ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்தான் பாலா - திரை விமர்சனம்

5 posters

Go down

நான்தான் பாலா - திரை விமர்சனம் Empty நான்தான் பாலா - திரை விமர்சனம்

Post by soplangi Tue Jun 17, 2014 2:05 pm

நான்தான் பாலா - திரை விமர்சனம் Xbala_1953861h.jpg.pagespeed.ic.XcpKlgv6nc

யாருக்கும் அணு அளவும் கேடு நினைக்காத ஒருவன் வன்முறைச் சூழலில் தன்னை அறியாமல் மாட்டிக்கொள்வதுதான் ‘நான்தான் பாலா’.

பெருமாள் கோயில் குருக்கள் பாலா (விவேக்) கும்பகோணத்தில் உள்ள அக்கிரகாரம் ஒன்றில் வசிக்கிறான். பாலாவுக்குப் பெற்றோரும் பெருமாளுமே உலகம். அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதை பாக்கியமாக எண்ணி வாழ்கிறான். எப்போதோ ஒருமுறை பெருமாள் கோயில் நகை திருட்டுப்போன குற்றத்திற்காக பாலாவின் தந்தை மீது வழக்கு ஒன்று நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதிலிருந்து தந்தையை விடுவிக்க வேண்டும் என்பது பாலாவின் கவலை.

ஒரு கட்டத்தில் பாலாவின் தந்தை கைது செய்யப்படுகிறார். அவரை விடுவிக்க யாரும் உதவி செய்யவில்லை. பாலா பெருமாள் முன் கண்ணீர் பொங்க நிற்கிறான். அதே நேரத்தில், பூச்சி (வெங்கடராஜ்) என்னும் கூலிக்குக் கொலை செய்யும் ரவுடி காஞ்சிபுரத்தில் இருந்து கும்பகோணத்திற்கு வருகிறான். தொழில் போட்டியால் யாரோ யாரையோ கொல்ல நினைக்கிறார்கள். கொலை செய்யும் கையாளான பூச்சி கும்பகோணத்தில் காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறான். காரியம் எந்த தடங்கலும் இல்லாமல் முடிந்ததற்காகப் பெருமாளுக்கு நன்றி சொல்லக் கோயிலுக்கு வருகிறான்.

அங்கே கையறு நிலையில் இருக்கும் பாலாவைச் சந்திக்கிறான். பாலாவுக்கு அவன் உதவுகிறான். அவன் கொலைகாரன் என்று தெரியாமல் பாலா அதை ஏற்றுக்கொள்கிறான். பெற்றோர் இறந்த பிறகு ஆதரவற்று நிற்கும் பாலா, பூச்சியைத் தேடிக் காஞ்சிபுரத்துக்கு வருகிறான். அங்கே பூச்சியுடன் நட்பு மலர, ஒரு பெண்ணுடன் காதலும் மலர்கிறது.

காவல்துறை பூச்சியைத் துரத்த, கொலையாளியின் நட்பால் பாலாவுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. தார்மீக உணர்வு கொண்ட, பாலாவின் நட்பும் காதலும் என்ன ஆயின என்பதுதான் மீதிக் கதை. வெளிநாட்டு வேலையைக்கூடத் தவிர்த்து வயது முதிர்ந்த தாய் தந்தைக்குப் பணிவிடை செய்வதை வரமாக நினைக்கும் மகனாக விவேக் நடிப்பை வெளிப்படுத்தும் காட்சி, தனக்கு அடைக்கலம் தந்த நண்பன் கெட்ட காரியத்தில் இறங்குகிறான் என்றதும் அவனைத் திருத்த முயற்சிக்கும் சூழல் இப்படிச் சில இடங்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும் காலம் காலமாகத் தமிழ் சினிமா பயணிக்கும் பாதையிலேயே திரைக்கதை பயணிக்கிறது.

படத்தின் நெருக்கடிகள், திருப்புமுனைகள், பாத்திரங்கள், எல்லாவற்றிலும் பழைய நெடி. படம் நகரும் வேகம் பொறுமையைச் சோதிக்கிறது. நட்பு, காதல் ஆகியவை அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. சோகமான காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன. மயில்சாமியும், செல்முருகனும் சில இடங்களில் அடிக்கும் டிராக் காமெடி பாணி எல்லாம் அரதப் பழசு.

ஆரம்பம் முதலே தொய்வுடன் நகர்ந்து போகும் படத்தின் போக்கு கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் மட்டுமே சலிப்பைப் போக்குகிறது. சில வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. ‘நாம குழந்தையா இருக்குறப்போ அவா பாத்துண்டா.. இப்போ அவா குழந்தைகள்.. நாமதானே பார்த்துக்கணும்’ என்ற வசனம் அவற்றில் ஒன்று.

படத்தில் முக்கியமான வேறொரு பிரச்சினையும் உள்ளது. பிராமணர்கள் தங்களோடு பழகுபவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவார்கள் என்று பொருள்படும் வசனங்கள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைப் பற்றியதாக அல்லாமல் ஒட்டுமொத்தமாக பிராமணர்களை இப்படிச் சித்தரிப்பதைச் சாதிப் பெருமை பேசுவதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. சாதிக்கு ஏற்ற குணம் என்னும் பார்வை மிக அபாயகரமான பிற்போக்குப் பார்வை. அதை முன்வைப்பதுபோன்ற வசனங்கள் ஆட்சேபத்துக்கு உரியவை.

சற்று இடைவேளைக்குப் பின் மீண்டும் களம் இறங்கிய விவேக் மீதும், அவர் நாயகன் அவதாரம் எடுக்கும் இந்தப் படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. நடிப்பில் அவர் சோடைபோகவில்லை என்றாலும் வலுவான கதை அமையாததால் அவர் முயற்சி போதிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகிறது. சீரியஸான பாத்திரத்தைத் தன்னால் கையாள முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். காதல் உணர்வைக் காட்டும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கஷ்டப்படு(த்து)கிறார்.

நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ஈர்க்கவில்லை. வெங்கட்ராஜின் நடிப்பு மனதில் நிற்கிறது. தனி காமெடியனாக முன்னேறியிருக்கும் செல் முருகனின் நகைச்சுவை நடிப்பில் தன்னம்பிக்கை தெரியும் அளவுக்கு தேர்ச்சி தெரியவில்லை. வெங்கட் க்ரிஷியின் இசையில் சிறப்பாகச் சொல்ல ஒன்றுமில்லை. உணவு வகைகளை வரிசைப்படுத்தும் பாடல் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் ரசிக்க வைக்கிறது

சலித்துப்போன திரைக்கதை படத்தை பலவீனமாக்கியிருக்கிறது

-- இந்து டாக்கீஸ் குழு
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நான்தான் பாலா - திரை விமர்சனம் Empty Re: நான்தான் பாலா - திரை விமர்சனம்

Post by விமந்தனி Tue Jun 17, 2014 2:21 pm

சாதிக்கு ஏற்ற குணம் என்னும் பார்வை மிக அபாயகரமான பிற்போக்குப் பார்வை. அதை முன்வைப்பதுபோன்ற வசனங்கள் ஆட்சேபத்துக்கு உரியவை.
 சூப்பருங்க


நான்தான் பாலா - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான்தான் பாலா - திரை விமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான்தான் பாலா - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நான்தான் பாலா - திரை விமர்சனம் Empty Re: நான்தான் பாலா - திரை விமர்சனம்

Post by ayyasamy ram Wed Jun 18, 2014 6:31 am

நான்தான் பாலா - திரை விமர்சனம் Db0ChaRlicnxc2RaGQTp+59
-
நான்தான் பாலா - திரை விமர்சனம் ClNMOnzOQ5qXQl2pcJeO+58
-
விவேக், நல்ல கதைக்காக ஒருமுறை பார்க்கலாம்!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான்தான் பாலா - திரை விமர்சனம் Empty Re: நான்தான் பாலா - திரை விமர்சனம்

Post by சிவா Wed Jun 18, 2014 11:36 pm

இதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட நடிகர் விவேக் இப்படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

ஆனால் கதையைப் பற்றி கூற ஒன்றுமில்லை. குறிப்பிட்ட இனத்தவர் (பிராமனர்) மட்டுமே அறிவில் சிறந்தவர்கள் என்ற மாயையை இப்படமும் கூற முன்வந்துள்ளது ஏற்றுக் கொள்ள இயலாததாக உள்ளது.

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்தப் படம் வெற்றிபெறக் கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடிகர் விவேக் சமஸ்கிருத மந்திரங்களை இந்தப் படத்தில் அதிகம் பயன்படுத்தியதால் பேட்டிகளில் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் மொழி தோன்றியது என்னும் முட்டாள் தனமான கருத்தைக் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ் என்றும் பிற மொழியை முன்னுதாரணமாகக் கொண்டிராமல் தனித்துவம் மிக்க மொழி என்பதை இவர் அறியாதது வருத்தத்திற்குறியது.



நான்தான் பாலா - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான்தான் பாலா - திரை விமர்சனம் Empty Re: நான்தான் பாலா - திரை விமர்சனம்

Post by ரா.ரா3275 Wed Jun 18, 2014 11:48 pm

நடிகர் விவேக் சமஸ்கிருத மந்திரங்களை இந்தப் படத்தில் அதிகம் பயன்படுத்தியதால் பேட்டிகளில் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் மொழி தோன்றியது என்னும் முட்டாள் தனமான கருத்தைக் கூறி வருவது கண்டிக்கத்தக்கது. தமிழ் என்றும் பிற மொழியை முன்னுதாரணமாகக் கொண்டிராமல் தனித்துவம் மிக்க மொழி என்பதை இவர் அறியாதது வருத்தத்திற்குறியது. wrote:

உண்மை சிவா...ஆமோதிக்கிறேன் வலுவாக...


நான்தான் பாலா - திரை விமர்சனம் 224747944

நான்தான் பாலா - திரை விமர்சனம் Rநான்தான் பாலா - திரை விமர்சனம் Aநான்தான் பாலா - திரை விமர்சனம் Emptyநான்தான் பாலா - திரை விமர்சனம் Rநான்தான் பாலா - திரை விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நான்தான் பாலா - திரை விமர்சனம் Empty Re: நான்தான் பாலா - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum