புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
336 Posts - 79%
heezulia
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
8 Posts - 2%
prajai
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10கோச்சடையான் - விமர்சனம்   Poll_m10கோச்சடையான் - விமர்சனம்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோச்சடையான் - விமர்சனம்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri May 23, 2014 5:12 pm

கோச்சடையான் - விமர்சனம்   VM_160807000000

நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், நாசர், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, நாகேஷ், ருக்மணி, ஆதி
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடல்கள்: கவிஞர் வாலி, வைரமுத்து
தயாரிப்பு: ஈராஸ் - மீடியா ஒன்
கதை, திரைக்கதை, வசனம்: கேஎஸ் ரவிக்குமார்
இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்



உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' '3டி' அனிமேஷன் திரைப்படம், ஒருவழியாக தடை பல கடந்து, உலகமெங்கும் இன்று முதல் கோலோச்ச களம் இறங்கியுள்ளது!

கறுப்பு வெள்ளை காலத்தில், திரையுலகில் அடியெடுத்து வைத்து, ஈஸ்ட்மென் கலர், கலர் என்று பல ஆண்டுகளை கடந்து இன்று 'சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம்' எனும் அனிமேஷன் உலகிலும் அதிரடியாக அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி, அத்தொழில்நுட்பத்தை தன் மகள் செளந்தர்யா ரஜினியின் இயக்கத்தின் மூலம் மிக பிரமாண்டமாக அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார். திரையுலகின் மேற்கண்ட நான்காவது காலக்கட்டத்திலும், தன் கோச்சடையான் ஸ்டைலால் தனி முத்திரையை பதித்திருக்கும் ரஜினி, இப்படத்தில் 'கோச்சடையான்', 'ராணா', 'சேனா' என்று மூன்று முகங்களை காட்டி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இனி கோச்சடையான் ரசிகர்கள் மனதில், வெற்றி சிம்மாசனம் போட்டு கோலோச்சும் விதம் குறித்து, கதை, களம் குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் பார்ப்போம்...

பல நூறு ஆண்டுகளாக அருகருகே இருக்கும் கோட்டைபட்டினம் நாட்டுக்கும், கலிங்காபுரி நாட்டுக்கும் பெரும் பகை. இருநாட்டு அரசர்களுக்கும் பரம்பரை பரம்பரையாக பெரும்பகை இருந்து வருகிறது... கோட்டைபட்டினம் நாட்டை சார்ந்த ராணா, சிறு வயதிலேயே, வீட்டை பிரிந்து காடு, மலை எல்லாம் கடந்து கலிங்காபுரிக்கு வந்து, தான் எந்த நாட்டை சார்ந்தவர் என்பதை காண்பித்து கொள்ளாமலேயே அந்த ஊர் அரசன் ஜாக்கி ஷெரப்பிற்கு, பெரியவனானதும் போர்படை தளபதியாகிறார். ஜாக்கியின் மகனும், இளவரசருமான ஆதியின் நட்பையும் பெறும் 'ராணா' ரஜினி, தங்கள் கோட்டைபட்டினம் நாட்டு போர் கைதிகளை அடிமைகளாக பிடித்து வைத்திருக்கும் கலிங்காபுரி மன்னர் ஜாக்கியிடமிருந்தும், மகன் ஆதியிடமிருந்தும் காபந்து செய்ய வேண்டி அவர்களையே கலிங்காபுரி போர் வீரர்களாவும் ஆக்கி பெரும்படையுடன் கோட்டைபட்டினத்தின் மீது படை எடுக்க போகிறார் ராணா ரஜினி. அவ்வாறு போன இடத்தில் கோட்டைபட்டினத்தின் இளவரசரும், தன் பால்ய சிநேகிதனுமான சரத்குமாரிடம், தான் இன்னார் என்பதை புரிய வைத்து., கோட்டைபட்டின வீரர்களை சொந்த நாட்டு போர்படையில் சேர்த்து, தானும் சேர்ந்து எஞ்சிய கலிங்காபுரி வீரர்களை மட்டும் கலிங்காபுரிக்கு ஓட விடுகிறார். இதற்கெல்லாம் காரணம், 'ராணா' ரஜினியின் அப்பா, 'கோச்சடையான்' ரஜினி, நயவஞ்சகமாக கோட்டைபட்டினம் அரசர், நாசரால் கொல்லப்பட்டதும், அவர் போட்டு சென்ற சபதமும் தான் என்று ப்ளாஷ்பேக் விரிகிறது...

அப்பா கோச்சடையான் ரஜினி விட்டு சென்ற பணியை மகன் 'ராணா' ரஜினி எப்படி சிரமேற்கொண்டு முடிக்கிறார். தளபதி 'கோச்சடையான்' புகழ் பிடிக்காமல் 'கோட்டைப்பட்டினம்' மன்னர் நாசர் அவரை கொல்லத்துணியும் அளவு செய்த சதி என்ன? கலிங்காபுரி மன்னர் ஜாக்கிக்கும், கோச்சடையானின் சபதத்திற்கும் என்ன சம்பந்தம்? அந்த சபதத்தை 'ராணா' ராஜினி எப்படி நிறைவேற்றுகிறார்? கோச்சடையானின் எதிரி, துரோகிகளை 'ராணா' ரஜினி எப்படி பழிதீர்க்கிறார்? தீபிகா படுகோன் யார்? அவரை 'ராணா' ரஜினி காதலித்து கைபிடிப்பது எப்படி? சரத்-ரஜினியின் பால்யகால சிநேகம், மாமன்-மச்சான் பந்தமாவது எப்படி? மூத்த மகன் சேனாவை மிஞ்சி கோச்சடையானின் இளைய மகன் 'ராணா' வீரனாக திகழ்வது எப்படி? எனும் எண்ணற்ற கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும், பில்டப்பாகவும் பதில் அளிக்கும் 'கோச்சடையான்' படத்தின் க்ளைமாக்ஸில் வந்து சேரும் 'சேனா' ரஜினி - 'ராணா' ரஜினியின் மோதலை 'கோச்சடையான்' பகுதி-2ல் பார்க்கலாம் என எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டு படத்தை முடிக்கிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம்(அதாங்க, அனிமேஷன்...) பிரமாண்ட செட்டுகள், பில்-டப்பான ஷாட்டுகள், ரஜினியின் ஸ்டைல் குதிரை சாகஸ என்ட்ரி, கப்பலில் குதிரையுடன் தாவி, தாவி ரஜினி போடும் சண்டைகள், ''மாறுவது ஒன்றே மாறதது'', ''சூரியனுக்கு முன் எழு, சூரியனையே வெற்றி கொள்ளலாம்'', ''வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்து கொள்ள வேண்டும்...'' உள்ளிட்ட 'பன்ச்'கள், ஆன்மிக அவதாரங்கள், என சகலத்திலும் 'கோச்சடையான்', 'ராணா' என ரஜினி ஜொலித்திருக்கிறார்.

ரஜினிக்கு இணையாக, தீபிகா படுகோனும் ஆக்ஷ்னில் பொளந்து கட்டியிருக்கிறார். அனிமேஷன் என்பதையும் தாண்டி சிற்பமாக அற்புதமாக ஜொலித்திருக்கிறார் அம்மணி!

சரத்குமார், நாசர் ஜாக்கி ஷெரப், ஆதி, ஷோபனா உள்ளிட்ட எல்லோரும் பாத்திமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து - வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!

'கோச்சடையான்' , 'சேனா', 'ராணா', 'செங்கோடகன்', 'வீர மகேந்திரா', பீஜூ மகேந்திரா, ரிஷி கோடம் என அரசர் காலத்து பாத்திர பெயர்களுக்கே பெரிதும் யோசித்து இருப்பார்கள் போலும்... பேஷ், பேஷ்!

மலை மீது பிரமாண்ட அரண்மனைகள், அரங்குகள், அழகிய நீர்வீழ்ச்சிகள், இன்னும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகள், பிரமாண்ட காலற்படை, குதிரைபடை, யானைபடை என்று நம்மை அரசர் காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றால் மிகையல்ல.

லதா ரஜினிகாந்தின் பின்னணி குரலில், படத்தின் டைட்டில் கார்டு திரையில் ஓடும் போதே ஒரு 'பெப்' தொற்றிக் கொள்கிறது. அது இந்தி நடிகர் அமிதாப்பின் முன்னோட்டம், கதை, களம் என தொடர்ந்து அது க்ளைமாக்ஸ் வரை நீங்காது இருப்பதில் 'கோச்சடையான்' ஜெயித்திருக்கிறான்!

சிறியவர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்., பெரியவர்களுக்கும் பிடிக்கும்... எனும் அளவில் இருக்கிறது 'கோச்சடையான்'!

ஆகமொத்தத்தில், ''கோச்சடையான்'' - ''கோலோச்சுகிறான் - இன்னும் கோலோச்சுவான்!!''

-- dinamalar


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri May 23, 2014 5:15 pm

இந்திய சினிமாவுக்கு புதிய வாசலைத் திறக்கப் போகும் படம் என்ற கட்டியங்கூறி வந்துள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தை விமர்சிப்பதற்கு முன்...

இத்தனை அழுத்தமான சரித்திரக் கதையை, எடுத்த எடுப்பில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் முழு நீள திரைப்படமாகவே தர முடியும் என்று நம்பி களமிறங்கிய சவுந்தர்யா ரஜினியை பாராட்டிவிடுவோம். ஆங்காங்கே கொஞ்சம் அமெச்சூர்த்தனம் இருந்தாலும் நல்ல முயற்சி. கோச்சடையான் இந்த தொழில்நுட்பத்தில் தான் நடித்தால் என்ன மாதிரி விமர்சனங்கள் எல்லாம் எழும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தும், ஒரு முன்னோடியாக நின்று நடித்த ரஜினி நிச்சயம் திரையுலகின் பெருமைதான்!

சரி, கோச்சடையான் கதைக்கு வருவோம்.

ராணா ஒரு பெரும் வீரன். கலிங்காபுரி நாட்டின் படைத் தலைவன். அவன் படையுடன் போன இடமெல்லாம் வெற்றிதான். கலிங்காபுரியின் பரம விரோதி நாடு கோட்டைப்பட்டினம். இந்த நாட்டை ஜெயித்தால்தான் வெற்றி பூரணமாகும் என மன்னன் ராஜ மகேந்திரனிடம் (ஜாக்கி ஷெராப்) கூறுகிறான் ராணா. அதை ஒப்புக் கொண்டு பெரும் படையோடு கோட்டைப்பட்டினம் நோக்கி கிளம்புகிறான் ராணா. செய்தி அறிந்து கோட்டைப்பட்டின படைகளும் இளவரசன் செங்கோடகன் (சரத்குமார்) மோதலுக்குத் தயாராகின்றன. இரு நாட்டுப் படைகளும் பெரும் சமவெளியில் மோதத் தயாராகின்றன. அதற்கு முன் ராணாவும் செங்கோடகனும் சந்திக்கிறார்கள். திடீரென நண்பா என கட்டித் தழுவுகிறார்கள்... ராணாவுடன் வந்த சேனையில் முக்கால்வாசி கோட்டைப்பட்டினப் படையுடன் சேர்ந்து கொள்ள, மீதிப் படை கலிங்காபுரிக்கு திரும்பி ஓடுகிறது. -இதுதான் கதையின் ஆரம்பம்...

ஏன் இப்படி நடந்தது... தான் விசுவாசமாக இருந்த, தன்னை நம்பிய மன்னனை மாவீரன் ராணா ஏன் இப்படி ஏமாற்றினான் என்பதெல்லாம் மீதி ஒருமணி நேரக் கதை. அதைத் திரையில் பாருங்கள்! படத்தின் கதை ரொம்ப எளிமையானது. ஒரு ஊர்ல ஒரு ராஜா..அவனுக்கும் அடுத்த நாட்டுக்கும் சண்டை வகைதான். ஆனால் அதில் பகைக்கும் பழிவாங்குதலுக்கும் காரணம் வைத்த விதம் நம்மை எளிதில் கவர்கிறது. 'நம்மை விட திறமையானவனை அருகில் வைத்துக் கொள்ளக்கூடாது' என்ற ஒரு மன்னனின் ஈகோ, அவன் ராஜ்யத்தை எந்த எல்லைக்குக் கொண்டுபோகிறது என்பதை அடுத்த பாதியில் கோச்சடையான் மூலம் சொல்லியிருக்கிற விதம் அருமை. ரஜினியின் தோற்றம், அவரது உடல் மொழி, சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட சட்டென்று முகத்தில் காட்டியுள்ள விதம் எல்லாமே பிரமிக்க வைக்கிறது. அந்த அட்டகாசமான அறிமுகக் காட்சியில் தொடங்கி, கடைசி காட்சி வரை ரஜினிதான் படத்தில் பிரதானமாய் நிற்கிறார். பல காட்சிகளில் மோஷன் கேப்சரிங் காட்சிகள் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், ராணா ரஜினியின் முகம், நடனம், சண்டை என அனைத்திலும் நிஜ ரஜினியைப் பார்க்க முடிகிறது. செங்கோடன் அரசவையில் ரஜினி முதல் முதலாக நுழையும் போது அவர் காட்டும் எக்ஸ்பிரசன்கள் இது நிஜ ரஜினியா அவது நடிப்பு பதிவாக்கமா என யோசிக்க வைக்கிறது. ரஜினி உருவத்தை வடிவமைத்ததில் தெரியும் சின்னச்சின்ன குறைகளைக் கூட சரிகட்டிவிடுகிறது அவரது காந்தக் குரல். ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, ஆதி ஆகியோரில், ஆதிக்கு மட்டும் மோஷன் கேப்சரிங் பக்காவாக செட் ஆகிறது. அடுத்தவர் நாசர். படம் முழுக்கவே வருகிறார், இவருக்கும் உடை, உருவ வடிவைப்பு பிரமாதமாகப் பொருந்துகிறது. ராணாவின் நண்பராக வரும் சரத்குமாருக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையே இல்லை. அதிலும் அவருக்கும் ருக்மணிக்கும் ஒரு பாட்டு வேறு. படத்தின் இன்னொரு ஆச்சர்யம் நாகேஷ். அவரது உருவம், குரல், நகைச்சுவை அனைத்துமே அச்சு அசலாக உள்ளன. அருமை.

இந்தப் படத்தின் இரு பெரிய தூண்கள் ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் - பின்னணி இசை மற்றும் கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதை - வசனம். கதையின் அடிப்படையே அரசியல் என்பதால், அரசியல் சாணக்கியத்தனம், அரசியல் முத்திரை வசனங்கள் எல்லாம் ஆங்காங்க சர்வ சாதாரணமாக வந்து விழுகின்றன. பார்வையாளர்கள் முறுக்கேறி கைத்தட்டுகிறார்கள். கோச்சடையான் காட்சிகளில் வரும் முடிச்சுகள் சுவாரஸ்யமானவை. சேனாவின் பாத்திரம் வரும்போது படம் முடிந்துவிடுகிறது. இரண்டாம் பாகம் பண்ணுவார்கள் போலிருக்கிறது. படத்தின் ஆகப் பெரிய குறை, படத்துக்கான மோஷன் கேப்சரிங் வேலைதான். அதை மறுப்பதற்கில்லை. ரஜினியின் கண்களில் இருக்க வேண்டிய உயிர்ப்பு இல்லை. பாத்திரங்களின் நடையில் இயல்பான வேகம் குறைந்து காணப்படுவது இன்னொரு குறை. ரஜினிக்கு அழகே அந்த வேக நடைதானே... அனைத்துப் பாத்திரங்களின் கால்களும் சற்று வளைந்த மாதிரியே இருப்பதை மோஷன் கேப்சரிங் குழு கவனிக்க மறந்தது ஏனோ? ரசிகர்களை விட தன் அப்பாவை அதிகம் பார்த்து ரசித்த சவுந்தர்யா எப்படி இதைக் கவனிக்காமல் விட்டார்? இந்தப் படத்தை அவதார் மாதிரி நிஜ ரஜினி பாதி, மோஷன் கேப்சரிங் பாதி என்று எடுத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு. ஆனாலும், ஒரு முழுப் படத்தை இந்தத் தொழில்நுட்பத்தில் எடுத்திருப்பது அசாதரணமானதுதான். அந்த வகையில் இந்திய சினிமா தனது பாரம்பரிய எல்லையைவிட்டு, புதிய தொழில்நுட்ப எல்லைக்குள் முதல் சில அடிகள் எடுத்து வைத்துள்ளது கோச்சடையான் மூலம்!

-- one india

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 23, 2014 9:43 pm

நீங்க பாத்தாச்சா ? புன்னகை

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat May 24, 2014 8:09 am

krishnaamma wrote:[link="/t110459-topic#1065436"]நீங்க பாத்தாச்சா ? புன்னகை

திரை அரங்கு, இணையம், திருட்டு DVD -- சினிமா பார்க்கும் வழக்கம் இல்லை..

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... எனும்போது சில சமயம் பார்ப்பதுண்டு புன்னகை புன்னகை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 24, 2014 10:21 am

soplangi wrote:[link="/t110459-topic#1065499"]
krishnaamma wrote:[link="/t110459-topic#1065436"]நீங்க பாத்தாச்சா ? புன்னகை

திரை அரங்கு, இணையம், திருட்டு DVD -- சினிமா பார்க்கும் வழக்கம் இல்லை..

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... எனும்போது சில சமயம் பார்ப்பதுண்டு புன்னகை புன்னகை புன்னகை
டப்பா படம் பார்க்கும் டப்படயானா நீங்க புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 24, 2014 8:47 pm

திரைவிமர்சனம் நல்ல எழுதி இருந்தாலும் என்னை பொறுத்தவரை படம் பார்த்த திருப்தி வரவில்லை.

எதிர் பார்ப்புடன் முதல் ஷோ பார்த்தோம் . படம் சிறிய படம் 1.50 மினிட் ஓடக்கூடியது அடிக்கடி பாட்டு வந்து நம்மளை கடுப்பு அடைய செய்கிறது. பாடல்களை குறைத்து கதையில் கவனம் செலுத்தினால் ஹாலிவுட் படம் வந்துருக்கும்.

கதையும் படத்தின் பின்னணி இசையும் தான் படத்தை காப்பற்றுகிறது


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 24, 2014 10:17 pm

கோச்சடையான் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்றால் அது மிகையாகாது!

பிரமிப்பு.. பிரமிப்பு.. பிரமிப்பு..! படம் துவங்கியது முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சியும் என்னைப் பிரமிக்க வைத்தது!

என்னுடன் மலாய்க்கார நண்பர்களையும் படம் பார்க்க அழைத்துச் சென்றிருந்தேன்! ஆங்கிலப் படங்களுக்கும் சற்றும் குறைவில்லாத படம் கோச்சடையான் என்றும், தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட படத்தை எடுக்கக்கூடிய அளவில் நிபுணத்துவம் பெற்ற திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தும் வியந்து போனார்கள்!

அவதார் படத்திற்கே அல்வா கொடுக்கும் அளவிற்கு கோச்சடையானின் காட்சியமைப்புக்கள் உள்ளது. அருண் கூறியதைப் போல் பாடல்களை அதிகம் சேர்த்துவிட்டார்கள், ஒரு பாடலுடன் நிறுத்தியிருக்கலாம், ஆனால் பாடல் காட்சிகள் அற்புதமாக உள்ளது.

எனக்கு ரஜினி படம் என்றாலே அல்ர்ஜி, ஆனால் கோச்சடையான் ரஜினி என்னைக் கொள்ளை கொண்டுவிட்டார்.

படத்தில் மேலும் என்னைக் கவர்ந்தது அமரர் நாகேஷ் அவருக்கே உரித்தான நகைச்சுவைக் காட்சியில் கலக்கியிருப்பது. அதே குரல், அதே நடிப்பு!

படத்தைப் பற்றிக் குறை கூறுபவர்களை பொருட்படுத்தாமல் ஒருமுறை திரையரங்கில் சென்று படம் பாருங்கள். நிச்சயம் மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்.

கதை, இசை, நடனம் அனைத்தும் அருமை, ஆனால் இவையனைத்தையும் விட ஒவ்வொரு காட்சிக்கும் உருவாக்கப்பட்டுள்ள காட்சியமைப்பு மனதைக் கொள்ளை கொள்கிறது!





கோச்சடையான் - விமர்சனம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 25, 2014 10:48 am

படத்தில் மேலும் என்னைக் கவர்ந்தது அமரர் நாகேஷ் அவருக்கே உரித்தான நகைச்சுவைக் காட்சியில் கலக்கியிருப்பது. அதே குரல், அதே நடிப்பு!
motion capturing தொழில்நுட்பத்தின் சிறப்பு இது தான் தல , இது போல அவர்களின் குரல் , முழு உடல் அசைவுகளையும் எடுத்து கணினியில் சேமித்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்

M.Pratheep
M.Pratheep
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 28/07/2013

PostM.Pratheep Sun May 25, 2014 8:29 pm

ஈகரையில் இது என் முதல் விமர்சனம் வார்த்தைகளில் பிழை இருந்தால் மன்னிக்கவும் நன்றி.


இரண்டு நாடுகள்  - கோட்டையபட்டினம், கலிங்கபுரி.


கோட்டயபட்டினத்தின் நாட்டின் அரசர் (நாசர்), அவரின் படைத்தளபதி கோச்சடையான் (ரஜினி), கோச்சடையான் நாட்டின் சிறந்த வீரர் மற்றும் படைத்தளபதியாய்  பல நாடுகளை கைபற்றி அவரது நல்ல உள்ளம் மற்றும் வீரத்தினால் நாட்டின் மக்கள் மற்றும் அனைவரின் உள்ளத்தில் இடம் பிடிக்கிறார். இது அரசராகிய நாசருக்கு பிடிக்கவில்லை, கோச்சடையான் மீது பொறாமை கொள்கிறார். தக்க சமயத்தில் எதிர் நோக்கி இருக்க, கோச்சடையான் தன் நாட்டின் போர் வீரர்களை எதிரி நாட்டில் உயிர் காப்பற்றி கொள்ள விட்டு வந்ததற்காக தேச துரோகி என்று (நாசர்) அரசர் கூற அவரின்  நயவஞ்சத்தினால் கோச்சடையானுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக, கோச்சடையானின் இளைய மகனான ராணா (அதுவும் ரஜினி தான்), கலிங்கபுரி அரசர் (ஜாக்கி ஷெராப்) மற்றும் கோட்டயபட்டினத்தின் அரசரை (நாசர்) பழி வாங்குகிறார், இது தான் படத்தின் கதை ஆகும். இதற்கு நடுவில் தீபிகா படுகோன் ராணாவின் காதலும் வந்து போகிறது.


கோச்சடையான் - விமர்சனம்   Deepika+padukone+in+kochadaiyan

இது தமிழ் சினிமாவிற்கு புதிய கதை இல்லை என்றாலும், காட்சிபடுத்திய விதம் அதுவும் 'மோஷன் காப்ச்சரிங் அனிமேஷன்' தொழில்நுட்பத்தில் ரஜினியை கொண்டு எடுத்தது ஒரு புதிய படம் பார்த்த அனுபவம், திருப்தியை தருகிறது.


நம்ம ஊரு பொறுத்தவரை 85, 120 குடுத்து ஹாலிவுட் படத்த தமிழ் டப்பிங்ல பாத்து ரசிச்சுட்டு, அத நம்ம ஊரு படத்தோட ஒப்பிட்டு பேசுறது வழக்கமா போச்சு. ஒரு படம் எப்படி உருவாகுதுன்னு நாம யாரும் யோசிக்கறதே இல்ல, அத பத்தி தெரிஞ்சுக்க இங்க யாருக்கும் ஆர்வமும் இல்ல. ஆனால் யோசிக்காமல் குறை சொல்ல ஹாலிவுட் படம் பார்க்கும் சில கூட்டம் சுற்றுகிறது.

அவதார், டின் டின் போன்ற படங்கள் எடுக்க மிக பொருட்செலவும், அனுபவம் வாய்ந்த டைரக்டர் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமேரோன் ஆகியோர் இருந்தனர்.

அந்த மாதிரி படங்கள பாத்துட்டு, கோச்சடையனோட ஒப்பிட்டு பார்த்தல் அழகல்ல. கோச்சடையானின் பட்ஜெட் அந்த ஹாலிவுட் படங்களின் முன்பு தூசி. மேலும் இப்படம் ஒரு வருடத்தில் எடுத்து முடிக்கப்பட்டது. படத்தில் காட்சிகளில் முழுமையான VFX  செய்யப்படவில்லை என்றாலும், ஒரு புதிய முயற்சியின் அடையாளமாக உருவாக்கப்பட்ட கோச்சடையான், நம் தமிழ் நடிகர், நடிகை, முக்கியமாக அமரர் 'நாகேஷ்' அவர்களை அனிமேஷன் வழியாக படத்தில் கண்முன் கொண்டுவந்தது நாம் எதிர்பார்க்காத ஒன்று. இந்த படம் எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. எதற்குமே ஒரு தொடக்கம் வேண்டும் அல்லவா, அதே போன்று கோச்சடையான் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி, அந்த முயற்சி நிச்சயம் நன்றாகவே இருந்தன. இந்த வயதில் கூட ரஜினிக்கு சினிமா மீது உள்ள ஆர்வம், அதற்காக எடுத்து கொண்ட முயற்சி வியக்க வைக்கிறது.

காரணம் ஒரு 'மோஷன் காப்ச்சர் அனிமேஷன்' படம் எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சற்று சினிமா மீது ஆர்வம் உள்ளவர்கள்  அதை பற்றி கொஞ்சம் தேடி படித்து பாருங்கள்,


கோச்சடையானில் ரஜினி நடிக்கும் காட்சி
செட் போட்டு ஆட்கள் நடுவில் நடிப்பது வேறு, அதுவே இது போன்ற மோஷன் காப்ச்சர் அனிமேஷன் பொறுத்த வரை, ஒரு அறையில் அதற்கென்று தனியாக வடிவமைக்க பட்ட ஆடை அணிந்து நடிக்கும் காட்சிகள் அனைத்தையும் கற்பனை செய்து நடிக்க வேண்டியது ஒரு சவாலான விஷயமாக அமையும்.

இந்த மோஷன் காப்ச்சரிங் எடுத்துகொண்டால் உடல் அசைவு, முக பாவனைகள், என்ன உடை அணிந்து இருப்பது, எந்த இடத்தில காட்சி இருக்க வேண்டும், அதை எப்படி உருவாக்குவது, காற்று வீசுமா, மழை பெய்ய வேண்டுமா, அப்படி எடுத்து கொண்டால் அவை அனைத்தையும் எப்படி ஒரு காட்சியாக ஒன்றிணைத்து இருக்கணும்னு கற்பனை செய்து அதை கணினி கொண்டு உருவாக்குவது சற்று கடினமான விஷயம் தான் - சொல்லி முடிப்பதற்கே நமக்கு சற்று குழப்ப கூடிய இந்த விஷயத்தை, ஒரு படமாக எடுப்பது எந்த அளவு சிரமம் மிகுந்தது என்பதை நாமும் சற்று சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.


ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளாமல்  'மொக்கை' என்று சொல்லிவிட்டு போவது முட்டாள் தனம், சினிமாவை விரும்பும் என்னை போன்ற அனைவருக்கும் இனி இந்த படம் வர இருக்கும் அனிமேஷன் படங்களுக்கு ஒரு தொடக்கமாக இருக்கும் என்பதை நிச்சயம் அறிந்திருப்பார்கள்.

படத்தில்  ரஹ்மானின் சில பாடல் பிடித்தது, ரெசுல் பூ குட்டியின் சவுண்ட் இன்ஜினியரிங்  அருமை, படத்தில் கேரக்டர்களின் முகத்தில் உணர்ச்சியற்று இருப்பது போல் தோன்றின, தீபிகாவின் முகத்தை அவ்வளவு நன்றாக CG செய்யப்படவில்லை, சரத்குமாரை குரல் வைத்து தான் கண்டுபிடிக்க முடிந்தது. எது எப்படி இருந்தாலும் ரஜினி வரும் அணைத்து காட்சியும் கை தட்டல், விசில் சப்தம் கேட்டுகொண்டு ஆரவாரமாக படம் பார்க்க அருமையாகவே இருந்தன.  


சாதரணமாக இருக்கும் என்று நினைத்து சென்ற எனக்கு, இந்த படம் ஏமாற்றவில்லை இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும்  சபாஷ் போட வைக்கிறது. கோச்சடையான் படத்தை உருவாக்க கஷ்டபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.

படத்தை நிச்சயம் குடும்பத்துடன் சென்று பார்த்து வரலாம்.


என் ரேடிங் :  8/10

என் ப்ளாக் முகவரி : www.maduraitamilan.in பிடித்தால் ப்ளாகில் தொடரவும்

நன்றி : மதுரை தமிழன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 3:18 am

கோச்சடையான் - சினிமா விமர்சனம்

கோச்சடையான் - விமர்சனம்   QD6Nsm

தன் அப்பாவுக்கு அவப்பெயர் சுமத்தி, மரண தண்டனை அளிக்கப்பட காரணமாக இருந்தவர்களை வீழ்த்த மகன் ஆடும் போர் தாண்டவமே 'கோச்சடையான்’!

சிம்பிளாக, 'மோஷன் கேப்ச்சர்’ உத்தியில் ரஜினியை வைத்து ஓர் 'அம்புலி மாமா’ சினிமா!

இந்தியாவின் முதல் 'மோஷன் கேப்ச்சர்’ படத்தில் ரஜினியை 'நடிக்க’வைத்து கவனம் ஈர்த்ததற்கும், நாகேஷ§க்கு 'உயிர்’ கொடுத்து பரவசமளிக்கும் அனுபவத்தின் சாம்பிள் காட்டியதற்கும், தமிழ் மன்னர்களின் கலாசாரத்தை சினிமாவின் நவீன உத்தியில் பதிவுசெய்ததற்கும்... அறிமுக இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வினுக்கு வாழ்த்துகள்! ஆனால், படத்தின் ஆன்மாவான 'சலனப் பதிவாக்க’ உத்தியில்... சர்வதேசத் தரத்தை எட்டிப் பிடிக்க, இன்னும் பயிற்சியும் முயற்சியும் அதிஅவசியம்.

அநாதை சிறுவன் ராணா கலிங்கபுரியில் தஞ்சமடைந்து, போர் வித்தைகள் பயில்கிறான். மாபெரும் வீரனாக உருவாகி, நாட்டின் போர்ப்படைத் தளபதி ஆகிறான். கலிங்கபுரியில் அடிமைகளாக இருக்கும் கோட்டைப்பட்டினத்து வீரர்களைக் கொண்டு ஒரு படை அமைக்கிறான். கலிங்கபுரியின் பரம்பரை விரோதியான கோட்டைப்பட்டினம் மீது படையெடுத்துச் செல்கிறான். தொடரும் திருப்பங்களில் இரு நாட்டு மன்னர்களுமே ராணாவைக் கொல்லக் குறிவைக்கிறார்கள். ராணா ஏன் இரு மன்னர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டும்... இருபுறத் தாக்குதல்களில் இருந்து தப்பித்தானா என்பதே படம்!

மன்னன், தளபதி, துரோகம், பழிவாங்கல்... என பழக்கமான கதைக்கு, அட்டகாச அரண்மனைகள், ஆயிரக்கணக்கில் மோதும் போர் வீரர்கள், பாயும் குதிரைகள், பிளிறும் யானைகள்... என பிரமாண்ட கேன்வாஸ் அமைத்திருக்கிறது புதிய தொழில்நுட்பம்!

'ஆஹா..! படத்தில் ரஜினியின் நடிப்பு அட்டகாசம், ஸ்டைலில் பட்டையைக் கிளப்பிவிட்டார், தீபிகாவின் அழகும் ஆக்ஷனும் ஆசம்’ என்றெல்லாம் குறிப்பிட முடியாதே 'கோச்சடையான்’ விமர்சனத்தில்! இவர்கள் யாரும்தான் படத்தில் நடிக்கவில்லையே. சம்பந்தப்பட்டவர்களின் உடல் மொழிகளைக்கொண்டு 'அனிமேஷன் இன்ஜினீயர்கள்’தானே நடிகர்களின் 'நடிப்பை’ப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

மறைந்த கலைஞர் நாகேஷ் மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் கற்பனையைச் சாத்தியப்படுத்தியது அழகு. ஆனால், ஹாலிவுட் அனிமேஷன், சி.ஜி., 'மோஷன் கேப்ச்சர்’ படங்களை 'ஜஸ்ட் லைக் தட்’ பார்த்துப் பழகிய கண்களுக்கு 'கோச்சடையானின்’ சலனப் பதிவாக்கம் ஏமாற்றமே. ரஜினியின் ஸ்டைல், ஆக்ஷன், ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி.... என முகச் சுருக்கம் முதல் உடல்மொழி வரை ப்ளாஸ்டிக் எக்ஸ்பிரஷன்கள். 'மோஷன் கேப்ச்சரிங்’ என்றால் வெறும் நடை, ஓட்டம் உள்ளிட்ட அசைவுகள் மட்டுமா..? புருவச் சுழிப்பு, உதட்டின் நெளிவு, நெற்றிச் சுருக்கம் வரையிலும் உள்ளடக்கியதுதானே! அவ்வளவும் ப்ளாஸ்டிக் எக்ஸ்பிரஷன்களாக இருப்பது நெளியவைக்கிறது.

ஆனால், இரு நாட்டு மன்னர்களுக்கும் 'ராணா’ கொடுக்கும் ட்விஸ்ட் செம அசத்தல். கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதையும், ரஹ்மானின் பின்னணி இசையுமே நம்மை படத்துக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன.

தன் குரலால், திரையின் அனிமேஷனுக்கு அத்தனை ஜீவன் சேர்த்திருக்கிறார் ரஜினி. நாகேஷ§க்கு குறும்புக் குரல் கொடுத்த 'நாகேஷ்’ கிருஷ்ணமூர்த்திக்கு ஸ்பெஷல் சபாஷ்.

'மயில் நடன’ தீபிகா, தந்தையைக் கொல்ல வரும் மர்ம நபரிடம் காட்டும் அதிரடி, மரண மேடையில், 'கடவுள்கிட்ட பத்திரமாப் போயிட்டு வாங்கப்பா’ என்று தந்தையை வழியனுப்பும் மகனின் சென்டிமென்ட், க்ளைமாக்ஸில் இரண்டாம் பாகத்துக்கான ட்விஸ்ட் என 'ராஜா-ராணி’ கதையிலும் கரகர மசாலா!

ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியின் கிளாசிக் ஆல்பம் இது. ஆனால், முணுக்கென்றால் 'ஒலியும்-ஒளியும்’ போடும் அவ்வளவு பாடல் காட்சிகள் அலுப்பு!

ரஜினி, தீபிகாவின் முகங்கள் ரியல் பொலிவுடன் இருக்க, நாசர், சரத்குமார், ருக்மணி, ஜாக்கி ஷெராஃப், ஆதி ஆகியோரை குரலை வைத்தே 'ஓ... இவரா?’ என்று 'கன்ஃபார்ம்’ செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதே போல ரஜினி, தீபிகா உருவங்களின் டீட்டெய்லிங்கை படத்தின் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்வதுதானே நியாயம்? ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரஜினி பளிச்சென்று இருக்க, சுற்றிலும் நிற்பவர்கள் 'மொழுமொழு’ பொம்மை கணக்காக ஆக்ஷன், ரியாக்ஷன் எதுவும் இல்லாமல் 'மிக்ஸர்’ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களே! 'சோட்டா பீம்’ கேரக்டர்களே இதைவிட எக்ஸ்பிரஸ்ஸிவ்வாக இருப்பார்களே!

காட்டாற்று வெள்ளத்தில் ராணா அடித்துச் செல்லப்படும், வெள்ளை மயிலோடு தீபிகா நடனமாடும், கோச்சடையானின் ருத்ர தாண்டவம், குதிரையில் பறக்கும் ராணா... எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளில் மட்டும் விசிலடிக்கவைக்கிறது '3டி’ விஷ§வல்! 'ப்ளாஸ்டிக் எக்ஸ்பிரஷன்களை’ மறந்து படத்தோடு ஒன்றச் செய்வதில் ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு செய்திருப்பது 'மாஸ்டர் பீஸ்’ சாதனை.

'எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு. முதல் வழி மன்னிப்பு’, 'வாய்ப்புகள், அமையாது; நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்’... என்ற வசனங்களே, 'ரஜினி பன்ச்’ இல்லாத குறையை சரிகட்டுகின்றன.

புதிய தொழில்நுட்பம் மூலம் இந்திய சினிமாவில் 'சலனத்தை’ உருவாக்க முயன்றிருக்கிறான் 'கோச்சடையான்’. முனைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள். ஆனால், 'டெக்னிக்கல் பிரில்லியன்ஸே’ இல்லாமல் ஒரு டெக்னிக்கல் சினிமா ஏன்? அசாத்தியமான விஷயங்களை அசரடிக்கும் வகையில் சாதித்திருக்க வேண்டும். அது மிஸ்ஸிங்!

- விகடன் விமர்சனக் குழு



கோச்சடையான் - விமர்சனம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக