ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள்

3 posters

Go down

இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Empty இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள்

Post by சிவா Mon 9 Jun 2014 - 19:39


கோடிக்கணக்கில் தேவையற்ற மின் அஞ்சல்களும், பல ஆயிரம் எண்ணிக்கையில் கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களும், எண்ணிப் பார்க்க இயலாத வகையில், ஹேக்கர் தாக்குதல்களும் இடம் பெற்றிருக்கும் இணைய வெளியில், பாதுகாப்பாக ஒருவர் தனக்கான தகவல்களைத் தேடுவது என்பது அதிகத் திறன் வேண்டும் ஒரு செயல்பாடாகத்தான் இருக்கும், இருக்கிறது. இருப்பினும், பல வேளைகளில் நாம் தெரிந்தே சில ஆபத்து வளையங்களில் சிக்கிக் கொள்கிறோம். அது போன்றவற்றைச் சரியாக உணர்ந்தால், இந்த ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம். அவற்றை இங்கு பார்ப்போம்.

1. விளம்பரங்கள்: இணையத்தில் மிக எளிதாக நாம் மேற்கொள்ளக் கூடிய செயல், அதன் தளங்களில் உலா வருவதுதான். ஆனால், அது நாம் எண்ணுகிறபடி, அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அதில் நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் புதைக்கப்பட்டிருக்கும் வெடி குண்டுகள் ஏராளம். நம்மை இழுத்து அழுத்தும் புதைகுழிகளும் கணக்கிலடங்காதவை. இணையத்திற்கு புதியதாய் வரும் பலர், இவற்றில் தங்களை அறியாமலேயே, தாங்கள் விரும்பா மலேயே விழுந்து இழப்பினைச் சந்திக்கின்றனர்.

இவற்றில் முதல் வகை நிறுவனங்களின் விளம்பரங்களாகும். வர்த்தகத்தில் தொடர்ந்து இயங்க, பல நிறுவனங்கள் விளம்பரங்களை இணையத்தில் இயங்கும் தளங்களில் பதிக்கின்றன. இவை நமக்குத் தேவைப்படாத நிலையிலும், அவற்றிற்கான லிங்க்குகளில் கிளிக் செய்து, நம்மைப் பற்றிய தகவல்களைத் திருடும் விற்பனைக்கான பக்கங்களில் சிக்கிக் கொண்டு நம்மை இழக்கிறோம். எனவே, உண்மையான விளம்பரங்களை நாம் அறிந்து கொண்டு, நம் தேவைகளுக்கான விளம்பரங்களில் மட்டுமே கிளிக் செய்து தொடர்ந்து இணையப் பக்கங்களைக் காண வேண்டும்.

2. போலியான தளங்கள்: இணையத்தில் பிரபலமான நிறுவனங்களின் பெயர்களில் பல போலியான தளங்கள் அமைக்கப்பட்டு இயங்குகின்றன. இணையத்திற்குப் புதியதாய் வரும் பலர், இணையதளங்களின் பெயரை டைப் செய்திடுகையில், பெயர்களில் சில சிறிய தவறுகளுடன் டைப் செய்திடுகின்றனர். இது போன்ற சறுக்கல்களின் அடிப்படையில், பலர் பிரபல நிறுவனங்களின் பெயர்களில், மிகச் சிறிய மாற்றங்களுடன் கெடுதல் விளைவிக்கும் தளங்களை அமைத்து, இவர்களைச் சிக்க வைக்கின்றனர். எடுத்துக்காட்டாக, "google.com” என்பதனை வேகமாக டைப் செய்கையில், "gooogle.com” எனப் பலர் டைப் செய்துவிடுகின்றனர். அல்லது இதே போன்று வேறு சில தவறுகளை ஏற்படுத்தி விடுகின்றனர். உடன் அவர்கள் இந்த தவறான பெயர்களில் உருவாக்கப்பட்டு அமைத்திருக்கும் பக்கங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு மாட்டிக் கொள்கின்றனர்.

சரியான தளங்கள் எவை என எப்படி அறிவது? அந்த தளங்களின் கீழாக அல்லது அவற்றின் முகவரிக் கட்டங்களில், சிறிய தாழ்ப்பாள் (padlock) போன்ற ஒன்றைத் தேடிப் பார்க்கவும். அப்படி ஒன்று தரப்பட்டிருந்தால், அவை நீங்கள் தேடும் நிறுவனத்தின் பாதுகாப்பான தளமாக இருக்கும். நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் வங்கிகள் போன்றவற்றின் இணைய தளங்களில் இந்த பாதுகாப்பான அடையாளத்தைப் பார்க்கலாம். தற்போது, வங்கிகள் போன்ற பணம் கையாளும் நிதி நிறுவனங்கள் SiteKey என்ற ஒரு தொழில் நுட்பத்தினைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றனர். இதன் மூலம் குறிப்பிட்ட வங்கி இணைய தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தன் நிதி கணக்கு சார்ந்து ஒரு கீயை உருவாக்கிப் பயன்படுத்தலாம். போலியான தளங்களில் இது எடுபடாது. அதே போல மற்றவர்களும் உங்கள் கணக்கினைப் பயன்படுத்த முடியாது.

3. சிக்க வைக்கும் மின் அஞ்சல்கள்: நாம் அறியாத பலரிடமிருந்து நமக்கு மின் அஞ்சல்கள் பல தொடர்ந்து வருவது இன்றைய இணைய உலகில் வழக்கமாக மாறிவிட்டது. இவற்றை Phishing Emails என அழைக்கின்றனர். தகவல்களைத் திருடப் பயன்படுத்தும் பழைய வழக்கம் இது. தற்போது இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இவற்றை எளிதாக அடையாளம் கண்டு நம்மை எச்சரிக்கின்றன. இது போன்ற அஞ்சல்களில் உள்ள லிங்க்குகளில் நாம் கிளிக் செய்திடவே கூடாது. நமக்கு ஆசை காட்டி இழுக்கும் வகையில் இவை தகவல்களை, படங்களை வெளியிடும். இதற்கு ஆளாகிவிட்டால், நாம் நம்மை இழந்துவிடுவோம்.

4. இலவச அப்ளிகேஷன்கள் தரவிறக்கம்: இணையத்தில் நமக்கு உதவியாய் இயங்கும் வகையில், பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாய் கிடைக்கின்றன. இவற்றை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவை நமக்குப் பல வசதிகளைத் தருகின்றன. ஆனால், இது போன்ற வசதிகளைத் தருவதாக அறிவித்துக் கொண்டு பல இலவச புரோகிராம்கள், நம்மை வேவு பார்த்து தகவல்களைத் திருடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. எனவே, நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் புரோகிராம்களையே நாம் தரவிறக்கம் செய்திட வேண்டும். நல்ல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைக் கொண்டிருக்கும் தளங்களில், நாம் தரவிறக்கம் செய்திடும் முன், பல பட்டன்களை அழுத்திச் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக இந்த வகை பட்டன்களின் மீது நாம் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த பட்டனை அழுத்துவதன் மூலம், நாம் செல்ல இருக்கின்ற இணைய தள முகவரிகள், பிரவுசரின் கீழாக இடது பக்கம் காட்டப்படும். அவற்றைப் படித்துப் பார்த்து, அது சரியான லிங்க் தானா என்று தெரிந்து கொள்ளலாம்.

சில புரோகிராம்களை தரவிறக்கம் செய்திட முயற்சிக்கையில், அருகேயே மோசமான தளங்களுக்கான பட்டன்களும் தரப்பட்டிருக்கும். இந்த தொடர்புகளில் கிளிக் செய்தால், நாம் அனுமதிக்காமலேயே, பல கெடுதல்கள் விளைவிக்கும் தளத்திற்கு நாம் இழுத்துச் செல்லப்படுவோம். விளம்பரக் கட்டணத்திற்கு ஆசைப் பட்டு, சில நல்ல இணைய தளங்களும் இது போன்ற மோசமான இணைய தளங்களுக்கான லிங்க்களை தங்கள் தளங்களில் அனுமதிக்கின்றன. எனவே, நாம் தான் கவனமாகச் செயல்பட்டு, சரியான பட்டன்களை அழுத்த வேண்டும்.

5. கடன் அட்டைகள் வழி இழப்பு: பல நல்ல வசதிகளைத் தருவதாக விளம்பரம் தரப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை நாம் கட்டணம் செலுத்திப் பெற்றால் என்ன என்ற எண்ணம் தோன்றும். ஆனால், விலை அதிகமாக இருந்தால், அவற்றைப் பெறாமலேயே விலகிவிடுவோம். இந்த எண்ணத்தைப் புரிந்து கொண்டு சில சாப்ட்வேர் நிறுவனங்கள், குறைந்த அளவில் கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த அப்ளிகேஷன்களை வடிவமைத்துத் தருகின்றன. இதனை விரும்பும் பயனாளர்களும், தங்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி, அவற்றைத் தரவிறக்கம் செய்து, குறிப்பிட்ட காலம் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். பின்னர், அதன் செயல்பாடுகள், தரப்படுவதாகச் சொல்லப்பட்ட வசதிகள், மனதிற்கு நிறைவினைத் தராததால், அப்படியே விட்டுவிடுகின்றனர். ஆனால், சில சாப்ட்வேர் நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், முன்பு பயன்படுத்திய கடன் அட்டையின் தகவல்களைப் பயன்படுத்தி, பெரும் தொகையைப் பயனாளர் அக்கவுண்ட்டிலிருந்து எடுத்துவிடுகின்றன. எடுத்த பின்னரே, இந்த மோசடி யை நாம் புரிந்து கொள்கிறோம். இருந்தாலும் நிதி இழப்பு இழப்புதான். இத்தகைய இழப்புகளிலிருந்து தப்பிக்க, நாம் இதற்கு சிறிய அளவில் கட்டணம் செலுத்தும்போதே, நாம் ஏற்றுக் கொள்ளும் நிபந்தனைகளைச் சரியாகப் படித்து உணர்ந்த பின்னரே, ஏற்றுக் கொள்ள வேண்டும்.

6. சமூக தளங்களைப் பயன்படுத்துதல்: சமூக தளங்களைப் பயன்படுத்துவது பெரும் அளவில் இந்நாளில் பெருகி விட்டது. ஆனால், இதில் என்ன வசதிகள் உள்ளன என்று அறியாமல், பலர் தங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை, இந்த உலகம் அறிய வெளியிட்டுவிட்டு பின்னர் தவிக்கின்றனர். நண்பர்களுக்கு மட்டும் என்ற வரையறையைப் பலர் பயன்படுத்துவதே இல்லை. எனவே, ஒரு சமூக தளத்தில் பதிந்து பயன்படுத்தும் முன்னர், நாம் பதியப் போகும் தகவல்களை யாரெல்லாம் அறிவார்கள் என்பதனையும், அவற்றை வரையறை செய்திட அந்த தளம் தரும் அனைத்து வசதிகளையும் அறிந்த பின்னரே, நாம் அதனைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

இணையத்தில் உலா வருகையில், எப்போதும் நம்மிடம் நம் தகவல்களை யாரோ திருடப் போகிறார்கள் என்ற பயம் மனதில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கவனத்துடன் செயல்பட்டு இணையத்தின் பயன்களை அடைய முடியும்.

கம்ப்யூட்டர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Empty Re: இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள்

Post by Aathira Mon 9 Jun 2014 - 19:43

ம்ம் படித்தேன் படித்தேன். ஆனால் என் பிரச்சனைக்கு வழி சொல்லவில்லையே சிவா இங்கு


இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Aஇணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Aஇணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Tஇணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Hஇணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Iஇணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Rஇணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Aஇணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Empty Re: இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள்

Post by விமந்தனி Tue 10 Jun 2014 - 1:22

இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் 3838410834 இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் 103459460 இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் 1571444738 


இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள் Empty Re: இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum