புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
37 Posts - 39%
heezulia
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
13 Posts - 14%
Rathinavelu
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_lcapசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_voting_barசேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேக்கிழார் காட்டும் திருநீற்றுச் செல்வம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 05, 2014 6:36 pm

சைவ சமயத்தின் சாதனங்களில் ஒன்றுதான் திருநீறு. திருநீற்றின் பெருமையை எல்லோரும் புகழ்ந்துள்ளனர். திருநீற்றுக்கென ஞானசம்பந்தரின் பதிகமே உண்டு. தெய்வப் புலவராகிய சேக்கிழார் பெருமான் திருநீற்றுக்குத் தரும் சிறப்பினை பெரிய புராணம் வழிக் காண்போம்.

திருமலைச் சிறப்பு: பெரியபுராணப் பெருங்காவியத்திற்கு, நாடு - சோழ நாடு, ஆறும் காவிரியே. ஆனால், மலை வெண்ணிறம் உடைய இமயமலை. ஆனால், சேக்கிழார் பார்வையில் அது வெண்திருநீறு புனைந்ததாகவே தெரிகிறது.

திருக்கூட்டச் சிறப்பு: தேவாசிரியத் திருக்காவணத்தில் கூடியிருந்த அடியார்கள் திருமேனியில் நிறைந்த நீற்றொளியும் ஐந்தெழுத்தோசையும், அந்த இடத்தைப் பாற்கடல் ஆக்கியது என்பார். சேக்கிழார் அங்குள்ள அடியவர்கள் ""பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள்'' என்பார். புறந்தூய்மை நீரால் அமையும் என்பார் திருவள்ளுவர். அது திருநீற்றாலும் அமையும் என்கிறார் சேக்கிழார். சேரமான் பெருமான் ""புலரி எழுந்து புனல்மூழ்கிப் புனித வெண்ணீற்றினும் மூழ்கினார்'' என்பார்.

தடுத்தாட்கொண்ட புராணம்: சுந்தரர் பெருமான் திருமணக்கோலம் கொண்டபோது ""நாதன் தன்னடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்திப்போந்தார்'' என்று கூறுவதனால் திருநீற்றினைக் கையால் எடுத்து நெற்றியில் பூசும்போது மனத்தால் இறைவன் திருவடியை நினைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார்.

தடுத்தாட்கொள்ள வந்த இறைவன் முதியவராய் ஒப்பனை செய்துகொண்டபோது நெற்றிக்கண்ணை மறைத்த வெண்படம் (வெள்ளைத்துணி) எனும்படித் திருநீறு விளங்கிற்று என்பார்.

நாவுக்கரசர் வரலாற்றில்: திலகவதியார் அரசருக்கு திருநீற்றை, ஐந்தெழுத்து ஓதிக்கொடுத்தார் என்பதும், திருநீற்றைத் "திருவாளன் திருநீறு' என்றதும் கருத்திற்கொள்ள வேண்டுவனவாகும். அடிகளின் சிவவேடத்தினைச் சொல்லோவியமாக்கும் சேக்கிழார், ""தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனி'' எனவும், நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் திருப்புகலூரில் சந்தித்துக்கொண்டபோது அவர்களுடன் திரண்டுவரும் திருநீற்றுத் தொண்டர்குழாம் இருதிறமும் சேர்ந்த காட்சி, இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்தனபோல் இசைந்தது என்பார்.

ஞானசம்பந்தர் வரலாற்றில்: திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்தபோது குழந்தைகளுக்குக் காப்பு அணிவிக்கும் முறைப்படி, அவருக்கு உலகியல் முறைப்படி அணிவிக்கும் முக்காப்பு முதலானவை மிகை என்று திருநீறு நெற்றியினில் நிறுத்தி நிறைவித்தார் என்று கூறுகிறார். முத்துச் சிவிகையில் திருநீற்றொளியுடன் விளங்கும் திருஞானசம்பந்தரைப் பாற்கடலில் உதித்த வளர்மதி என்று போற்றுகிறார்.

மதுரைக்குத் திருஞானசம்பந்தர் வந்த காட்சியைக் கண்டு பணிந்த குலச்சிறையார் ""வென்றிகொள் திருநீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம்'' என்று கூறியதாகச் சேக்கிழார் கூறுகிறார்.

மதுரையில் ""பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்தபோது மேதினி புனிதமாக வெண்ணீற்றின் விரிந்த சோதி மாதிரந் தூய்மை செய்தது'' என்பார்.

ஞானசம்பந்தர் திருமணக் காட்சியைக் காணவந்த அன்பர்களுடன் தென்றலும் பூந்தாதுகளாகிய நீறணிந்து வண்டுகளின் வரிசையாகிய கண்டிகை பூண்டு அடியவர் கோலத்தில் வந்தது என்பார். ஞானசம்பந்தர் மணக்கோலம் கொண்டபோது ""அழகினுக்கு அணியாம் வெண்ணீறு அஞ்செழுத்து ஓதிச்சாத்தினார்'' என்று கூறுகிறார்.

முழுநீறுபூசிய முனிவர்: பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் ஆகியவர்களைப் போல் முழுநீறு பூசியவர்களும், முனிவர்களாய்த் தொகையடியார்களாய் விளங்குகின்றனர். இப்பகுதியில் திருநீறு செய்யும் முறைகளைக் கூறும் முதல் ஐந்து பாடல்களும் வெள்ளிப் பாடல் என்பர். ஆறாவது பாடலில் தீ வழிபாடு செய்வார் வேள்வியில் விளைந்த பூதியினை அணிவர் என்று கூறுகின்றனர். ஆயினும் கோமயத்தால் திருநீறு செய்யும் மரபினைச் சண்டேசர் வரலாற்றில், ""நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்தும் நீறுதரும் மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம்'' என்று பசுக்குலங்களைச் சிறப்பிக்கும் இடத்தில் குறிப்பிடுகிறார்.

சைவத்தின் தனி அடையாளமாகிய திருநீற்றின் சிறப்பினைச் சேக்கிழார் பல பாடல்களில் வாழ்வியலாகவும், வழிபாடாகவும், இலக்கியக் கற்பனையாகவும் இனிது எடுத்துரைத்துள்ளார். பூசும் நீறுபோல் உள்ளம் புனிதமாக வேண்டும் என்பதும், மெய்யில் திருநீறு பூசும்போது நாவினில் ஐந்தெழுத்தும், மனத்தினில் இறைவன் திருவடிகளும் இடம்பெற வேண்டும் என்பதும் சேக்கிழார் வாக்கினால் நாம் தெரிந்துகொள்ளும் உண்மைகளாகும். - கயிலைமணி சு. சதாசிவம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக