ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Sat May 31, 2014 9:56 pm

உலகக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடர், நெதர்லாந்தில் நடைபெறுகிறது. 12-வது உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி நடப்புச் சாம்பியனாக உள்ளது.

13-வது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டித் தொடரில், தகுதி சுற்றுகள் மூலம் வெற்றி பெற்ற 12 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர், ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள இத்தொடரில், 'A' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகளும், 'B' பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, தென் கொரியா, ஆர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று பெல்ஜியத்திடம் மோதி தோல்வியடைந்துள்ளது, மேலும் ஜூன் 2-ந் தேதி இங்கிலாந்தையும், 5-ந் தேதி ஸ்பெயினையும், 7-ந் தேதி மலேசியாவையும், 9-ந் தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ளவுள்ளது.

இறுதிப் போட்டி வரையிலான தகவல்களை இங்கு தொகுத்து வழங்க உள்ளேன். மற்றவர்களும் தங்களின் ஹாக்கி உலகக் கோப்பை தகவல்களை இப்பகுதியில் பதிவிடலாம்.

மேலும் தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/2014_Men%27s_Hockey_World_Cup

Tags: #உலகக்கோப்பை #ஹாக்கி #2014 #இந்தியா #பெல்ஜியம் #நெதர்லாந்து


Last edited by சிவா on Wed Jun 04, 2014 12:03 pm; edited 2 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Sat May 31, 2014 9:58 pm



பெல்ஜியத்திடம் இந்தியா போராடித் தோல்வி

நெதர்லாந்தில் உள்ள தி ஹேக்கில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் முதல் போட்டியில் இந்தியா, பெல்ஜியத்திடம் 2-3 என்ற கோல் கணக்கில் போராடித் தோல்வி தழுவியது.

துவக்கக் கணங்களில் பெல்ஜியம் அணியிடத்திலேயே பந்துகள் இருந்தது. இந்திய அணி அந்தப் பக்கம் சென்றாலும் பெல்ஜியத்தை பெரிதாக அச்சுறுத்தவில்லை.

ஒரேயொரு முறை மட்டும் யுவ்ராஜ் வால்மீகி ஒரு அடி அடிக்க மந்தீப் அதனை வாங்கி அடிக்கும்போது பந்து வெளியே சென்றது. மற்றபடி ஒரு முறை கூட இந்திய அணியினரால் பெல்ஜியம் வீரர்களை ஊடுருவிச் செல்ல முடியவில்லை.

ஆட்டத்தின் 18 மற்றும் 19வது நிமிடத்தில் பெல்ஜியத்திற்கு முதல் இரண்டு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான காரணத்தில் சந்தேகம் கொண்ட இந்திய அணி அது சரிதானா என்று மேல் முறையீடு செய்தனர். ஆனால் கார்னர் வாய்ப்பு தக்கவைக்கப்பட்டது. பெல்ஜியம் அடித்த கார்னர் ஷாட்டை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாகத் தடுத்தார்.

இந்த இரண்டு கார்னர் வாய்ப்புகளையும் இந்தியா சமாளித்துத் தப்பித்தாலும் ஆட்டத்தில் சூடு பிடிக்கவில்லை. மீண்டும் பெல்ஜியம் அணிக்கே கோல் வாய்ப்பு வந்தது அதனை மீண்டும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சமயோசிதமாகத் தடுத்து நிறுத்தினார்.

29வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்குக் கிடைத்த 3வது கார்னர் வாய்ப்பையும் அது தவறவிட்டது. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெல்ஜியம் மீண்டும் ஒரு தாக்குதல் ஆட்டத்தை ஆட டி-வட்டத்திற்கு சற்று வெளியேயிருந்து பெல்ஜியம் வீரர் அடித்த ஷாட்டை கோல் அருகில் இருந்த புளோரண்ட் வான் ஆபெல் அருமையாகக் கோலாக மாற்றினார். பெல்ஜியம் 1-0 என்று முன்னிலை, இடைவேளை அறிவிக்கப்பட்டது.

2, 3 கோல்களை இந்தியா வாங்கியிருக்கும் ஆனால் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷினால் இந்தியாவுக்கு வாய்ப்புகள் இன்னமும் இருந்தது.

இடைவேளைக்குப் பிறகு உத்தியை மாற்றிய இந்தியா பாதுகாப்பை சற்றே தளர்த்தி தாக்குதல் ஆட்டத்தைத் துவங்கியது. அதன் பலன் 44வது நிமிடத்தில் திடீரென ஒரு அபார மூவை இந்திய வீரர்கள் செய்ய பெல்ஜியம் எல்லைப்பகுதிக்குள் அடிக்கப்பட்ட பந்தை மந்தீப் சிங் அபாரமாக கோலாக மாற்ற அதிர்ச்சியடைந்தது பெல்ஜியம். ஆட்டம் 1-1.

பிறகு ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் முழு தாக்குதல் ஆட்டத்தில் இருந்த பெல்ஜியம் பாதுகாப்பில் கோட்டை விட்டது. அதனைப் பயன்படுத்தி வேகமாக பந்தை எடுத்து சென்ற ரகுநாத் ஒரு ஷாட்டை அடிக்க அதனை ஆகாஷ்தீப் அருமையான கோலாக மாற்ற இந்திய வீரர்கள் கண்களில் வெற்றி நம்பிக்கைத் தெரியத் தொடங்கியது.

ஆனால் 56வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு இன்னொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க சைமன் கூக்நார்ட் கோலாக அதை மாற்றினார். 2-2 என்று சமன் செய்தது பெல்ஜியம்.

மீண்டும் 60வது நிமிடத்தில் தனியாகவே விடப்பட்ட ஆகாஷ்தீப் பெல்ஜியம் கோலை நோக்கி ஒரு அடி அடித்தார் ஆனால் கோல் விழவில்லை.

அதன் பிறகு பெல்ஜியம் 3வது கோலை அடிக்கும் முனைப்புடன் ஆட கோலுக்கு அருகில் பெல்ஜியம் வீரர் அடித்த ஷாட்டை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மீண்டும் அற்புதமாகத் தடுத்தார். பிறகு 6வது கார்னர் வாய்ப்பையும் பெல்ஜியம் கோலாக மாற்ற முடியவில்லை.

ஆட்டத்தின் 67வது நிமிடத்தில்தான் இந்தியாவுக்கு முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை ரகுநாத் கோல்போஸ்டிற்கு மேல் அடித்து விரயம் செய்தார்.

அதன் பிறகு இருதரப்பிலும் ஆட்டம் சூடு பிடிக்க ஆட்டம் முடிய இன்னும் 15 வினாடிகளே இருக்கும் நிலையில் பெல்ஜியம் பந்தை இந்திய கோல் எல்லைக்குள் கொண்டு வந்து ஆட கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முன்னால் வந்து தடுக்க நினைத்தார். இதனால் கோல் இடம் காலியானதைப் பயன்படுத்தி ஜான் டோமென் வெற்றிக் கோலாக மாற்றினார். இந்தியாவின் அத்தனை நேர கடின உழைப்பும் வீணானது.



13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Sat May 31, 2014 10:02 pm

மலேசியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

நெதர்லாந்தில் இன்று துவங்கிய உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

தி ஹேக்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசியாவை 4- 0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

முதல் பாதியில் கிளென் டர்னர் முதல் கோலை அடித்து ஆஸ்திரேலியாவுக்கு முன்னிலை அளித்தார்.

இடைவேளைக்குப் பிறகு ஆக்ரோஷம் காட்டிய ஆஸ்திரேலியா 4 நிமிடங்களில் 3 கோல்களைத் திணித்தது.

ஆஸ்திரேலிய வீரர்கள் எடி ஆக்கெண்டென், ஜேமி ட்வையர், மீண்டும் டர்னர் ஆகியோர் கோல்களை அடித்தனர்.


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Wed Jun 04, 2014 12:05 pm

உலக கோப்பை ஹாக்கி - இந்திய அணி மீண்டும் தோல்வி

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி நிமிடம் கோல் வாங்கியதால் 1–2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

உலக கோப்பை ஹாக்கி போட்டியின் 3–வது நாளான நேற்று நடந்த 2–வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தின. 27–வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி முதல் கோலை அடித்தது. அந்த அணி வீரர் மார்க் கிலெக்கான் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்த கோலை அடித்தார்.

இந்திய அணி மீண்டும் தோல்வி

30–வது நிமிடத்தில் இந்திய அணி பதில் கோல் திருப்பியது. தரம்வீர்சிங் பீல்டு கோல் போட்டார். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

பின்பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டினார்கள். பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் இந்திய அணி கடைசி நிமிடத்தில் கோட்டை விட்டது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து வீரர் சைமன் மென்டிஸ் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. இந்திய அணி தொடர்ந்து கண்ட 2–வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் 2–3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியை சந்தித்து இருந்தது.

அடுத்த ஆட்டம்

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 3–0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை எளிதில் தோற்கடித்து 2–வது வெற்றியை ருசித்தது.

இந்திய அணி வருகிற 5–ந் தேதி நடைபெறும் 3–வது லீக் ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொள்கிறது.


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Wed Jun 04, 2014 12:06 pm

ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி

12 அணிகள் இடையிலான உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது.

அர்ஜென்டினா வீரர் புருனெட் 31-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Wed Jun 04, 2014 12:07 pm

ஆஸி.க்கு 2-வது வெற்றி

நெதர்லாந்து தலைநகர் தி ஹேக்கில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியைத் தோற்கடித்தது. இது ஆஸ்திரேலியா பெற்ற 2-வது வெற்றியாகும்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா இரு கோல்களை அடித்து முன்னிலை பெற, ஸ்பெயினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் ஒரு கோல்கூட அடிக்காமல் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது ஸ்பெயின். முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் டிரா செய்த ஸ்பெயின், 2-வது ஆட்டத்தில் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா இரு வெற்றிகளைப் பெற்றதன் மூலம் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதே பிரிவில் இந்தியாவை வீழ்த்திய பெல்ஜியம் 2-வது இடத்தில் உள்ளது.


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by பாலாஜி Wed Jun 04, 2014 12:25 pm

இந்தியா மீண்டும் தோல்வியா .... சோகம் 

இந்தியாவில் எல்லாமே கிரிக்கெட்தான் ..அப்புறம் ஹாக்கி எல்லாம் எங்கே .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Sun Jun 08, 2014 8:04 am

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு முதல் வெற்றி; மலேசியாவை வீழ்த்தியது

தி ஹேக்கில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா, மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியினால் ஆய பயன் என்ன என்று தெரியவில்லை. பிரிவு ஏ அட்டவணையில் கடைசி இடத்திற்குத் தள்ளப்படாமல் இருக்கலாம் அவ்வளவே.

ஆட்டம் துவங்கி 8வது நிமிடத்தில் ருபிந்தர்பால், மந்தீப் மலேசிய கோல் அருகில் ஊடுருவிச் சென்றனர். கோலை நோக்கி அடித்த அடியை மலேசிய கோலி குமார் நன்றாகத் தடுத்தார்.

9வது நிமிடத்தில் மலேசியா இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. பெனால்டி கார்னர் வாய்ப்பைத் தட்டிச் சென்றது. ஆனால் கோல் விழவில்லை காரணம் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தியதே.

13வது நிமிடத்தில் மலேசிய கோல் எல்லைக்குள் நுழைந்த இந்திய அணிக்கு முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோலாக மாற்ற முடியவில்லை.

14வது நிமிடத்தில் மற்றுமொரு இந்தியத் தாக்குதலில் இந்தியாவுக்கு 2வது பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அடித்த பந்து மோசமாகத் தடுக்கப்பட்டு பந்து மெதுவாக ஜஸ்ஜித் பக்கம் செல்ல அவர் அதனை மடார் என அடிக்க இந்தியாவுக்கு முதல் கோல்!

16வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 3வது பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பினிஷிங் இல்லை. கோலாக மாற்ற முடியவில்லை.

29வது நிமிடத்தில் கேப்டன் சர்தார் சிங் அபாரமாக தனியாக ஒரு பந்தை மலேசிய வீரர்களைக் கடைந்து எடுத்துச் சென்றார். கோலுக்கும் அடித்தார் ஆனால் மலேசிய கோலி குமார் மீண்டும் தடுத்துவிட்டார். ஆனால் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, மீண்டும் மலேசிய கோலி குமார் அபாரமாகத் தடுக்க இந்தியா 1-0 என்றே இருந்தது. இடைவேளை வந்தபோது இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டம் 1-0 என்று இருந்தது.

மொத்தம் 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நல்ல ஸ்ட்ரைக்கர்கள், பினிஷர்கள் இல்லாததால் ஒரு கோல் மட்டுமே இந்தியா அடித்தது. மேலும் 17 முறை மலேசிய கோல் எல்லைக்குள் சென்ற இந்திய அணி ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது புரியாத புதிர்.

இடைவேளைக்குப் பிறகு 4வது நிமிடத்திலேயே மற்றொரு பெனால்டி வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. சர்தார் சிங் அடிக்க ருபிந்தர் பால் நன்றாக பந்தைத் தள்ளினார். இந்த முறையும் மலேசிய கோலி குமார் சரிசமமான திறமையுடன் தடுத்து நிறுத்தினார்.

பிறகு மலேசியா அருமையான ஒரு மூவில் இந்திய எல்லக்குள் ஊடுருவிச் சென்று கோலை நோக்கி ஷாட் அடித்தது ஆனால் இந்த முறை ஸ்ரீஜேஷ் கையால் பந்தை தட்டி விட்டுத் தடுத்தார்.

ஆனால் அடுத்ததாக மலேசியா பந்தை இந்திய கோல் எல்லைக்குள் கொண்டு சென்றபோது இந்திய வீரர் ரகுநாத் மலேசிய வீரரை தன் உடலால் எட்டித் தள்ள பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. மலேசிய வீரர் அடித்த ஷாட் கோல் வாசலில் தடுக்கப்பட்டது ஆனால் பந்து மட்டையில் பட்டு கோலுக்குள் செல்ல ஆட்டம் 1-1 என்று சமன் ஆனது.

பிறகு 14வது நிமிடத்தில் மலேசியா பெனால்டி வாய்ப்பை விரயம் செய்தது. ஆனால் பந்தை தட்டிப்பறித்த இந்திய அணி வேகமாக முன்னேறி மலேசிய கோல் எல்லைக்குள் சென்றது.ருபிந்தர் பால் பந்தை வேகமாக மலேசிய டி-சர்க்கிளுக்குள் கொண்டு சென்றார்.

அப்போது ஆகாஷ்தீப் கோலுக்கு முதுகைக் காட்டியபடியே காலுக்கு இடுக்கில் சென்ற பந்தை அபாரமாக அடிக்க பந்து கோலுக்குள் சென்றது இந்தியா 2-1 முன்னிலை.

அடுத்தபடியாக மலேசியா பெனால்டி கார்னர் ஒன்றை விரயம் செய்ய, அவர்கள் மட்டையில் பட்டு வந்த பந்தை சர்தார் சிங் மிக வேகமாக எடுத்துச் சென்று முன்னேறினார். மலேசிய வீரர்களில் ஒரு 3 அல்லது 4 பேரை ஏமாற்றி பந்தை கோலுக்குள் எடுத்து சென்று அடிக்க மீண்டும் ஆகாஷ் தீப் வந்த பந்தில் மட்டையை வைக்க இந்தியாவுக்கு 3வது கோல்! இந்த கோலுக்கான முழு பெருமையும் கேப்டன் சர்தார் சிங்கிற்கே செல்லும்.

ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ஸ்ரீஜேஷ் முயற்சியையும் மீறி மலேசியா 2வது கோலை அடித்தது.

இந்த முறையும் கடைசி நேர சொதப்பல் இருந்தது. மலேசியா 3வது கோலை அடித்திருக்கும். கோல் வாசலில் ருபிந்தர் பால் சிங் அருமையாக மலேசிய வீரரை இடையூறு செய்து பந்தைப் பறித்து வேறு திசையில் அடித்தார்.

இந்தியா தற்போது இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

திங்கட் கிழமை சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது.



13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Tue Jun 10, 2014 5:20 am

ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

தி ஹேக்கில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை 4-0 என்ற கோல் கணக்கில் ஊதித் தள்ளியது.


4 கோல்கள் மட்டுமே வாங்கியதற்காக இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷிற்குத்தான் மீண்டும் நன்றி கூறவேண்டும். இந்தப் போட்டியிலும் குறைந்தது 4 கோல்களையாவது அவர் தடுத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். இவரது இத்தகைய திறமைக்குக் கிடைத்த பரிசே ஆட்ட நாயகன் விருது.

“இந்த உலகக் கோப்பை எனக்கு நல்ல தொடராக அமைந்தது” என்றார் அவர் பெருமிதத்துடன்.

ஆட்டம் துவங்கியது முதல் இந்திய கோல் பக்கமே பந்து இருந்தது. தொடர்ந்து கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்.

ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் களத்தின் வலப்புற ஓரமாக ஆஸி. விரர்கள் சலேவ்ஸ்கி மற்றும் வெட்டன் ஆகியோர் பந்தை அபாரமாகக் கொண்டு சென்று கிரன் கோவர்ஸுக்கு அடிக்க அவர் கோலாக மாற்றினார். ஆஸி. 1-0 முன்னிலை. இந்திய பாதுகாப்பு அரணுக்கு சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை. எந்த மட்டையிலிருந்து கோல் விழுந்தது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு வேகமாக அனைத்தும் நடந்து முடிந்தது.

ஆட்டத்தின் 16வது நிமிடம் மீண்டும் ஒரு ஆஸ்திரேலியத் தாக்குதல் டி-வட்டத்தில் தவறு நிகழ்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைக்க கிறிஸ் சிரியெல்லோ அதனை அருமையாக கோலாக மாற்றினார். ஆஸி. 2-0 என்று முன்னிலை.

பிறகு 22வது நிமிடம் ஆஸ்திரேலிய ஆக்ரோஷம் மேலும் வலுவடைய அடுத்தடுத்து மின்னல் போல் இரண்டு கோல்கள் போட்டது. ஜெர்மி ஹேவர்ட் 3வது கோலை அடிக்க மீண்டும் சிரியெல்லோ தனது 2வது கோலை அடிக்க ஆட்டம் 4-0 என்று ஆஸ்திரேலியா பக்கம் வலுவாக இருந்தது.

பந்து 80% ஆஸ்திரேலியா கையில் இருந்தது. இந்தியர்கள் ஆட்டம் சில வேளைகளில் பரிதாபமாக வெறும் தடுக்கும் வேலையாகவே போய் முடிந்தது. ஒரு பெனால்டி கார்னர் கூட இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.

இடைவேளைக்குப் பிறகு இந்திய வீரர்கள் அரிதாக ஆஸ்திரேலிய எல்லைக்குள் ஊடுருவிச் சென்றனர். இடதுபுறம் மன்ப்ரீத் பந்தை நழுவ விட அந்த முயற்சியும் வீணானது.

இடைவேளைக்குப் பிறகு 10வது நிமிடத்தில் வெட்டன் - டர்னர் ஜோடி வலது புறம் மிக வேகமாக பந்தை எடுத்து வந்தனர். இந்திய பாதுகாப்பு அரண் பல்லிளித்தது. ஆஸி. வீரர் ஒரே அடி அடிக்க கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அதனை அருமையாக தடுத்தார்.

மீண்டும் ஆஸ்திரேலியா இந்தியப் பகுதிக்குள் வேகமாக முன்னேறி வர, கோல் லைனில் அடிக்கப்பட்ட ஷாட்டை பாறை போல் நின்று தடுத்தார் ஸ்ரீஜேஷ்.

அதன் பிறகு இந்தியாவின் தரம்வீர் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அரணைத் தாண்டிச் சென்று கோல் முயற்சி ஒன்று செய்தார். ஆனால் ஆஸ்திரேலிய கோலி அதனை கையால் தட்டி விட்டார்.

மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் கிடைக்க சிரியெல்லோ அடித்த கோல் ஷாட்டை மீண்டும் ஸ்ரீஜேஷ் தடுத்து சிரியெல்லோவின் 3வது கோலைத் தடுத்தார்.

ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்தபோது இந்திய வீரர்கள் வேகம் கொண்டனர். ஒரு அபாரமான எதிர்த் தாக்குதல் தொடுத்தனர். ஆனால் அடித்த அடி நேராக ஆஸி. கோல் கீப்பரிடம் சென்றது.

நல்ல வேளையாக ஸ்ரீஜேஷினால் இந்தியா 0-4 என்று தோல்வியடைந்தது. இல்லையெனில் 7 அல்லது 8 கோல்கள் வாங்கி படு தோல்வியைச் சந்தித்திருக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆட்டத்தில் நிகழ்ந்த பின்னடைவு என்னவெனில் அவர்களது கேப்டன் நோலெஸ், அனுபவ வீரர் ட்வையர் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் ஆஸ்திரேலிய அணியின் தூண் என்றால் மிகையாகாது. வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா அரையிறுதியில் விளையாடுகிறது.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் கடைசியில் முடிந்த இந்திய ஹாக்கி அணி தற்போது கடைசிக்குச் செல்லவில்லை என்பதே ஆறுதல். ஆனாலும் இந்தத் தொடரில் இந்த இளம் அணியின் திறமை வெளிப்பட்டது.

மேலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு நுட்பங்கள் கைகூடினால் ஸ்ரீஜேஷை வைத்துக்கொண்டு இந்தியாவின் இந்த அணி முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆனால் இவையெல்லாம் நடக்குமா அல்லது அவசரகதி முடிவெடுத்து அணியை மாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by சிவா Tue Jun 10, 2014 4:43 pm

உலக கோப்பை ஹாக்கி இந்திய வீரர்களிடம் உறுதியில்லை! கோச் விரக்தி

நெதர்லாந்து நாட்டில் ஹேக் நகரில் நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, நேற்று தனது கடைசி லீக் போட்டியில் உலக சாம்பி யன் ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது. முந்தைய போட்டியில் மலேசியாவை 32 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து புத்துணர்ச்சி பெற்றிருந்த இந்திய அணி, இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய வீரர்களின் மின்னல் வேக தாக்குதல் ஆட்டத்துக்கு முன்னர் இந்திய வீரர்களின் ஆட்டம் கொஞ்சமும் எடுபடவில்லை. ஆட்டத்தின் துவக்கத்தில் 22 நிமிடங்களில் 4 கோல்களை அடித்து அசத்தினர் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆஸ்திரேலியாவின் கெய்ரன் குரோவர்ஸ் பீல்டு கோல் முறையில் முதல் கோலை அடித்தார். இதன் பின்னர் தங்களது அணிக்கு கிடைத்த பெனாலிடி கார் னர் வாய்ப்புகளை பயன்படுத்தி கிறிஸ் சிரிலோ 2 கோல்களும், ஜெரிமி ஹே வார்டு ஒரு கோலும் அடித்தனர். இதன் மூலம் 40 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடித்தது.

போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் துவக்கமே வேக மாக இருந்தது. அவர்கள் எப்போதும் அப்படித்தான் விளையாடுகின்றனர். இது எங்களது அணியின் நம்பிக்கையைத் தகர்த்தது. இந்திய அணி வெற்றி கிடைக்குமா என்று சந்தேகத்துடனேயே இருந்தது. துவக்கத்தில் நாங்கள் கவனக்குறைவாக விளையாடியதற்கு பலனாக ஆஸ்திரேலியா முதல் கோலை அடித்தது. முதல் பாதியில் எங்களது விளை யாட்டு சற்றும் எடுபடவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவா லாக இருந்தோம். கோல் அடிப்பதற்கு சில வாய்ப்புகளையும் எங்களது வீரர் கள் உருவாக்கினார்கள். இந்திய வீரர்கள் அவற்றை பயன்படுத்தி கோலாக மாற்றியிருக்க வேண்டும்.இந்திய வீரர்கள் உறுதியானவர்களாக இல்லை. பெரும்பாலானவர்கள் பெரிய அளவி லான போட்டித் தொடரில் முதல் முறையாக விளையாடினர், என்றார்.

இந்திய கேப்டன் சர் தார் சிங் கூறுகையில், ஆஸ்திரேலிய வீரர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், நாங்கள் சில சாதாரண தவறுகளைச் செய்து விட்டோம். இந்திய அணி இளம் வீரர்களைக் கொண்ட அணி. இவர்களில் பலர் முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடுகின்றனர், என்றார். குரூப் போட்டிகளில் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள இந்திய அணி 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் பி பிரிவு கடைசி சுற்று லீக் போட்டிகள் இன்று நடக்கிறது. இதன் பின்னரே இந்த பிரிவில் இருந்து அரை யிறு திக்கு முன்னே றும் அணி எது என்பது தெரியவரும்.


13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014  Empty Re: 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum