புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
29 Posts - 58%
heezulia
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
14 Posts - 28%
kavithasankar
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 2%
prajai
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 2%
Barushree
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 2%
nahoor
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
83 Posts - 74%
heezulia
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
4 Posts - 4%
prajai
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
2 Posts - 2%
nahoor
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 1%
Barushree
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_m10முண்டாசுபட்டி - விமர்சனம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முண்டாசுபட்டி - விமர்சனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 5:03 am


மூடநம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு படமெடுப்பவர்களுக்கு மத்தியில் மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள்தான் என்று சொல்கிற படமாக இது வந்திருக்கிறது.

புகைப்படம் எடுத்தால் மரணம் என்று நம்புகிற கிராமமொன்றைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மனிதர்கள் எப்படி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.அதை முழுக்க நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

1982 இல் கதை நடக்கிறது. பழைய யாசிகா கேமிராவை வைத்துக்கொண்டு சிறுநகரமொன்றில் புகைப்படநிலையம் வைத்திருக்கிறார் கதாநாயகன் விஷ்ணுவிஷால். புகைப்படம் எடுத்தால் செத்துப்போய்விடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கிற முண்டாசுபட்டி கிராமத்தில் வசதியானவர்கள் இறந்தால் இறந்தகோலத்தில் புகைப்படமெடுத்து வைப்பது வழக்கம்.

ஊர்த்தலைவரின் தந்தை இறந்துபோக அவரைப் புகைப்படமெடுக்க கதாநாயகனுக்கு அழைப்பு. அவரும் தன் நண்பர் காளியுடன் அந்த ஊருக்குப் போகிறார். போன இடத்தில் ஏற்கெனவே திருமணம் நிச்சயக்கப்பட்ட நாயகி நந்திதாவின் மீது கொண்ட காதலால் அங்கேயே தங்கும் வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார். கிராமத்துக்கட்டுப்பாட்டுச் சூழலில் வளர்ந்த நாயகி, நாயகனின் காதலை ஏற்கமுடியாமல் தடுமாற, அவரைச் சரிகட்டி காதலை ஏற்றுக்கொள்ள வைத்து திருமணம் வரை செல்கிறார்.

அதற்கு அந்தக்கிராமத்தினர் மூடநம்பிக்கைகளே நாயகனுக்கு உதவியாக இருக்கின்றன என்பதுதான் கதை. படம் தொடங்கியதிலிருந்து முடிகிறவரை மக்கள் சிரித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைத்து திரைக்கதையையும் காட்சிகளையும் அமைத்திருக்கிறார்கள். ஆனால் ஒருசில இடங்கள் தவிர மற்ற இடங்கள் மொக்கையாக இருக்கின்றன.

வழக்கமாகத் திரைப்படங்களில் கதாநாயகன், ரஜினி ரசிகராகக் காட்டப்படுவார். இந்தப்படத்தில் நாயகன் கமல்ரசிகர். தன்னுடைய புகைப்படநிலையத்துக்குப் புகைப்படமெடுக்க வந்த ஒரு குடும்பத்தை ஒருநிமிடம் அப்படியே நில்லுங்கள் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு புதிதாக வெளியான கமலின் படத்தை நாள் முழுவதும் பார்த்துவிட்டு வரும்போதும் அந்தக்குடும்பம் அப்படியே நின்று கொண்டிருக்கிற காட்சி, ஊரில் சாமியாராக இருக்கிறவரின் முன்கதை, நடிகராகத் துடித்துக்கொணடிருப்பவரின் காட்சிகள், இறுதிக்காட்சியில் புகைப்படக்கருவியை வைத்தே மொத்த ஊரையும் சமாளிக்கும் சமயோசிதம் உள்ளிட்ட காட்சிகள் சுவை.

திருமணத்தை மீறிய உறவுகளை மையமாக வைத்துப் பெண்களைக் கேலி செய்யும் காட்சிகள் இந்தப்படத்திலும் இருக்கின்றன. இரட்டைஅர்த்தம் தொனிக்கும் துருப்பித்த துப்பாக்கிக்குத் தோட்டா எதுக்குடா போன்ற வசனங்கள் பல இடங்களில் இருக்கின்றன.அவற்றிற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால் கொடுத்த வேடத்திற்கு நியாயமாக நடந்துகொண்டிருக்கிறார். அவருடைய நண்பராக நடித்திருக்கும் காளியும் நடிகராக நடித்திருக்கும் ராமதாஸ¨ம் அவ்வப்போது சிரிக்கவைக்கிறார்கள்.

சாமியாராக நடித்திருக்கும் சுப்பிரமணி நன்றாக நடித்து வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறார். நாயகி நந்திதாவுக்கு கொஞ்சமே வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். அவரும் கண்களை உருட்டி முழித்து பயந்து உள்ளுக்குள் சிரிப்பது என தேவையான அளவுக்கு நடித்திருக்கிறார். மூடநம்பிக்கைகளைச் சாட விண்ணிலிருந்து எரிகல் விழுந்து ஊரைக் காப்பாற்றுகிறது என்கிற மூடநம்பிக்கையையே கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் புதுஇயக்குநர் ராம்குமார்.

அதைத் திருட ஒரு கூட்டம் அலைகிறது என்றும் அதற்கு பழையஜமீன் ஆனந்தராஜ் உதவுகிறார் என்பதும் மையக்கதைக்கு உதவுவதறக்கு அமைக்கப்பட்டிருக்கும் கிளைக்கதை. இவற்றைச் சொல்வதற்காகவே எண்பதுகளில் நடப்பதுபோலக் கதை அமைத்திருக்கிறார். படத்துக்கு இசையமைத்திருக்கும் ஷான்ரோல்டன் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையில் ரொம்பவே சோதிக்கிறார் இசையமைப்பாளர். மக்கள் சிரிக்கவேண்டுமென எண்ணித்தான் இசையமைத்திருக்கிறார். ஆனால் முடிவு எதிர்மறையாகிவிட்டது.

ஒளிப்பதிவு செய்திருக்கும் பி.வி.சங்கர், படத்துக்குப் பலமாக இருக்கிறார். எண்பதுகளில் கதை நடக்கிறது என்பதை மக்கள் உணருவதற்கு ஏற்ற வகையில் ஒளியமைத்துக் காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார்.

எடுத்துக்கொண்ட கதையைச் சிறப்பாகச் சொல்வதில் இயக்குநர் பின்தங்கிவிட்டார் என்றாலும் அவருடைய கருத்து மக்களுக்குத் தேவையானது என்பதால் அவருக்கு வாழ்த்துகள்.

தமிழ் உலகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:07 am

தினத்தந்தி விமர்சனம்

கதையின் கரு: மூட நம்பிக்கைகள் மிகுந்த கிராமமும், ஒரு காதல் ஜோடியும்...


கதை, 1947–ல் தொடங்குகிறது. முண்டாசுப்பட்டி கிராமத்துக்கு ஒரு வெள்ளைக்காரர் வருகிறார். கிராமத்து மக்களை போட்டோ எடுக்கிறார். கொள்ளை நோய் வந்து ஜனங்கள் கொத்து கொத்தாய் செத்து விழுகிறார்கள். அதற்கு காரணம், வெள்ளைக்காரர் போட்டோ எடுத்ததுதான் என்று முண்டாசுப்பட்டி மக்கள் நினைக்கிறார்கள். வெள்ளைக்காரரை விரட்டியடிக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில், ஊரில் உள்ள முனியர்சாமி கோவில் சிலையை கொள்ளையர்கள் திருட வருகிறார்கள். அவர்கள் மீது வானவெளியில் இருந்து ஒரு விண்கல் விழுகிறது. கொள்ளையர்கள் பயந்து ஓடுகிறார்கள். அந்த விண்கல்லை ‘வானமுனி’யாக எண்ணி முண்டாசுப்பட்டி மக்கள் வணங்குகிறார்கள்.

கதை, 1982க்கு வருகிறது. இன்னும் மூட நம்பிக்கைகள் விலகாமல், முண்டாசுப்பட்டி அப்படியே இருக்கிறது. ரத்தக்காட்டேரியை விரட்டுவதற்காக வீட்டு கதவுகளில், ‘‘திரும்பிப்போ’’ என்று எழுதி வைக்கிறார்கள். ஊர் எல்லையில் உள்ள போர்டில், ‘‘யாரும் போட்டோ எடுக்கக்கூடாது’’ என்று எச்சரிக்கிறார்கள்.

இத்தனை மூட நம்பிக்கைகள் மிகுந்த அந்த கிராமத்தில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு வரும் காதலும், அதற்கு எதிரான சூழ்நிலைகளுமே கதை.

பாகவதர் கிராப், பெல்பாட்டம் பேண்ட், அகலமான காலர் வைத்த பூப்போட்ட சட்டை சகிதம் வரும் விஷ்ணு விஷால், அந்தக்கால போட்டோகிராபர் வேடத்துக்கு பொருத்தமான தேர்வு. நந்திதா மீது இவர் விடும் காதல் கணைகள் அவ்வப்போது பணால் ஆனாலும், காதலில் இதெல்லாம் சகஜம் என்று இவர் உறுதியாக இருந்து கதாநாயகன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்கிறார். நந்திதாவுக்கும், இவருக்குமான காதல் காட்சிகள், வசீகரமானவை. ‘வெண்னிலா கபடிக்குழு’ படத்துக்குப்பின் விஷ்ணுவுக்கு கிடைத்த பெரிய திருப்பம், இந்த படம்.

நந்திதாவிடம், கிராமத்து அழகு இயல்பாக கொட்டிக் கிடக்கிறது. அவருடைய சிரிப்பும், ஜன்னலோர பார்வையும் இளைஞர்களை ஈர்த்து வீழ்த்தும். பண்ணையாராக (ரொம்ப நாளைக்கு அப்புறம்) ஆனந்தராஜ். வில்லத்தனமும், காமெடியும் கலந்து ரசிக்க வைக்கிறார். படத்தில், ரகளை மிகுந்த கதாபாத்திரம், முனீஷ்காந்த். யார் இந்த முனீஷ்காந்த் என்று கேட்க தூண்டுகிறார், ராம்தாஸ். குறிப்பாக இவர், கிணற்றுக்குள் நின்று கொண்டு, ‘‘தீப்பெட்டி கொடுடா’’ என்று கேட்கும் இடத்தில், தியேட்டர் அமர்க்களப்படுகிறது. விஷ்ணு விஷாலின் உதவியாளராக வரும் காளியும் சின்ன சின்ன வசனங்கள் மூலம் கலகலப்பூட்டுகிறார்.

முண்டாசுப்பட்டியின் சாமியார், வெட்டியான், மீசைக்காரர், ஊர் தலைவர் என அந்தந்த கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள் புதுமுக நடிகர்கள்.

47 மற்றும் 82 ஆண்டுகளின் பழமையை கேமராவுக்குள் கொண்டு வந்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர். சீன் ரோல்டன் பின்னணி இசையில் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் காட்டியிருந்தால், படத்துக்கு இசை கூடுதல் அம்சமாக இருந்திருக்கும்.

கதாபாத்திரங்களுடன் பொருந்துகிற முகங்களாக பார்த்து நடிகர்களை தேர்வு செய்திருப்பதற்காக டைரக்டர் ராம்குமாரை முதலில் பாராட்ட வேண்டும். படப்பிடிப்புக்காக தேர்வு செய்திருக்கும் இடங்களில், கிராமத்து யதார்த்தம். படம் தொடங்கியதுமே வானவெளியில் இருந்து விண்கல்லை விழ வைத்து, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார், டைரக்டர். கலகலப்பு ஒன்றையே குறியாக வைத்து கதை சொல்லியிருப்பதால், சில இடங்கள் நாடக காட்சிகள் போல் அமைந்துள்ளன.

கிராமத்து ஜனங்களின் மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்தாலும், அது தெரியாத அளவுக்கு ஹாஸ்ய முலாம் பூசி, ரசிக்க வைத்து இருக்கிறார் டைரக்டர் ராம்குமார்.



முண்டாசுபட்டி - விமர்சனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:35 am

ரஜினி ரசித்த முண்டாசுப்பட்டி!

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார்.

படத்தைப் பார்த்த பின், 'முண்டாசுப்பட்டி' தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறினார்.

படத்தில் நடித்த விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டினார், குறிப்பாக முனீஷ் காந்த் கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் மற்றும் காளியின் நடிப்பை வெகுவாக ரசித்ததாகக் கூறினார்.

படத்தின் இயக்குனர் ராம் குமார், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரையும் வெகுவாக பாராட்டினார்.

குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்தமைக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி வி குமார் இவர்களுக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.




முண்டாசுபட்டி - விமர்சனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக