ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

+4
M.M.SENTHIL
சிவா
பிஜிராமன்
கே. பாலா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by கே. பாலா Wed Jun 04, 2014 5:06 pm

உரத்த சிந்தனை _1

தனியார் பள்ளியில் கட்டணம் என்ற பெயரில் மிகப்பெரும் பகல் கொள்ளை நடைபெறுகிறது ஆனாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
அரசு பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன அரசு பள்ளிகளின் இன்றைய நிலை கவலை தரக்கூடியது என்பது வேதனையான உண்மை
காரணம் என்ன

இன்றிலிருந்து உண்மைகள் பலவற்றை முன்வைக்கப் போகிறேன் அரசுப்ப்ள்ளி ஆசிரியர்கள் பலருக்கும் பிடிக்காமல் போகும்
உண்மை சுடுவது இயற்கைதானே?

க்ண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் வேலையல்ல இது! கல்வித்துறையில் புகுந்துள்ள புல்லுருவிகளை புலப்படுத்த இந்த வேலை !
அரசுப் பள்ளி நூலகம்
++++++++++++++++++++

TRUE KNOWLEDGE IS BEYOND OUR INSTITUTION என்று சுந்தர ராமசாமியின் ஒரு கட்டுரையில் படித்த இந்த வரிகள் என்றும் மற்க்க இயலாதது
“நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு உண்மையான அறிவு இருக்கிறது” என்னே சத்தியமான வார்த்தைகள்!
ப்ள்ளிப் பாடப்புத்தகத்தில் அறிவை தேடுவது அறியாமைதான் வேறென்ன!
பாடப்புத்தகம் தாண்டி ஒருமாணவன் அறிவைத் தேடுவான் என்றால் அவனுக்கு உள்ள ஒரே புகலிடம் பள்ளி நூலகம்

பெரும்பாலான பள்ளியில் நூலகம் இருப்பதே மாணவர்களுக்கு தெரியாது

இன்றும் சொல்லப்போனால் நூலகப் பெறுப்பு வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு கூட தெரியாது, !
நூலக அலமாரிகள் திறந்தே பல ஆண்டுகள் கடந்திருக்கும் என்பதுதானே எதார்த்தம்

படிக்கும் ஆசையோடு இருக்கும் மாணவனுக்கு திறக்காத நூலகத்தால் என்ன பயன் ?
கற்கும் பழக்கத்தை அடியோடு கைவிட்ட ஆசிரியர்கள் நூலகப்பொறுப்புக்கு வந்தால் அவரும் படிக்கமாட்டார் படிப்பவ்னையும் விடமாட்டார்!

கிராமங்களில் சொல்வார்கள் “வைக்கோல் போரில் படுத்துக்கிடக்கும் நாய் மாதிரி” என்று
நாய் வைக்கோல் திங்காது ...ஆசையோடு திங்கவரும் மாடுகளையும் விரட்டியடித்துக்கொண்டிருக்கும் இந்த வேலையைதான் நூலகப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்

சிலர் சொல்ல்லாம் ஆசிரியர்கள் பணிச்சுமை நேரமின்மை என்று,,அது காரணமல்ல,.... அதிக வேலையே இல்லாத சிறப்பாசிரியர்கள் பலர் நூலகப்பொறுப்பு வகிக்கம் பள்ளிகளில் கூட இதே நிலைதான்

தீர்வுதான் என்ன ?

பள்ளி நூலகத்திற்கென தனியான நுலகர் நியமிக்கப்படி வேண்டும் அவர்கள் மாணவர்களுக்கு படிக்கும் பழக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்துவார்கள்

ஆசிரியர்கள் படித்த நூல்க்ள் என்ன என்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வரவேண்டும்
RMSA திட்டத்தில் நூல்கள் வாங்க ஆண்டிற்கு 10000 ரூபாய் அளிக்கப்படுகிறது பள்ளிகள் முழுமையாக பயன்படுத்துகிறதா?

பள்ளிக்க்ளுக்கு வழங்கப்படும் நூல “கமிஷன் அடிப்படையில்தான்” தேர்வு செய்யப் படுகிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது

தேனி வளப்ப்பது எப்படி? தென்னை சாகுபடி போன்ற தலைப்பிலான புத்தகங்களால் மாணவர்களுக்கு என்ன பயன்

எனக்கு தெரிந்து ஒரு ஆசிரியர்
1950 .60 வதுகளில் வெளியான பல அரிய நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று கொஞ்ச நாள்களில் “அமுக்கி விட்டார்”

அவருக்கு பணிமாறுதல் கிடைத்த போது அவர் ஒப்படைக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியலை கொடுத்தபோது புத்தகங்களை காணவில்லை அதற்குரிய தொகையை கட்டிவிடுகிறேன் என்றார்

இதுதான் காணமல் போன புத்தகங்களுக்கான நடைமுறை

பதிவேட்டில் பார்த்தால் பழைய புத்தகங்களின் விலை அன்றைய மதிப்பில் 2 ரூபாய் 3 ரூபாய் என்று இருக்கும்... பணத்தை கட்டிவிடுவார்
அரிய புத்தகங்கள் அவருக்கே சொந்தம்
அரசுப் சொத்தை கொள்ளையடிப்பதில் நம்மவர்கள் பலர்தான் கில்லாடிகளாயிற்றே !
தொடரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by பிஜிராமன் Wed Jun 04, 2014 5:55 pm

அருமையான பதிவு சார்.......... மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

தொடருங்கள்............... அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) 103459460 


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by சிவா Wed Jun 04, 2014 6:27 pm

அரசுப் பள்ளிகளின் அவல நிலை குறித்து மற்றவர்கள் எழுதுவதை விட ஆசிரியரான தாங்கள் எழுத முன்வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்கும் என்பதில் சந்தேகமில்லை!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறந்த கட்டுரையுடன் ஈகரையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி!


அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by M.M.SENTHIL Wed Jun 04, 2014 7:12 pm

அரசுப் பள்ளியின் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது வரிகள். அதிலும் நூலகம் பற்றிய வரிகள், நெஞ்சுக்கு கொஞ்சம் வலியைத் தருகிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by கே. பாலா Thu Jun 05, 2014 6:13 pm

மிக்க நன்றி பிஜி ராமன் சிவா மற்றும் செந்தில் அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) 1571444738 


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by கே. பாலா Thu Jun 05, 2014 6:14 pm

உரத்த சிந்தனை _2

பல அரசுப் பள்ளியின் சீர்கேட்டிற்கான காரணம்தான் என்ன?
ஒரே வார்த்தையில் சொல்லமுடியும்
பணிபாதுகாப்பு

தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் 5000 அதிகம் போனால் பத்தாயிரம் சம்பளம் வாங்கி மாடாக உழைத்து மாணவர்களை 100 சதம் தேர்ச்சி அடையச் செய்கிறார்

பல நூற்றுக்கு நூறு மாணவர்களை உருவாக்குகிறார் ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணை பெறச்செய்வது சாதாரண வேலையல்ல அதற்காக அந்த ஆசிரியரின் உழைப்பை பாராட்ட வேண்டும்

அதே ஆசிரியர் போட்டித்தேர்வு எழுதி அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைக்கு வந்துவிட்டால் தனியார் பள்ளியில் தந்த உழைப்பில் நூற்றில் பத்து பங்கை கூட தருவதில்லையே ஏன்?

இத்தனைக்கு அவர் அரசுப் பள்ளியில் பெறும் குறைந்த பட்ச சம்பளமே 25000

இதற்குகாரணம்தான் பணிப்பாதுகாப்பு

தனியார்பள்ளிக்கு மூலதானமே பள்ளியின் ரிசல்ட் மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களின் எண்ணிக்கை இவற்றை பெற்று தராத ஆசிரியர்களை தனியார்பள்ளிகள் துரத்திவிடும்

அரசுப் பணியில் ஒருமுறை வேலைக்கு சேர்ந்துவிட்டால் 58 வயதுவரைக்கும் கவலையில்லை நாற்காலியை தேய்த்தாலே போதும் மாதம் தவறாமல் ஊதியம் வந்துவிடும் இதுதான் பணிபாதுகாப்பு

ரிசல்டை பற்றி கவலையில்லை... மாணவனைப் பற்றி அக்றையில்லை

சுறுக்கமாகச் சொன்னால் எதைப் பற்றியும் பொறுப்பில்லை

30 ஆம்தேதி வங்கியில் பணம் வந்துவிடும் வேறென்ன ?

உழைப்புக்கு ஈடாகப் பெறுவதே ஊதியம் என்பதையே மறந்து உழைக்காமலே ஊதியம் பெறும் போக்கு வளர்ந்துவிட்டது கூடவே பொறுப்பின்மையும்

அண்மையில் குமரிமாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி குறைந்த 12 ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தார் முத்ன்மைக் கல்வி அலுவலர் திரு ராதாகிருஷ்ணன்,

ஆசிரியர் சங்கங்கள் ஏகிறி குதித்தன-

ஏன் செய்யக்கூடாது,,,, மருத்துவ விடுப்பில் அடிக்கடி சென்று பணிக்கே வராது இருந்த்தால் ரிசல்ட் குறைந்து போயிற்று தன் கடமையை சரியாகச் செய்யாதவர்களை தண்டித்த்து என்ன தப்பு,

பல ஆசிரியர்களின் நினைப்பு என்ன தெரியுமா?

ரிசல்ட் நான் பொறுப்பில்லை
மாணவர்களின் முன்னேற்றம் என் பொறுப்பில்லை
நான் நடத்தும் பாடத்திற்கு நான் பொறுப்பில்லை
கல்வி தருவதன் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு உதவுவது என் பொறுப்பில்லை

ஆனால் இவர்களுக்கு மாதம் தவறாது சம்பளம் தருவது அரசாங்கத்தின் பொறுப்பு!

என்ன கொடுமா சார் இது

பள்ளியில் பொறுப்பின்மை எந்தெந்த வடிவத்தில் விளங்குகிறது
நாளை சொல்கிறேன்.........


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by Aathira Thu Jun 05, 2014 6:20 pm

//படிக்கும் ஆசையோடு இருக்கும் மாணவனுக்கு திறக்காத நூலகத்தால் என்ன பயன் ?
கற்கும் பழக்கத்தை அடியோடு கைவிட்ட ஆசிரியர்கள் நூலகப்பொறுப்புக்கு வந்தால் அவரும் படிக்கமாட்டார் படிப்பவ்னையும் விடமாட்டார்!

கிராமங்களில் சொல்வார்கள் “வைக்கோல் போரில் படுத்துக்கிடக்கும் நாய் மாதிரி” என்று
நாய் வைக்கோல் திங்காது ...ஆசையோடு திங்கவரும் மாடுகளையும் விரட்டியடித்துக்கொண்டிருக்கும் இந்த வேலையைதான் நூலகப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்//

இது ஒருபுறம்.
ஆசிரியர்களில் ஒருவர் நூலகம் சென்று படித்தால் இவர் மட்டும் அறிவை வளர்த்துக் கொள்வார்களாம் என்று போக விடாமல் தடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஹா ஹா (இது கல்லூரியில்)


அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Aஅரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Aஅரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Tஅரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Hஅரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Iஅரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Rஅரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Aஅரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by கே. பாலா Thu Jun 05, 2014 6:27 pm

ஹா ஹா.....என்ன சிரிப்பு !  இந்த தடைகளையும்  மீறிதான் எல்லா துறையிலையும்  அறிவு ஜீவியா இருக்கிங்களே இது போதாதா ஆதிரா  புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by Aathira Thu Jun 05, 2014 6:32 pm

கே. பாலா wrote:ஹா ஹா.....என்ன சிரிப்பு !  இந்த தடைகளையும்  மீறிதான் எல்லா துறையிலையும்  அறிவு ஜீவியா இருக்கிங்களே இது போதாதா ஆதிரா  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1067789
என்ன கொடுமை... இதற்கு ஏதாவது செய்வீர்கள் என்று சொன்னால் இப்படி சொல்லி விட்டீர்களே பாலா.

இப்போது கல்லூரி உண்டு. ஒன்பது மணி முதல் 2.30 மணி வரை வெட்டி அரட்டைதான். நூலகம் சென்றால் துறையில் அனைவரும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வேறு வகையில் பழி வாங்குவார்கள்.  சோகம் 

நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவு சுவாரசியமாக உள்ளது. உரத்த சிந்தனை எட்ட வேண்டிய காதுகளுக்கு எட்டட்டும். அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறக்கட்டும். தொடரட்டும் உங்கள் சீரிய பணி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by குழலோன் Thu Jun 05, 2014 6:41 pm

கல்வித்துறை செழிக்காத எந்த நாடும் வளர்ச்சியுற்றதாக வரலாறு இல்லை; பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு. புனிதமான ஆசிரியர் பணியில் ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களைக் களையெடுக்கத் தவறிய அதிகாரிகளே உண்மையில் குற்றவாளிகள். தவறு செய்பவனைவிடத் தவறு நடக்க இடந்தருபவனே முதலில் தண்டனைக்குரியவன்.
ஒருவேளை எவ்வளவு ஏமாற்றினாலும் மந்திரம் சொல்லி மார்க்கம் தேடலாம் என்று எண்ணிகின்றனரோ அறிவிலிகள். 'படித்தவன் பாவம் செய்தால், போவான், போவான், பாழாய்ப் போவான்.'
குழலோன்
குழலோன்
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Back to top Go down

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு) Empty Re: அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum