புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்?
Page 1 of 1 •
ஒரு ஊரில் திருடர்கள் பெருகிவிட்டார்கள் என்பதாலேயே திருட்டைச் சட்டபூர்வமாக்கிவிட முடியாதல்லவா?
சேவைத்துறைகளில் பெரும் மூலதனத்தைக் கட்டுப்பாடின்றி அனுமதித்தால், எப்படியெல்லாம் அது பேயாட்டம் போடும்? உதாரணமாகியிருக்கிறது மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை (KDAH).
நாட்டின் அதிநவீன மருத்துவமனைகளில் ஒன்றான கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமானது. அனில் அம்பானியின் மனைவி டினா அனில் அம்பானியின் நேரடித் தலைமையில் இயங்குவது. “இந்திய மருத்துவப் பராமரிப்புத் துறையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே எம் மருத்துவமனையின் முக்கிய இலக்கு” என்று மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முழங்குகிறார் டினா. ஆனால், அம்பானி மருத்துவமனையோ மருத்துவத் துறையின் அடிப்படை அறநெறிக் கட்டுமானம் எதுவோ அதையே பகிரங்கமாகச் சுக்குநூறாக உடைத்தெறிந்திருப்பதைச் செய்திகள் சொல்கின்றன.
ஆளை அனுப்பு; லட்சத்தை அள்ளு!
மருத்துவர்களைத் தரகர்களாக்கும் திட்டத்தை ஆரம்பித்து, அதற்கு விண்ணப்பங்களை அச்சடித்து, மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை அதிகாரபூர்வ மாக நடத்தியிருக்கிறது அம்பானி மருத்துவமனை. தங்களிடம் வரும் நோயாளிகளிடம், “அம்பானி மருத்துவ மனைக்குச் செல்லுங்கள்; அங்கே உங்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும்” என்று வெளி மருத்துவர்கள் ஆளை அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புபவர்களுக்கு, 40 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ.1 லட்சம், 50 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ.1.5 லட்சம், 75 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ.2.5 லட்சம் என்று ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகாரபூர்வமாகவே லஞ்சம் கொடுத்திருக்கிறது அம்பானி மருத்துவமனை.
இந்த விவகாரம் வெளியாகி, வெளி மருத்துவர் களுக்கு அம்பானி மருத்துவமனை விநியோகித்த விண்ணப்பங்கள் வெளியே சிக்கிவிட்ட நிலையில், மகாராஷ்டிர மருத்துவக் கழகம் அம்பானி மருத்துவ மனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்ட நிலையில், தவறை ஒப்புக்கொண்டு தன்னுடைய விற்பனைத் துறையினர் ஆர்வ மிகுதியில் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்திவிட்டதாகவும், அதற்காக வருந்து வதாகவும், திட்டத்தை நிறுத்திவிடுவதாகவும் விளக்கம் அளித்திருக்கிறது அம்பானி மருத்துவமனை.
ஊரில் இல்லாததா?
இப்போது ஒரு கேள்வி எழலாம்: ஊரில் எங்கும் நடக்காத விஷயமா இது?
நியாயம்தான். தவறுகள் சம்பிரதாயங்களாகிவிடும் காலத்தில் இருக்கிறோம். நோயாளிக்குப் பரிந்துரைக்கும் மருந்துகளுக்காக மருந்து நிறுவனங்களிடமிருந்து ‘அன்பளிப்புகள்' பெறுவதில் தொடங்கி, பரிசோதனை நிலையங்களுக்கு நோயாளிகளை அனுப்புவதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து ‘ஊக்கத்தொகை' பெறு வது வரை மருத்துவத் துறையில் லஞ்சமும் ஊழலும் சகஜமாகிவிட்டன என்பது உண்மைதான். எனினும், அம்பானி மருத்துவமனை விவகாரத்தில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. லஞ்சத்தையும் ஊழலை யும் அதிகாரபூர்வமாக்கும் முன்னுதாரணம் இது. ஒரு ஊரில் திருடர்கள் பெருகிவிட்டார்கள் என்பதாலேயே திருட்டைச் சட்டபூர்வமாக்கிவிட முடியாதல்லவா?
மருத்துவச் சேவையின் அடிப்படை அறம்
தமிழில் முதன்முதலில் மருத்துவத் துறை ஊழல்களை உள்ளிருந்தே அம்பலப்படுத்திய மருத்துவர் கே.ஆர்.சேதுராமன் தன்னுடைய ‘போஸ்ட்மார்ட்டம்' நூலின் முதல் அத்தியாயத்தில் குறிப்பிடும் விஷயம் இது.
“ ‘மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்வது தான் என்னுடைய பிரதான நோக்கமாக இருக்கும். அதன் மூலம் கிடைக்கும் பணமோ, இதர சலுகைகளோ எனக்கு இரண்டாம் பட்சம்தான்... என்னிடம் வரும் நோயாளிகளைத் தேவையற்ற பரிசோதனைகள் செய்யப் பரிந்துரைக்க மாட்டேன்; பரிசோதனைக் கூடங்களுக்குப் பரிந்துரைக்கவோ, சிறப்புச் சிகிச்சை நிபுணர்களிடம் உயர் சிகிச்சைக்கு அனுப்பவோ காசு வாங்க மாட்டேன். நோயாளிகளை என்னிடம் ஈர்த்து வர முகவர்கள் யாரையும் நியமிக்க மாட்டேன்...' என்ற உறுதிமொழியை ஏற்று கையெழுத்திட்ட பின்னரே மருத்துவப் படிப்பை முடிக்கும் ஒவ்வொருவரும் இந்திய மருத்துவக் கழகத்தால் மருத்துவர்களாக அங்கீகரிக்கப்படுகிறோம்... ஆனால், நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், எத்தனை மருத்துவர்கள் இந்த உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்கிறோம்?”
சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் சேதுராமன் சக மருத்துவச் சமூகத்தை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியபோதுகூட இந்தியாவில் சூழல் இவ்வளவு மோசமானதாக இல்லை. இன்றைக்கோ இந்திய மருத்துவத் துறையின் ஊழல் சந்திசிரிக்கிறது. சர்வதேச அளவில் மதிக்கப்படும் மருத்துவ இதழான ‘பி.எம்.ஜெ.' தன்னுடைய சமீபத்திய தலையங்கத்தில் இந்திய மருத்துவத் துறையை நாறடித்திருக்கிறது. பொதுவாக, உலகெங்கும் மருத்துவத் துறையில் புரையோடியிருக்கும் ஊழலைப் பட்டியலிடும் ‘பி.எம்.ஜெ.', இந்தியாவில் நிலைமை படுமோசம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. “சுகாதாரத் துறை என்பது ஊழலுக்கு உற்ற உறைவிடமாகிவருகிறது. உலகம் முழுக்க, சுகாதாரத் துறையில் செலவிடும் தொகையில் 10% முதல் 25% வரை ஊழலுக்கே போகிறது. நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்தும் சுகாதாரத் திட்டங்களைப் பொறுத்தும் லஞ்சமும் ஊழலும் மாறுபடுகிறது. அமெரிக்காவில் 2011-ல் மட்டும் 8,200 கோடி டாலர்கள் முதல் 27,200 கோடி டாலர்கள் வரை போலிக் காப்பீட்டுத் திட்ட ரசீதுகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது. எந்த நாட்டிலுமே இந்தத் துறையில் ஊழல் இல்லாமல் இல்லை. மருத்துவர்கள் இந்த ஊழல்களைத் தடுக்கத் தவறிவிட்டனர். சிலர் அதற்கு உடந்தையாகவும் இருக்கின்றனர்... எல்லா வகை ஊழல்களிலும் திளைக்கும் இந்தியா சுகாதாரத் துறை ஊழலிலும் முக்கிய இடம் வகிக்கிறது” என்று தொடங்கி இந்திய மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லாட்டத்தைத் தோலுரித்துத் தொங்க விட்டிருக்கிறது ‘பி.எம்.ஜெ'.
தொழில் கை மாறுகிறது
மருத்துவத் துறை ஊழல் ஒவ்வொன்றும் எண்ணற்ற நோயாளிகளுடனான உயிருடனான விளையாட்டு என்பதைத் தாண்டி, மருத்துவர்களிடமிருந்தே மருத்துவத் தொழிலைப் பறிக்கும் பேரபாயம் ஆகிவிட்டது என் கின்றனர், இன்னமும் மனசாட்சியை விற்றுவிடாமல் நேர்மையைக் கட்டிக்காக்கும் மருத்துவர்கள். “எப் போது நோயாளிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கத் தரகுமுறை அறிமுகமானதோ அப்போதே எதற்கெடுத்தாலும் பரிசோதனைக்கு அனுப்பும் பழக்கம் மருத்துவர்களிடம் பரவ ஆரம்பித்துவிட்டது. இதன் மோசமான பின்விளைவு என்னவென்றால், இன்றைய தலைமுறை மருத்துவர்கள் பலருக்கு நோயாளிகளிடம் பேசி, அவர்கள் உடலைப் பரிசோதித்து, அவர்கள் நோயைக் கண்டறியும் ‘கிளினிக்கல் எக்ஸாம்' முறையே பரிச்சயம் இல்லாமல் போய்விட்டது. ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலைக் கண்டறியக்கூட பரிசோதனை நிலையங்களை நாடும் ‘லெபாரட்ரிகல் எக்ஸாம்' உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. விளைவு, மருத்துவரைவிடவும் பரிசோதனைக் கருவி களும் பரிசோதனை நிலையங்களும் சக்தி படைத்தவை ஆகிவிடுகின்றன. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான பிணைப்பு அறுந்துவிடும் நிலையில், பெரும் முதலீடுகளுடன் மருத்துவ மனைகளைத் தொடங்குபவர்கள் மருத்துவர்களை வெறும் பரிந்துரையாளர்களாகவும் தரகர்களாகவும் ஆக்கிவிடுகிறார்கள். வியாபாரிகளின் கையை நோக்கி மருத்துவம் சென்றுகொண்டிருக்கிறது” என்கிறார்கள் அவர்கள்.
வெறும் ஊழல் அல்ல; உயிர் விளையாட்டு
உலகெங்கும் ஆண்டுக்கு ரூ. 7.2 லட்சம் கோடி டாலர்கள் சுகாதாரத் துறைக்காகச் செலவிடப்படுவதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. இதில் 10%-25% தொகை ஊழலில் செல்கிறது என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை அல்ல. ஒரு சாமானியக் குடும்பம் தன் சகல சந்தோஷங்களையும் இழக்க இன்றைக்கெல்லாம் அந்த வீட்டுக்கு ஒரு நோயாளி போதும். அதுவும் புற்றுநோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் என்றால், உடலும் மனமும் துடிதுடிக்க அந்தக் குடும்பமே வலி சுமக்க வேண்டும். தம்முடைய பல நாள் உழைப்பின் மொத்த பலன்களையும் மருத்துவ மனைகளின் மேஜையில் கொண்டுவந்து கொடுத்து, அறியாமையைச் சுமந்து பரிதவித்து நிற்கும் இப்படிப் பட்ட அபலைகளிடம் நடத்தப்படும் ஊழல் கொடூரமான கொள்ளை.
இதுவரை சிக்காமல் ‘தொழில்' நடத்திய இந்தக் கொள்ளையர்கள் முதல்முறையாகப் பிடிபட்டிருக் கிறார்கள். மருத்துவம் ஒரு சேவை என்பதன் அடித் தளமாக எந்த அறம் இருக்கிறதோ, எந்த உறுதிமொழி அதை வலியுறுத்துகிறதோ அதன் மீதே தாக்குதல் நடத்தியிருக்கிறது அம்பானி மருத்துவமனை. இந்திய மருத்துவத் துறை ஊழல் புற்றால் சீழ் பிடிக்க ஆரம்பிப்பதன் அறிகுறி இது. இந்திய மருத்துவக் கழகம் இதை வழக்கம்போல வேடிக்கை பார்க்க லாகாது; நாமும்தான்!
- சமஸ் @ தி இந்து
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1