ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

+2
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
6 posters

Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by M.M.SENTHIL Wed May 28, 2014 12:36 pm

காலையில் நீங்கள் உறக்கத்திலிருந்து எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் நீங்கள் என்ன செய்தீர்கள், எங்கு சென்றீர்கள், நீங்கள் ஆற்றிய பணிகள் என்ன என்பதைச் சிறிது நேரம் எண்ணிப் பாருங்கள்! அப்பொழுதுதான் உங்களுடைய செயல்பாடுகளின் வலிமை புரியும். செயல்பாடுகளின் வலிமை ஒரு மனிதனை உயர்வான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. செயல்பாடுகளை முற்றிலும் ஒதுக்கிய மனிதர்கள் உயர்ந்ததாகச் சரித்திரமே கிடையாது. சரித்திரத்தில் அவர்கள் இடம் பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும், உண்மையான மகிழ்வை அவர்கள் பெற முடியுமா? எப்பொழுதும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, எந்தச் செயலும் செய்யாமல் ‘சும்மா’ அமர்ந்து கொண்டிருக்கும் சோம்பேறிகளுக்குக் கிட்டுமா?

திருமணமாகிப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அந்தத் தம்பதிகள் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்க வேண்டியது தானே! அதுதான் இல்லை. கணவனுக்கு இரண்டு ஏகரா வயல் இருக்கிறது. சொந்தமாக ஒரு வீடு உள்ளது. கணவனோ எட்டாம் வகுப்பில் மூன்று முறை ‘பல்டி’ அடித்தவன். மனைவி பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவள். கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான்.

அவன் எந்த வேலைக்கும் செல்வதில்லை. படு சோம்பேறி! சொந்தமான வயலையே கவனிக்கத் தெரியாமல், சும்மா இருப்பவன். அவனோடு சேர்ந்து அவனுடைய அருமையான விளைநிலமும் சோம்பேறியாகிவிட்டது. அரசுப் பணிக்கோ, அல்லது தனியார் நிறுவனத்தின் பணிக்கோ எதற்கும் செல்லக் கூடாது என்று மனைவிக்கு உத்திரவிட்டிருந்தான். அவளுடைய அழகு அவனைச் சந்தேகப்பட வைத்து விடும் என்பதால் இம்முடிவுக்கு அவன் வந்திருந்தான்.

குடித்துக் கும்மாளம் போடுவது, ஊரைச் சுற்றுவது என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தானே ஒழிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் துளிக் கூட எழவில்லை. அவன் மனைவியோ தன் அம்மா கொடுத்த பணத்தில் கூடை நிறைய காய்கறிகளை வாங்கி, வீதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். இவர்களுடைய வாழ்க்கை கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாமல் இப்படி இயங்கிக் கொண்டிருந்தது.

இப்படி மந்த கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கை என்றனும் ஒருநாள் சீர் குலைந்து போகலாம். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லலாம். இந்த நிலை வராமலிருக்க வேண்டுமானால், நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். வலிமை வாய்ந்த உறுதியான இரும்பை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தால்தான், இரும்பு பயன்தரத்தக்கதான பொருளாக அமைந்து விடும்.

அதே இரும்பைப் பயன்படுத்தாமல் இருந்தால், துருப்பிடித்துப் போய், இறுதியில் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். எனவே நீங்கள் சும்மா இருந்து கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்காமல், எதையாவது உருப்படியாகச் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால்தான் உங்களுக்கு அழகு! பூமியும் சூரியனும், சந்திரனும், மற்ற கோள்களும் ஒவ்வொரு விநாடியும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இவைகளின் இயக்கம் நின்று போனால் என்ன ஆகும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty Re: இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by M.M.SENTHIL Wed May 28, 2014 12:37 pm

‘பல கோடி ஆண்டுகள் நாங்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருக்கின்றோம். சிறிது நேரம் நாங்கள் இளைப் பாறுகிறோம்’ என்று அவைகள் நம்மிடம் கேட்டதுண்டா? இல்லை. இவைகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

எனவே மனம் தளராமல் நீங்களும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இயங்காமல் வாழ்க்கை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! எந்த நிலையிலும் நீங்களும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். இயங்காமல் சும்மா இருப்பது சோம்பேறிகளுக்கு அழகாக இருக்கலாம். ஆனால் உழைக்கும் எண்ணம் உள்ள உங்களுக்கு உடலை இயக்காமல் இருப்பது என்பது அழகாக இருக்காது. இயக்கம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை.

“என் அப்பா இறந்து விட்டார். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. வயதுக்கு வந்த தங்கை இருக்கிறாள்” என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிக் கொண்டு சோர்ந்து போய் மூலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள்! சுமாராக இயங்கிக் கொண்டிருந்த நீங்கள் இப்போது அதிகமாக இயங்க வேண்டும். உங்கள் தங்கையின் வருங்கால வாழ்க்கைக்கு நீங்கள் கடுமையாக உழைத்தே ஆக வேண்டும்.

அப்பா மறைந்து விட்டாரே! என்ற சோகத்தில் ஆழ்ந்து போய் எதையும் செய்யாமல் சும்மாவே நீங்கள் காலத்தைத் தள்ளினால் வானத்திலிருந்து திடீரென்று வந்து விடுவாரா? உங்கள் குடும்பத்தின் அவலநிலை மாறி விடுமா? சிந்தித்துச் செயல்படுங்கள்!

நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும். இப்படி உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டுமானால், ஒவ்வொரு நொடியையும் பாழ்ப்படுத்தாமல் நீங்கள் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக ஒரு சிலர், தங்களுடைய இயக்கத்தை வேறு திசையில் திருப்பி அதை நோக்கிச் செல்வார்கள். “தாயையும், தங்கையையும் நான் ஏன் கவனிக்க வேண்டும்?” என்ற எண்ணம் கொண்டவர்களாக குடும்பத்தை விட்டே ஓடிப் போய் விடுவார்கள். “நான் எப்படியும் முன்னுக்கு வந்து விடுவேன்” என்ற வைராக்கிய நெஞ்சோடு இயங்கிக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றியும் பெறுவார்கள். தன்னலத்தோடு இயைந்த உடல் இயக்கம் வாழ்க்கையில் மிக உயர்ந்த வெற்றியைத் தந்தாலும் அது மன நிறைவைத் தருமா?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty Re: இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by M.M.SENTHIL Wed May 28, 2014 12:37 pm

குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நலங்களைத் தராத உங்களுடைய இயக்கம், சுய நலத்தோடு இணைந்து விட்ட இயக்கம் அல்லவா? எனவே உங்களுடைய இடைவிடாத இயக்கம் உங்களுக்கு உயர்வைத் தருவதோடு, சமுதாயத்திற்கும் நலம் தருவதாக அமைய வேண்டும்.

நாட்டுப்பற்றை உண்டாக்கி மக்களை இயக்குவதற்கு ஒரு இயக்கமும் அக்காலத்தில் தோன்றியது. தியாகிகளும், நாட்டுப் பற்றுடைய மக்களும் சுதந்திரம் வேண்டித் தங்களை இயக்கிக் கொண்டிருந்த காரணத்தால்தான் நம்முடைய நாடு வெள்ளையர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. எந்த இயக்கமும் இல்லாமல் சும்மா இருந்திருந்தால் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்குமா?

உங்களை வறுமை வாட்டிய போதும், பிணிகள் உங்களைத் தாக்கிய போதும், முதுமை உங்களைத் தழுவிய போதும் நீங்கள் சற்றும் மனம் தளராமல் இயங்கிக் கொண்டே இருங்கள். இயந்திரம் இயங்கிக் கொண்டே இருந்தால்தான் சிறப்பு. இயந்திரம் நின்று விட்டால் தொழிலாளர்களுக்குப் பரபரப்பு.

நீங்களும் இயந்திரம் போன்று இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதி வரை நீங்கள் இயங்கிக் கொண்டே இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு மிதமிஞ்சிய வலிமையும் , ஆற்றலும் ஏற்படுவதோடு, நாளுக்கு நாள் அது கூடிக் கொண்டே போகும்.

விளைநிலங்களில் நாற்று நடுவதும், களையெடுப்பதும், அறுவடை செய்வதும் என்று இயங்கிக் கொண்டே இருந்தால்தான், விளைநிலம் நல்ல விளைச்சலைத் தருவதோடு, நிலமும் பொலிவுடன் விளங்கும். ‘பயிர் வைக்காத நிலம் பாழ்’ என்பது உங்களுக்குத் தெரியாத பொன்மொழியா?

மகாத்மா காந்தி இறுதிவரை இயங்கிக் கொண்டே இருந்தார். அவர் மட்டும் நாதுராம் கோட்சேவினால் சுடப்பட்டு மரணமடையா மல் இருந்திருந்தால் நூறு வயதினைக் கடந்திருப்பார். பெரியாரும், இராஜாஜியும் தொண்ணூறு வயதைக் கடந்தும், அந்தத் தள்ளாத வயதிலும் கொஞ்சம் கூடத்தளராமல் இயங்கிக் கொண்டே இருந்தார்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty Re: இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by M.M.SENTHIL Wed May 28, 2014 12:38 pm

பாரதப்பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் நூறு வயதைக் கடந்து, சாவின் விளிம்பில் இருந்த போதிலும் கூட, ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்தார். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக நடைபெறுகிற போது உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது. எனவே நாம் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். பாரதியாரும் இதனால்தான் ‘ஓடி விளையாடு பாப்பா!’  என்று கூறுவதோடு, மனிதா இயங்கு! இயங்கு!… ஓயாமல் இயங்கு!’ என்று முழங்குகிறார். இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளை நாம் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆறு கடலைச் சென்று அடைவதற்குள், அது எத்தனை தடைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. அந்த ஆற்றிலே ஓடும் நீர், மிகவும் தெளிந்த நீராக இருக்கும். எப்பொழுதும் வற்றாமல் ஓடிக் கொண்டே, இருக்கும் நதியை ஜீவநதி என்று கூறுகிறோம்.

கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி போன்ற ஆறுகள், புனிதமான நதிகள் என்ற பெயரைப் பெறுவதற்குக் காரணம், அவைகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பதுதான்! இயங்கிக் கொண்டிருக்கும் உடம்பு ஜீவனுள்ள உடம்பாகிப் பொலிவைப் பெறுகிறது.

வேலைவாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற வெறுப்பு உணர்வினாலும், வேறு சில காரணங்களாலும், சமுதாயத்தின் மேல் ஏற்பட்ட கசப்புணர்ச்சியினாலும், மனம் நொந்து போய், “சே! இது ஒரு வாழ்க்கையா?” என்று விரக்தி அடைந்து, வீட்டிலோ, தெருமுனையிலோ எதையோ பறிகொடுத்தவர்களைப் போல – பித்துப் பிடித்தவர்களைப் போல – எதையோ நீண்ட நேரம் பார்த்த படி சில இளைஞர்கள் காட்சியளிக்கிறார்கள். இவ்வாறெல்லாம் இல்லாமல் நீங்கள் உங்கள் உடலையும், உள்ளத்தையும் இயக்கிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் இந்த உடல் கெட்டு விடும்.

சுருக்கமாகச் சொன்னால் உங்கள் வாழ்க்கை என்ற திரைப் படத்திற்கு இறைவன் தான் தயாரிப்பாளர்! உங்களை இயக்கும் இயக்குநர் நீங்களே!

அமெரிக்க குடியரசுத் தலைவர் ஃபிராங்கிளின் ரூஸ்வெல்ட் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்ட நிலையிலும் சக்கர நாற்காலியில் இயங்கிக் கொண்டிருந்தார். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர், பெர்னாட்ஷா தன் வாழ்நாள் முழுவதும் இயங்கிக் கொண்டே இருந்தார்.

உங்களுக்குள்ளே  ஒரு மகத்தான சக்தி இருக்கிறது. இதை நீங்கள் வீணாக்காதீர்கள். எதையுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்து உங்கள் சக்தியைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் சக்கையாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். எனவே உங்களுடைய ஆற்றலை வெளிப் படுத்துவதற்காக நீங்கள் எப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேஇருங்கள்! உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் இன்ப மயமாக இருக்கும்!

சுருணிமகன் தாராபுரம் - Posted in Articles



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty Re: இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by Dr.S.Soundarapandian Wed May 28, 2014 4:33 pm

குதூகலம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty Re: இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by கிருஷ்ணா Thu May 29, 2014 8:57 am

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் 103459460 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty Re: இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by சிவா Thu May 29, 2014 3:07 pm

ஓடிக் கொண்டிருக்கும் நீர் தான் சுத்தமாக இருக்கும்!

இயங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே நம் மனதும் தெளிந்த நீரோடையைப் போல் இருக்கும்!

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி செந்தில்!


இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty Re: இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 3:13 pm

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் 3838410834 இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் 103459460 


இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் 224747944

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Rஇடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Aஇடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Emptyஇடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Rஇடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty Re: இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by விமந்தனி Thu May 29, 2014 3:57 pm

உங்களுக்குள்ளே  ஒரு மகத்தான சக்தி இருக்கிறது. இதை நீங்கள் வீணாக்காதீர்கள். எதையுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்து உங்கள் சக்தியைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் சக்கையாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். எனவே உங்களுடைய ஆற்றலை வெளிப் படுத்துவதற்காக நீங்கள் எப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேஇருங்கள்! உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் இன்ப மயமாக இருக்கும்!
 இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் 3838410834 இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் 3838410834


இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள் Empty Re: இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum