புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
87 Posts - 67%
heezulia
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
423 Posts - 76%
heezulia
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
6 Posts - 1%
prajai
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
3 Posts - 1%
sram_1977
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_m10தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 2:19 pm

தீரன் சின்னமலையின் முன்னோர்கள்:

கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை. இம்மரபினர் உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப் பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலில் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர். ‘படியளந்து உண்ணும் பயிர குலம்’’என்று ஒரு செப்பேடு புகழுகிறது. இதன் மூலம் இவர்களது வள்ளல் தன்மையை நன்றாக அறிய முடிகிறது.

‘வளர் பயிரன்’, ‘நீடுபுகழ் பயிரன்’, ‘கியாதியுள பயிரன்’’என்று காணிப்பாடல்களில் புகழப்படுகின்றனர். ‘காராள ராமன்’’என்றும் புகழப்பட்டவர்கள் இக்குலத்தவர்கள். வேளாளரில் இராமனைப் போன்றவர்கள் என்பது அதன் பொருள்.

பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் உத்தமக்காமிண்டன் எனும் கௌரவப் பட்டப் பெயர் பெற்றது மிகவும் சுவையான ஒரு வீர வரலாற்றுச் செய்தியாகும். முன்பு சந்துரு சாதன பாண்டியன் என்கிற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கும் சோழநாட்டை ஆட்சிபுரிந்த உத்தமக்காச் சோழன் என்பவனுக்கும் பகை ஏற்பட்டுப் போர் மூண்டது. பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த போரின் முனைகள் அனைத்திலும் சந்துரு சாதன பாண்டியன் கடும் தோல்வியடைந்தான். பாண்டியனின் படைத்தலைவர்கள் ஒருவன் பின் ஒருவராகச் சென்று சோழனிடம் தோற்று திரும்பினார்கள். இத்தோல்வியை அவமானம் எனக்கருதிய பாண்டிய மன்னன் பெரிதும் வருந்தித் துடித்தான். எதிரியைப் போர்க்களத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து நினைத்து துன்பக் கிணற்றில் வீழ்ந்தான். அப்பொழுது பாண்டியனின் படைத்தளபதியாக கொங்கு மண்ணைச் சேர்ந்த கரியான் என்கிற பிள்ளை சர்கரை முன்வந்து ‘அரசே நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களுக்காக எதையும் செய்யும் என் போன்ற படை வீரர்கள் தங்களிடம் இருக்கையில் தாங்கள் கவலைப்படுவது எதற்கு?

சோழர் படையை நான் வென்று, கொன்று, அடியோடு அழித்து வெற்றிவாகை சூடி வருகிறேன் என்று சூளுரைத்து கடைசியில் போர்க்களம் புறப்பட்டான். முதலிலில் மித்திரன் என்பானைக் கொண்டு சோழன் ஏவியிருந்த புதவலிலியைக் கரியான் அழித்தான். பின் கடும்போர் புரிந்து சோழனை வென்று அவனது சோழ நாட்டுக்கே அடித்துத் துரத்தினான். பாண்டியனின் படையில் தலைவனாக இருந்து பணியாற்றிய கரியான், உத்தமக்காச் சோழனைப் போரில் வென்றான்.

அப்போது கரியான் உறந்தைப் பாக்கம் என்னும் இடத்தில் குடியிருந்தான்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 2:19 pm

இவனது வெற்றியை ‘உறந்தைப் பாக்கம் குடியிருந்தோர் – முன்னோர் உத்தம சோழனை வென்று வந்தார்’ ‘ஆறெல்லாஞ் செந்நீர் ரவனியெல்லாம் பல்பிணங்கள் தூறெல்லாஞ் சோழன் கரிகுஞ்சி – வீறுபெறு கன்னிக்கோன் ஏவலிலினாற் காரைக்கோன் பின்தொடரப் பொன்னிக்கோன் ஓடும்பொழுது’’என்ற பாடல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பாண்டியன் மகிழ்ந்து, உத்தமக்காச்சோழனை வென்றதால் “உத்தமக்காமிண்டன்””என்ற பட்டத்தைச் சூட்டி காரையூரை (ஈரோடு – காங்கேயத்திற்கு இடையில் உள்ள) தலைநகராகக் கொண்ட கொங்கு நாட்டிற்குத் தலைவனாக நியமித்தான். காரையூருக்குத் தென்கிழக்கில் உள்ள ஆனூர் என்ற ஊரில் அரண்மனையைக்கட்டி கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். இந்த ஆனூர் அரண்மனைதான் இன்று பழைய கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

சோழனைத் தன் வீரத்தால் வென்றதற்காக கரியானுக்குப் பாண்டியன் முடிசூட்டினான். இவ்வீரச்செயலை,

‘கலிலிஇரு நூற்றதில் விளம்பியின் மீனத்தில் கார்புரந்த
மலிலிபுகழான கரியான் செயமாது வலிலிமையினால்
புலிலிதுசன் உத்தமக்காச் சோழன் ஏவிய பூதவலிலி
தொலைவுசெய்து எரிபுகச் செழியன்தன் னால்முடிசூடினனே’’
என்ற பழம்பாடல் விளக்குகிறது.

பாண்டியனின் வேப்ப மாலையையும், மீன்கொடியையும் பரிசாக கரியான் பெற்றான்.

இவ்வீர வெற்றியின் நினைவுப் பரிசாக கரியான் சர்க்கரைக்கு காரையூர், வள்ளியறச்சல், முத்தூர், மருதுறை கிராமங்களும், பாப்பினியில் பாதிக்கிராமமும் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. பாண்டியனின் மகன்போல, வாரிசுகள் போல குமாரவர்க்கமாக பழைய கோட்டை மரபினர் கௌரவத்துடன் சிறப்பிக்கப்பட்டனர்.

உத்தமச் சோழன், உத்தமக்காச் சோழன் என்ற பட்டம் பெற்ற சோழனை வென்ற காரணத்தால் ‘உத்தமச் சோழன்’, ‘உத்த மக்காச் சோழன்’’என்ற பட்டப் பெயரை கரியான் பெற்றான். பின்னர் இப்பட்டம் ‘உத்தம சோழக்காமிண்டன்’’என்று மாறியதை நத்தக்காடையூர் செயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டால் அறிய முடிகிறது. காலப்போக்கில் இப்பட்டத்தில் உள்ள சோழன் என்ற பெயர் மறைந்து ‘உத்தமக்காமிண்டன்’ என்று மாறிவிட்டது. காமிண்டன் என்றால் காப்பாற்றுவதில் வல்லவன் என்று பொருள். இக்காமிண்டன் என்ற பெயரே பின்பு கவுண்டன் என்று மருவியது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 2:20 pm

கொங்குநாடு பல ஆண்டுகளாக சோழ வேந்தர் ஆட்சியில் இருந்தது. ஆடல், பாடல்களிலும் கணிகையர் வலையிலும் வீழ்ந்து கிடந்த பிற்காலச் சோழ அரசர்களால் சோழர் ஆட்சி நலிவுற்ற காலகட்டத்தில் பாண்டிய அரசன் ஜடாவர்மன் படைத்தளபதியாக கொங்கு வேளாளரில் பயிரகுல காரையூர் சர்க்கரை என்ற துடிப்பான இளைஞன் ஒருவன் இருந்தான். அக்காலகட்டத்தில் சோழர் படைவீரர்கள் அடிக்கொருமுறை கொங்குமண்டலத்தில் படையெடுத்துப் புகுந்துகொண்டு கொள்ளையடித்தும், கொலைசெய்தும் கொங்குநாட்டு மக்களுக்குப் பெரும் துன்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தனர். கொதித்தெழுந்து இதைத்தடுத்து நிறுத்த காரையூர் சர்க்கரை குதித்தோடி முன்வந்தான். பாண்டிய மன்னனின் அனுமதியுடன் சோழமன்னனை நேரில் கண்டு “அரசே, தங்களது முன்னோர்கள் பாதுகாத்துவந்த இக்கொங்குநாட்டை உங்கள் படைவீரர்கள் கொள்ளையிடுகிறார்கள். இது தருமம் ஆகாது, இது நீதியாகாது. அன்புகூர்ந்து, கருணை கூர்ந்து கொள்ளையடிக்கும் படைகளை கொங்கு மண்ணிற்குள் நுழையவிடாமல் திரும்பிப் போக வேண்டும் என்று ஆணையிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். இதை சோழ மன்னன் ஏற்றுக்கொள்ளாமல் கடும்கோபம் கொண்டான்.
இனிப்பொறுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணி தனது படையுடன் சென்று சோழர் படையை அடியோடு விரட்டித் துரத்தித் துரத்தி அடித்தான். கி.பி. 1251ஆம் ஆண்டு இச்சம்பவம் நடைபெற்றது. வெற்றி பெற்றுத் திரும்பிய தனது தளபதியைப் பாராட்டி வாழ்த்தி பாண்டிய மன்னர் “நல்ல சேனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் அளித்துப் பாராட்டினான். இம்மரபினர் பழைய கோட்டையில் இன்றும் ‘நல்ல சேனாதிபதி’ என்ற பட்டத்துடனும், பெரும்புகழுடனும், மக்கள் செல்வாக்குடனும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வரலாற்றுச் செய்தியை மிகவும் இனிமையான பழம்பாடலில் இருந்து தெளிவாக அறியலாம்.
கி.பி.12-ஆம் நூற்றாண்டில் கொங்கு 24 நாடுகளுக்கும் தலைவராக இந்த சர்க்கரை மரபினர் பட்டம் சூட்டப்பட்டனர். அதிலிருந்து சர்க்கரை மரபினருக்கு “பட்டக்காரர்””என்றும் பெயர் வழக்கத்திற்கு வந்தது.

24 நாடுகளிலும் புகழ்கொண்ட கொற்றவேல் சர்க்கரை அரண்மனையில் அன்னக்கொடியும், மேழிக்கொடியும் கட்டி ஆட்சி அதிகாரம் செலுத்தியவர். ஆனூரிலிலிருந்த பழையகோட்டை பட்டக்காரர் மரபினர் தற்பொழுது நொய்யல் நதிக்கரையில் உள்ள அரண்மனையைக் கட்டிக் குடியேறியது இவர் காலத்தில் தான். அவர் பட்டாபிடேகப் பாடல் அவர் பெருமையையும், புகழையும் காட்டுகிறது. நத்தக்காடையூர் செயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் பெரும் திருப்பணி செய்தவர். அரும்பாடுபட்டு அக்கோயிலில் சிவன் தீபத்தம்பத்தை நிறுவியர். இத்தீபத்தம்பத்தின் தென்மேற்குத் தூணில் இவர் உருவச்சிலை உள்ளது. இவர் தலைசிறந்த கவிஞர். இக்கோயில் அம்மன் நல்லமங்கை மீது இவர் ஒரு சதகம் பாடியுள்ளார். அச்சதகத்தின் சில பாடல்கள் கிடைத்துள்ளன.

சடையபெருமாள், அருணாச்சல வாத்தியார், சம்புலிலிங்க ஒதுவார், கார்மேகக் கவிஞர் போன்றவர்கள் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர் மிகச்சிறந்த பக்தர். பழநியில் இவர் மடம் இன்றும் உள்ளது. சர்க்கரை மடம் என்று அதற்குப் பெயர். ஒரே நாளில் குதிரைச் சவாரி செய்து கொங்கேழு சிவாலய தரிசனம் செய்த பெருமை உடையவர். கருவூர், வெஞ்சமாங்கூடல், கொடுமுடி, அவினாசி, பவானி, திருச்செங்கோடு, திருமுருகன் பூண்டி என்பன கொங்கேழு தலங்களாகும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 2:21 pm

கால்நடை மருத்துவம் இவைகளில் மிகவும் கைதேர்ந்தவர், பயிர்காப்பு மருத்துவர். மிகச்சிறந்த தத்துவஞானி, சமரசநோக்கம் உடையவர். நாட்டுப்பற்று உடையவர். ‘கொங்கதன் மண்ணே சுகம் தரும்’ என்று பாடியுள்ளார். ஆனூர் சர்க்கரை மரபில் வந்த கொற்றவேல் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் என்பவர் 1708-இல் பட்டத்துக்கு வந்தார். அப்பட்டக்காரரான இக்கொற்றவேல் சக்கரைக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் குழந்தைப் பாக்கியம் வாய்க்கவில்லை. செல்வச் செழிப்புடன் வாழ்ந்த கொற்றவேல் மன்றாடியாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள் பழநிக்கு சஷ்டி திருநாளுக்குச் சென்று பழையகோட்டை திரும்பி வரும்பொழுது வரும் வழியில் செலாம்பாளையம் என்ற ஊர் வழியாக வரநேரிட்டது. அவ்வூரில் தனது பங்காளிகள் முறையாகிய பயிர குலத்தவர்கள் வாழ்ந்துவந்தனர். தம் உறவினர் ஒருவர் வீட்டில் இரண்டு சிறுவர்களை நேரில் கண்டார். சுறுசுறுப்பும், துடிப்பும், புத்திக்கூர்மையும் மிக்க அச்சிறுவர் இருவரையும் சுவீகாரம் (தத்து எடுப்பதாக) செய்துகொள்ள ஆசைப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வேண்டிய அளவு செல்வமும் நிலமும் அளிக்கப்பட்டன. ஆகவே, நீண்ட நாளைக்குப் பிறகு பயிரங்குலத்தைச் சேர்ந்த தன் உறவினர் ஒருவரின் வீட்டில் உள்ள இரு சிறுவர்களை தத்து எடுத்துக்கொண்டார். தத்தெடுத்த தனது பங்காளி வீட்டுப் பிள்ளைகளான, ஆண் மக்கள் இருவரின் வயதுகள் முறையே 5, 3 ஆகும். அப்படி சுவீகாரம் செய்து பழையகோட்டைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கு அரண்மனை மரபுப்படி முறையாக மூத்தவனுக்கு சேனாதிபதி என்றும் இளையவனுக்கு இரத்தினம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. செல்வச்செழிப்புடன், சீரும் சிறப்புமாக இருவரும் வளர்க்கப்பட்டனர். மூத்தவர் சேனாதிபதியை மூத்த மனைவியும், இளையவர் இரத்தினத்தை இளைய மனைவியும் மிகுந்த அன்புகாட்டிச் செல்லமாக வளர்த்துவந்தனர். துவக்கக்கல்வியை படித்து முடித்தபின் அரண்மனைப் புலவர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்றுவந்தனர். அரண்மனைப் பிள்ளைகளுக்குண்டான வீர, தீர விளையாட்டுக்களிலும் தேர்ச்சிப் பெற்றனர்.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு முறைப்படி, மூத்தவர் சேனாபதிக்கு காங்கயம் செங்கண்ண குல பல்லவராயர் குடும்பத்திலும், இளையவர் இரத்தினத்திற்கு பெரிய ஆரியப்பட்டி ஒதாளன் குலத்து பத்துகுடி உடையாக் கவுண்டர் குடும்பத்திலும் பெண் எடுத்து மணம் செய்விக்கப்பட்டது.

திருமணத்திற்குப் பின்னர் அரண்மனை மரபுப்படி மூத்தவரான சேனாபதிக்கு “நல்ல சேனாபதி சக்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார்””என்ற பட்டம் சூட்டப்பட்டு பழைய கோட்டை அரண்மனைக்கு 20ஆம் பட்டக்காரராக 08.02.1731-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பட்டக்காரர் மரபில் மூத்தமகனுக்குத்தான் நாடாளும் உரிமை. அதன்படி சின்னமலையின் பெரியப்பா மூத்தவரான சேனாபதி ஆட்சியை ஏற்று அரண்மனையில் தங்கினார்.

பழையகோட்டை அரண்மனையில் மூத்த மகனுக்கே பட்டக்காரராக, சமுதாயத் தலைவராகத் தகுதியுண்டு. அரண்மனை அதிகாரமும், நிர்வாகமும், சொத்துக்களும் மூத்தவருக்கே உரியது. இளையவர்கள் வாழ்க்கைக்கேற்ற பொன், பொருள், பூமி முதலானவற்றைப் பெற்றுக் கொண்டு அரண்மனைக் கிராமங்கள் ஏதேனும் ஒன்றிற்கு குடியேறி விடுவது அரண்மனை மரபு.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 2:22 pm

அல்லது இளையவர்கள் பக்கத்தில் தாங்கள் விரும்பும் ஊரிலும், தங்களுக்குப் பிடித்த வசதியுடைய ஏதேனும் ஒரு ஊரில் குடியேறிவிடுவர். சிலர் தமது விருப்பப்படி தூரத்தில் உள்ள ஊர்களுக்கும் இடம்பெயர்ந்து செல்வதுண்டு. அப்படிக் குடியேறிய சிலர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு, சித்தூர், கொல்லங்கோடு, ஆலத்தூர் ஆகிய வட்டங்களில் “மன்னடியார்”’பட்டம் பெற்று இன்றும் வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் தமது தமிழகத் தொடர்பை இன்றும் கூட பெருமையாக நினைவு கூறுகிறார்கள்.

அதன்படி, சேனாபதி பழையகோட்டை அரண்மனைக்கு பட்டக்காரராக முடி சூடியதும், இளைய மகனான இரத்தினம் (தீரன் சின்னமலையின் தந்தை) தனக்கு தேவையான பொன், பொருள், முதலானவற்றைப் பெற்றுக் கொண்டு தன் மனைவி பெரியாத்தாளுடன், அரண்மனைக் கிராமமான காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் குடியேறினார். காங்கேய நாட்டில் மன்றாடியார் மரபினுக்கு ஆனூர், பழையகோட்டை, நத்தக்காடையூர் போல மேலப்பாளையமும் உரிய ஊராகும். ஆனூருக்கு மேற்கே இருந்தமையால் பாளையம் அது மேலப்பாளையமாயிற்று.

மேலப்பாளையம் இலக்கிய வழக்கில் மேலைநகர் என்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றுள்ள மேலப்பாளையம் என்னும் ஊர் முன்பு இவ்விடத்தில் இல்லை. ஒரு பர்லாங்கு தொலைவில் கிழக்கில் கோட்டைக்காடு, ஊர்த்தோட்டம், நடுத்தோணி, குட்டைக்காடு என்றுள்ள பகுதிகளில்தான் பழைய ஊர் இருந்தது. கீழ்பவானி வாய்க்காலால் ஊர் இடம்பெயர்ந்து கொஞ்சம் மேற்கே வந்துவிட்டது.

மிகவும் இனிமையான செயல்கள் செய்பவர்கள் சர்க்கரை என்று பெயர் பெற்றனர். பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் எல்லாப் பட்டக்காரர்களுக்கும் சர்க்கரை என்ற சிறப்புப் பெயர் இன்றளவிலும் அவர்களது பெயரின் கடைசியில் இணைந்து வருகின்றது.

சர்க்கரை என்ற பெயர் தலைவர்களின் பெயரோடு வருவதால் முன்னாளில் பழையகோட்டையில் சர்க்கரைக்குச் சர்க்கரை என்று பெயரை யாரும் சொல்லுவதில்லை. ‘இனிப்புப் பொடி’ போன்ற வேறு பெயர்களையே சொல்லுவர். ஒருசிலர் சக்கரை என்றும் கூறுவர்.

இரத்தினச் சர்க்கரை பெரியாத்தா தம்பதியருக்கு 5 ஆண்மக்களும் ஒரு பெண் மகளும் பிறந்தனர். தமிழ் தாது வருடம் சித்திரை மாதம் 9-ஆம் நாள் 17.04. 1756 -ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில், பழைய கோட்டை பட்டக்காரர் மரபில், ஆனூர் அரண்மனையில் இரத்தின சர்க்கரை கவுண்டருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவன் தீர்த்தகிரி. மூத்த சகோதரர் கொளந்தசாமி, இளைய சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதார், குட்டிச்சாமி. ஒரே தங்கை பருவதம் ஆகியோர் உடன் பிறந்தவர்களாவர்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 2:23 pm

சகோதரர்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு விவசாயத்தைக் கவனித்து வந்தனர். தீர்த்தகிரி, பெரியதம்பி, கிலேதார் மூவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்கள் மூவரும் தேசத்தையும், கொங்கு நாட்டையும் மணந்ததனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.

மூத்தவன் குழந்தைசாமி தாய் மாமனின் மகள் கெம்பாயியை மணம் கொண்டார். கடைசி தம்பியான குட்டிசாமிக்கு காங்கயம் சிதம்பர பல்லவராயரின் மகள் பகவதியை மணம் முடித்தார்கள். மற்றுமுள்ள மகன்கள் மூவரும் நாடு, நகரம், ஊர், உலகம் என்று சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

இவர்களின் ஒரே தங்கையான பருவதத்தை உலகபுரம் சாத்தந்தை குலத்தைச் சேர்ந்த பழனியப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

இளம் பருவத்தில் தீர்த்தகிரியை தம்பாக்கவுண்டர், சின்னக்கவுண்டர் என்ற பெயராலும் செல்லமாக அழைப்பார். தீர்த்தகிரியின் தம்பிகளில் தம்பி என்பவர் மூத்த தம்பியாவார். எனவே அவர் பெரிய தம்பி என்று அழைக்கப்பட்டார். கிலேதார் என்றால் கோட்டைத் தலைவர் என்பது பெயர்.

கொங்கு நாட்டின் 19-ஆவது பட்டக்காரரான கொற்றைவேல் சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் 1708-இல் இருந்து 1731 வரை சிறப்பாக நிர்வாகம் நடத்தி நாட்டை ஆண்டார். இவர்தான் சின்னமலையின் தாத்தா. பழைய கோட்டைப் பட்டக்காரர் தம் மரபில் 19ஆம் பட்டக்காரராக விளங்கியவர் கொற்றவேல் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் ஆவார்.

காங்கயம் பகுதியில் நத்தக்காடையூர் அருகே உள்ள ஆனூர் அரண்மனைதான் இன்று பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகிறது. 5 அண்ணன்களை கொண்ட தீரனின் தங்கை பருவதம் தீரனின் மீதே அதிக பாசம் கொண்டிருந்தார்.

நன்றி: செல்வராஜ் P.S.கே







M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 03, 2014 9:55 pm

செல்வராஜ் P.S.கே, எம்.எம்.செந்தில் ஆகியோர்க்கு நன்றி !

அரிய வரலாறு !

சுவடிகளிலிருந்து ‘கொங்கு மண்டல வரலாறு’ என்ற நூலைப் பதித்தவன் நான் என்ற முறையில் எனக்கு உவகை !

 நன்றி நன்றி 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 10:03 pm

Dr.S.Soundarapandian wrote:செல்வராஜ் P.S.கே, எம்.எம்.செந்தில் ஆகியோர்க்கு நன்றி !

அரிய வரலாறு !

சுவடிகளிலிருந்து ‘கொங்கு மண்டல வரலாறு’ என்ற நூலைப் பதித்தவன் நான் என்ற முறையில் எனக்கு உவகை !

 நன்றி நன்றி 
மேற்கோள் செய்த பதிவு: 1067420

 தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் 1571444738 தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் 1571444738 தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் 1571444738 அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக