ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

+5
யினியவன்
Dr.S.Soundarapandian
ரா.ரா3275
ஜாஹீதாபானு
சிவா
9 posters

Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by சிவா Thu 19 Jun 2014 - 7:48



"இடுப்பில் டயர் போட்டுவிட்டது' என்பார்கள். அதாவது இடுப்பில் சதைபோட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும்.

இதுதான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் அறிகுறி என்றால் நம்புங்கள்.

பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுதான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப்போகிறது. தொப்பை போடப்போகிறது. இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப்போய் வரவழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி.

இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் "சப்ஜடேனியஸ்' என்னும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கிவிடும். இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப்போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம்.

சில பெண்களுக்கு, பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டு விடும்.

இந்தக் காரணங்கள் எதுவுமே இல்லாமல், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல், வளைந்து குனிந்து பெருக்காமல், ஓடியாடி வேலை செய்யாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி, பல மணி நேரம் டிவி பார்ப்பவர்கள், நொறுக்குத் தீனி சாப்பிடுபவர்கள், கொஞ்சம்கூட உடற்பயிற்சியே செய்யாதவர்களுக்குக் கண்டிப்பாக இடுப்பு மடிப்பு விழும்.

அதை அப்படியே விட்டால், முதலில் உடல் பருமன் அடையும், பிறகு தொப்பை விழும். எடை அதிகரிக்கும். மூச்சு வாங்கும். பி.பி. மெல்ல எட்டிப் பார்க்கும். சுகர் வந்து வந்து போகும். கடைசியில் ஹார்ட் அட்டாக்குக்கும் கிட்னி ஃபெயிலியருக்கும் வழிவகுத்தாலும் வகுக்கலாம் இந்த இம்சைகள் வேண்டுமா?

கொஞ்சமே கொஞ்சமாக அக்கறை எடுத்துக் கொண்டாலே, போதும் இந்தப் பிரச்னைகள் வராமலே தடுத்துவிடலாம்.

உங்களுக்குத் தெரியும்?

உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான இடுப்புச் சதையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதனால் 40 கோடிப் பேர் ஒபிஸிட்டி எனும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னொரு அதிர்ச்சியான தகவல், உலகில் மொத்த இறப்புகளில் 3ல் ஒரு பங்கு இடுப்புச் சதை அதிகம் உள்ளவர்களுக்குத்தான் இதயநோய் சம்பந்தமான இறப்புகள் ஏற்படுகினறனவாம். இந்த ஆபத்துக்குக் காரணம் முறையற்ற உணவுப் பழக்கம்தான் என்கிறார்கள்.

ஏன் இடுப்புச் சதை?

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கலோரித்திறன் அதிகம் இருந்து, நம் உடல் செலவழிக்கும் கலோரித்திறன் குறைவாக இருந்தால், அதுதான் படிப்படியாக இடுப்பைச் சுற்றிலும் சதை போடக் காரணமாகிறது.

சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவற்றை அதிகம் உணவில் சேர்ப்பதும் இடுப்புச்சதைகூட மேலும் ஒரு காரணமாகும். அதாவது நாம் ருசிக்காக உண்பதுதான் அதிகம். சத்துக்காக உண்பது குறைவு.

இளைய தலைமுறையினர்:

வீட்டுச் சாப்பாட்டை புறக்கணித்து விட்டு, ஃபாஸ்ட்ஃபுட் வகைகள் நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் அதிகம் உண்பது இன்றைய இளம் தலைமுறையினரிடடையே ஃபேஷனாகிவிட்டது. நண்பர்கள் அல்லது நண்பிகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தால், இந்தவகை, உணவுகள்தான் அவர்களின் மெனுவில் இருக்கும். அரட்டைக் கச்சேரிக்கு நடுவே, இந்தவகை உணவுகள் எவ்வளவு உண்கிறோம் என்ற அளவே தெரியாமல் உண்கிறார்கள்.

கூடவே உடல் உழைப்பு இல்லாத வேலைகளில்தான் அவர்கள் விரும்பி ஈடுபடுகிறார்கள். கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் செலவிடுவதும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

ஒரே நாளில் இடுப்பில் மடிப்பு விழாது:

யாருக்கும் ஒரே நாளில் திடீரென்று இடுப்பில் சதைப்போட்டுவிடாது. கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்கள் கழித்துத்தான் இந்த இடுப்பு மடிப்பு வரும். கொஞ்சம் கொஞ்சமாக சதை கூடும்போது அது பற்றிய அக்கறையோ கவலையோ கொள்ளாதவர்கள், உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மட்டுமே வருத்தப்படுகிறார்கள். இடுப்பில் அளவுக்கு மீறிய சதைபோட்டு டயர்போல் பெருத்த பின்னர்தான் அதைக் குறைக்க பலர் படாதபாடு படுகிறார்கள்.

அதற்காக கடுமையான உணவுக் கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி, பல நாள் பட்டினி, அளவுக்கு அதிகமான மாத்திரைகள் எடுத்து உடனே இடுப்புச் சதையைக் குறைக்க பரபர என்று ஓடுவார்கள். அப்படியெல்லாம் நினைத்த உடன் இடுப்பு மடிப்பை நீக்கிவிட முடியாது.

ஒரே வழிதான் உண்டு:

அதற்கு ஒரே வழி, நீங்கள் எவ்வளவு கலோரியை உணவின் மூலம் உடலுக்குள் கொண்டு வருகிறீர்கள். அதில் எவ்வளவு கலோரித்திறனை செலவழிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இடுப்பு மடிப்பு குறையும்.
அதாவது, நாம் உட்கொள்ளும் உணவின் அளவு நமது உடல் செய்யும் வேலையின் அளவு இந்த இரண்டிற்கும் இடையே நடைபெறும் வரவு-செலவு கணக்கைப் பொறுத்துத்தான் உடல் எடை கூடும்-குறையும்.

இடுப்புச் சதையைக் குறைக்க உதவும் உணவுப் பழக்கம்:

1. எண்ணெயில் செய்த உணவுகள் எதுவும் கூடாது.
2. மட்டம், முட்டை மஞ்சள்கரு, வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
3. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகம் கூடாது.
4. மது, புகை கூடவே கூடாது.
5. குளிர்பானங்களை அடிக்கடி அருந்தக்கூடாது.
6. நார்ச்சத்துள்ள காய்கறிகள் பழங்கள் அதிகம் உண்ண வேண்டும்.
7. ஓட்ஸ் கஞ்சி நல்லது.
8. உடல் உழைப்பு இல்லாத வேலையில் இருப்போர், அளவான உடற்பயிற்சி, 45 நிமிட நடைப்பயிற்சி அவசியம். இதைத் தொடர்ந்து செய்தாலே இடுப்பில் மடிப்பு விழாது.
9. நடனம் ரொம்ப நல்லது. ஏதாவரு ஒரு நடனத்தை தொடர்ந்து ஆடுங்கள். கண்டிப்பாக இடுப்பில் சதை இருக்காது.


[thanks]குமுதம்[/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by ஜாஹீதாபானு Thu 19 Jun 2014 - 14:13

நல்ல தகவல் நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by ரா.ரா3275 Thu 19 Jun 2014 - 14:23

என்னமோன்னு நெனச்சி வந்தா...போங்க சிவா... சோகம் அழுகை 


இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! 224747944

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Rஇடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Aஇடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Emptyஇடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Rஇடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by Dr.S.Soundarapandian Fri 4 Jul 2014 - 13:52

ரிலாக்ஸ் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by யினியவன் Fri 4 Jul 2014 - 15:00

ரா.ரா3275 wrote:என்னமோன்னு நெனச்சி வந்தா...போங்க சிவா... சோகம் அழுகை 
மேற்கோள் செய்த பதிவு: 1069716ஒரு படம் போட்டு விளக்கி இருப்பார்ன்னு தான வந்தீங்க? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by krishnaamma Fri 4 Jul 2014 - 15:16

நல்ல தகவல் , நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by krishnaamma Fri 4 Jul 2014 - 15:17

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:என்னமோன்னு நெனச்சி வந்தா...போங்க சிவா... சோகம் அழுகை 
மேற்கோள் செய்த பதிவு: 1069716ஒரு படம் போட்டு விளக்கி இருப்பார்ன்னு தான வந்தீங்க? புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by மாணிக்கம் நடேசன் Fri 4 Jul 2014 - 15:26

இடுப்ப ஏன் மடிக்கிரீங்க, லேசா வெட்டி எடுத்துட்டு தச்சிடுங்க, முடிஞ்சது விசயம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by பாலாஜி Fri 4 Jul 2014 - 15:32

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:என்னமோன்னு நெனச்சி வந்தா...போங்க சிவா... சோகம் அழுகை 
மேற்கோள் செய்த பதிவு: 1069716ஒரு படம் போட்டு விளக்கி இருப்பார்ன்னு தான வந்தீங்க? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1072201

 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by T.N.Balasubramanian Fri 4 Jul 2014 - 22:17

சதை பற்றான மருத்துவ கட்டுரை .
மடிப்பை பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது .
நன்றி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்! Empty Re: இடுப்பு மடிப்பு பெண்களே உஷார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum