ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குயில் டாக்டர்! சிறுவர்கதை

3 posters

Go down

குயில் டாக்டர்! சிறுவர்கதை Empty குயில் டாக்டர்! சிறுவர்கதை

Post by சிவா Tue Jun 17, 2014 12:41 am


ஒரு கிராமத்தில் சின்னா என்ற சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தான். அவனிடம் ஓர் உண்டியல் இருந்தது. ஆற்றங்கரை ஓரமுள்ள ஈரக் களிமண்னை உருண்டையாக உருட்டி, அதை உண்டி வில்லில் வைத்துக் குறி பார்த்து மாங்காய், கொய்யா போன்ற பழங்களை அடித்து வீழ்த்துவான்.

அப்படி ஒரு சமயம் உண்டி வில்லால் அடிக்கும் போது, அது மாமரத்திலிருந்த ஆந்தை உடலைத் தாக்கி விட்டது. ஆந்தைக்கு வலி தாங்க முடியவில்லை. அதனுடைய தோழனான காகத்திடம் ஓடிற்று.

""ஆட்டுக்கார பையன் உண்டி வில்லால் அடித்து விட்டான். வலிபொறுக்க முடியவில்லை!'' என்று கண்ணீர் விட்டது.

""கவலைப்படாதே! குயில் அண்ணன் கைதேர்ந்த வைத்தியர். அவரிடம் போய்க் காட்டலாம், வா!'' என்று குயில் வைத்தியரிடம் அழைத்துப் போயிற்று காகம்.

குயில், ஆந்தையின் உடலை நன்கு சோதித்தது. களிமண் உருண்டை அதன் விலாப்புறத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டது. வலியின் காரணம் அதனால்தான் என்பதையும் புரிந்து கொண்டது. அதே சமயம் ஆந்தையாரின் குணமும் அதன் நினைவுக்கு வந்ததது. ஆந்தை ஒழுங்காகப் பணம் கொடுக்காது.

""ஆந்தையாரே, உமது உபாதையைக் குணப்படுத்த முடியும். நீர் ஒழுங்காக அதற்கான ஊதியத்தைத் தந்து விட வேண்டும்,'' என்றது குயில்.

""தராமல் இருப்பேனா? சீக்கிரம் கவனியும் வைத்தியரே!'' என்று அவஸ்தைப் பட்டது ஆந்தை.

""இப்போதே கொடுத்தால்தான் வைத்தியம் செய்வேன்,'' என்றது குயில் உறுதியாக. ஆந்தையின் வார்த்தையை நம்பத் தயாராக இல்லை அது.

""குயிலாரே, நீங்கள் வைத்தியம் பாருங்கள். ஆந்தையாரின் பணத்துக்கு நான் பொறுப்பாளி,'' என்றது காக்கை. அதாவது அது தராவிட்டால் நான் தருகிறேன் என்று ஜாமீன் கொடுத்தது.

""அப்படியானால் சரி,'' என்று காக்கையின் உறுதி மொழியை ஏற்றுக் கொண்ட குயில், ""ஆந்தையாரே, ஏதாவது ஒரு நீர் நிலைக்குப் போய்க் கழுத்தளவு தண்ணீரில் இரண்டு நாழிகை உட்கார்ந்திரும். உமது வலி பறந்துவிடும்,'' என்று வைத்தியம் சொல்லி அனுப்பியது.

ஆந்தையும், காகமும் அருகிலுள்ள ஒரு குட்டைக்குப் பறந்து போயின. ஆந்தை கழுத்தளவு நீருக்குள் வெகு நேரம் முங்கியபடி இருந்தது. களி மண் உருண்டை நீரில் இளகிக் கரைந்து போயிற்று. அதன் வலியும் அத்துடன் பறந்து போயிற்று.

மறுநாள் ஆந்தையிடம் பணம் வசூல் பண்ணக் குயில் போயிற்று. ஆந்தையா கொடுக்கும்?

""நீ என்ன பிரமாத வைத்தியம் செய்தாய்? ஒரு மருந்தும் கொடுக்கவில்லை. தண்ணீர்ச் சிகிச்சைக்குப் பணமா? போ, போ!'' என்று விரட்டியது.

குயில் இதை எதிர்பார்த்ததுதான். பொறுப்பேற்றுக் கொண்ட காகத்திடம் போய்க் கேட்டது குயில்.

காகமோ, ""என்னிடம் கால் காசு கூடக் கிடையாது,'' என்று இறக்கையை விரித்து விட்டது.

குயிலுக்குக் கோபமான கோபம். காக்கையை நேராக நீதிபதி நரியாரிடம் அழைத்துப் போயிற்று. வழக்கை விசாரித்த நரி, நியாயம் வழங்கியது.

""ஆந்தை குயிலுக்கு வைத்தியத்துக்கான பணத்தைத் தராவிட்டால், அதற்கு ஜாமீன் கொடுத்த காக்கைதான் அதைக் கொடுக்க வேண்டும்,'' என்றது.

நரியின் தீர்ப்பை ஏற்பதைத் தவிர காக்கைக்கு வேறு வழியில்லை. ஆனால், அதனிடமோ கால் காசு இல்லை.

நரியிடம் காக்கை, ""தன்னிடம் பணம் இல்லை!'' என்பதை தெரிவித்தது.

""உன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் இனி நீ குயிலின் முட்டைகளைக் காப்பாற்றித் தரும் வேலையைக் மேற்கொள்ள வேண்டும்!'' என்று உத்தரவு போட்டது நரி.

"ஜாமீன் கொடுத்ததினால் தனக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்டதே' என்று காகத்துக்கு, ஆந்தை மீது ஒரே கோபம். அதை தேடிப் புறப்பட்டு சென்றது காகம்.

ஆனால், ஆந்தையோ, காகத்திடமிருந்து தப்ப, மரப் பொந்துக்குள் போய்ப் புகுந்துக் கொண்டது. இரவில் மட்டும் வெளியில் வரும்.

அன்று முதல் இன்று வரை இதே நிலைதான். குயிலின் முட்டையைக் காகம் அடைகாக்கிறது. காகத்துக்குப் பயந்து கொண்டு பகல் எல்லாம் மரப் பொந்துக்குள் ஒளிந்திருக்கிறது ஆந்தை.
***
சிறுவர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குயில் டாக்டர்! சிறுவர்கதை Empty Re: குயில் டாக்டர்! சிறுவர்கதை

Post by ஜாஹீதாபானு Tue Jun 17, 2014 3:01 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றீ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குயில் டாக்டர்! சிறுவர்கதை Empty Re: குயில் டாக்டர்! சிறுவர்கதை

Post by அருண் Tue Jun 17, 2014 8:18 pm

குயில் டாக்டர்! சிறுவர்கதை 3838410834 நல்ல கதை!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குயில் டாக்டர்! சிறுவர்கதை Empty Re: குயில் டாக்டர்! சிறுவர்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum