ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

+4
ரா.ரா3275
சதாசிவம்
ayyasamy ram
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by சிவா Fri May 30, 2014 3:27 am


வருகிற ஜூன் 15 ஆம் தேதிக்கு பின்னர் மத்திய அமைச்சரவையை விஸ்தரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த முறை தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவே டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 26 ஆம் தேதியன்று பதவியேற்றபோது தங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் டெல்லி சென்றிருந்தார்.

தேர்தல் வெற்றியை தொடர்ந்து மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக விஜயகாந்த் டெல்லி சென்றிருந்தபோது, மோடி விஜயகாந்தின் கன்னத்தை அன்புடன் தடவி கொடுத்து, அவரது மனைவி பிரேமலதா வந்துள்ளாரா? என்றும் கேட்டு, அவரது கடுமையான தேர்தல் பிரசாரத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

ஏமாற்றமும்...கோபமும்

இதனால் ஏகத்திற்கும் மகிழ்ச்சியடைந்த விஜயகாந்த், தேர்தலில் தங்கள் கட்சி தோல்வி அடைந்தாலும் பா.ஜனதாவுக்காக தமிழகம் முழுவதும் சென்று மோடியின் பெயரை பரப்பி பிரசாரம் செய்ததற்காகவேனும் தங்களுக்கு ஒரு இணையமைச்சர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார். தனது இந்த விருப்பத்தை அவர் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கின் காதிலும் போட்டுவைத்தார்.

தமிழகத்தில் ஜெயலலிதாவை எதிர்கொள்ள தங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி இருந்தால், உதவிகரமாக இருக்கும், கட்சியினரும் சோர்வடைந்துபோகாமல் தெம்புடன் இருப்பார்கள் என்று கூறி, மைத்துனர் சுதீஷுக்கோ அல்லது மனைவி பிரேமலதாவுக்கோ அமைச்சர் பதவி கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது.

ஆனால் 26 ஆம் தேதி மோடி அமைச்சரவை பதவியேற்றபோது விஜயகாந்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒருபுறம் போராட்டங்கள் நடைபெற்று வந்த சூழலுக்கிடையேயும், அவப்பெயர் வரும் என்று தெரிந்திருந்தும், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு டெல்லி வந்தார் விஜயகாந்த்.

ஆனால் அமைச்சரவை பதவியேற்புக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே அமைச்சரவையில் தேமுதிகவுக்கு இடமில்லை என்ற தகவல் விஜயகாந்திடம் சொல்லப்பட ஏகத்திற்கும் அப்செட்டானார். போதாகுறைக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான இருக்கை வரிசையும் வெகு பின்னால் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவர, டெல்லி வரை சென்றும் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தனது மனைவி மற்றும் மைத்துனரை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு, தனது கோபத்தையும், அதிருப்தியையும் பா..ஜனதா மேலிடத்திற்கு உணர்த்தினார்.

அன்புமணிக்கு ஆரம்பத்திலேயே 'நோ'

அதே சமயம் தர்மபுரியில் வெற்றிபெற்ற மற்றொரு கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாஸும் அமைச்சர் பதவிக்கு அடிபோட்ட நிலையில், அவர் முன்பு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற சில முறைகேடுகள் தொடர்பான வழக்கு நடைபெற்று வருவதால், அதனை சுட்டிக்காட்டி வழக்கிலிருந்து வெளியே வரும்வரை அமைச்சர் பதவிக்கு வாய்ப்பில்லை என்பதே ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால் அவர்கள் தரப்பில் ஏமாற்றத்தை கஷ்டத்துடன் விழுங்கிக்கொண்டனர்.

சமாதானப்படுத்திய பா.ஜனதா தலைவர்கள்

இந்நிலையில் விஜயகாந்தின் கோபத்தை உணர்ந்துகொண்ட பா.ஜனதா தலைவர்களும் பின்னர் அவரை சமாதானப்படுத்தி, தற்போது 45 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ளதாகவும், அடுத்தமுறை அமைச்சரவை விஸ்தரிக்கப்படும்போது அமைச்சர் பதவி தர பரிசீலிக்கிறோம். மோடியிடமும் இது தொடர்பாக பேசுகிறோம் என்ற வாக்குறுதியை அளித்ததாக கூறப்பட்டது.

இதனிடையே தமிழகத்திலும் பொன் ராதாகிருஷ்ணன் தவிர வேறு யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதுதவிர கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. மேலும் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு ஒரே ஒரு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, கனரக தொழில்துறை இலாகா ஒதுக்கப்பட்டதில் அக்கட்சிக்கும் அதிருப்தி. தங்களுக்கு வேறு நல்ல இலாகா ஒதுக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவிக்க, பின்னர் மோடி அவருடன் பேசி சமாதானப்படுத்தினார். அப்போது அடுத்த அமைச்சரவை விஸ்தரிப்பின்போது உங்களது கோரிக்கையை கவனத்தில் கொள்கிறேன் என உறுதியளித்தார். அதன்பின்னரே சிவசேனாவை சேர்ந்த ஆனந்த் கீதே கனரக தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதுபோன்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு கூடுதல் அமைச்சர் பதவியும், நல்ல இலாகாக்களும் வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே பா.ஜனதா தலைவர்கள் மோடியுடன் நடத்திய கலந்தாலோசனைக்கு பின்னர் ஜூன் 15 ஆம் தேதிக்கு பின்னர் அமைச்சரவையை விஸ்தரிப்பது என்றும், அப்போது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிகவுக்கு இணையமைச்சர் பதவி

குறிப்பாக தேமுதிகவை பொறுத்தவரை, விஜயகாந்த் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறாரோ, ( பெரும்பாலும் மைத்துனர் சுதீஷ்) அவருக்கு பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் ஏதாவது ஒன்றிலிருந்து ராஜ்யசபை எம்.பி.யாக்கி, இணையமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை என்றபோதிலும், அடுத்து வரவிருக்கிற தமிழக சட்டசபை தேர்தலில் அவருடனான கூட்டணியை தொடரவும், பா.ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற செய்ய அவரது பிரசாரம் கைகொடுக்கும் என்ற எண்ணத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ம.தி.மு.க.வுக்கு வாய்ப்பில்லை

மதிமுகவை பொறுத்தவரை அக்கட்சித்தலைவர் வைகோவை வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக ஆக்குவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறியபோதிலும், வைகோ அதனை நிராகரித்துவிட்டதால், அக்கட்சிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்பில்லை.

25 அமைச்சர்களை சேர்க்க முடிவு

இதனிடையே இந்த விஸ்தரிப்பின்போது 25 அமைச்சர்கள் கூடுதலாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இணையமைச்சர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது நிதித்துறை இலாகாவுடன் சேர்த்து கூடுதலாக பாதுகாப்புத் துறையையும் கவனித்து வருகிறார் அருண் ஜெட்லி. எனவே அவருக்கான பணிச் சுமையை குறைக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒருவர் தனியாக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by ayyasamy ram Fri May 30, 2014 5:55 am

ஊகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை....
-
பொருத்திருந்து பார்ப்போம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by சதாசிவம் Fri May 30, 2014 10:28 am

கேப்டன் காசு கொடுத்து இதை எழுதச் சொல்லியிருப்பாரோ... ஒரு சீட் கூட வாங்கத் தகுதியில்லை. இந்நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கேட்க என்ன தகுதி இருக்கிறது...அனைவரும் அவரவரின் குடும்பத்துக்கு மட்டுமே பாடுபட நினைக்கின்றனர்...இவரை நம்பி ஓட்டுப் போட்டால் அவ்வளவு தான் ...


சதாசிவம்
மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by ரா.ரா3275 Fri May 30, 2014 12:00 pm

மதிமுகவை பொறுத்தவரை அக்கட்சித்தலைவர் வைகோவை வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக ஆக்குவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறியபோதிலும், வைகோ அதனை நிராகரித்துவிட்டதால், அக்கட்சிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்பில்லை. wrote:

அரசியல் நெளிவு சுளிவுகளை அணைத்துகொள்ளாமல் அதிகார மையத்தைக் கைக்கொள்ள இயலாது.
அதிகார மையம் கையில் இல்லை என்றால் அத்தனைக் கொள்கைகளும் காவு வாங்கப்பட்டுவிடும்...
எத்தனை நேர்மையாய் இருந்தாலும் அரசியல் தேரை இழுக்க அதிகார வடக்கயிறு அவசியமோ அவசியம்...இதை வைகோ எப்போது உணர்வாரோ?... சோகம் 


மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? 224747944

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Rமோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Aமோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Emptyமோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Rமோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by கோ. செந்தில்குமார் Fri May 30, 2014 12:04 pm

ரா.ரா3275 wrote:
மதிமுகவை பொறுத்தவரை அக்கட்சித்தலைவர் வைகோவை வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக ஆக்குவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறியபோதிலும், வைகோ அதனை நிராகரித்துவிட்டதால், அக்கட்சிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்பில்லை. wrote:

அரசியல் நெளிவு சுளிவுகளை அணைத்துகொள்ளாமல் அதிகார மையத்தைக் கைக்கொள்ள இயலாது.
அதிகார மையம் கையில் இல்லை என்றால் அத்தனைக் கொள்கைகளும் காவு வாங்கப்பட்டுவிடும்...
எத்தனை நேர்மையாய் இருந்தாலும் அரசியல் தேரை இழுக்க அதிகார வடக்கயிறு அவசியமோ அவசியம்...இதை வைகோ எப்போது உணர்வாரோ?... சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1066654

இது திரு. வைகோ அவர்களுக்கு புரியணுமே...!

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by யினியவன் Fri May 30, 2014 12:07 pm

எங்க கேப்டனுக்கு வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு மந்திரி பதவி குடுத்து நிக்க வைங்க - அமர்க்களப் படுத்தி விடுவார்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by கோ. செந்தில்குமார் Fri May 30, 2014 12:09 pm

யினியவன் wrote:எங்க கேப்டனுக்கு வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு மந்திரி பதவி குடுத்து நிக்க வைங்க - அமர்க்களப் படுத்தி விடுவார்

இல்லை... இல்லை... பாகிஸ்தானுக்கே சென்று தீவிரவாதிகளை பிடித்து இந்தியாவிற்கு வருவார்...!

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by யினியவன் Fri May 30, 2014 12:12 pm

கோ. செந்தில்குமார் wrote:
யினியவன் wrote:எங்க கேப்டனுக்கு வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு மந்திரி பதவி குடுத்து நிக்க வைங்க - அமர்க்களப் படுத்தி விடுவார்

இல்லை... இல்லை... பாகிஸ்தானுக்கே சென்று தீவிரவாதிகளை பிடித்து இந்தியாவிற்கு வருவார்...!

மேற்கோள் செய்த பதிவு: 1066657
வைதேகி காத்திருந்தாள் அனுபவம் அவருக்கு கைகொடுக்குமேன்னு சொன்னே - ஒத்த வீச்சறுவாள வெச்சே துவம்சம் பண்ணிடுவாரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by கோ. செந்தில்குமார் Fri May 30, 2014 12:41 pm

யினியவன் wrote:
கோ. செந்தில்குமார் wrote:
யினியவன் wrote:எங்க கேப்டனுக்கு வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு மந்திரி பதவி குடுத்து நிக்க வைங்க - அமர்க்களப் படுத்தி விடுவார்

இல்லை... இல்லை... பாகிஸ்தானுக்கே சென்று தீவிரவாதிகளை பிடித்து இந்தியாவிற்கு வருவார்...!

மேற்கோள் செய்த பதிவு: 1066657
வைதேகி காத்திருந்தாள் அனுபவம் அவருக்கு கைகொடுக்குமேன்னு சொன்னே - ஒத்த வீச்சறுவாள வெச்சே துவம்சம் பண்ணிடுவாரு புன்னகை

தீவிரவாதிகளை பார்த்து நாக்கை கடிப்பார்...! கண்கள் சிவக்கும்...!! அப்புறம் அவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை ”மன்னிப்பு”...!!!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by பாலாஜி Fri May 30, 2014 1:25 pm

யினியவன் wrote:எங்க கேப்டனுக்கு வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு மந்திரி பதவி குடுத்து நிக்க வைங்க - அமர்க்களப் படுத்தி விடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1066656

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி? Empty Re: மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum