகு கடல் ஆரம்பம் .   turquoise blue என்கிற வெளிர் நீல நிறம் கொண்ட தெளிவான கடல் நீர் .அமைதியாக அழைக்கும் அலைகள் .

குளிக்க குளிக்க குதுகலம் ஊட்டும் ,குளுமையான நீர் . ஹரித்வாரில் கங்கை நீரின் சிலுசிலிர்ப்பு , இங்கு அனுபவிக்க முடிந்தது . ஆனால் நீரின் வெளியில் ,கண்கள்  கூசும் வெயில் . cap உடன் கூலிங் க்ளாஸ் ,சிறிது உஷ்ணத்தின் தாக்கம் குறைந்தது  போல் தோன்றுகிறது  

குளிக்கும் போதே , தலை மீது , நம்மை தொட்டுக்கொண்டு செல்லும் , சிறிதும் பெரிதுமான பல வகை விமானங்கள் .  பார்ப்பதற்கு ரொம்ப திரில்லிங் .புது மாதிரியான அனுபவம் . ரசிக்கும் படியான அனுபவம்  அனுபவித்தால்தான் அருமை புரியும் . விமானம் இறங்கும் போது ஏற்படும் அனுபவம் , விமானம் கிளம்பும் போதும் , வெளியேறும் காற்றின் விசையை   எதிர்கொள்ளமுடியாது . வேலியோரம் வந்து ,நின்று இன்ஜின்களை ஒட்டி, exhaust gas வெளியேறும்போது ,அந்த இடத்தில் நிற்கமுடியாது . மணல் வாரி அடிக்கும் .ஒல்லியானவர்கள் நிற்க தடுமாறுவர் . கடல் பக்கம் தள்ளப்படுவர் .இருந்தாலும் திரும்ப திரும்ப அனுபவிக்க ஆசை .

சில படங்கள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 9Enx09r1Q76eVdhw37zo+0
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 IxMqb0UHTbifuSBOY5Kr+DSC_0166
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 YtfUhcyRTe4yqyd1ePV7+DSC_0118
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Z9s3ziz6SHWjyEBaRViN+DSC_0205
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 JpxFT4A1Rg2hOc17kyKs+st-maarten255b1255d
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 7q7Ffe1kSjWVGlCrEWaZ+p164853-St__MaartenSt__Martin-In-Coming_at_SXM
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 TjX7WMYMTy8ZWGVNMwoA+images

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 WThOzfzQRpSyTj5A6fUe+st-maarten-jet-fly-over_23943_990x742
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 I2DB5zE8RcSBhaO1IIeB+maho-st-maarten-airport-beach-6

இந்த வீடியோ வை பாருங்கள் . ஜூம் பண்ணிப் பார்த்தால் மிகவும் ரசிக்கலாம் . Take off போது விமானி கை அசைத்து வாழ்த்து கூறுவதையும் பாருங்கள் .
   youtube

கடை வீதியில் கொய்யா தோட்டத்தே சேகரித்த Guava Honey  மிகவும் பிரசித்தம்  மிகவும் ருசியாக இருக்கிறது. தேனுடன் கொய்யா பழ வாசனை வருகிறது

கடலில் நீந்தி , விமானங்களை பார்த்து ,துறைமுகத்திற்கு திரும்பிவந்தால் , 500 அடி  முன்னால் , நம்மை வரவேற்று , குளிர்ந்த கைதுண்டுகளை கொடுக்க , நாம் களைப்படைந்த முகத்தை துடைத்துக்கொண்டு ,அவர்கள் கொடுக்கும் ,குளிர்பானம் அருந்தி,10 அடி முன்னேறினால் , ஈரமான பீச் துண்டை வாங்கிக்கொண்டு , புதிய துண்டை நம் உபயோகத்திற்கு கொடுக்கிறார்கள்  குழந்தைகளை வரவேற்க டிஸ்னி உருவங்களும் உண்டு .
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Ya1eNUuKQlqv3t8Z4tI7+DSC_0090

கப்பலில் வந்து மற்ற பொழுதுபோக்கு வழக்கம் போல் தொடர்ந்தது
நினைவு தெரிந்த நாள் முதலாய் .தினத்தந்தி நாளிதழில் வந்து கொண்டு இருக்கும் , முடிவே பெறாத , "கன்னித்தீவு "
நாளை அமெரிக்க  கன்னித்தீவு/ பெயர் காரணம்  பார்க்க போகலாமே

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Jul 27, 2014 9:39 pm; edited 1 time in total (Reason for editing : chaning sequence)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Tue Jul 29, 2014 4:06 am

செயின்ட் தாமஸ்

மாலையில் கிளம்பி கடல் வழியே  காலையில்  .வந்தடைந்தோம் செயின்ட் தாமஸ் என்கிற தீவிற்கு. சார்லட் அமலி  தான்  அதன் துறைமுகம் .

இந்த தீவை US  விர்ஜின் ஐலண்ட் என்கின்றனர் . இது US  இற்கு சொந்தம் .இதன் பக்கத்தில் செயின்ட் ஜான் , செயின்ட் க்ராக்ஸ்  போன்ற சுற்றுலா தளங்களும் இருக்கின்றன .டச்சுக்கு முதலில் சொந்தமாக இருந்து பிறகு US வசம் வந்துள்ளது . இருப்பினும் டச்சுடன் நல்லதோர் நட்பு கடை பிடிக்கிறார்கள் .

{இதன்  பக்கத்தில் இன்னும் 60  தீவுகள் .  .அது பிரிட்டிஷாருக்கு சொந்தம்  அதை பிரிட்டன் கன்னித்தீவு (BVI) என்கின்றனர் .அது பிரிட்டனுக்கு சொந்தம் .இதை செயின்ட் ஜான்னில் இருந்து

ferry மூலம் கடலில் சென்று அடையலாம்  நீங்கள் கார் வைத்து இருந்தால் காரையும் ferry இல் ஏற்றி , BVI இல் உபயோகபடுத்திக்கொள்ளலாம் . போகாத இடம் என்பதால் , அதிகம் விவரிக்கவில்லை }.

நாம் சுற்றுலா வந்த இடங்கள் யாவும் கரிபியன் கடலில் இருக்கின்றன . தெளிவான , கடல் கரை ஓரங்களில் .நீச்சல் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடும் சிறுசிறு அலைகள் .குட்டி அலைகள் .நீச்சல் தெரியாதோரும்

தைரியமாக இறங்கலாம் .கடற்கரைகளில் , நீச்சல்  அடிக்க லைப் பெல்ட் கிடைக்கிறது . surf போர்டு இருந்தால் surf பண்ணலாம் . snorkel என்று சொல்லக்கூடிய முகமூடி அணிந்து நீரின் அடியில் இருக்கும் மீன் குடும்பங்களை

கண்டுகளிக்கலாம் .செயின்ட் தமஸ் ,செயின்ட் ஜான் , செயின்ட் கிராக்ஸ் முன்றும் முறையே 32,19,84 சதுர மைல்கள் . ஜனத்தொகை 1 .1 லக்ஷம்.
ஏற்கனவே மாஹோ பீச் பார்த்து இருந்ததால் , தாமசில் மலை உச்சி பார்க்க தீர்மானித்தோம் . போகும் வழி எல்லாம் அடர்ந்த பசுமை நிறைந்த காட்சிகள் கிடைக்கும் .மலை உச்சியில் இருந்து பார்த்தால் , BVI தெரியும் என்றார்கள் .
ஆகவே , காலை உணவை முடித்துக்கொண்டு , துறை முகம் வெளியே வந்து , டாக்ஸி வைத்துகொண்டு மலை வழி பாதையில் , இயற்கையை ரசித்துக்கொண்டே சென்றோம். நம்ம ஊர் போலவே வாழை , மா ,பலா எல்லாம் காய்த்து தொங்குகின்றன . விதவிதமான கிளிகள் பறவைகள் .

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Fdr3tajJR0iaYdGfVhvv+DSC_0240
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 XZUVx9zRuW7PQ5RaWMnx+DSC_0234

மலை உச்சி போனால் , கடற்கரை , அங்கே நங்கூரம் இட்டுள்ள கப்பல்கள் , வாழ்கையை அனுபவிக்கவே பிறந்துள்ளோம் என்பது போன்று நூற்று கணக்கான Yatch  என்னும் தங்களுக்கு சொந்தமான சொகுசு படகுடன் வந்துள்ள குடும்பங்கள் .


பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 CiUDdIIbRkaXGmSyIPib+DSC_0232

மலை உச்சிக்கு ரோப் கார் மூலம் வரலாம் , ஆனால் இயற்கையை ரசிக்க , டாக்ஸியே சுகம் . மலை உச்சி view point இல் இருந்து இயற்கையை ரசிக்கலாம்  அங்கிருந்து பார்த்தல் BVI தெரிகிறது .
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Vm1WdzWyTibqLwl6rbOG+DSC_0244

இங்கு வாழைபழ கலவையால்  தயாரிக்கப்படும் ரம் மிகவும் பிரசித்தம். Banana Daiquiri  என்பர் .
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 M5sQvxMyTuQjrSJhKeMD+DSC_0256

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 RPEjqtcrQ5i3eWtTBCcf+DSC_0259

செயின்ட் மாற்டீனில் கொய்யா கலவை ரம் பிரசித்தம்  .

இவைகளை பார்த்து ரசித்து , மலை அடிவாரம் வந்து , மார்கெட்டை ஒரு அலசு அலசினோம் .வாங்கும் படியாக ஒன்றும் இல்லை
பெண்களும் , நவீன ஆண்களும் தங்கள் முடிகளை braiding பண்ணிக்கொள்கிறார்கள் . நல்ல பிசினெஸ் .

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 PtKKgfOUR9eOZJbQ1MbI+DSC_0432

ALLURE  என்கிற பெரிய கப்பல், 5000 பயணிகள் பயணிக்கக் கூடிய கப்பல் , நாங்கள் சென்ற சமயம் அங்கே நங்கூரம் இட்டு இருந்தது .
அதன் போட்டோ பார்வைக்கு

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 WGOhc2anSLekrYfgpt2w+DSC_0290

நம்ம ஊர் ஷேர் ஆட்டோக்கள் மாதிரி இங்கே ஷேர் டாக்ஸி மிகவும் பிரபல்யம்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 PFDUIbWHQttZ6KT5iAuI+DSC_0313
படம்  


மாலை கப்பலை அடைந்தோம்
அன்றைய இரவும், அடுத்து ஒரு நாள்  பிரயாணம் செய்து புகழ்மிக்க பஹாமாஸ் தீவுகள் அடைந்தோம் .

எவ்வளவு தீவுகள் பஹாமாசில் ??
10 இல்லை 50 ------100------ 1000 ------2000-----3000------?????

நாளை பார்க்கலாம்
ரமணியன் .


=====================================================================


Last edited by T.N.Balasubramanian on Tue Jul 29, 2014 4:12 am; edited 1 time in total (Reason for editing : deletion)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by krishnaamma Tue Jul 29, 2014 12:16 pm

படங்களும்   வீடியோவும் ரொம்ப அருமை ஐயா புன்னகை உங்கள் எழுத்தை பற்றி தனியே ஏதும் சொல்ல வேண்டாம் புன்னகை தொடருங்கள் ...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Tue Jul 29, 2014 9:48 pm

krishnaamma wrote:படங்களும்   வீடியோவும் ரொம்ப அருமை ஐயா புன்னகை உங்கள் எழுத்தை பற்றி தனியே ஏதும் சொல்ல வேண்டாம் புன்னகை தொடருங்கள் ...............
மேற்கோள் செய்த பதிவு: 1076336 


நன்றி , கிருஷ்ணம்மா !
நேரில் மிக thrilling ஆக இருக்கிறது .
பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by T.N.Balasubramanian Wed Jul 30, 2014 8:35 am

பஹாமாஸ் தீவுகள்
வெள்ளி அன்று காலை பஹாமாஸ் தீவுகளின்  முக்கியமான ,இடமான க்ராண்ட் பஹாமாஸ் வந்து அடைந்தோம் .

காலை உணவை முடித்துக்கொண்டு ,வெளியில்  போகலாம் என்று மேல் தளம் போனால் வாவ் ,
உலக புகழ் பெற்ற அட்லாண்டிஸ் ஹோட்டல் , வாட்டர்  பார்க் ,
கடலில் காணாம போன , மறைந்து போன கிரேக்க நாட்டு கலை வண்ண நகரத்தை , மறுபடியும் 150 மில்லியன் டாலரில்
உருவாக்கி நம் கண் முன் கொண்டு நிறுத்தி உள்ளனர் . அதன் போட்டோ .


Miss Universe 2009 ,உலக அழகிகள் போட்டி இந்த ஹோடேலில் தான் நடை பெற்றது .
உலகிலேயே அதிக அறை வாடகை  இந்த ஹோடேலில் தான்   .


பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 YPJEXcXWQW6DvbbHnLnG+DSC_0515

இதை விட ,சிறிது அதிக செலவில் துபாயில் ஒரு அட்லாண்டிஸ் ஹோட்டல் II இருப்பதாக அறிந்தேன் .

அதன் உள்ளே சிறிது தூரம்  வரை சென்று பார்க்க அனுமதி உண்டு வாட்டர் பார்க், மற்றும் சுற்றுலா செல்வதற்கு ,கப்பலிலேயே  ஏற்பாடு பண்ணுகிறார்கள் .
அட்லாண்டிஸ் வாட்டர் பார்க்  --1/2 நாள்
அட்லாண்டிஸ் வாட்டர்  பார்குடன் ,டால்பின் விளையாட்டுகள்
அதோள் தீவில் snorkel
அரைநாள் சுற்றுலாவே தலைக்கு 75 us $.

அட்லாண்டிஸ் பற்றி பின்னொரு நாள் எழுதலாம் .

காலை உணவு உண்டு , வெளியில் வந்தோம்  ,  ,பஹமாஸ் .கஸ்டம் வழியாக ,இமிக்ரேஷன் . பாஸ்போர்டை பார்த்து ,ஆள் முகத்தை பார்த்து ஓகே போகலாம் என்று சொல்கிறார்கள் . தேவை இல்லாமல் விஸா , வாங்குவதற்கு பணம் செலவழித்தோமோ என்று தோன்றியது .

பெரிதாக போர்ட் வைத்து இருக்கிறார்கள் . துறைமுக இடம் " SOLICITING IS PROHIBITED " என்று இருக்கிறது .

பஹாமாஸ் கிட்டத்தட்ட  3000 தீவுகளை கொண்டது . சின்னது ,பெரியது என்று பல வித பரப்பளவுகள் .600 மைல் தூரம் .நீண்ட கயிறாய் தோற்றமளிக்கும்  இது  தாம்புகயிரை போல் சில இடத்தில் , சணல்  கயிறு போல் சில இடத்தில் , வேறு படுகிறது .தீவுகளின் சங்கிலி தொடர் கூட்டம் . இதில் ஜனங்கள் குடி இருப்பதோ 20 இல் தான் . பஹாமாஸ் என்றாலே மனதில் தோன்றுவது அழகு சாந்தம் மன அமைதி .

நாங்கள் இறங்கியது "கிராண்ட் பஹாமாஸ் " நசாவு ( NASSAU ) துறை முகம் . கிராண்ட் பஹாமாஸ்  96 மைல்  நீளம்  அகலமான இடம்  17 மைல், மற்ற இடங்களில் ஏறுமாறாக இருக்கிறது .

டாக்ஸி ஒன்று பிடித்துக்கொண்டு பஹாமாசை ஒரு ரவுண்டு வர நினைத்தோம் . எங்களுக்கு கிடைத்த டிரைவர் , Lewis H Outten .நன்றாக கலகலப்பாக பேசி , கூற வேண்டிய விஷயங்கள் , நகைச்சுவையாய் பேசி , பார்க்க வேண்டிய இடங்களை காண்பித்தார் .

சில சாம்பிள்கள் :

பஹாமாஸ்  பணக்கார நாடு அதே சமயம் ஏழை நாடு ( இந்தியா  போல்தான் என்று நினைத்துக்கொண்டேன் .) பெரிய பெரிய வில்லாக்களும் இருக்கின்றன . சிறிய குடில்களும் இருக்கின்றன . இயற்கை வளம் நிறைந்தது . பெட்ரோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி . பஹாமாஸ் டாலரும்  அமெரிக்க டாலர் மதிப்பும்  ஒன்றே , பஹாமாசில் . பெட்ரோல் ஆறரை டாலர் காலனுக்கு .அதே பெட்ரோல் அமெரிக்காவில் மூணேகால் டாலர் ,எனக் கூறி சாமான்கள் விலை எல்லாம் இரு மடங்கு இருப்பதில் அதிசயம் இல்லை என்றார் .

தனியாக வருமானத்திற்கு வரி கிடையாது என்றார் . பரவாயில்லையே  என்று நினைக்கையில் , வாங்கும் ஒவ்வொரு சாமானுக்கும் 30% வரி உண்டு . அதை  மக்கள் நலனுக்குகாக உபயோக படுத்துகிறார்கள் என்றார் . சோசியல் செக்யூரிட்டி யாக முதியோர்கள் ,மணமாகாத மாதாக்கள்  , குழந்தைகளுக்கு  பண உதவி பெரிய அளவில் செய்கிறார்கள் .அவர்களுடைய பெரிய ப்ராப்ளமே "UNWED MOTHERS ". தவிர்க்க முடியவில்லையாம் .அவர்களுக்கு எல்லாம் இலவசமாம் . ஏழ்மை ஒரு பக்கம் விலைவாசிகள் ஒரு பக்கம் வருகின்ற உல்லாச பயணிகள் மிகவும் அதிகம். அதனால் அரசுக்கு வருமானம் அதிகம் .உல்லாசம் விரும்புவர்களுக்கு சொர்க்க பூமி . சுலபமாக  சம்பாதிக்கும் வழி -பாதிக்கும் வாழ்வு . இரு தலை  கொள்ளியோ   அரசுக்கு
பஹாமாசில்  , பஹாமா மாமா  மிகவும் பிரபலம் . அதே போல் conch salad ,fruit punch ரொம்ப பிரபலம்.  பஹாமா மாமா --தப்பாக நினைக்கவேண்டாம் , conch salad , fruit பஞ்ச்  சாப்பிடும் சலாடும் இல்லை , உண்ணும் பழ ரசமும் இல்லை . இந்த மூன்றும் பஹாமசின் சென்ட் வகைகள் .

சணல்  தயாரிப்புகளும் பிரபலம் .

தென்னை மரங்கள் அதிகம்  கோகோனட்  daiquiri எனப்படும்  ரம் கலந்த  இளநீர் +இலேசான வழுக்கையுடன் தருகிறார்கள் .

3 இளநீர் ,10 us $. அமெரிக்காவை விட இந்த ஒரு  ஐட்டம் தான் விலை மலிவு .அமெரிக்காவில் ஒரு இளநீர்10$.

கடைக்காரர் , இளநீரை சீவி , straw போட்டு எப்படி குடிப்பது என்று கூற முற்பட்டார் . அவரிடம் நாங்கள் எல்லாம் indians , straw இல்லாமலும் குடிப்போம் , straw வுடனும் குடிப்போம் என்றோம் . அதற்கு அவர் oh , I like Indians , indian films என்றார் . அவருக்கு பிடித்த படம் "slumdog millionaire " என்றார் .இந்தியாவில் இளநீர் என்ன விலை என கேட்க , ஒரு டாலருக்கு 2 இளநீர் என்றேன் . அடுத்த முறை வரும்போது 25 டாலருக்கு வாங்கி வருகிறீர்களா என்று கேட்டார் ? கொண்டு வரும் செலவு 500 டாலர் ஆகுமே என்றதும் ஒரு நட்பு புன்னகை .

அங்கு மார்க்கெட் place இல் ப்ரீ wireless . அமர்ந்து இணைய தளத்தில் இணையும் மக்கள் .

அதன் பக்கத்தில் பீச் . அமைதியான கடல் தெளிவான கடல் நீர்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 WjxptUYMQm2ZRtRz1qE6+DSC_0505

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 YhdIXn3TcuPTfEjOzPny+DSC_0507


அட்லாண்டிஸ் ஹோட்டல் ,பார்ப்பதற்கே அவ்வளவு அழகு .அங்கு உள்ளே சென்று பார்த்தோம் . பெரிய casino . கடைகள் .ஒரு குறிப்பிட்ட எல்லை வரை சென்று வர முடியும். அங்கு எடுத்த சில போட்டோக்கள் பார்வைக்கு


பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 7oOOtaH9Tkyz7b2w9upM+DSC_0476

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 GQ9Sx3rsTj6bcaFGJwnP+DSC_0486

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 B1qT9O9jRTWBm1khmcYV+DSC_0485

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 ScNKA0Z1QyiPZDR4SOOR+DSC_0488

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 XUXswK9lQfCza4FHVn32+DSC_0490

மில்லியன் டாலர் throne என்று ஒரு ஆசனம் வைத்து இருக்கிறார்கள் . அதில் உட்கார்ந்து எல்லோரும் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 UJOq3NWpQG2hCBlxjDfi+DSC_0496


ஹோடெல்லை ஒட்டிய தோட்டத்தில் ஒரு கடை .ரம் கேக் இங்கு  ரொம்பவே famous .

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Cv3xSxnTqyUWysuW58U6+DSC_0502


எல்லா இடத்திற்கும் டாக்ஸி டிரைவர் Lewis  நல்ல முறையில் அழைத்து சென்றார் .நன்றி கூறி , பணம் கொடுத்தவுடன் தனது விசிட்டிங் கார்டையும் கொடுத்தார் .அதில் அவர் பெயர் Dr Peeper. என்று குறிப்பிட்டு இருந்தது . டாக்டரா என்று கேட்கையில் , இங்கு யார் வேண்டுமானாலும் Dr போட்டுக்கலாம் .தப்பாக நினைக்கமாட்டார்கள் . நான் அடிக்கடி காரில்  horn உபயோகப்  படுத்துவேன் . அதனால்  நண்பர்கள் என்னை பீப்பர் என்று கூப்பிடுவார் . ஆகவே நானே Dr Peeper   என்று வைத்துக்கொண்டேன் என்றார் . அமெரிக்காவில் , சிமிண்ட் தளம் போடுபவர் தன்னை Grout Doctor என்று போட்டுக் கொள்வது நினைவிற்கு வந்தது .

நம் நாட்டிலும் 5 கிளாஸ் படித்து அரசியலில் புகுந்து கல்லூரிகள் அமைத்து .அதை பல்கலை கழகமாக்கி தங்களுக்கு தாமே கௌரவ  டாக்டர் பட்டம் வழங்கி கொள்வதும் நினைவிற்கு வந்தது .அவர்களுக்கு சளைத்தவர் நாங்கள் இல்லை என்று நடிக,நடிகையர்களும் , (பண உதவி செய்தோ ), கௌரவ டாக்டர் பட்டம் வாங்கி கொள்கிறார்கள் . Dr . Peeper க்கும் இவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை  என்றே நினைக்கிறேன் .

பஹாமாசில் இனிதே கழிந்த சில மணி நேரங்கள் .

கப்பலில் கடைசி  இரவு , மேல் தளத்தில் வான வேடிக்கைகள் இரவு 1030 மணிக்கு .தளமே வர்ண ஒலி,
ஒளியால்  தீபாவளி ஆனது .    

பஹாமாசுக்கு பய், பய் சொல்லிவிட்டு , கப்பல் மியாமி நோக்கி புறப்பட்டது .
அறைக்கு படுக்க வருகையில் , கேப்டனிடம் இருந்து ஒரு கடிதம்

நாளை .-------------

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 8 Empty Re: பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum