ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சொல்லிட்டாங்க…
by ayyasamy ram Today at 1:44 pm

» கன மழை நிலவரம்
by ayyasamy ram Today at 8:15 am

» எம்.ஜி.ஆர் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்
by ayyasamy ram Today at 8:10 am

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Today at 8:07 am

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் மிளிர்ந்த வெண்மைப் புரட்சி நாயகள்
by ayyasamy ram Today at 7:53 am

» திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்பு
by ayyasamy ram Today at 7:48 am

» சர்வதேச விமான சேவை டிச 15ல் தொடக்கும்
by ayyasamy ram Today at 7:46 am

» வாட்ஸப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நாட்டு நடப்பு - கருத்துப் படம் 11/11/2021
by mohamed nizamudeen Yesterday at 9:07 pm

» பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்
by T.N.Balasubramanian Yesterday at 4:22 pm

» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» சீதனச்சீரழிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» கன்னியர் எல்லாம் கற்பூக்கள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» உன்னதம் உயிரோட்டம்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» அதேபோலொரு மழைக்காலம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» இயலாமை – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» அவளா இவள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» புரிதல் வேண்டும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» ஆசையாய்க் குடித்த தண்ணீர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by safetypartha Yesterday at 2:50 pm

» ஒரு குறளுக்கு 1 டாலர் பரிசு! :அமெரிக்காவில் அசத்தும் புதுகை இன்ஜினியர்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:30 pm

» கன்னட நகைச்சுவைகள் (49 - 51)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:27 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» பாதுகாப்பான புரத உணவு பாசிப்பருப்பு
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» மாபெரும விமான நிலையம்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» ஓட்டுநர் இல்லா ரயில்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தேசிய குடும்ப நல ஆய்வு
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» தேசிய அரசியல் சாசன தினம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» தினமும் சிக்கன் சாப்பிட கூடாது...!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» சிறைச்சாலை - பளிச் 10
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm

» அரசு ஊழியர்களுக்கு பெற்றோரை குஷிப்படுத்த 4 நாள் தொடர் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மெகா சீரியல்களில் இது தான் நம்பர் ஒன்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:02 am

» நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி பேரவை குழு சம்மன்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ரயில்வே நடை மேடை க்கடணம் குறைப்பு
by ayyasamy ram Yesterday at 9:45 am

» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
by T.N.Balasubramanian Thu Nov 25, 2021 9:26 pm

» மனித உடலைப் பற்றிய அறியாத ரகசியங்கள்
by T.N.Balasubramanian Thu Nov 25, 2021 9:14 pm

» முருங்கைக்காய் ஊறுகாய்
by T.N.Balasubramanian Thu Nov 25, 2021 9:12 pm

» பிரெட் ரசமலாய்
by T.N.Balasubramanian Thu Nov 25, 2021 9:05 pm

» மதநல்லிணக்கத்திற்காக இன்னொரு தாஜ்மஹால்!
by mohamed nizamudeen Thu Nov 25, 2021 8:51 pm

» உருளைக்கிழங்கு கட்லெட்
by ayyasamy ram Thu Nov 25, 2021 8:03 pm

» கத்தரிக்காய் துவையல்
by ayyasamy ram Thu Nov 25, 2021 8:02 pm

» மாம்பழ ஜேம்
by ayyasamy ram Thu Nov 25, 2021 8:00 pm

» தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி…!
by ayyasamy ram Thu Nov 25, 2021 7:55 pm

» எல்லாம் தேச நலனுக்காத்தான்…!
by ayyasamy ram Thu Nov 25, 2021 7:54 pm

» வேளாண் (வலை) வீச்சு
by ayyasamy ram Thu Nov 25, 2021 7:48 pm

» இது தமிழ்க்கோடு (கோட்டுச் சித்திரம்)
by ayyasamy ram Thu Nov 25, 2021 7:43 pm

» அன்னை சாரதாதேவியின் அன்பு மொழிகள்
by ayyasamy ram Thu Nov 25, 2021 6:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

+4
M.Saranya
ராஜா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
8 posters

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 Sun Jun 22, 2014 2:15 am

First topic message reminder :

நலம் 360’ - 1
மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P20a
குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது!

''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை’ முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் தோசை சுடுறா. வித்துடலாம்னு சொன்ன பூமில 'ஏதாச்சும் செய்யலாமாப்பா?’னு பையன் கேட்கிறான். இப்போ 'ஆறாம்திணை’யைக் கண்டிப்பா நிறுத்தியே ஆகணுமாப்பா?'' மேலும் நெகிழ்வுடனும் ஆதங்கத்துடனும் அந்தத் திருப்பூர் பெரியவர் பேசப் பேச, நான் அழுதேவிட்டேன். எத்தனை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இணையத்தில், சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த அரவணைப்புகளில் நானும் விகடனும் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம். இழந்ததையும் தொலைத்ததையும் எடுத்துச் சொல்லி, தினம் நம் மீது இறுகும் இறுக்கமான வணிகப்பிடியை அடையாளம் காட்டி, நலவாழ்வை நோக்கி நகர வழிகாட்டிய வரிகள்தான் 'ஆறாம்திணை’ கட்டுரையின் வாசக்கால்கள். அழுக்குப் புடைவை அணிந்த பொக்கை வாய்ப் பாட்டியைக் கண்டதும் பட்டணத்துப் பேரக் குழந்தை ஓடிச்சென்று கட்டி அணைப்பது போலதான், 'ஆறாம்திணை’யை அதன் வாசகர்கள் உச்சிமோந்து அணைத்துக்கொண்டார்கள்.

அதே நெகிழ்வுடனும் நிறைவுடனும் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வரலாம் என சென்னை வெப்பத்தில் இருந்து தப்பி, சொந்த கிராமத்துக்குச் சென்று, பக்கத்துத் தோட்டத்தில் புதுசாக வாங்கியிருந்த டிராக்டரை குதூகலமாக ஓட்டிப்பார்த்தபோதுதான் அந்த அழைப்பு! ''சார்... எங்க இருக்கீங்க?'' என விகடன் ஆசிரியர் தொலைபேசினார். ''சின்ன பிரேக் எடுத்துக்கலாம்னு சொன்னீங்களே... அதான் ஊரு பக்கம் வந்துட்டேன்...'' என நான் பதிலளிக்க, ''இங்க மெயிலும் போனும் கதறது. ''ஆறாம்திணை’யை ஏன் நிறுத்தினீங்க?’னு கேட்கிறாங்க. அடுத்த வெர்ஷனை உடனே ஆரம்பிச்சிடலாம்னு ஐடியா. தலைப்புகூட முடிவு பண்ணிட்டோம். நீங்க ரெடியா?'' என்று கேட்க, 'நலம் 360’ பூத்துவிட்டது.

'நலம் 360’... வெறும் மருத்துவக் கட்டுரை அல்ல. நலவாழ்வு என்பது மருந்து, மாத்திரை, கசாயம், ஈ.சி.ஜி. விஷயம் அல்ல. ஆரோக்கியம் என்பது, சிக்ஸ்பேக் உடம்பில் கட்டமைக்கப்படுவதும் கிடையாது. ஆறு லட்சம் பாலிசி மூலம் அதை வாங்கி வீட்டில் வைக்கவும் முடியாது. அஞ்சறைப்பெட்டியிலும், அடுப்பாங்கரைப் பரணில் கவிழ்த்திவைத்த வெங்கலத் தவலையிலும், ரசம் வைக்கும் ஈயச்சட்டியிலும், பட்டாசல் மாடக்குழியில் பத்திரப்படுத்திய அகல்விளக்கிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி, கீழாநெல்லியிலும், கரிசாலை கண்மையிலும், கத்தாழை எண்ணெய்க் குளியலிலும், வசம்புக் கட்டை கை வளவியிலும், மருதாணிப் பற்றிலும், புளியில்லா பொரிச்ச குழம்பிலும், சுண்டுவார் ரசத்திலும், இடுப்புச் சுருக்குப்பை தாம்பூலத்திலும்தான் நம் நலவாழ்வு நங்கூரமிட்டு இருந்தது!

வண்ணத்துப்பூச்சியின் சிறகு அசைவில் எங்கோ சூறாவளி உருவாகும் கேயாஸ் தியரி போல, மீந்துபோன சாம்பாரை ப்ளாஸ்டிக் கவரோடு ரயில் பயணத்தின்போது வீசி எறிவதில்கூட, யாருடைய வாழ்க்கைப் பயணத்திலோ ப்ளாஸ்டிக்கின் சுவடுகளான அடினோ கார்சினோமா தூக்கிச் செருகும் சாத்தியம் மிக அதிகம். பின்னிரவில் முகநூலில் ஏற்றிய தன் புகைப்படத்துக்கு எத்தனை 'லைக்ஸ்’ விழுந்திருக்கின்றன என இரவெல்லாம் பரபரப்புடன் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செல்போனைச் சீண்டும் இளசுகளுக்கு, உறக்கம் தொலைத்த தன் உடம்புக்கு நோய்க்கூட்டம் 'லைக்’ போட்டிருக்கும் விஷயம் தெரியவில்லை. இதுவும் இன்னபிறவுமாக நல்வாழ்வு தொடர்பான விசாலமான பார்வையை விதைப்பதே நலம் '360’-ன் நோக்கம்!

'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது முதுமொழி. ஆனால், அந்த எண்சாண் உடம்பு, நலத்தோடு அன்றாடம் நகர்வதற்கு அடிப்படையான விஷயம் வயிறும் அதில் நடக்கும் செரிமானமும்தான். சாப்பிட கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் லேசாக நெஞ்சாங்கூட்டுக்குக் கீழே எரிவதும், 'எண்ணெய் பலகாரம் வீணாகுதே’ என என்றைக்கோ ஒரு நாள் சாப்பிட்டதற்கு, அடுத்த இரண்டு நாள்கள் ஏப்பத்தில் வாசம் காட்டி வதைப்பதையும் நாம் பல சமயம் அலட்சியப்படுத்திவிடுவது உண்டு. அரிசியையும், கம்பையும், சோளத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய நம் ஜீரண மரபுக்கு, சிவப்பு சிக்கன் பீஸுடன் வரும் 'அலூரா சிவப்பு’, 'எரித்ரோசைன்’ ஆகியவை கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். இந்தத் திகிலில், சில துளி ஜீரணசுரப்பைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்போதுதான் அல்சரில் இருந்து கொலைட்டிஸ் வரை குடலின் இயல்பு தாறுமாறாகச் சிதைகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி ஜெயித்துவிடலாம் என்று பழகிவிட்ட டி-20 மனம், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு கடைசி நிமிடத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு அரக்கப் பரக்கக் கிளம்பும் பழக்கம்... இவைதான் வியாதிக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும்!

உமிழ்நீரில் தொடங்குகிறது ஜீரணம். உணவு மேஜையில் மூக்கின் மோப்பத்தில் தொடங்குகிறது என்றுகூட சொல்லலாம். 24 மணி நேரத்தில் சுரக்கும் சுமார் 11.25 லிட்டர் எச்சில், அதனுடன் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டை உடைத்து, குளுக்கோஸ் துகள்களாக்கி ஜீரணத்துக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.

ஒரு துண்டு உணவு உள்ளே போனதும் வாயில் ஊறும் எச்சிலில் உணவைச் செரிக்க உதவும் மியூசின் அமைலோஸ் சுரப்புகளும், உடலுக்கு ஒவ்வாத பொருள்களை முறித்து வெளியேற்றும் லைபேஸ் நொதியும் சுரக்கத் தொடங்கும். உணவை மெதுவாக நொறுக்கி, அந்த உமிழ்நீருடன் கலந்து உள் அனுப்ப வேண்டும். இதற்கு எல்லாம் அறுசுவையை உணரும் ஆசுவாசமான மனம் நிச்சயம் வேண்டும். இடது கையில் கம்ப்யூட்டர் மவுஸோ, ஸ்மார்ட் போனோ, தொலைக்காட்சி ரிமோட்டோ... ஏன் 'ஆறாம்திணை’ புத்தகமோ வைத்துக்கொண்டு வலது கையில் பாற்கடல் அமிர்தம் சாப்பிட்டால்கூட அது பாழ் தான். உணவு உத்தமமாக ஜீரணிக்க பரபரப்பு இல்லாத மனம் அடிப்படைத் தகுதி.

உடலை நோய்ப்பிடிக்குச் சிக்காமல் தற்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர். சாதாரண சளி, இருமலில் இருந்து சர்க்கரை வியாதி வரை காக்கும் அப்படியான ஒரு பொடி அன்னப் பொடி. சமீபமாக எக்குத்தப்பு இரவு விருந்து உண்டாக்கும் எதுக்களிப்பு, வயிறு முதல் தொண்டை வரை எரியவைத்து நாள்பட்ட வயிற்று வியாதியை (Gastroesophageal Reflux Disease) வரவைக்கிறது. இதற்கு அன்னப்பொடி மிகச் சிறந்த மருந்து. ஜீரணத்தை வரைமுறைப்படுத்தும் அன்னப்பொடியின் செய்முறை பெட்டிச் செய்தியில்.

தாய்ப்பாலுக்குப் பின் அரிசி/கஞ்சியில் தொடங்கி, ஐந்து வயதுக்குள்ளாகவே ஹைதராபாத் தம் பிரியாணி வரை ஜீரணிக்கப் பழகும் நம் ஜீரண மண்டலம், உடலுக்கான மிகப் பெரிய பாதுகாப்பான அரண். அதில் ஓட்டை உடைசல் ஏற்படுவதற்குக் காரணம்... வாயைக் கட்டாமல் வளைத்து அடிக்கும் மனோபாவமும், எதைத் தின்கிறோம் என்ற அக்கறையில்லாத வாழ்வியலும், 'ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போயேன்’ என்ற கரிசனக் குரலை அலட்சியப்படுத்தி நகர்வதும்தான். சின்னச் சின்ன அக்கறைகளை சிறுவயது முதல் உண்டாக்குவது மட்டுமே நாளைய நலவாழ்வுக்கான நம்பிக்கைகள்.

நம்பிக்கையோடு நலம் காப்போம்!

- நலம் பரவும்...

அன்னப்பொடி

தேவையான பொருள்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, கல் உப்பு அனைத்தும் தலா 50 கிராம். பெருங்காயம் 25 கிராம்.

செய்முறை: சுக்கின் புறத்தோலைச் சீவி உலர்த்தி, மற்றவற்றை எல்லாம் நன்கு குப்பை நீக்கி உலர்த்தி, அனைத்தையும் பொன்வறுவலாக வாணலியில் வறுத்து, பொடித்துவைத்துக்கொண்டு வாரம் மூன்று நாள் முதல் உருண்டைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது அஜீரணத்தைப் போக்கும் எளிய மருந்து.

உணவுக்கு முன் வெந்தயப்பொடி, உணவோடு அன்னப்பொடி அல்லது ஐங்காயப்பொடி, உணவில் தூதுவளை ரசம், உணவுக்குப் பின் கடுக்காய்ப்பொடி என்று உணவை மருந்தாக்கிச் சாப்பிட்டவர்கள் நாம். நவீனத்தில் மாடுலர் கிச்சனாக மாறிப்போன அடுப்பங்கரையில், ஆலிவ் ஆயிலும் மயோனைஸும் குடியேறி, ஓமத்தையும் திப்பிலியையும் ஓரங்கட்டி ஒழித்துவிட்டன. கொஞ்சம் அவற்றை மீட்டெடுத்து சாம்பார் பொடி, ரசப்பொடி செய்வது போல அன்னப்பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் உங்கள் வீட்டில் ஆயுளுக்கும் குடியிருக்கும்!
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P20b
சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே...

நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை.

எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது.

ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனால், 'விண்டோ ஷாப்பிங்’ போல பராக்குப் பார்த்துக்கொண்டே நடப்பது அதிகம் பயன் தராது.

நடைக்கு முன்னர் தேநீர் அருந்தலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சிக்கு முன்னர் பச்சைத் தேநீரும், கொஞ்சம் முளைகட்டிய பயறு அடங்கிய சுண்டலும் சாப்பிடலாம்.

நடக்கும் 45 மணித்துளிகளும் பாட்டு கேட்டுக்கொண்டே நடப்பேன்’ எனப் பிடிவாதம் பிடித்தால், கூடிய விரைவில் ஆரோக்கியமான காதுகேளாதவராக மாறக்கூடும்.

குடும்ப உறவுச் சிக்கல்கள், ஷேர் வேல்யூ, பட விமர்சனம், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எனப் பேசிக்கொண்டு நடப்பது உடற்சோர்வையும் மன உளைச்சலையுமே தரும்.

'அதான் கிச்சன்ல, மொட்டைமாடில நடக்கிறேனே... அதுவே ரெண்டு கி.மீ வரும்!’ போன்ற சமாதானங்கள் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது.

சர்க்கரை நோயாளிகள், கண்டிப்பாக வெறும் காலில் நடக்கக் கூடாது. தரமான, எடை குறைவான, மெத்தென்ற கேன்வாஸ் ஷூ அல்லது செருப்பு நல்லது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down


நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by krishnaamma Wed Oct 08, 2014 11:03 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:சூப்பர் திரி நேசன்..........எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டேன் புன்னகை நன்றி ! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1093885

இந்த தொடரை எழுதிவரும் மருத்துவர் சிவராமன் அவர்களின் ஆறாம் திணை மின்நூலாக மின்நூல் பகுதியில் பதிவிட்டிருந்தேன்..படித்தீர்களா அம்மா..படிக்கவேண்டிய நூல் அது..இதுவரை படிக்கவில்லை என்றால் தவறாமல் படியுங்கள். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093889

இல்லை நேசன், பார்க்கவில்லை....இதோ பார்க்கிறேன் புன்னகை நன்றி ! நன்றி அன்பு மலர்

லிங்க் தரமுடியுமா நேசன் ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64176
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 11:07 pm

@krishnaamma wrote:
@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:சூப்பர் திரி நேசன்..........எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டேன் புன்னகை நன்றி ! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1093885

இந்த தொடரை எழுதிவரும் மருத்துவர் சிவராமன் அவர்களின் ஆறாம் திணை மின்நூலாக மின்நூல் பகுதியில் பதிவிட்டிருந்தேன்..படித்தீர்களா அம்மா..படிக்கவேண்டிய நூல் அது..இதுவரை படிக்கவில்லை என்றால் தவறாமல் படியுங்கள். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093889

இல்லை நேசன், பார்க்கவில்லை....இதோ பார்க்கிறேன் புன்னகை நன்றி ! நன்றி அன்பு மலர்

லிங்க் தரமுடியுமா நேசன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1093952

இதோ லிங்க்
ஆறாம் திணை-மருத்துவர் கு.சிவராமன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by krishnaamma Wed Oct 08, 2014 11:10 pm

சூப்பர் பாஸ்ட் நேசன் புன்னகை நன்றி ! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64176
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 5:01 pm

நலம் 360’ - 18
மருத்துவர் கு.சிவராமன்,


ஆப்பிள் ஒருவேளை கசப்பான ஒரு கனியாக இருந்திருந்தால், ஆதாமின் பேச்சை ஏவாள் கேட்டிருக்கக்கூடும். இப்படி நாம் ஈ.எம்.ஐ கட்டிக் கஷ்டப்பட்டு வாழ வேண்டியிருந்திருக்காது. ஆணை பெண்ணும் பெண்ணை ஆணும் வசீகரிப்பதுபோல, அந்த இருதரப்பினரையும் ஈர்த்தபடியே இருப்பது இனிப்பு!

அன்றைய அடை, அப்பம், மோதகம் போன்றவற்றில் இருந்து, இன்றைக்கு நெய்க் குளியல் போட்டு வரும் மைசூர்பாகு வரை உலகின் இனிப்பு அவதாரங்கள் ஏராளம். ஆனால், சர்க்கரை வியாதி எனும் அசுரன் தொற்றிக்கொள்ள காதலன்/காதலிபோல சிலாகிக்கவைத்த இனிப்புகள், இப்போது நடுநிசி நாய் போல எரிச்சல் மிரட்டல் கொடுக்கின்றன. அதுவும், 'எத்தனை உடற்பயிற்சிகள் செய்தாலும், எவ்வளவு யோகா செய்தாலும், இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வந்தே தீரும். மரபு அணுவிலேயே அதற்கான டிசைன் இருக்கிறது’ என ஆராய்ச்சி அணுகுண்டுகளை வீசுகிறார்கள். மரபணுரீதியாக சர்க்கரை வியாதியில் உலகில் நாம் முதல் இடம் பிடிப்பதற்கு, சோன்பப்டி, மைசூர்பாகு ஆகியவை காரணங்கள் கிடையாது. கரும்பில் இருந்து இனிப்பைக் காய்ச்சி உருட்டும் வித்தையைக் கற்றுக்கொண்ட தருணத்தில்தான், சர்க்கரை நோய்க்கான டி.என்.ஏ-க்களை நம் மூதாதையர்கள் விதைக்கத் தொடங்கினார்கள்.

மற்ற உலக நாடுகள் தேனைத் தாண்டி வேறு எந்த இனிப்பையும் பார்த்திராத சமயத்தில், கரும்பு வெல்லம், பனை வெல்லம், இலுப்பைப் பூ என நாம் பன்னெடுங்காலமாக சாப்பிட்டு வந்த சர்க்கரைதான், இப்போது தெருவுக்கு மூன்று டயாபட்டிக் கிளினிக் ஆரம்பிக்கக் காரணமாக இருக்கிறது. என்ன, அப்போது இனிப்பு சாப்பிட்டதோடு, அலுவலோ வணிகமோ குதிரை/நடை/ஓட்டம்/சைக்கிள் மூலம் சென்று செய்தோம். சாப்பிட்ட இனிப்பு எரிந்தது. இப்போது உட்கார்ந்த இடத்தில் கூகுளாண்டவர் துணையுடன் முடித்துக்கொள்வதால், இனிப்பு எரியாமல் வளர்கிறது. கொலம்பஸ் தன் கடல் பயணத்தில் கனாரி தீவுப் பக்கம் ஓய்வுக்கு ஒதுங்க, அந்தத் தீவின் கவர்னர் அம்மா, கொஞ்சம் காதலுடன் கொலம்பஸுக்கு கரும்பைக் கொடுக்கும் வரை சர்க்கரை பற்றிய அறிமுகம் ஐரோப்பியருக்கு அவ்வளவாகத் தெரியாது என்கிறது வரலாறு. புத்தபிக்குகள் மூலம் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கரும்பு பயணித்ததில், சீனர்களும் நமக்குப் போட்டியாக சர்க்கரை வியாதி ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் இனிப்பு பனை வெல்லமாக, நாட்டுக் கரும்பு வெல்லமாக இருந்தவரை, உடம்பு அதனைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்தியதில் பாதகம் இல்லாமல், கூடவே 200-க்கும் மேற்பட்ட நல்ல பல கனிமங்களும் நொதிகளும் கிடைத்து வந்தன. இப்போது வேறு எந்தச் சத்தும் இல்லாத வெள்ளைச் சர்க்கரையில் இருக்கும் வெறும் குளுக்கோஸ் மாலிக்யூல்கள், வாய்க்குப்போன மாத்திரத்தில் ரத்தத்தில் கலக்கும்படி தயார் நிலையில் இருக்கின்றன. விளைவு... 'இயல்வது கரவேல்’ பாடலுடன், வருங்காலத்தில் 'இனிப்பு தொடேல்’ என்றும் பள்ளிகளில் சொல்லித் தரப்போகிறோம்!
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P96d
2,000 வருடங்களில் நம் மரபணுக்கள் படிப்படியாக இனிப்பை ஜீரணிக்கும் வலிமையை இழந்துவருகின்றன. ஆனால், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு அவசியமான இனிப்பை நேரடியாக எடுக்காமல் கூட்டுச் சர்க்கரையாக, லேசில் உடைந்திடாத கட்டுப்பட்ட சர்க்கரையாக எடுப்பதுதான் புத்திசாலித்தனம். பாரம்பரியப் புரிதலின்படி இனிப்பு, உடலையும் திசுக்களையும் வளர்க்கும் சுவை. அனைத்து வயதினருமே முடிந்தவரை அதை இயற்கையாகக் கனிகளில் இருந்து எடுப்பதுதான் இப்போதைக்குப் புத்திசாலித்தனம். அதுவும் ஒட்டு மாம்பழம் போன்ற மிக இனிப்பான பழங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட கொய்யா, பப்பாளி, மாதுளை போன்ற பழங்களை அனுதினம் சாப்பிட வேண்டும். நம் பாரம்பரிய இனிப்புகளான பனை வெல்லம், ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு வெல்லம், தேன் ஆகிய இனிப்புகளை மட்டுமே, நம் குழந்தைகளின் நாவில் படும்படி வளர்க்கலாம்.

இந்தத் தீபாவளி முதலே அப்படி ஒரு முயற்சியை ஆரம்பித்தால் என்ன? நூற்றுக்கணக்கில் ரூபாய்களைச் செலவழித்து நெய், மில்க் ஸ்வீட்களை வாங்கி கிலோகணக்கான கலோரிகளை உடம்பில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? உடலுக்கும் மனதுக்கும் சுற்றுப்புறத்துக்கும் எந்தப் பாதிப்பும் அளிக்காத ஸ்பெஷல் சிறுதானிய இனிப்பு ரெசிப்பி... இங்கே உங்களுக்காக!

(ரெசிப்பி உபயம்: 'ஏன் பஸ் எல்லாம் நிறுத்துறாங்க? அப்போ நாம ஊருக்குப் போக முடியாதா?’ என விசாரித்து சிக்கிக்கொண்ட கேப்பில், கைப்பக்குவம் காட்டிய என் அம்மாவும் சித்தியும்!).

ஸ்வீட் ஸ்டால் கியூவில் நின்று அட்டைப் பெட்டியில் அவசரகதியில் அள்ளி அடுக்கப்படும் ஸ்வீட்களை, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது சம்பிரதாய சந்தோஷம் கொடுக்கலாம். ஆனால், சில மணித் துளிகளைச் செலவழித்து சிறுதானிய இனிப்புகளைச் செய்து பிரியமானவர்களுக்குக் கொடுத்தால், உங்கள் அக்கறையும் புலப்படும்; அவர்களின் ஆயுளும் அதிகரிக்கும்.

என்ன, பிரியமானவர்கள் மீது உங்களுக்கு அக்கறை உண்டுதானே!

பின் குறிப்பு: 'அட... சிறுதானிய இனிப்பு... ஒரு கட்டு கட்டலாம்!’ என, சர்க்கரை நண்பர்கள் களத்தில் குதித்துவிடாதீர்கள். அனைத்து இனிப்புகளுமே அளவோடுதான் உடம்பில் சேர வேண்டும். 'ஆர்கானிக் வெல்லம்தானே... அளவு இல்லாமல் சாப்பிடலாம்’ என்ற எண்ணம் தப்பு. உடலில் கிளைசிமிக் இண்டெக்ஸ் (சர்க்கரை சேரும் வேகம்) எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கிளைசிமிக் லோடும் (சர்க்கரை அளவு) முக்கியம். 'நான் டயாபட்டிக்... இன்சுலின் போடுறேன். வெல்லத்தில் செய்த தினை அதிரசமும் தேன் நெல்லியும் சாப்பிடலாமா?’ எனக் கேட்டால், 'ரொம்ப ஸாரி... இனிப்பு உண்டு மகிழும் உங்கள் குழந்தையைப் பார்த்து இன்முகம் காட்டுங்கள். பழசோ புதுசோ, உங்களுக்கு இனிப்பு வேண்டாம்’ என்பதே என் பதில்.
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P96aa
இனிப்பில் சுரக்கும் எண்டார்ஃபின்கள்தாம் காதலில் சுரக்கின்றது; கனிவில், கரிசனத்தில் நெகிழ்கையில் சுரக்கிறது; கரம்பற்றி அழுத்துகையில் சுரக்கிறது. உங்கள் குழந்தைக்குத் தரும் உச்சி முத்தத்தில் சுரக்கிறது; 'அ முதல் ஃ’ வரை எனக்குத் தெரியும், என் ஜன்னல் வெளியே நிற்கும் குருவிக்கோ வானம் தெரியும்!’ என்ற வண்ணதாசனின் கவிவரிகளை வாசிக்கையிலும் சுரக்கிறது.

இனிப்பை நாம் இப்படியும் பெறலாமே!

- நலம் பரவும்...

நேந்திரங்காய் உப்பேரி: நாகர்கோவில் நண்பர்கள் வார விடுமுறைக்கு ஊருக்குச் சென்று திரும்பும்போது, வாங்கிவரும் உப்பேரிக்கு நாக்கைப் தொங்கப்போட்டுக் காத்திருப்போம். உடலை வளர்க்கும் அந்த உப்பேரிக்கு ஊட்டம் தருவது நேந்திரம்பழம். அதிகம் பழுத்துக் கனியாமல், சிறிது பழுத்த நேந்திரங்காய்களை தோல் நீக்கி, நீளவாக்கில் இரண்டாகக் கீறி, அவற்றைக் கொஞ்சம் பருமனான துண்டுகளாக்கி, எண்ணெயில் பொரித்துக்கொள்ளுங்கள். அதில் கெட்டியான வெல்லப்பாகு, சுக்குப்பொடி சேர்த்துக் கிளறினால், உப்பேரி ரெடி. உப்பேரி மனதில் மப்பு ஏற்றும் ஊட்ட உணவு. எடை குறைவான குழந்தைகள் தினம் மாலையில் கொறிக்க மிகச் சிறந்த சிற்றுண்டி!

மனோகரம்: குற்றாலத்தில் குளித்து முடித்து அடித்துப்பிடித்து பேருந்தில் ஏறி வரும்போது, தென்காசி பேருந்து நிலையத்தில் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டி வாங்கி, சப்புக்கொட்டிச் சாப்பிட்ட மனோகரத்தின் சுவை இப்போதும் நினைவில் இனிக்கிறது. தினை மாவு ஒரு கப் எடுத்துக்கொண்டு, சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கரண்டியில் தேய்த்துப் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பொடித்த ஆர்கானிக் வெல்லம் அரை கப் எடுத்து, அதைக் கெட்டியான பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். அந்தப் பாகில் ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி கலந்து அதில் பொரித்த மாவைச் சேர்த்து நன்கு கிளறினால், மனோகரம் தயார். ஆறியதும் சுவைக்கலாம்!

கேழ்வரகு கிரிஸ்பி லட்டு:
கரகர மொறுமொறு கிரிஸ்பி மிட்டாய்கள் கடையில்தான் கிடைக்குமா என்ன? வீட்டிலேயே அப்படியொரு கிரிஸ்பியான பண்டம் செய்ய முடியும். அதுவும் கேழ்வரகில்! கேழ்வரகு மாவை பூரிக்குப் பிசைவதுபோல் துளி உப்புநீர் விட்டு பதமாகப் பிசைந்து, எண்ணெயில் பூரிகளாகச் பொரித்து எடுத்துக்கொள்ளவும். அந்தப் பூரியை மிக்ஸியில் பொடித்து, அதோடு ஏலப்பொடி, வறுத்த முந்திரி கலந்து கெட்டியான வெல்லப் பாகு, நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்தால், கேழ்வரகு கிரிஸ்பி லட்டு ரெடி. எக்கச்சக்க விலையில் கிடைக்கும் இம்போர்டட் சாக்லேட்டின் சுவையையும் மிஞ்சும் இந்த கிரிஸ்பி லட்டு.

உலர் பழ உருண்டை:
இது அடுப்புக்குப் போகாத ஓர் இனிப்பு. விதையை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிய பேரீச்சைப் பழம், கறுப்புத் திராட்சை, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி இவற்றை மிக்ஸியில் சிறிது பொடித்துக்கொண்டு, அவற்றோடு சிறிது தேன் கலந்து உருண்டைகளாகப் பிடியுங்கள். ஒவ்வோர் உருண்டையும் உடம்புக்கு அத்தனை உறுதி. பழம் பிடிக்காமல் அடம்பிடிக்கும் அல்ட்ரா மாடர்ன் குழந்தைகளுக்கு, இந்த லட்டை உணவுக்கு முன் ஒன்று என மருந்துபோல கொடுங்கள். குழந்தைகள் உயரமாக, திடமாக வளர்வது உறுதி!

கருப்பட்டி மிட்டாய்: விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் பிரபலம் இந்தக் கருப்பட்டி மிட்டாய். உளுந்தை ஊறவைத்து இட்லி மாவுக்கு அரைப்பதுபோல் நைஸாக அரைத்து மாவாக்கி, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். அந்த மாவை ஜாங்கிரிக்குப் பிழிவதுபோல பிழிந்துவைக்கவும். கருப்பட்டியைப் பொடித்து இளம்பாகாகக் காய்ச்சி, அதில் பிழிந்த மாவை ஊறவிட்டு எடுத்தால், கருப்பட்டி மிட்டாய் மினுங்கும்!
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P96bb
கருப்பட்டி கடலை பர்ஃபி: Palm nut burfi என ஓர் அழகான பேக்கிங்கில், உங்கள் குழந்தைக்கு நீங்கள் இந்தத் தீபாவளியில் புது பண்டத்தை அறிமுகப்படுத்துங்கள். நமக்குப் பழக்கமான கடலைமிட்டாய்தான் 'கருப்பட்டி பர்ஃபி’ என ரீமேக் அவதாரம் எடுத்திருக்கிறது. இனிப்புகளில் கடலைமிட்டாய்க்கு எப்போதும் நம்பர் ஒன் மரியாதை உண்டு. அவ்வளவு ஊட்டம் தரும் உணவு அது. வறுத்த நிலக்கடலையை நன்கு உடைத்து, கருப்பட்டிப் பாகில் கலந்து, ஒரு தட்டில்விட்டு பர்ஃபியாக வெட்டி வைத்துக்கொண்டால், கருப்பட்டி கடலை பர்ஃபி தயார். ஒவ்வொரு துணுக்கும் அம்புட்டு ஆரோக்கியம்... அம்புட்டு ருசி!

புட்டமுது: திருச்செந்தூர் முருகன் கோயிலின் பிரசாதம் இதுதான். குறிஞ்சி நிலக் கடவுள் முருகனின் உணவை இப்போது தினை அரிசியில் செய்கிறார்களா அல்லது வீரிய ஒட்டுரக அரிசியில் செய்கிறார்களா எனத் தெரியவில்லை. நாம் தினை அரிசியிலேயே செய்யலாம்.

ஒரு கப் தினை மாவை வாணலியில் மணம் வரும் வரை வறுக்க வேண்டும். தொட்டால் கை சுடும் பக்குவம் வந்தவுடன், அரை கப் பொடித்த வெல்லத்தை அதோடு சேர்த்து வறுக்க வேண்டும். வெல்லமும் மாவும் நன்கு கலந்ததும் ஒரு ஸ்பூன் பொடித்த ஏலக்காய், கொஞ்சம் நெய், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான புட்டமுது தயார். இது பல நாள் கெடாது. புட்டமுது இனிப்புச் சுவையால் குழந்தைகளை ஈர்ப்பதோடு, அவர்களைப் புஷ்டியாக்கும் வாய்ப்பும் அதிகம்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by M.Saranya Thu Oct 09, 2014 5:17 pm

நன்றி !!!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by krishnaamma Thu Oct 09, 2014 6:37 pm

அருமை யான பதிவு நேசன் புன்னகை நன்றி ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64176
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 6:49 pm

@krishnaamma wrote:அருமை யான பதிவு நேசன் புன்னகை நன்றி ! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1094261
நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 6:02 pm

நலம் 360’ - 19
மருத்துவர் கு.சிவராமன்
கர்ப்பிணிக்கு மாதுளங்காய் ரசாயனம், சுண்டுவார் ரசம்; பிரசவித்த தாய்க்கு மருந்துப் பொடி, குறிஞ்சிக் குழம்பு; கைப்பிள்ளைக்கு உரைமருந்து, சேய்நெய்; பால் சுரக்க சுறாப்புட்டு சதாவ்ரி லேகியம்; பால் கட்டினால் மல்லிகைப் பூக்கட்டு, பூப்பெய்திய பிள்ளைகளுக்கு உளுந்தங்களி, எள் துவையல்; பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக, ரகசியமாக ஒளவையார் கொழுக்கட்டை, ஆண்களுக்கு நாட்டுக்கோழிக் குழம்பு, வயசான தாத்தாவுக்குக் கடுக்காய் பிஞ்சு சூரணம்... என வாழ்வின் அனைத்து படிநிலைகளுக்கும் சிறப்பு உணவைத் தந்து, வாழ்வை தெளிவான நலப் புரிதலில் நகர்த்திவந்த இனக் குழு நாம். நலவாழ்வுப் புரிதலிலோ, அகவாழ்வின் அறிதலிலோ அந்த ஒளவையார் கொழுக்கட்டை சங்கதி இன்றைக்கும் நம் தமிழ்ப் பெண்களால் பெர்முடாஸ் டிரையாங்கிள்போல, ரகசியம் பாதுகாக்கப்படுவது, நம் சமூகத்தின் விசேஷங்களில் ஒன்று!
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P70
பிறந்த கணத்தில், சீம்பாலுக்கு முன்னதாகச் சிலிர்ப்போடு சொட்டு மருந்தைச் சுவைக்கவைக்க அக்கறை காட்டிய நாம், இத்தனை ஆயிரம் ஆண்டுகள் மரபோடு ஒட்டிவந்த நலவாழ்வுப் பழக்கத்தை ஏன் உதாசீனப்படுத்தினோம்? 'இது சூடு, அது குளிர்ச்சி, இது வாய்வு, அது கபம், இது பித்தம் கூட்டும்’ என நம் பாட்டி தந்த '104’ ஆலோசனைகளைப் பின்பற்றினாலே, அடிக்கடி 108-ஐ தேடாமல் இருக்கலாமே! கைப்பக்குவ உணவின் நலனை 'பை’பக்குவ துரித உணவுகள் தூரமாக நகர்த்திவிட்டன. நலம் மட்டுமே கொடுக்கும் உணவையும் மருந்தையும் தயாரிக்க, தேவையான அஞ்சறைப் பெட்டியை நாம் மறந்தேவிட்டோம். 'ஐபோன் ஆப்ஸில்’ இவை பற்றிய விவரணைகள் இல்லாததால், இளைய தலைமுறை, 'மிளகு தெரியும் சார்... சூப்பில் போடும் சங்கதி. அது என்ன வால்மிளகு?’ என மெயிலில் தகவல் கேட்கிறது.
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P70a
'அட... ஆயுளில் கால் நூற்றாண்டை இப்படியே கழிச்சுட்டோம். இனி என்ன லைஃப்ஸ்டைலை மாத்தி...’ என அலுத்துக்கொள்ள வேண்டாம். சாம்பார் பொடி, ரசப் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி போல... சில அத்தியாவசியப் பொடிகள் வீட்டில் இருந்தால், நாம் ஆஸ்பத்திரி படிகளை அதிகம் மிதிக்க வேண்டியிருக்காது. அப்படியான பொடிகளை சாதத்தில் பிசைந்தும், தேநீரில் கலந்தும், கஷாயமாகவும் தேவைப்படும் சமயம் சாப்பிடும் மரபு, நம்மிடையே நெடுங்காலம் இருந்து வந்திருக்கிறது. அதை மீண்டும் மீட்டு எடுப்போம். 'உணவே மருந்தாக... மருந்தே உணவாக’ நலவாழ்வு வாழ்வோம்.

ஜீரணத்துக்கு அஷ்ட சூரணம்!

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P70c
சாப்பிட்ட பின் புளித்த ஏப்பம், வயிறு இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடித்துவிடுமோ என்கிற அளவுக்கு வீங்கிப்போவது, பவர் பாயின்ட்டில் முக்கியமான விளக்கம் அளிக்கும்போது, லேசான அமிலத்துடன் முந்தைய நாள் சாப்பிட்ட ரசவடையின் வாசம் தொண்டை வரை எட்டிப்பார்த்துச் செல்வது எனப் பலருக்கும் அனுபவங்கள் இருக்கும். அவர்களுக்குத்தான் இந்த அஷ்ட சூரணம். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், கருஞ்சீரகம், இந்துப்பு... இவற்றை வறுத்துப் பொடித்துக்கொண்டு, சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட வாயுக் கோளாறு மட்டுப்படும். இனிய பக்கவிளைவாக, கணினித் தலைமுறையினருக்கு முக்கியமான தொல்லையாக இருக்கும் கழுத்து வலியும் காணாமல்போகும்.

சுட்டிக் குழந்தைகளுக்கு சுண்டவற்றல் பொடி!
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P70b
குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களுடன் 'நொதுக் நொதுக்’கெனக் கழியும் வயிற்றுப்போக்கு சமயங்களில் இருக்கும். அப்போது பூச்சிகளையும் நீக்கி, கழிச்சலையும் தடுக்கும் மருந்து சுண்ட வற்றல் பொடி. இதனுடன் கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு (கொட்டையை உடைத்தால் நடுவில் இருக்கும் பருப்பு), மாதுளையின் ஓடு, ஓமம், வெந்தயம், நெல்லிக்காய் வற்றல்... இவற்றை தனித்தனியே எடுத்து, வறுத்து, பொடித்து, கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைக் கைப்பிடி சாதத்தில் பிசைந்துகொடுக்கலாம். மாங்கொட்டையையும் மாதுளம் பழத் தோலையும் தூர எறியாமல், நன்கு கழுவி உலர்த்திவைத்துக்கொண்டால், இவை அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.

பெரியவர்களுக்கு எனும்போது பக்குவத்தில் சின்ன மாற்றம். சுண்டக்காயை லேசாக சிற்றாமணக்கு எண்ணெயில் வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து மொத்தமாக வறுத்து பொடி செய்துகொள்ளலாம். இதை தினமும் கொஞ்சம் சோற்றில் போட்டுச் சாப்பிட்டால், செரிக்காமல் சிரமப்படுவதும், மூல நோயினால் முனகுவதும் குறையும்.

சளித் தொல்லைக்கு மிளகு கற்பப் பொடி!
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P70d
'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது பன்ச் டயலாக். நம்மைச் சுற்றிலும் சூழல் நஞ்சாகி வரும் சூழலில், தினசரி உணவில் மிளகு சேர்ப்பது அவசியம். 200 கிராம் மிளகை 3 நாட்கள் மோரிலும், அடுத்த 3 நாட்கள் இஞ்சிச் சாறிலும், இப்படியாக மும்மூன்று தினங்கள் வேலிப்பருத்தி, தூதுவளை, கற்பூரவல்லி, ஆடு தொடா இலைச் சாறு ஆகியவற்றில் ஊறவைத்து பின் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சுக்கு, அதிமதுரம், திப்பிலி, கடுக்காய் எல்லாம் வகைக்கு 25 கிராம் சேர்த்து, ஒன்றாக வறுத்து, இடித்த பொடியை சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கும் முன்னர் தேனில் 3 சிட்டிகை குழைத்துக் கொடுக்க வேண்டும். நாளடைவில் சளி வெளியேறி மூச்சிரைப்பு நிற்கும். மீண்டும் சளி, இருமல், இரைப்பு வராதபடி நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் இந்த மிளகு கற்பப் பொடி, அனைவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய கைப்பக்குவ மருந்து.

சர்க்கரையை விரட்டும் வெந்தயக் கூட்டுப் பொடி!


அப்பா தந்த சொத்தாக அல்லது அலட்டாமல் வேலைசெய்த 'கெத்’தாக சர்க்கரை வந்துவிடுமோ என்ற பயத்தில் திரியும் நண்பர்கள் சாப்பிட வேண்டிய பொடி இது. வெந்தயம், ஆவாரம் பூ, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்), நாவல் கொட்டை, கறிவேப்பிலை எல்லாம் சம அளவில் எடுத்துப் பொடித்தால், வெந்தயக் கூட்டுப் பொடி தயார். இந்தப் பொடியை 1/2 டீஸ்பூன் சாப்பிட்டுவிட்டு மதிய உணவை எடுத்துக்கொண்டால், அது உங்களுக்கு வரவிருக்கும் சர்க்கரை நோயைத் தள்ளிப்போடும். ஏற்கெனவே சர்க்கரை நோய் வந்திருந்தால், சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்து, நீரிழிவின் தீவிரத்தைக் குறைக்கும். கறிவேப்பிலையும் வெந்தயமும் சேர்ந்து இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலும், திரிபலாவின் துணையால் மலச்சிக்கலும் குறையும்.

தெம்பளிக்கும் கம்பு, சோளம், உளுந்து கூட்டணி!

இனி வரும் காலத்தில் 'பி.சி.ஓ.டி’ (கர்ப்பப்பை நீர்க்கட்டி சிக்கல்) இல்லாத பொண்ணுக்கு 'சர்க்கரை வியாதி இல்லாத’ வரன் தேவை என்பதுபோன்ற விளம்பரம் கல்யாணச் சந்தைகளில் இடம்பெறலாம். அந்த அளவுக்கு இந்த இரண்டு சிக்கல்களும் வயசுப் பிள்ளைகளை அடித்து ஆடுகிறது. பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டி நம் வீட்டுப் பெண் குழந்தைகளிடம் குடியேறாது இருக்க, கருப்பட்டி உளுந்து களி மிகவும் சிறந்தது. ஆனால், 'களியா... என்ன என்னன்னு நினைச்சே?’ எனப் பல வீட்டுப் பெண்களும் 'ஆங்ரி பேர்டு’ அவதாரம் எடுக்கிறார்கள். அப்படி ஆங்காரமாக மறுக்கும் பெண்களுக்கும் 'ஸ்பெஷல் ரோஸ்ட் தோசை’ வடிவில் 'நல்லது’ புகட்டலாம்.

இதற்கு மாவை வழக்கம்போல் தானியங்களை ஊறவைத்தும் தயாரிக்கலாம் அல்லது கீழ்க்காணும் திடீர் பொடியில் சாதாரண தோசை மாவைக் கலக்கியும் தோசை வார்க்கலாம். உளுந்து, கம்பு, சோளம் இந்த மூன்றில் கம்பு, சோளம் இவற்றின் மேலுறை நீக்கியும், உளுந்தை அதன் கறுத்தத் தொலியுடனேயே வைத்து மூன்றையும் வறுத்து, பொடி செய்துகொள்ளவும். கூடவே வெந்தயம், ஃப்ளேக்ஸ் விதை, பாசிப்பயறு மூன்றும்

2 டீஸ்பூன்கள் எடுத்து வறுத்துச் சேர்க்கவும். கம்பும் சோளமும் 70 சதவிகிதம் இருக்க, உளுந்து 25 சதவிகிதம், மற்றவை கூட்டாக 5 சதவிகிதம் இருந்தால் போதும். இந்த மாவை, கோதுமை தோசைக்குக் கரைப்பதுபோல் நீர் விட்டுப் பதமாகக் கரைத்து, புளிப்புக்கு எனக் கொஞ்சம் மோர் சேர்த்து 12 மணி நேரம் வைத்திருந்து, சூடாகத் தோசை சுட்டுக் கொடுக்கவும். தொட்டுக்கொள்ள எள் துவையல், நிலக்கடலை சட்னி என, மாதவிடாய்க்கு முந்தைய வாரத்தில் அவசியம் இரு முறை இதைக் கொடுக்கவும். கூடவே வெள்ளைச் சர்க்கரையையும் இனிப்பு பண்டங்களையும் ஒதுக்கிவிடப் பழக்கி, ஓடியாடி விளையாடி, வியர்க்கவும் செய்துவிட்டால் குறித்த நேரத்தில் மாதவிடாய் வந்து மாதர் நலம் காக்கும். கம்பில் இரும்பு, சோளத்தில் புரதம், உளுந்தில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன், வெந்தயத்தில் மாதவிடாய் வலி நீக்கி, ஃப்ளேக்ஸ் விதையில் ஒமேகா-3 எண்ணெய்... என எல்லாம் தரும் இந்த தோசை, சப்புக்கொட்ட வைக்கும் சுவையான மருந்து.

இருமலை விரட்ட சிற்றரத்தைப் பொடி!

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P70e
குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொடி. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்தப் பொடியை இரண்டு சிட்டிகை தேனில் குழைத்து குழந்தைக்குக் கொடுக்க, இருமல் தீரும். வறட்டு இருமலாக இருந்தால், சிற்றரத்தையுடன் அதிமதுரம் சமபங்கு எடுத்துக் குழைத்துக் கொடுக்கலாம்.

ஜுரம் தணிக்கும் சுக்குக் கஷாயப் பொடி!
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P70f
'சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை; சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமி இல்லை’ என்பது மருத்துவப் பழமொழி. ஆக, அஞ்சறைப் பெட்டியில் முதல் அட்மிஷன் சுக்குவுக்கே. சுக்கு, கடுக்காய், சீந்தில், நிலவேம்பு, பேய்ப்புடல் எல்லாம் நாட்டு மருந்துக் கடையில் வாங்கி நன்கு சுத்தம் செய்து, உலர்த்தி, வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, பொடிசெய்து கண்ணாடிப் புட்டியில் காற்று புகாமல் வைத்துக்கொள்ளுங்கள். ஜுரம் வந்தால் இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் போட்டு 200 மி.லி தண்ணீர்விட்டு, அந்தத் தண்ணீர் 50 மி.லி ஆகும்வரை வற்றவைத்துக் கொள்ளுங்கள். காலை - மாலை தேநீர் அருந்துவதற்குப் பதிலாக, இந்தக் கஷாயத்தை மூன்று நாட்கள் இரண்டு வேளை சாப்பிட, காய்ச்சல் பறந்துபோகும்.

அன்பு பெருக்கும் தாதுகல்ப பொடி!


காதலும் காமமுமே கடைக்குப் போய் வகைக்கு கால் படி வாங்கவேண்டிய காலகட்டத்தில், அதற்கும் கைப்பக்குவம் சொல்லாவிட்டால் எப்படி? உலர்த்திய முருங்கைப் பூ, நிலப் பூசணி, அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், முருங்கைப் பிசின்... இவற்றை சம அளவும், ஆளி விதை, சப்ஜா விதை, பூனைக் காலி விதை, இவற்றை அதற்குப் பாதியும் எடுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, இரவு இளஞ்சூடான பாலில் 1/2 டீஸ்பூன் அளவு கலந்து சாப்பிடுவது உடலுறவில் நாட்டத்தையும், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் பெருக்கும்.

மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி!
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P70g
வரும்போது போய்க்கொள்வது அல்ல மலம் கழித்தல். தினம் அது கழிக்கப்பட வேண்டும். இல்லையேல் வாயுத் தொல்லையில் இருந்து கேன்சர் வரை வர வழிவகுக்கும். கடுக்காய்ப் பிஞ்சை விளக்கெண்ணெயில் லேசாக வறுத்துப் பொடித்து காற்றுப் புகாத இறுக்கமான புட்டியில் வைத்துக்கொண்டு, உணவு உண்ட பின் 30-40 நிமிடங்கள் கழித்து 1/2 தேக்கரண்டி பொடியை வெந்நீரில் கலக்கி இரவில் சாப்பிடுங்கள். சிக்கலின் தீவிரம் பொறுத்து 2 கரண்டி வரைகூட அதிகரிக்கலாம்.

தயார் நிலையில் உள்ள இந்தப் பொடிகளோடு, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், அதிமதுரம், வசம்பு, லவங்கப் பட்டை, வால்மிளகு, அன்னாசிப் பூ, மாசிக்காய், கருஞ்சீரகம், சாதிக்காய், ஓமம்... ஆகிய உலர் மருத்துவ உணவுகள் கண்டிப்பாக வீட்டில் கண்ணாடிப் புட்டியிலோ, காற்றுப் புகாத பிற கலன்களிலோ கொஞ்சமாக இருக்க வேண்டும். கூடவே வீட்டுத் தோட்டத்திலோ, பால்கனி தொட்டியிலோ... கரிசலாங்கண்ணி, துளசி, தூதுவளை, ஆடு தொடா இலை, கீழாநெல்லி, கற்பூரவல்லி... போன்றவற்றை வளர்ப்பதும், உலர் வற்றலாய், மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், பிரண்டை வற்றல் வைத்திருப்பதும் அவசியம்.

வருடத்தில் எல்லா மாசமும் மாம்பழ ஜூஸ் தரும் கெமிக்கல் வித்தை இதில் கூடாது. ஆதலால், செடி துளிர்க்கும், பூக்கும், காய்க்கும் பருவத்தில் சேகரிக்கப்பட்டு, உலர்த்தியும் பொடித்தும் பத்திரமாக வைத்திருந்து, நோயின்போது சரியாகப் பரிமாறப்பட வேண்டும். அதுவே ஆயுளுக்கும் நலம் பயக்கும்!

- நலம் பரவும்..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by krishnaamma Thu Oct 16, 2014 6:25 pm

மிக்க நன்றி நேசன் புன்னகை நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64176
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by T.N.Balasubramanian Thu Oct 16, 2014 6:36 pm

மருத்துவர் சிவராமன் /தமிழ்நேசன் இருவருக்கும் நன்றி பகிர்வுக்கு நன்றி நன்றி

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30392
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 11054

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 24, 2014 7:13 pm

நலம் 360’ - 20
மருத்துவர் கு.சிவராமன்

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P52b

'விவாகரத்து பெறுவதில் இந்தியாவில் தமிழகம் முதல் இடமாம்; தவிரவும் மன அழுத்தங்களால் நிகழும் தற்கொலைகளிலும் தமிழகத்துக்குத்தான் இந்தியாவில் முதல் இடமாம். 'ஆறறிவதுவே அதனோடு மனமே’ என, சிக்மண்டு ஃபிராய்டுக்கும் பல நூற்றாண்டுகள் முன்பே சொல்லிய 'தொல்காப்பியம்’ படைத்த நிலத்தில், மனதுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் மிக மிக அதிகமாகி வருவது அதிரவைக்கிறது!

சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் மனதின் வெளிப்பாடுதான் மன அழுத்தம். அது நோயாக வடிவம் எடுக்காமல் தடுக்க தேவையான முக்கியக் காரணங்கள் இரண்டு. பிற அனைத்து மருத்துவக் காரணங்களையும் தாண்டி, அந்த இரண்டு காரணங்களையும் நாம் வேகமாகத் தொலைத்து வருகிறோம். அதில் ஒன்று... கரிசனம் தரும் பேச்சு; மற்றொன்று... கனிவு காட்டும் முகமொழி.

'பேச்சு... உயிர் மூச்சு’ எனப் பலருக்குத் தெரிவது இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, 'பேசிப் பயன் இல்லை’ எனப் பின்னாளில் முடிவு எடுத்து வாழ்க்கை இறுகிப்போகாமல் இருக்க, மொழிப் புணர்தல் முக்கியம். துரித வாழ்வின் வெளிப்பக்கத்து இரைச்சல், நம் சுவற்றுக்குள் அமானுஷ்ய மௌனத்தை விதைத்துவிட்டது. 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ எனப் பாடுவதற்குள் அம்மாவுக்கு மகப்பேறு விடுமுறை முடிந்துவிடுகிறது. 'மூணு கண்ணன் வந்த கதை, பூச்சாண்டி போன கதை’ சொல்லிய பாட்டிகள் கடைசித் தங்கையின் பிரசவத்துக்கு கனடா சென்றுவிட்டார். 'டேய்... மண்ணுல விளையாடாதே ஜெர்ம்ஸ்; கிரவுண்டுல விளையாடாதே அலர்ஜி’ எனச் சொல்லி வளர்க்கப்படும் பிள்ளைகள், வீட்டில் விர்ச்சுவல் கத்தி, கைத்துப்பாக்கியைக் கொண்டு எவனையோ விரட்டிக்கொண்டே வீடியோ விளையாட்டுகளில் அகோரமாக மூழ்கிவிடுகி றார்கள். சைக்கிள் பாரில் அமர்ந்து டபுள்ஸ் போகும்போது, 'மச்சான் அவ சிரிப்புல காதல் இருந்துச்சுடா... கண்ணு காட்டிக்குடுத்துருச்சு!’ எனச் சிலாகித்த பொழுதுகள் தொலைந்து, நள்ளிரவு 'ஸ்மைலி சம்பாஷணை’யால் இளமையிலேயே கண்களைச் சுற்றி கருவளையங்கள் உண்டாகிவிட்டன. ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டுக்காக சம்பளத்தில் பாதியை ஈ.எம்.ஐ அரக்கனுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு, காலி சட்டைப் பை காரணமாக பேச்சுமூச்சற்று இருப்பது என, சமூகத்தின் சகல அடுக்குகளிலும் உரையாடல் குறைவு நோய் நீக்கமற நிறைந்திருக்கிறது!

பேச்சுக்கு அடுத்து நவீனம் வேகமாகத் தொலைக்கும் இன்னொரு விஷயம் முகமொழி. வணிகத்துக்கும் வசதிக்கும் கற்றுவிக்கப்பட்ட முகமொழிகளைப் படித்துக் கற்றுத் தேர்ந்ததில், கட்டாயத்துக்காக மட்டுமே அதை அதிகம் காட்டிக் களைத்துப்போகிறோம். கரிசனத்தில், காதலில், காமத்தில் காட்டவேண்டிய முகமொழிகள் மொத்தமாகக் காணாமல் போகின்றன. 'அதுதான் சரின்னு சொன்னேனே... அப்புறம் என்ன?’ என்ற உணர்வுகள் அற்ற சம்மதங்களில்தான் பல உறவுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. 'முகம் கொடுத்துக்கூடப் பேச முடியாத அளவுக்கு எந்த விதத்தில் நான் குறைந்துபோய்விட்டேன்’ என முளைக்கும் இந்த ஈகோ, புகை, மதுவால் சீராட்டி வளர்க்கப்பட, புருவச் சுருக்கம், முக இறுக்கம் என முகம் புதுவடிவம் பெறுகிறது. அந்தப் புதுவடிவம் கனிவான முகமொழிக்கு இடம் அளிக்காமல், வெறுப்பை மட்டுமே உமிழ்ந்துகொண்டிருக்கிறது.

தொடர்ந்து இப்படித் தரப்படும் மன அழுத்தங்கள், மூளையின் எண்ணங்களை, படிமானங்களை, கற்பனைகளை மிகச் சிறப்பாக ஆண்டுவரும் செரட்டோனின் முதலான ரசாயனச் சுரப்புகளைத் தடுமாறச் செய்யும். அவற்றின் சீரான பரிமாறலில், மிகத் துல்லியமான ஆட்சியில் தேக்கத்தை, பரபரப்பை உருவாக்கி உருவாக்கி, மெள்ள மெள்ள உள நோயாக உருகொள்ளவைக்கும். அது சிலருக்குப் பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு வடிவில் உருவெடுக்கும்.

உள நோயின் ஆரம்ப சமிக்ஞைகளை நெருக்கமான உறவுகளால் மட்டுமே அறிய முடியும். மாஸ்டர் செக்கப்கள் பெரும்பாலும் காட்டிக்கொடுக்காது. மயக்கம், வலி, ஜுரம் போன்ற எந்த உபாதைகளும் இல்லாமல் சரியான தூக்கமின்மை, புன்னகைக்க மறுக்கும் முகம் என மன அழுத்தத்தின் தொடக்கப் புள்ளிகள் மிகச் சாதாரணமாக இருக்கும். அடிக்கடி கைகளைக் கழுவுவது, மீண்டும் மீண்டும் தன் பொருட்களைச் சுத்தமாகத் துடைத்துக்கொண்டே இருப்பதுகூட மன அழுத்தத்தின் தொடக்க நிலைதான். எவ்வளவு விரைவாக இந்த மன அழுத்தத்தை அடையாளம் காண்கிறோமோ, அவ்வளவு விரைவில் ஆரோக்கியத்தை மீட்டு எடுக்க முடியும். இரண்டு மாத்திரைகளில் நோய்க்கிருமி இடத்தைக் காலிசெய்வதுபோல, இரண்டு வேளை மருந்தில் உற்சாகத்தை ஒருபோதும் வாங்கிவிட முடியாது. மன நோய்களில் இருந்து மீட்டு எடுக்கும் மருத்துவம் சில/பல மாதங்களில் இருந்து சில வருடங்களுக்குத் தேவைப்படும்.

மன நோய்கள் ஆரம்ப நிலையில் பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியவையே. நாள்பட்ட நிலையிலும் கட்டுப்படுத்த முடியும்தான். ஆனால், இங்கே முழுமையான தேவை ஒருங்கிணைந்த சிகிச்சை மட்டுமே. கற்பனையைக் கட்டிப்போட, மனதின் அகோரத்தைக் குறைக்க நவீன மருந்துகள் மிக அவசியம். மருந்துகளால் மீட்டு எடுத்து வரும்போது, முழுமையான வாழ்வியல் பயிற்சி, யோகாசனங்கள், பல்வேறு எண்ணெய்க் குளியல், தொக்கணம், தாரா சிகிச்சைகளின் மூலம் மீண்டும் நன்னிலைக்குத் திரும்பவைக்க பாரம்பரிய மருத்துவம் பெரிதும் கைகொடுக்கும். மருந்தையும் பாரம்பரியத்தையும் தாண்டி அதிமுக்கியமான நீடித்த தேவை உதாசீனப்படுத்தாத உறவு.

மனநலம் பேதலித்தவர்களைக் கட்டிவைக்காமல், கட்டி அணைக்கும் அரவணைப்புகளே இங்கு அவசியம். ஏனெனில், மன உளைச்சல் நோயாளிகளுக்குத் தரப்படும் மருத்துவ, சமூக வசதிகள் இப்போதும் பின்தங்கித்தான் உள்ளன. பின்னிரவைத் தாண்டிய ஒரு நாளில் ஒரு மனநோயாளி உதவியின்றித் துன்புறுகின்றார்... 'உதவ இயலுமா?’ என அரசாங்க அவசர இலக்கத்தைத் தொடர்புகொண்டால், 'அடடா... மன நோயாளிக்கு ஆம்புலன்ஸ் அனுப்ப முடியாதே’ எனத் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மிகப் பிரபலமான தனியார் மருத்துவமனையை அழைத்தால், 'ஆம்புலன்ஸ் தர்றோம்... எக்ஸ்ட்ரா பைசா ஆகும். ஆனா, எங்க ஹாஸ்பிட்டலில் பார்க்க மாட்டோம். வேற எங்கேயாவது அழைச்சுட்டுப் போங்க’ என்கிறார்கள். இப்படி உளவியல் நோயாளிகளை உலகம் உதாசீனப்படுத்தும், தவிர்க்கும் அவலம் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே நிலவும்போது, கிராமங்களின் பில்லிசூனியப் பஞ்சாயத்துகளுக்குக் கேட்கவா வேண்டும்!

உலக சுகாதார நிறுவனம் 'உடல் நலம்’ என்பதற்கான அர்த்தத்தை இப்படி வரையறுத்திருக்கிறது... 'நலம் எனப்படுவது யாதெனில், உடல் நோயில்லாமல் இருப்பது மட்டும் அல்ல; மன நலமும் சமூக நலமும் சேர்ந்த நிலையே முழு உடல் நலம்’! ஆனால், இதைப் புரிந்துகொள்ள நவீன மருத்துவம் சில நூறு ஆண்டுகளைச் செலவழிக்க வேண்டியிருந்தது. தமிழ் உலகத்துக்கு இந்தப் புரிதல் 1,500 வருடங்களுக்கு முன்னரே ஏற்பட்டிருக்கிறது.

'மறுப்பது உடல் நோய் மருந்தென லாகும்,
மறுப்பது உளநோய் மருந்தென சாலும்,
மறுப்பது இனி நோய் வாராதிருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே’


என திருமூலர் மட்டுமல்லாது, அத்தனை சித்தர் கூட்டமும் மன நலம் தொடர்பாக பல பாடல்களைப் படைத்திருக்கிறார்கள். மனம் செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்; காடு-கழனிகளை அழித்து தியான மண்டபங்களைக் கட்ட வேண்டாம்; மருந்து மாத்திரை, போதை வஸ்துக்களின் உதவி தேவை இல்லை என, எந்த போர்டு மீட்டிங் போட்டும் முடிவு எடுக்காமல் அன்றே வரையறுத்து வைத்திருக்கிறார்கள். இடையில், எங்கே தொலைத்தோம் இந்தப் புரிதலை? விடுதியாகப் போய்விட்ட வீட்டிலா, பிராய்லர் கல்விக்கூடத்தில் கற்ற கல்வியிலா, துரத்தலும் தப்பித்தலுமான தினசரி வாழ்விலா? 'கள்ளினும் காமம் பெரிது’ என வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து வந்த நம்மை, 'அட... கள்தான்டா பெரிது; கொண்டாடு’ எனக் குழிபறித்துவரும் வணிகத்தாலா?

- நலம் பரவும்...

மன இறுக்கம் குறைக்கும் உணவுகள்...

பழங்களில் நிறைந்திருக்கும் அதன் நிறமிச் சத்துக்கள் மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக மாதுளம்பழம். மன அழுத்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல், ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தவும்.

மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன.

தங்குதடையற்ற இரவு உறக்கம், மன அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் அவசியம். ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி போட்டு, சூடான பால் அருந்தினால் நிம்மதியான தூக்கம் வரும்.

பதற்றமும் கற்பனைகளும் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை, பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம்.

மனப்பதற்றம், மன அழுத்தம், மனச்சிதைவு பாதிப்புள்ள நோயாளிகள், தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துதல் நலம்.

குளியல், மன அழுத்தம் போக்கும் மிக எளிய முறை. தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மன அழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து, அவர்களுக்கு என பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது சிறப்பு.

எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டுவதோடு செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மன அழுத்த நோயர்கள் தவிர்ப்பது நலம். ஆவியில் வேகவைத்த உணவுப் பண்டங்களே அவர்களது தேர்வாக இருக்க வேண்டும்.

உணவில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணமூட்டிகள் குழந்தைகளுக்கு கவனச் சிதைவு நோய் அளிப்பதை அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.

கவனத்தில் கொள்ளவேண்டியவை...

மனச்சிதைவால் பாதிப்பட்ட ஒருவர் தொடர்ந்து எடுத்துக்கொண்ட சிகிச்சையால், 100 சதவிகிதம் இயல்புக்கு வந்ததுபோல் இருந்தாலும், எந்தக் காரணம்கொண்டும் மருத்துவர் அனுமதி இல்லாமல் மருந்துகளைக் குறைப்பதும் தவிர்ப்பதும் கூடாது. ஏனெனில், ஆழ்மனதில் நடைபெறும் மாற்றங்கள் மிக நுண்ணிய அளவில் சிறிது சிறிதாக மூளையின் ரசாயனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, திடீரென ஒருநிலையில் இயல்பு மாறி வெளிப்படத் தொடங்கலாம்.

பல்வேறு மன அழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணம். ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவை. உறங்க ஆரம்பித்ததில் இருந்து 5 முதல் 10 மணித் துளிகளில் கனவுகள் வருவதும், அதிகாலையில் விழிக்கும் தருணத்துக்கு முன்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கனவு வருவதும் இயல்பான உறக்கத்துக்கான அறிகுறிகள்.

இன்று பெரும்பாலோருக்கு இரவு உறக்கத்தில்கூட அலுவல் மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. இதுவும் மன அழுத்தத்தின் அறிகுறியே. அதனால், உறங்கச் செல்லும் முன் இனிமையான மகிழ்வான தருணங்கள் முக்கியம்.

உடற்பயிற்சியும் சரியான பிராணாயாமப் பயிற்சியும் நிம்மதியான உறக்கத்தைத் தரும்!

விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by விமந்தனி Fri Oct 24, 2014 7:20 pm

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 103459460 நன்றி தமிழ்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by krishnaamma Fri Oct 24, 2014 7:37 pm

//
'பேச்சு... உயிர் மூச்சு’ எனப் பலருக்குத் தெரிவது இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, 'பேசிப் பயன் இல்லை’ எனப் பின்னாளில் முடிவு எடுத்து வாழ்க்கை இறுகிப்போகாமல் இருக்க, மொழிப் புணர்தல் முக்கியம். துரித வாழ்வின் வெளிப்பக்கத்து இரைச்சல், நம் சுவற்றுக்குள் அமானுஷ்ய மௌனத்தை விதைத்துவிட்டது. 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ எனப் பாடுவதற்குள் அம்மாவுக்கு மகப்பேறு விடுமுறை முடிந்துவிடுகிறது. 'மூணு கண்ணன் வந்த கதை, பூச்சாண்டி போன கதை’ சொல்லிய பாட்டிகள் கடைசித் தங்கையின் பிரசவத்துக்கு கனடா சென்றுவிட்டார். 'டேய்... மண்ணுல விளையாடாதே ஜெர்ம்ஸ்; கிரவுண்டுல விளையாடாதே அலர்ஜி’ எனச் சொல்லி வளர்க்கப்படும் பிள்ளைகள், வீட்டில் விர்ச்சுவல் கத்தி, கைத்துப்பாக்கியைக் கொண்டு எவனையோ விரட்டிக்கொண்டே வீடியோ விளையாட்டுகளில் அகோரமாக மூழ்கிவிடுகி றார்கள். சைக்கிள் பாரில் அமர்ந்து டபுள்ஸ் போகும்போது, 'மச்சான் அவ சிரிப்புல காதல் இருந்துச்சுடா... கண்ணு காட்டிக்குடுத்துருச்சு!’ எனச் சிலாகித்த பொழுதுகள் தொலைந்து, நள்ளிரவு 'ஸ்மைலி சம்பாஷணை’யால் இளமையிலேயே கண்களைச் சுற்றி கருவளையங்கள் உண்டாகிவிட்டன. ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டுக்காக சம்பளத்தில் பாதியை ஈ.எம்.ஐ அரக்கனுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு, காலி சட்டைப் பை காரணமாக பேச்சுமூச்சற்று இருப்பது என, சமூகத்தின் சகல அடுக்குகளிலும் உரையாடல் குறைவு நோய் நீக்கமற நிறைந்திருக்கிறது!//


ரொம்ப சரி...........இப்போவெல்லாம், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசக் கூட பைசா கேட்பா போல இருக்கு சோகம் ...அவாளே ஒர்த்தருக்கு ஒருத்தர் பேசிப்பளா என்பது சந்தேகம் தான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64176
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 30, 2014 4:43 pmநலம் 360’ - 21
மருத்துவர் கு.சிவராமன்,
குழந்தை நலத் துறையில் பதறவைக்கும் ஒரு சொற்றொடர், Sudden infant death syndrome. காரணமே இல்லாமல் திடீரென நிகழும் பச்சிளம் குழந்தை மரணத்துக்கு இப்படி ஒரு பெயர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, இந்தப் பிரச்னையால் குழந்தை இறப்புகள் ஏராளம். பெற்றோருக்குப் பக்கத்தில் குழந்தையைப் படுக்கவைப்பதும்கூட இந்த இறப்புக்கு முக்கியமான காரணம் என்பதை, சமீபத்திய ஆராய்ச்சி மூலம் அறிந்துள்ளது அமெரிக்கக் குழந்தைகள் நல அமைப்பு. உடனே அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் அவசர அவசரமாக, குழந்தைகள் பாதுகாப்பாகத் தூங்குவதற்கான பழக்கத்தை (safe sleep practice) வெளியிட்டனர். அதன்படி, தூங்கும் இடம் காற்றோட்டமாக இருக்க வேண்டும், முதுகு அழுந்தும்படியாக குழந்தை தூங்க வேண்டும். வயிறு அழுந்தும்படியாகக் குப்புறப் படுக்கவிடக் கூடாது; பக்கவாட்டில் புரண்டுவிடாது இருக்க, அணைக்கும்படியாக மிருதுவான பருத்தித் துணி படுக்கை அவசியம்... என அந்தப் பட்டியல் நீண்டது. ஆனால், அதற்கு எல்லாம் நம்மிடம் பல தலைமுறைகளாக இன்னொரு பெயர் உண்டு... அது தொட்டில் அல்லது தூளி!

'கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்’ எனத் தாலாட்டு பாடி, தூளியில் ஆட்டித் தூங்க வைக்கும் நலப் பழக்கம் 2,000 வருடங்களாக நம்மிடம் உண்டு. ஆனால், தூளியில் குழந்தையைப் போட்டு, நாக்கை அசைத்து தாலாட்டு பாடி குழந்தையின் கவனத்தை ஈர்த்து, கண்களால் அதன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, கவனத்தை நிலைநிறுத்திய சில மணித்துளிகளில், அந்தக் குழந்தை தன்னை மறந்து தன் நாவை ஆட்டிப் பார்த்து, பின் அப்படியே பாடலின் ஒலியில் சொக்கி உறங்கும். இந்த அற்புதப் பண்பாடு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்வருகிறது. வழக்கமாக அம்மாவின் பழைய பருத்திச் சேலைதான் தூளி செய்யும் துணி. அன்னையின் மணத்துடன், இருபக்கமும் பருத்திப் புடவையின் அணைப்பில் முதுகில் மட்டுமே படுக்க முடியுமான தொட்டிலின் துணிக்கற்றைக்கு நடுவே, தொட்டில் கம்பு ஒன்றைச் செருகி இருப்பார்கள். காற்றில் ஆடும்போது சுருண்டுகொண்டு, உள்ளே காற்று இறுக்கம் வந்துவிடாமல், தொட்டிலை எப்போதும் விரித்திருக்க உதவும் அந்தக் கம்பு. அதை அங்கு வைத்த பாட்டிக்கு சத்தியமாக Sudden infant death syndrome பற்றி தெரியாது. safe sleep practice குறித்து தேட அப்போது இணையம் என்ற ஒன்றே இல்லை.
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P68b
இன்றைய அறிவியலின் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கம்தான், தூளி. சிறுநீர் கழித்தால் படுக்கையில் தங்காமல் ஓடும் இந்தத் துணித்தூளியில், அதன் தொங்கி ஆடும் குணத்தால், பூரான் - பூச்சிகளும் ஏறாது. குழந்தைகளுக்கு உணவு புரையேறிவிடாமல் காக்கும் படுக்கை நுட்பமும் தூளியில் உண்டு. கூடவே, கொஞ்சம் குலப்பெருமையும், குசும்பு எள்ளலும், உறவின் அருமையும் என எல்லாம் ஏற்றி தூளியில் தாலாட்டு பாடி அமைதியாக உறங்கவைத்தும், ஆர்ப்பரிக்க எழுந்து நிற்க வைக்கவும், களம் அமைத்தது தொட்டில்பழக்கம் மட்டும்தான். நகரங்களில் பழைய பேன்ட்டை ஆணியில் மாட்டிவைத்திருப்பதுபோல் சுவரில் குழந்தையை ஒரு பையில் போட்டுத் தொங்கவிட்டிருப்பதைப் பார்க்கும்போதும், '20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு cradle வந்திருக்காம்; நெட்டில் ஆஃபர் வந்திருக்கு’ எனப் பேசுவதைக் கேட்கும்போதும், இன்னும் எத்தனை விஷயங்களை இப்படித் தொலைக்கப் போகிறோமோ என மனம் பதறுகிறது!

'தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை’ என்பது நாம் அறிந்ததே. அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரில் பெறாமல், பிடித்துவைத்து, புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகம். வழியே இல்லாதபோது இது சிறந்த மாற்றாகக் கருதப்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராகப் பால் அருந்துவதற்கு இது இணை ஆகாது. நேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 P68
இன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பால் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது. மொத்தத்தில், புட்டிப்பால் புகட்டுவது என்பது, அம்மாவின் கழுத்துச் சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஓரக் கண்ணால் அம்மாவை ரசித்தபடி, உறிஞ்சலுக்கு நடுவே 'களுக்’ சிரிப்பை கண்களில் காட்டி, குழந்தை பால் உறிஞ்சும் செயலுக்கு, இணை ஆகாது!

உரை மருந்து கொடுத்தாலும், சேய்நெய் தந்தாலும், வசம்பு கருக்கிக் குழைத்துக் கொடுத்தாலும் 'அந்தச் சங்கை எடு... கொஞ்சம்’ என்ற சத்தம் கேட்கும். வட மாவட்டத்தில் 'பாலாடை’ என்றும் தெக்கத்தி மண்ணில் 'சங்கு’ என்றும் அழைக்கப்படும் அந்தக் கால குழந்தை மருந்தூட்டும் கலன், இப்போதைய பிளாஸ்டிக் அவுன்ஸ் கிளாஸிலும் ட்ராப்பர் குழலிலும் தோற்றுப்போய், தொலைய ஆரம்பித்துவிட்டது. வெள்ளி அல்லது வெண்கலத்தால் ஆன பாலாடையில், குழந்தைக்கு மருந்தூட்டும்போது தாயின் சுத்தமான ஆள்காட்டிவிரலால், மருந்தைக் குழைத்து வாயினுள் அனுப்பும் வசதி உண்டு. மடியில் குழந்தையைத் தலை உயர்த்திக் கிடத்தி, பாலாடையின் மழுங்கிய முனையை, இதழ் ஓரத்தில் வைத்து, மருந்தை அல்லது மருந்து கலந்த தாய்ப்பாலைப் புகட்டும் வித்தை, தாய்க்குக் கட்டாயம் தெரியவேண்டிய உயிர்வித்தை. முடிந்த மட்டும் பிஞ்சுக் குழந்தையின் வாய் நஞ்சு பிளாஸ்டிக்கைச் சுவைக்காமல் இருக்க, இந்த நல்ல பழக்கம் நிச்சயம் மீட்டு எடுக்கப்பட வேண்டும்.

ஏழு, எட்டாம் மாதத்தில் பக்கவாட்டில் இரண்டு பக்கங்களும் தலையணை அணைப்பில் உட்கார்ந்திருந்த குழந்தை, 11-ம் மாதத்தில் நடை பழக ஆரம்பிக்கும்போது, அன்று நாம் வாங்கித் தந்த நடைவண்டி இப்போது இல்லை. கைகள் மட்டும் ஊன்றிப் பிடித்து நடை பயிலும் அந்தக் கால வண்டிக்கு இப்போதைய walker இணையாவதே இல்லை. குழந்தை மருத்துவ ஆய்வாளர்கள், 'குழந்தைகளுக்கு walker வாங்கித் தராதீர்கள்’ எனக் கூறுகிறார்கள். குழந்தை சரியாக நடப்பதற்கு தசை வலுவை, இடுப்பு வலுவைப் பெறும் முன்னர், எல்லா பக்கமும் தாங்கிக்கொள்ளும் walker வாகனம் உண்மையில் குழந்தையின் இயல்பான நடைத்திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், நம் ஊர் நடைவண்டி அப்படி அல்ல. பக்கவாட்டுப் பிடி இல்லாததால் நடைக்கான தசைப்பயிற்சியை, இடுப்பு கால்தசைக்கு ஏற்றவாறு தந்து நடையைச் செம்மையாக்கும்.

இப்படி, நம் இனப் பழக்கங்கள் எல்லாம் பெருவாரியாக நம் நலத்துக்கு வித்திடும் நலப் பழக்கங்கள். இடையிடையே வரலாற்றில் அப்போதைய சமூக, மத, இனப் பிணக்குகளும், ஆளுமைப் புகுத்தல்களும் செருகி வந்திருந்தாலும், இன்னும் மிச்சம் இருக்கும் பழக்கங்களையாவது எடுத்தாளத் தவறிவிடக் கூடாது. கலோரி கணக்கிலும், காப்புரிமை சூட்சுமத்துக்குள்ளும் நவீன உணவாக்கம் கட்டமைக்கப்படும்போது, எதைச் சாப்பிட வேண்டும் என மட்டும் சொல்லிச் சென்றுவிடாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான்.

'முன்துவ்வார் முன்னெழார் தம்மிற் பெரியார் தம்பாலி ருந்தக்கால்’ என நம்மோடு நம் வயதில் பெரியவர் உணவருந்தினால், அவர்கள் சாப்பிட்டு எழும் முன்னதாக நாம் எழக் கூடாது என நம் இனக் கூட்டம் கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு முன் ஆசாரக் கோவை நூலில் சொன்னதில் உணவு அறிவியல் கிடையாது; ஆனால் ஓங்கிய உணவுக் கலாசாரம் உண்டு. அதேபோல் தலை தித்திப்பு, கடை கைப்பு எனச் சாப்பிடச் சொன்ன முறையில் இனிப்பில் தொடங்குவது, விருந்தோம்பலில் மகிழ்வைத் தெரிவிக்கும் பண்பாட்டுக்கு மட்டும் அல்ல; ஜீரணத்தின் முதல் படியான உமிழ்நீரை முதலில் சுரக்கவைக்கும் என்பதற்காகவும் சேர்த்துத்தான். இப்படி மாண்பு நிறைந்த உணவுப் பழக்கத்தை, அளவு அறிந்து, பகுத்து உண்டு உண்ணச் சொன்ன செய்தி நம் மண்ணில் பந்தியில் மட்டும் பரிமாறப்படவில்லை; பண்பாட்டிலும் சேர்த்துத்தான். இதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்? எப்போது முழுமையாகக் கைக்கொள்ளப்போகிறோம்?

- நலம் பரவும்...

'பதார்த்த குண சிந்தாமணி’ எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள்:

நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.

வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.

மாதத்துக்கு ஒரு முறை உடலுறவு.

45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் (nasal drops) மருந்து விடுவது.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.

வருடத்து இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.

செய்யக் கூடாத விஷயங்கள்:

முதல் நாள் சமைத்த உணவு அமுதமாகவே இருந்தாலும் சாப்பிடக் கூடாது.

கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.

பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.

நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.

பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.

உணவு உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது.

தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர், உடலுறவில் சுக்கிலம், கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.

கண்டிப்பாகச் செய்யவேண்டியவை:


உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.

நீரைச் கருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்பது.

வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல் இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.

எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் - Page 4 Empty Re: நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை