ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை

3 posters

Go down

கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை Empty கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை

Post by ஜாஹீதாபானு Mon Jun 09, 2014 4:27 pm

அக்பர் நடத்தும் அனைத்து சோதனைகளிலும் பீர்பால் வெற்றி பெற்று வந்ததை பொறாமைக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்பரும் பீர்பாலை ஏதாவது ஒரு வகையில் திணற வைத்து அவருக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் காய்ச்சலால் அவதிப்படுவது போலவும் நடித்தார். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்.

அக்பர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதைக் கேள்விபட்ட பீர்பால் பதட்டத்தோடு சென்றுப் பார்த்தார். தன்னை வைத்தியர்கள் வந்து பார்த்து விட்டதாகவும் உடல்நிலை தேறவில்லை என்றும் கூறினார். பீர்பால் வருத்தத்துடன் அக்பரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பீர்பால் எனது உடல்நிலை குணமடைய வைத்தியர் ஒரு வைத்தியம் கூறினார். அதை யாராலும் செயல்படுத்த முடியவில்லை. உங்களால் மட்டும் தான் முடியும் செய்வீர்களா? என்றார் அக்பர்.என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள், என்றார் பீர்பால்.எருதின் பாலை கொண்டு வந்து அதை சூடாக காய்ச்சி கல்கண்டு போட்டு குடித்தால் சரியாகி விடும் என்று வைத்தியர் கூறினார். என்றார் அக்பர். பீர்பால் வசமாக மாட்டிக் கொண்டார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
எருதின் பால் என்றதும் பீர்பால் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது அரசரின் விபரீத சோதனை என்பதை புரிந்து கொண்டார்.

அரசே….. எருதின் பாலை கொண்டு வர எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள். எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு மன்னரிடம் விடைபெற்றார். இந்த முறை நிச்சயம் பீர்பால் வெற்றி பெற இயலாது என்று இறுமாப்புடன் சிறித்துக் கொண்டார் அக்பர். வீட்டுக்கு சென்ற பீர்பால் இரவு முழுவதும் தூங்காமல் அரசரிடண் கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டேயிருந்தார். முடிவில் அருமையான யோசனை ஒன்றைக் கண்டுபிடித்த பிறகு தான் அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டு உறங்கினார்.

பீர்பாலின் மனைவி நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்த அழுக்குத் துணிகளை மூட்டையாக கட்டிக் கொண்டு அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த குளக்கரைக்குச் சென்றார். மூட்டையிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து பெரிய கல் ஒன்றின் மீது பலமாக துவைக்க ஆரம்பித்தாள். அமைதியான அந்த நேரத்தில் துணி துவைக்கும் ஓசை அரண்மனையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்த அக்பரின் காதுகளை எட்டியது.

இந்த ராத்திரியில் எதற்காக துணி துவைக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அரண்மனையிலிருந்து வெளியில் வந்து குளக்கரைக்குச் சென்றார்.பீர்பாலின் மனைவியை இதற்கு முன்னால் அக்பர் பார்க்காதபடியால் ஏனம்மா எதற்காக நடு இரவில் துணிகளை துவைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கோபமாகக் கேட்டார்

அரசே, ரெண்டு நாட்களுக்கு முன்புதான் என் கணவர் பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார். உதவிக்காக சேர்ந்திருந்த வேலைக்காரியும் இன்று வரவில்லை. துவைக்க வேண்டிய துணி நிறைய சேர்ந்து விட்டது. வேறு என்ன செய்வது. எல்லா வேலைகளையும் பார்த்து விட்டு துவைப்பதற்காக இப்போது கொண்டு வந்தேன்! என்று துக்கம் தொண்டையை அடைக்க கூறினாள் பீர்பாலின் மனைவி. இதைக் கேட்ட அக்பர் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார். ஆண்களுக்கு பிரசவமா? கேள்விக் குறியோடு யோசித்தார் மன்னர். இதுதான் சமயம் என்று எண்ணிய பீர்பாலின் மனைவி எருதின் பாலை அரசர் கொண்டு வர சொல்லுவதை விட ஆண்கள் பிள்ளை பெறுவதில் ஆச்சர்யமோ, அதிசயமோ இல்லையே! என்றாள். பொறுமையாக அதன் பிறகு தான் பீர்பாலின் மனைவி என்பதை தெரிந்து கொண்டார். தனக்கு சரியாக பாடம் புகட்டியதை உணர்ந்தார்ய வேறு வழியில்லாமல் அக்பர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பீர்பாலை வரச்சொல்லி பரிசுகளை கொடுத்து அனுப்பினார்.


நன்றி லினோஜ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை Empty Re: கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை

Post by விமந்தனி Mon Jun 09, 2014 4:37 pm

நல்ல கதை. விதண்டாவாதமாக கேட்கப்படும் இது போன்ற கேள்விகளுக்கு பீர்பாலை போன்ற அதிபுத்திசாலிகளால் மட்டுமே விடையளிக்க முடியும். கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை 3838410834


கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை Empty Re: கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை

Post by ஈகரையன் Mon Jun 09, 2014 5:44 pm

அக்பர் பீர்பால் மதியூகக் கதைகள் எத்தனை முறை படித்தாலும் அலுக்காதது.

பகிர்வுக்கு நன்றிக்கா
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை Empty Re: கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum