புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காய்கறி சமையல் குறிப்புகள் I_vote_lcapகாய்கறி சமையல் குறிப்புகள் I_voting_barகாய்கறி சமையல் குறிப்புகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி சமையல் குறிப்புகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:45 am

பூசணிக்காய் கலவைக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய இளம் வெள்ளைப் பூசணி - ஒரு கப், வெந்த துவரம்பருப்பு - அரை கப், உலர்ந்த மொச்சை - 50 கிராம், கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துருவிய தேங்காய் - அரை கப், எண்ணெய் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, தேங்காய் துருவல் - கால் கப்,  தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்.
காய்கறி சமையல் குறிப்புகள் 1
செய்முறை: உலர்ந்த மொச்சை, கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவிட்டு, மறுநாள் காலை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு வடிக்கவும். பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு வடிக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் வெந்த பூசணி, மொச்சை, கொண்டைக்கடலை, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த துவரம்பருப்பு, பொடித்த மசாலா சேர்த்து மேலும் நன்கு கொதிக்கவிட்டு, தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும் (கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:46 am

காசி அல்வா
தேவையானவை: முற்றிய வெள்ளைப் பூசணி (துருவியது) - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், வறுத்த முந்திரி, திராட்சை தலா - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.
காய்கறி சமையல் குறிப்புகள் 2
செய்முறை: பூசணித் துருவலை பிழிந்து நீரை நீக்கவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி,  பூசணித் துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து காய் வேகும்போது நெய் சேர்த்துக் கிளறவும். சற்றே தளர இருக்கும்போது ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி, அல்வா பதம் வரும்போது இறக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, வறுத்த முந்திரி - திராட்சை, வெள்ளரி விதை தூவி அலங்கரித்து பரிமாறவும்.



காய்கறி சமையல் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:46 am

பூசணி - கடலைப்பருப்பு இனிப்புக் கறி
தேவையானவை: பூசணிக்காய்த் துண்டுகள் - ஒரு கப், வேகவைத்த கடலைப்பருப்பு - கால் கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு, பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் 3
செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து... வேகவைத்த கடலைப்பருப்பு, பூசணிக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

இதனை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.



காய்கறி சமையல் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:47 am

பூசணி - அவல் புட்டிங்
தேவையானவை:  துருவிய வெள்ளைப் பூசணி - அரை கப், ஊறவிட்டு வடிகட்டிய அவல் - ஒரு கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 3.
காய்கறி சமையல் குறிப்புகள் 4
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். இதில் பூசணித் துருவல் சேர்த்து வதக்கி... ஊறிய அவல், உப்பு, வேர்க்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, உதிர் உதிராக ஆனதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இது, வயிற்றுக்கு இது குளுமையோ குளுமை!



காய்கறி சமையல் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:47 am

இளநீர் க்ளியர் சூப்
தேவையானவை: இளநீர் - 2 கப் (அதிக இனிப்பு இல்லாத இளநீராக வாங்கவும்), தக்காளிச் சாறு - கால் கப், இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்).
காய்கறி சமையல் குறிப்புகள் 5
செய்முறை: இளநீர், இஞ்சிச் சாறு, தக்காளிச் சாறு, உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி, நுரைத்து வருகையில்... தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும். மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: இதை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசிக்காது.



காய்கறி சமையல் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:48 am

தோசைக்காய் பருப்பு
தேவையானவை:  தோல், விதை நீக்கி நறுக்கிய தோசைக்காய் (சிறிய முலாம்பழம்போல் மஞ்சள் நிறத்தில் விதையுடன் இருக்கும்) - ஒரு கப், வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப், தக்காளி - 4 (துண்டுகளாக்கவும்), கீறிய சிறிய பச்சை மிளகாய் - 6, மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
காய்கறி சமையல் குறிப்புகள் 6
செய்முறை: தாளிக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் தாளித்து, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளித் துண்டுகள், தோசைக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு நீர், வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

இது... சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி.



காய்கறி சமையல் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:48 am

தோசைக்காய் துவையல்
தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய தோசைக்காய் - ஒரு கப், கொத்தமல்லி - அரை கட்டு (நறுக்கவும்), மஞ்சள்தூள், உப்பு,  - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடுகு, பெருங்காயம், வெந்தயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டு - 2 பல், புளி - நெல்லிக்காய் அளவு, கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.  
காய்கறி சமையல் குறிப்புகள் 7
செய்முறை:  நறுக்கிய தோசைக்காயில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பிசிறி வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் வறுத்து... நறுக்கிய கொத்தமல்லி, சிறிதளவு நீர்சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தோசைக்காய் துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

சாதம், இட்லி, தோசைக்கு இது சூப்பர் காம்பினேஷன்.



காய்கறி சமையல் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:48 am

தர்பூசணி ரசம்
தேவையானவை:  தர்பூசணி சாறு - ஒரு கப், துவரம்பருப்பை வேகவைத்து மசித்து எடுத்த நீர் - அரை கப்,  புளித் தண்ணீர் - சிறிதளவு, முழு நெல்லிக்காய் சாறு - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், ரசப்பொடி, உப்பு - சிறிதளவு.

தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் 8
செய்முறை: வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... பருப்பு நீர், தர்பூசணி சாறு, நெல்லிச்சாறு, புளித் தண்ணீர் சேர்க்கவும். இதனுடன்  உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், ரசப் பொடி சேர்த்து நுரைத்து வரும்போது... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். 

இந்த ரசம், இனிப்பு - புளிப்பு சுவையுடன் அட்டகாசமாக இருக்கும்.



காய்கறி சமையல் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:49 am

பூசணி - அவல் பிரேக்ஃபாஸ்ட்
தேவையானவை: துருவிய இளம் வெள்ளைப் பூசணி - அரை கப், அவல் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, தயிர் - ஒரு டீஸ்பூன், கேரட் - ஒன்று (துருவவும்), நறுக்கிய கொத்தமல்லி - புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு. 

தாளிக்க: காய்ந்த மிளகாய் - 2, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் 9
செய்முறை:  பூசணித் துருவல், கேரட் துருவல், உப்பு, அவல், எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள், தயிர், கொத்தமல்லி - புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து...  பூசணி - அவல்  கலவையை சேர்த்து 2 நிமிடம் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: பூசணித் துருவலில் இருக்கும் நீரே அவல் ஊறுவதற்கு போதுமானது.



காய்கறி சமையல் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:49 am

முள்ளங்கி - வெள்ளரி ராய்தா
தேவையானவை: இளம் முள்ளங்கி - ஒன்று (தோல் நீக்கி துருவவும்), வெள்ளரிக்காய் - ஒன்று (துருவவும்), தக்காளி - ஒன்று (நறுக்கவும்), தயிர் - அரை கப், தனியா - சீரகப்பொடி - சிறிதளவு, சர்க்கரை, உப்பு - தலா ஒரு சிட்டிகை.  
காய்கறி சமையல் குறிப்புகள் 10
செய்முறை:  தயிரை நீர் விடாது கடைந்து, மற்ற பொருட்களை சேர்த்துப் பரிமாறவும் (பயன்படுத்துவதற்கு சற்று முன்பு தயாரிக்கவும். முதலிலேயே தயாரித்தால் நீர்த்துவிடும்).

தயிர், முள்ளங்கி, வெள்ளரி, தக்காளி காம்பினேஷன் உடலை ஏ.சி. போல் வைத்திருக்கும்.



காய்கறி சமையல் குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக