புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
2 Posts - 1%
prajai
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
429 Posts - 48%
heezulia
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
29 Posts - 3%
prajai
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_m10விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:57 am


மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை, அணை கட்டி தேக்கி, தமிழகத்திற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்த உருவான திட்டம்தான் முல்லைப்பெரியாறு அணை.

இத்திட்டத்திற்காக, அன்றைய ஆங்கிலேய அரசின், சென்னை மாகாண செயலருக்கும், அன்றய திருவாங்கூர் சமஸ்தான மகாராஜாவிற்கும் இடையே 1886 அக்.,29 ல் 999 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டது.ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அணை கட்டுமானப் பணிகள் துவங்கியது. ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக் வசம், அணை கட்டுமானப் பணிகளை ஒப்படைக்கப்பட்டது. 1887ல் முதற்கட்டப் பணிகளை துவக்கினார். அலுவலர்கள், கூலியாட்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டும் பணி முடித்து, அணை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்ய சர்வே செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அணை கட்டும் பணி பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடந்தது.1889ல் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அணை கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டது. இருந்த போதிலும், பென்னிகுவிக் மனம் தளராமல், மீண்டும் அணை கட்டுமானப் பணிகளை துவக்கினார்.1894ல் அணை கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு காலரா நோய் பரவி, பொறியாளர்கள் உட்பட 45 தொழிலாளர்கள் பலியானார்கள். இது போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இடையே பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு, 1895 அக்.,10 மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. 152 அடி நீர் தேக்கும் அளவுள்ள பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் பயன் பெற்றது. குடிநீர் ஆதாரமும் இந்த அணை தான்.

அணை ஒப்பந்த சரத்துக்கள்

அணையின் உயரம் 155 அடி இருக்க வேண்டும். 8000 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேக்கிக் கொள்ள வேண்டும். 100 ஏக்கர் அணை பராமரிப்பு, கட்டுமானம், இன்னும் பிறதேவைக்காக பயன்படுத்தி கொள்ளலாம். மொத்த நீர்மட்டம் 152 அடி உயரத்திற்கு 15.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்.104 அடிக்கு மேல் தேக்கப்படும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம். அணையின் பராமரிப்பை தமிழகம் செய்து கொள்ள வேண்டும். 8100 ஏக்கரில் தேக்கப்படும் தண்ணீருக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 வீதம் கேரளாவிற்கு குத்தகை தொகை கொடுக்க வேண்டும், என விரிவான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குத்தகை தொகை ஏக்கர் 1க்கு ரூ.5 வீதம் 1896 முதல் 1970 வரை வழங்கப்பட்டு உள்ளது.

அணை கட்டும் பணி

1887ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. 1893-ல் 60 அடி உயரமும், 1994-ல் 94 அடி உயரமாகவும், 1895 டிசம்பரில் 155 அடி உயரமாகவும் கட்டி முடிக்கப்பட்டது. கட்டுமான பணிக்காக சுமார் 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1985ல் சென்னை மாகாண கவர்னர் வெண்லாக் பிரபு திறந்து வைத்தார்.

ஒப்பந்தம் புதுப்பிப்பு

1970 ஆம் ஆண்டு கேரள அரசின் பிடிவாதத்தால் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. 8100 ஏக்கர் நீர் பிடிப்பு பகுதிக்கு, ஆண்டு குத்தகை ஏக்கர் 1க்கு ரூ.5 என இருந்ததை ஏக்கர் 1க்கு ரூ.30 எனவும், அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மீன்பிடிப்பு உரிமை கேரளாவிற்கு எனவும்,999 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு நீரை பயன்படுத்திக் கொள்ளலாம், எனவும் ஒப்பந்தம் திருத்தப்பட்டது.

மின் உற்பத்தி

1955ம் ஆண்டு பெரியாற்று தண்ணீர் தமிழகத்தில் புகும் இடமான லோயர்கேம்ப் என்னுமிடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.

1970ம் ஆண்டு தமிழக அரசு கேரள அரசுடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின்படி மேற்கண்ட இடத்தில், தமிழக அரசு 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்து கொள்ளலாம். அதன்படி மின்உற்பத்தி நடக்கிறது.

இடுக்கி அணை

முல்லைப்பெரியாறு அணையின் கீழ்பாசனத்தில், இடுக்கி என்னுமிடத்தில் 1966ஆம் ஆண்டு கேரள அரசு புதிய அணையை கட்ட ஆரம்பித்தது.

1976 ஆம் ஆண்டு 555 அடி உயரத்திற்கு சுமார் 36,000 சதுர ஏக்கர் நீர் பிடிப்பு பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டது.இடுக்கி அணையின் மொத்த மொத்த கொள்ளளவு 72 டி.எம்.சி. ஆகவும், அதன் மூலம் 780 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டமும் செயல்படுத்தப்பட்டு, முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரை, பல வழிகளில் திருப்பி இடுக்கி அணைக்கு கொண்டு செல்கின்றனர். இடுக்கி அணையில் தேக்கப்படும் நீர், மின் உற்பத்திக்கு தவிர்த்து வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை.

பெரியாறு அணை பிரச்னை

1979ம் ஆண்டு கேரளாவில் வெளிவரும் நாளிதழ், முல்லைப்பெரியாறு அணை பலமிழந்து உள்ளது, அணையின் சுவற்றுக்குள் யானை போக முடியும், என்ற வதந்தியை பரப்பியதன் விளைவாக அணை பற்றி சர்ச்சை துவங்கியது. கேரள அரசு அணையின் உயரத்தை 136 அடியாக குறைத்தது.

தமிழ்நாடு அரசு சிறு சிறு கசிவுகளை சரி செய்ய பல்வேறு கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூலம் அணை பலப்படுத்தப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இரு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றதன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின், 2006 ஆம் ஆண்டு துவக்கத்தில், 'அணை பலப்படுத்தப்பட்டதற்கான வல்லுனர் குழு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், அணை நீர் மட்டத்தை முதற் கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திடவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம், என தீர்ப்பு வழங்கியது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்து, 2006 மார்ச் மாதத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசு, சட்டசபையில் 'அணை பாதுகாப்பு சட்டம்' என்ற புதிய சட்டத்தை இயற்றியது. தற்போது புதிய அணை கட்ட வேண்டும் எனக் கூறி வருகிறது.

விவசாய, பொருளாதார இழப்பு

1979ஆம் ஆண்டு முதல், அணை நீர்மட்டத்தை 136 அடியாக குறைந்தததால் தமிழகத்தில் விவசாய உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு சுமார் 50 கோடி என்ற அளவில் உள்ளது. இதுவரை 30 ஆண்டுகளில், 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அணையா, தடுப்பு சுவரா

மேற்கு நோக்கி பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணை, தெற்கு பக்கம் பலமான மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அணையின் வடக்கு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலையின் இன்னொரு பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கு பக்கம் அமைந்துள்ள மலையின் கிழக்கு நோக்கிய நீளம் 2 கி.மீ.வடக்கு பக்க அணை இணைப்பு, மலையின் 500 மீட்டர் துாரத்தில் வடக்கு பக்கம் மதகு அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக அணையின் அடிப்பகுதி அல்லது அதை ஒட்டிய பகுதியில் இருந்து தான் மதகு அமைக்கப்படும். இவ்வணையின் சிறப்பு, மதகு பகுதி சுமார் 500 மீட்டர் வடக்கு பகுதியில் தனித்து அமைக்கப்பட்டுள்ளது.பலமாக இரு மலைகளின் இடையில் அமைக்கப்பட்டுள்ள அணையின் சுவற்றை ஆற்றின் மீது கட்டப்பட்ட தடுப்பு சுவராகத்தான் கருத முடியும்.அணையின் வடமேற்கே அமைந்துள்ள மதகு பகுதியானது, இயற்கையாகவே தரை மட்டம் 136 அடி உயரத்திற்கு அமைந்துள்ளது. 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கினால் மட்டும் அமைந்துள்ள மதகிற்கு வேலை வரும்.

அணை உடையுமா

பலமாக கட்டப்பட்டு, வலுவாக இருக்கும் அணை உடையாது. கேரள அரசின் கூற்றுப்படி ஒருவேளை அணை உடையுமானால், சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் அடிக்கப்பட்டு அரபிக் கடலில் மூழ்குவர் என்பது தவறானது.இந்த ஆறு பள்ளத்தாக்கில் ஓடுவதாகும். அணை உடைந்து அணையின் மொத்த நீரும் வெளியேறுமானால், இவ்வணையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இடுக்கி அணைக்குத்தான் மொத்த நீரும் சென்று சேரும். முல்லைப் பெரியாறு அணையின் மொத்த கொள்ளவு 15.5 டி.எம்சி., எனவே உடைந்தால் ஏற்படும் நீர், இடுக்கி அணை (கொள்ளளவு 72 டி.எம்.சி.,)யை தாண்டி செல்லாது.



விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:58 am


கேரள அரசின் பொய் பிரசாரங்களும்தமிழகத்தில் நடந்த போராட்டங்களும்

பெரியாறு அணையில் நீர்த்தேக்குவது தொடர்பாக, 1979ம் ஆண்டு வரை எந்தப் பிரச்னையும் இல்லை. 1979ல் அணை பலமிழந்து விட்டதாக முதன் முதலில், கேரள தலைமை பொறியாளர் பரமேஸ்வரன் நாயர் புகார் கூறினார். அதன்பின் அது அரசியலாக்கப்பட்டு பிரச்னை பெரிதானது.

2000 ஜூன் 19ல் அணையை ஒட்டியுள்ள பகுதியில், தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி யானை பலியானது. அணைப்பகுதிக்கு செல்லும் மின்கம்பியால்தான், வனவிலங்குகள் பலியாவதாக பொய்ப் பிரசாரம் செய்து, அன்று முதல் அணைப்பகுதிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

2006ல் பெரியாறு அணையில் இருந்து 17 கி.மீ., தொலைவில் 2.1 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக கேரளா கூறியது. இதனைத் தொடர்ந்து, பூகம்பத்தால் அணை இடிந்து விடும் என்ற பொய்ப்பிரசாரத்தை கேரளா துவக்கியது.அதன்பின், பெரியாறு அணை உடைவது போலவும், அதனால் கேரள பகுதிகள் அழிந்து லட்சக்கணக்கான மக்கள் பலியாவது போலவும், கிராபிக்ஸ் மூலம் 'சிடி' வெளியிட்டு கேரள மக்களிடையே பீதியை கிளப்பியது.பெரியாறு அணை நீர்மட்டம் உயரும் போது, அணை உடைந்து விடும் என்று, அணையை ஒட்டியுள்ள வல்லக்கடவு பகுதி மக்களை மேடான பகுதியில் குடியிருக்க செய்து, அவர்களிடத்தில் பயத்தை கேரள அரசு ஏற்படுத்தியது.கேரள அரசின் இதுபோன்ற பல்வேறு பொய்ப்பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.கடந்த 2006ல் கேரள அரசு, பெரியாறு அணை தீர்ப்புக்கு எதிராக ஏற்படுத்திய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, வைகோ தலைமையில் மதுரையிலும், தேனியிலும் ஊர்வலம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கூடலுார் வரை நடைபயணம் நடந்தது.

2009ல் கேரளாவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து, கம்பத்தில் மறியல் நடந்தது.

2010ல் கேரளாவுக்கு செல்லும் 13 ரோடுகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மறியல் நடந்தது. இதனால், கேரளாவுக்கு வாகனப்போக்குவரத்து தடைபட்டது.

2011 டிசம்பரில் தமிழகத்தில் மிக தீவிர போராட்டம் நடந்தது, . டிச.,9ல் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கிராம மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.

டிச.,10ல் கூடலுார் பகுதி மக்கள் குமுளி மலைப்பாதையில் கேரளாவை நோக்கி முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். இதில் தடியடி, தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்தன. துப்பாக்கி சூடும் நடந்தது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த தொடர் போராட்டத்தால், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு, உணவுப் பொருட்கள் செல்லவில்லை.இதனால் கேரளாவில் விலைஉயர்ந்தது. ஒரு மாதத்திற்கு பின் நிலைமை சீரடைந்தது. இச்சம்பவத்திற்குப் பின், கேரளாவில் பெரியாறு அணைப்பிரச்னை குறித்த போராட்டங்கள் தொய்வு அடைந்தன.



விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:59 am

முல்லை பெரியாறு அணை வழக்கு: கடந்து வந்த பாதை

1979 ஆக.,: குஜராத் மாநிலத்தில் உள்ள மொர்பி அணை உடைந்து பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர். அைதத்தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை அருகே, 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அணை உடையும் ஆபத்து உள்ளதாக கேரள புவியியல் ஆய்வு மையம் தகவல்.

1979 அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறிய கேரள அரசு, நீர்மட்டத்தை 152ல் இருந்து, 136 அடியாக குறைத்தது. அணையில் பராமரிப்பு பணிகள் முடிந்த பின், மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் எனவும், கேரள அரசு கூறியது. இதற்கு தமிழகம் சம்மதித்தது. ஆனால், பராமரிப்பு பணி முடிந்தும் மீண்டும், நீர்மட்டத்தை உயர்த்த, கேரளா அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு வழக்கு. 136 அடியாக குறைத்ததால், மூழ்கும் நிலப்பரப்பு, 4,677 ஏக்கராக குறைந்தது. எனவே மூழ்காத மீதி நிலப்பரப்பில், கேளிக்கை விடுதிகளை கேரளா நிறுவியது. இருப்பினும் தமிழகம், 8,000 ஏக்கருக்கும் சேர்த்து வாடகை பணம் செலுத்தியது.

2006 பிப்., 26: இந்த வழக்கில், 142 அடியாக உயர்த்திக் கொள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. மராமத்து பணிகள் முடிவடைந்த பின், 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

2006 மார்ச் 18: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், அதை ஏற்க மறுத்த கேரள அரசு, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு திருத்த சட்டம் ஒன்றை இயற்றியது. இதை எதிர்த்து, தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.

2007 டிச., 19: அணை விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வரும், -கேரள முதல்வரும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்பு விவாதித்தனர்.

2010 பிப்., 18: அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு அமைத்தது.

2012 ஏப்., 25: பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக உள்ளதாகவும், சமீபத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் கூட அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வல்லுனர் குழு அறிக்கை.

2013 ஆக., 13: இறுதி விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைப்பு.

2014 மே 7: அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்; கேரள அரசு தன்னிச்சையாக கொண்டு வந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது; அணை பாதுகாப்பை உறுதி செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைப்பு என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

[thanks] தினமலர் [/thanks]



விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu May 08, 2014 8:49 pm

விவசாயிகள் காக்கப்பட வேண்டியவர்கள்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 30, 2014 2:51 pm

விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Fri May 30, 2014 5:58 pm

விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரியாறு அணை 1571444738 



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக