புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_m10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_m10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_m10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_m10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_m10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_m10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_m10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_m10எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 5:16 pm

“எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு...



ன்னிவரைக்கும் ரெண்டு பேரும் கூலி வேலைக்குப் போய், எங்க பாட்ட நாங்களே பார்த்துக்குறோம். எங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், ஊர்க்காரங்களை எல்லாம், 'எங்க ஆயுசுக்கும் மேல ஆரோக்கியமா இருக்கணும்!’னுதான் மனசார சொல்லி வாழ்த்துறோம்!''
- வெண்கலக் குரலில் ரவுனம்மாள் பாட்டி பேச, வியப்பில் வாயடைத்து நின்றோம்!

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில், வலங்கைமான் தாண்டி 10 கி.மீ தூரத்தில் உள்ளது குப்பணாம்பேட்டை. இந்தக் கிராமத்தின் அதிசயம், அற்புதம், ஆச்சர்யமாக இருக்கிறார்கள் ரவுனம்மாள்... அவருடைய அண்ணன் ரங்கசாமி. 100 தாண்டிய வயதிலும் பூரண உடல் ஆரோக்கியத்துடன், கூலி வேலை செய்து சம்பாதித்து வாழ்கிறார்கள்.

''எங்களுக்கு சொந்த ஊர் பசுபதிகோவில் பக்கத்துல இருக்கிற சூலமங்கலம். எனக்கு ஏழு வயசு இருக்கும்போது, ஊரையே பலிகொண்ட காலராவுல எங்க அப்பாவும், அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க. அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்களோட அரவணைப்புலதான் நானும் தங்கச்சியும் வளர்ந்தோம். 50 வருஷத்துக்கு முன்ன இந்த ஊருக்கு கூலி வேலைக்கு வந்தவங்க, இங்கயே நிரந்தரமா தங்கிட்டோம். உழைக்காம சோறு திங்க தெரியாது எங்களுக்கு!'' என்று கம்பீரமாக சொல்கிறார் ரங்கசாமி தாத்தா.


எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... P42b

''காலையில 4 மணிக்கு எந்திரிப்பேன். ரெண்டு கிலோ மீட்டர் தொலைவுல இருக்கிற டீக்கடைக்கு நடந்து போய் டீ குடிச்சுட்டு வந்து, ஆறு மணிக்கெல்லாம் முதல் ஆளா வயல்ல இறங்கி வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிருவேன். சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் வேலை இருக்கும்.

ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம். வீட்டுக்கு வந்ததும், உஸ்ஸுனு படுக்கிறதெல்லாம் கிடையாது. கீத்து (கீற்று) பின்னி விற்பேன். முள்வேலி செஞ்சு தருவேன். வயல் வேலை இல்லாத நாட்கள்ல, முழு நேரமும் கீத்து பின்னுவேன். சாப்பாட்டைப் பொறுத்தவரைக்கும், ஒரு பங்கு சாதம், ரெண்டு பங்கு காய்னு சாப்பிடுவேன். உடம்புல எந்தக் குறையும் இல்ல. காது மட்டும் கொஞ்சம் மந்தமான மாதிரி தெரியுது. ஆனாலும் ஆஸ்பத்திரிக்குப் போற பழக்கமெல்லாம் கிடையாது!

எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... P42aஅந்தக் காலத்துல ஆறடி இருப்பேன். இப்போ உடல் சுருங்கிப் போச்சு. நாலு வருஷத்துக்கு முன்ன, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், ஒரு கூட்டத்துல எனக்கு சால்வையெல்லாம் போத்தி, கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, கூச்சப்பட வெச்சுட்டாரு!'' என்று சிரிக்கும் ரங்கசாமி தாத்தாவுக்கு, 40 வயதில்தான் திருமணமாகியிருக்கிறது. எழுபது வயதில், ஒரு மகன் உள்ளார். பேரன், பேத்திகள் உண்டு.

''எந்தங்கச்சியும் சுறுசுறுப்புல என்ன மாதிரியே. அந்தக் கால ஆளுல... அதனால அண்ணன்னா அம்புட்டு மரியாதை கொடுக்கும். என் முன்ன நின்னுகூட பேசாது!'' என்று ரங்கசாமி தாத்தா சொல்ல, தங்களின் குடிசை வீட்டுக்குள் அழைத்து உபசரித்துப் பேசினார் ரவுனம்மாள் பாட்டி.

''எங்க அண்ணன் கல்யாணத்துக்கு அப்புறம்தான் எனக்கு கல்யாணமாச்சு. ரெண்டு ஆண், ரெண்டு பொண்ணுனு நாலு பிள்ளைக. இந்தா... வாசல்ல வெளையாடுற சிட்டுக, என் நாலாம் தலைமுறை பேரன், பேத்திக. வேறென்ன பேறு வேணும்! தலைமுறைகள் எல்லாரும் சேர்ந்து நின்னா, எங்க குடும்பம்தான் ஊருலயே பெரிய குடும்பம். ஆனாலும் கடைசி வரைக்கும் நானும் எங்க அண்ணனும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்துக்குவோம்னு, பக்கத்து பக்கத்து குடிசை வீட்டுல இருக்கோம். அண்ணனை பாத்துக்க அண்ணி இருக்காங்க. அவங்களுக்கு வயசு 92. எனக்கு இவங்க ரெண்டு பேரும்தான் துணை''

- தடையில்லாமல் பேசும் பாட்டிக்கு கண்பார்வை, பேச்சு, குரல், சுறுசுறுப்பு என்று எதிலும் குறை இல்லை. ஆடு மேய்க்கும் பாட்டியின் உழைப்பு, இன்னொரு வியப்பு.

இவர்கள் வேலை செய்யும் வயலுக்குச் சொந்தக்காரரான சின்னதுரை, இவர்கள் மீது பாசமும் மரியாதையும் வைத்துள்ளார்.

எனக்கு 109 வயசு... எங்க அண்ணனுக்கு 111 வயசு... P42''ரெண்டு பேரையும் எங்க ஊர்ல பொக்கிஷங்களா, வாழும் வழிகாட்டிகளா மதிக்கிறோம். இவங்களைப் பார்க்கும்போது, எங்க சோம்பலெல்லாம் ஓடிப் போயிடும். தாத்தா தன் மறைவுக்குப் பிறகு உடல் தானம் செய்யவிருக்கார். சிங்கப்பூர் ஆங்கில இதழ் உட்பட, இதுவரை எத்தனையோ ஊடகங்கள் வந்து இவங்களை பேட்டி எடுத்துட்டுப் போயிருக்காங்க. ஆனா, பொருளாதார ரீதியா சிரமப்படும் இவங்களுக்கு, எந்த பெரிய உதவியும் கிடைக்கல. ஒருமுறை பாண்டிச்சேரி அரசாங்கம் இவர்களை வந்து பார்த்து கௌரவிச்சு, சிறிய தொகை மட்டும் அன்பளிப்பா தந்துச்சு. இந்த வயசுலயும் உழைச்சுப் பிழைக்கும் இவங்களுக்கு, ஏதாவது பொருளாதார உதவி கிடைச்சா நல்லா இருக்கும்...'' என்றார் வேண்டு கோளாக.

''சின்னதுரை எங்களை வருஷா வருஷம் கபிஸ்தலம் கோயிலுக்கு சிறப்பு வழிபாட்டுக்கு கூட்டிட்டுப் போவார். ஊருக்கு ஆரோக்கியத்தைக் கொடுனு வேண்டிட்டு வருவோம். நோயில்லாத உடம்புதான் மதிப்பில்லாத செல்வம்!''

- உரத்த குரலில் கம்பீரமாக தாத்தா சொன்னபோது, பலமாக தலையசைத்தோம்!

விகடன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 23, 2014 5:23 pm

இவர்கள் இன்னும் நூறு ஆண்டுகள் நலமாக வாழ வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 23, 2014 5:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:இவர்கள் இன்னும் நூறு ஆண்டுகள் நலமாக வாழ வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1070358

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமாம், நோயற்ற வாழ்வே குறை வற்ற செல்வம் ஆச்சே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 23, 2014 6:48 pm

வணங்க பட வேண்டிய முதியவர்கள் !
அசீர்வதியுங்கள் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Jun 23, 2014 9:47 pm

அருமையிருக்கு 



கிருஷ்ணா
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 23, 2014 11:18 pm

இயற்கையோடு ஒட்டிய வாழ்வு அவர்கள் வாழ்வு.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக