ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்!

2 posters

Go down

JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்! Empty JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்!

Post by சிவா Wed Jun 04, 2014 6:05 pm

JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்! JAIS-raid-hindu-wedding-300x199

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோயில் ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தை இஸ்லாமிய சமய அதிகாரிகள் (JAIS - jabatan agama islam selangor) தடுத்து நிறுத்தியது நாடெங்கிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பெண்ணின் தந்தை இஸ்லாம் மதத்திற்கு மாறி இருந்ததால், அவரது மகளான மணப்பெண் சிறுவயதிலேயே இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும், எனவே இத்திருமணத்தை இந்து முறைப்படி நடத்த இயலாது என்றும் ஜாயிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜாயிஸ் அதிகாரிகளின் இந்த செயலுக்கு மலேசிய இந்து சங்கம் மற்றும் ஹிண்ட்ராப் இயக்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

வேதமூர்த்தி கண்டனம்

ஜாயிஸ் அமைப்பின் இந்த அத்துமீறிய செயல், இஸ்லாம் அல்லாதோரின் உணர்வுகளை மிகவும் பாதிக்கும் என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியுள்ளார்.

மேலும், இஸ்லாம் அல்லாதோரின் உணர்வுகளை ஜாயிஸ் போன்ற அமைப்புகள் சிறிதும் பொருட்படுத்துவதில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம் சமயத்தினருக்கு எந்த அளவிற்கு அவர்களின் மதம் மீது பற்று உள்ளதோ அதே உணர்வு தான் மற்றவர்களுக்கும் உண்டு என்றும் வேதமூர்த்தி தெரிவித்தார்.

வைத்தியலிங்கம் கண்டனம்

ஜாயிஸ் அதிகாரிகளின் செயல்கள் அண்மை காலமாக அத்துமீறிப் போவதாகவும், ஆன்மீக அமைப்பிற்கே உரிய அமைதி, மனிதாபிமானம், உணர்வுகளை புரிந்து கொள்ளுதல் போன்ற எந்த ஒரு அம்சங்களும் ஜாயிஸ் -க்கு இல்லை என்றும் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஆலோசகருமான டத்தோ அ.வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

சக மனிதர்களை மதிக்கும் பண்பு கூட அவர்களிடம் இல்லை. இந்த திருமணத்தை நிறுவதற்கு முறையாக நீதிமன்ற ஆணை கூட அவர்கள் பெற்றிருக்கமாட்டார்கள் என்றும் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு இஸ்லாமியப் பெண் என்பதை இதுவரை நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும் மணப்பெண் மன்றாடியும் ஜாயிஸ் அதிகாரிகள் அதை காது கொடுத்தும் கேட்கவில்லை என்றும் வைத்தியலிங்கம் குற்றம்சாட்டினார்.

நீதி எப்போதும் ஒரு சாரரை சார்ந்து இருக்கக்கூடாது என்று கூறிய வைத்தியலிங்கம், அப்பாவிகளின் வாழ்க்கையில் இதுபோன்ற அமைப்பினர் விளையாடுவதை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்! Empty Re: JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்!

Post by சிவா Wed Jun 04, 2014 6:07 pm


“குர்ஆனை சரியாகப் பின்பற்றாததால் வந்த விளைவு” – ஜாயிஸின் செயலுக்கு மகாதீர் கருத்து

JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்! Mahathir-300x199

மணப்பெண்ணின் பெயர், அடையாளங்கள் இஸ்லாமிய முறைப்படி இருப்பதால், அவரது திருமணத்தில் புகுந்து அதைத் தடுத்து நிறுத்திய சிலாங்கூர் இஸ்லாமிய சமயத்துறையின் (ஜாயிஸ்) செயல் தவறு என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

ஜாயிஸ் அதிகாரிகள் திருகுர்ஆனை வாசிக்க வேண்டும் என்றும், அதில் பிற மதத்தினரின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற செயல்களுக்கெல்லாம் காரணம் குர்ஆனை முறையாக வாசிக்காமல், பிறர் சொல்வதைக் கேட்டு பின்பற்றுவது தான் என்றும் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நீங்கள் விசாரணை செய்யலாம் ஆனால் ஒருவரின் திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடாது” என்று மகாதீர் கூறினார்.

கோம்பாக்கிலுள்ள யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ) -வில் இன்று, ‘இன்றைய இஸ்லாமியர்களின் வாழ்க்கைமுறை’ என்ற தலைப்பில் மகாதீர் சொற்பொழிவு ஆற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோயில் ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தில் புகுந்த இஸ்லாமிய சமய அதிகாரிகள் (ஜாயிஸ்), மணப்பெண் முஸ்லிம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்!


JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்! Empty Re: JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்!

Post by M.M.SENTHIL Wed Jun 04, 2014 6:08 pm

கூடாது கூடாது சுட்டுத்தள்ளூ! 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்! Empty Re: JAIS - அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum