ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியும் என்றால் முடியும்!

Go down

முடியும் என்றால் முடியும்!  Empty முடியும் என்றால் முடியும்!

Post by krishnaamma Tue May 27, 2014 10:31 am

பிரசிடெண்ட் வீட்டு முன், சைக்கிளை நிறுத்தி கீழிறங்கிய கதிர்வேலு, கேட்டைக் கொஞ்சமாய் திறந்து, மெல்ல உள்ளே நுழைந்தான்.உள்ளே, இடது புறமிருந்த சிறிய பூந்தோட்டத்தில், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலைக்காரன் இவனைக் கண்டதும், ''என்ன கதிர், ஏது இந்தப் பக்கம்,'' என்று கேட்டான்.''ஒரு சோலியா பிரசிடெண்ட்டு அய்யாவப் பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்; அய்யா இருக்காரா?''''இருக்காரு... போய்ப்பாரு.''

அந்தப் பழைய கால வீட்டின், அகலமான வாசற்படியை மிதித்து, உள்ளே நுழைந்த கதிர்வேலு, விஸ்தாரமான ஹாலின் மத்தியில் தொங்கிக் கொண்டிருந்த பிரமாண்ட ஊஞ்சலில் அமர்த்தலாய் அமர்ந்து, வேலைக்காரனை காரசாரமாய்க் கடிந்து கொண்டிருந்த பிரசிடெண்ட்டைப் பார்த்து, ''அய்யா வணக்கமுங்க,'' என்று, கும்பிட்டான்.

தன், 'கடு கடு' முகத்தை, சட்டென்று இயல்புக்கு மாற்றிக் கொண்ட பிரசிடெண்ட், ''வாப்பா கதிரு; நல்லாயிருக்கியா? ஆளைப்பாத்து ரொம்ப நாளாகுதே; ஊருலதான் இருக்கியா,'' என்று கேட்டார். அதே நேரம், அவரது கண்கள், அந்த வேலைக்காரனை போகச் சொல்லி ஜாடைகாட்ட, அவனும் நாசூக்காய் நகர்ந்தான்.

''நல்லா இருக்கேனுங்கய்யா,'' என்ற கதிர்வேலுவிடம், ''என்ன கதிர், திடீர்ன்னு பிரசிடெண்ட் ஞாபகம்... சோலி ஏதும் இல்லாம, நீ வர மாட்டியே,'' என்று கேட்டு, சிரித்தார்.
''வந்து... ஒரு விஷயத்தை ரொம்ப நாளா உங்க கிட்டப் பேசணும்ன்னு நெனச்சிட்டிருந்தேங்கய்யா...'' என்று நீட்டி முழக்கினான்.

''இன்னிக்கு நல்ல நாளுதான்... பிரதோஷம். பேசிடேன்,'' என்று சொல்லி சிரித்தார்.
''வந்து... நம்ம கிராமத்துல இருந்து சரவணம்பட்டிக்கு போற வழில, ஒரு தரைப்பாலம் இருக்கு பாருங்க...''
''ஆமா; நாப்பாடி பாலம். அதுக்கென்ன இப்ப?''
''அய்யா, உண்மையில அதுக்குப்பேரு, நாப்பதடி பாலம். அதாவது, நாப்பதடி நீளம் இருக்கறதினால, அப்படியொரு பேரு,'' என்று, விளக்கினான் கதிர்வேலு.

''சரி; இத சொல்லத்தான் இவ்வளவு தூரம் என்னை தேடிட்டு வந்தியா?'' என்று கேட்டு, பக்கத்திலிருந்த செம்புத் தண்ணீரை எடுத்து அண்ணாந்து, 'க்ளக் க்ளக்' என்று, பருகினார் பிரசிடெண்ட்.
''அதில்லங்கய்யா... அந்த நாப்பாடி பாலம், கொஞ்சம் மழை பெஞ்சா கூட போதும், ஜனங்க பாலத்தில நடக்க முடியாத படி, பாலத்து மேலேயே தண்ணி ஓட ஆரம்பிச்சிடுது. அப்பறம் அது வடியற வரைக்கும், ஜனங்க, 10 கி.மீ., தூரம் சுத்தி, ஆவாரம்பாளையம் வழியாத்தான் போக, வர வேண்டியிருக்கு.''

''அட... அது தரை பாலமப்பா. பாலத்துக்கு ரெண்டு பக்கமும் மேடாவும், பாலம் பள்ளத்திலயும் இருக்கு. அப்படியிருக்கும் போது, மேட்டுல விழற தண்ணி எங்க போகும்... பாலத்து மேலதானே ஓடும்...''
''அய்யா, அது உண்மையில தரைப் பாலமே இல்லங்கய்யா. எங்க பெரிய அம்மாயி சொல்லும்... அவங்க காலத்துல, அதாவது, ஒரு அறுவது, எழுவது வருஷத்துக்கு முன், அந்தப் பாலத்துக்கடியில இருந்த கண்ணு வழியா, இந்தப் பக்கம் பூந்து, அந்தப்பக்கம் போற மாதிரி வழியே இருந்திச்சாம். தண்ணி வராத காலத்தில, வண்டி வாசிக கூடப் போய் வருமாம்.''

''அது சரி; வருஷம் என்னாச்சு... இந்த எழுவது வருஷத்துல, ஒவ்வொரு மழைக்கும் கொஞ்சம் கொஞ்சமா மண்ணு சேர்ந்து, பாலத்தோட அடிக்கண்ணு மூடியிருக்கும்,'' என்று, சலிப்புடன் சொன்னார் பிரசிடெண்ட்.
''அப்ப அடியில பாதை இருக்குன்னு ஒத்துக்கறீங்கல்ல?''அவசரமாய்க் கேட்டான் கதிர்வேலு.
''அடத் தெரியுமப்பா; நானும்  கேள்விப் பட்டிருக்கேன். எங்க அப்பத்தா சொல்லி யிருக்கு.''
''அய்யா... அந்த அடைப்பத் திறந்து விட்டா என்னன்னு கேட்கத்தான் வந்துருக்கேங்கய்யா,'' என்று, தான் வந்த விஷயத்தை சொல்லி நிறுத்தினான் கதிர்வேலு.

ஆனால், அதைக்கேட்ட பிரசிடெண்ட், ஏதோ நகைச்சுவையை கேட்டு விட்டதுபோல், 'பக பக'வென சிரித்து, ''அடப் போப்பா காலங்காத்தால வந்து தமாஷ் செய்றியே... அதெல்லாம் நடக்கற காரியமா,'' என்றார்.
''ஏன் நடக்காதுங்கறீங்க?''

''பின்னே என்னப்பா... பாலம் இப்ப தரையோட தரையா சமமாகிக் கிடக்கு. அதுக்கடியில இருக்கற கண்ணைத் தேடணுன்ம்னா மொதல்ல ரெண்டு பக்கமும் இருக்கிற மேட்டைக் கரைக்கணும். அதுவே, கிட்டத்தட்ட மலையைக் குடையுற வேலை. அதுக்கப்புறம் அந்தக்கண்ணுல அடைச்சுக் கெடக்கற மண்ணை நோண்டணும். நீயே சொன்னே, பாலம் நாப்பதடின்னு... அப்புறம் எப்படிப்பா?''

அந்தப் பேச்சைத் தொடற ஆர்வமில்லாதவராய் எழுந்து, சோம்பல் முறித்தார் பிரசிடெண்ட்.
''அய்யா, நான் பாலத்துக்கு அடில இருக்கற பாதையைக் கண்டுபிடிச்சு, அந்த அடைப்பையெல்லாம் நீக்கி, அதுல வண்டி வாசிக போக, வர செய்யணும்ன்னு சொல்லல அதுக்கு இப்ப அவசியமுமில்ல.''
''சரி, நீ இப்ப என்னதான் வேணும்கறே?''

''பக்க வாட்டு மேடுகளை கரைச்சு, அடிக்கண்ணை லேசாக் குடைஞ்சு, தண்ணி போறா மாதிரி ஏற்பாடு செய்திட்டா போதும்ங்கறேன். எவ்வளவு பெரிய மழை பெய்ஞ்சாலும், பாலத்து மேல தண்ணி ஓடாது. ஜனங்க, 10 கி.மீ., தூரம் சுத்தறது மிச்சமாகும். எல்லாத்தையும் விடக் கொடுமை என்னன்னா... சரவணம்பட்டி ஸ்கூலுக்கு போற பிள்ளைகளெல்லாம் மழைக்காலத்துல ஸ்கூலுக்குப் போகாம, வீட்டோட கெடக்குதுக; அதுக படிப்பெல்லாம் கெடுது,''என்றான்.அவன் பேச்சில் ஓரளவுக்கு அர்த்தம் இருப்பதைப் புரிந்து கொண்ட பிரசிடெண்ட், வாக்குவாதத்தை நிறுத்தி, யோசிக்க ஆரம்பித்தார்.

சில நிமிடங்களுக்குப் பின், ''சரிப்பா. நீ சொல்றதுல ஏதோ கொஞ்சம் சாத்தியக்கூறு இருக்கறாப்புல தெரியுது. அடுத்த தடவ, நான் நம்ம தொகுதி எம்.எல்.ஏ.,வைப் பாக்கும் போது, இதப்பத்தி பேசி ஏற்பாடு செய்யச் சொல்றேன்.''

''ம் ஹூம்... அதெல்லாம் கதைக்கு உதவாதுங்கய்யா. அவங்க டெண்டரு, சாங்ஷனுன்னு இழுத்தடிப்பாங்க; காரியமாகாது. அதனால, நான் என்ன சொல்றேன்னா... நம்ம கிராமத்துல மொத்தம் முன்னூறு வீடுக இருக்கு. ஒரு வீட்டுக்கு ஒரு ஆளுன்னு வந்தாப் போதும். நாமளே களத்துல இறங்கி, மேட்டைக் கரைக்கலாம், மண்ணைக் குடையலாம்,'' என்று சொன்ன கதிர்வேலுவின் கண்களில், நம்பிக்கை ஒளி வீசியது.
''பச்... மறுபடியும், நீ நடக்காததை பத்தித்தான் பேசறே. எவன்யா வருவான்... அவனுங்க பொழப்ப விட்டுட்டு எவனாவது பொது வேலைக்கு வருவானா... உனக்குத்தான் வேற வேலையில்ல,''எரிச்சலை அடக்கிக் கொண்டு சொன்னார் பிரசிடெண்ட்
''முயற்சி செய்து பாக்கலாமுங்கய்யா.''

''அப்ப நீயே போய்க் கூப்பிட்டுப் பாரு. எத்தனை பேர் வர்றாங்கன்னு வந்து சொல்லு. இப்பக் கிளம்பு,'' என்று, கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய், அவனை வெளியேற்றினார் பிரசிடெண்ட்.
அன்றிலிருந்து, கண்ணில் படும் அத்தனை பேரிடமும் பாலத்தை பற்றி சொல்லி, தன்னோடு வந்து ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்தான் கதிர்வேலு. வீடு வீடாக ஏறி இறங்கினான். கோவில், சந்தை, சினிமா என, ஜனங்கள் கூடுகிற எல்லா இடங்களுக்கும் சென்று, ஒருவர் பாக்கி இல்லாமல், அத்தனை பேரிடமும் கிட்டத்தட்ட கெஞ்சினான்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முடியும் என்றால் முடியும்!  Empty Re: முடியும் என்றால் முடியும்!

Post by krishnaamma Tue May 27, 2014 10:33 am

'பச்... வயசாயிடுசுப்பா, நம்மால முந்தி மாதிரி, எந்த வேலையும் செய்ய முடியறதில்ல; வெய்யல்ல நின்னாலே தலைசுத்தறது...' என்றார் ஒருவர்.

'என்ன கதிரு, எதிர்காலத்துல எலக் ஷன்ல நிக்கிற மாதிரி ஏதாவது உத்தேசமா...' என்றார் மற்றொருவர்.
'ஏம்பா... உன் வீட்டு சோத்தைத் தின்னுட்டு, ஊருக்கு வேலை செய்ய போறேங்கறியே உனக்கு மூளை கீளை பெசகிப் போச்சா...' என்றார் இன்னொருவர்.

இப்படி ஆளுக்கு ஒன்று கூற, எதிர்மறை பதில்களைக் கேட்டு, நொந்து போன கதிர்வேலுவின் மூளைக்கு, திடீரென்று அந்த யோசனை தோன்றியது. 'கரெக்ட்... இந்த ஊர்ப்பசங்களுக்கு பாடம் புகட்ட அதுதான் சரியான வழி...' என்று நினைத்துக் கொண்டான்.அடுத்த மாதத்தில் ஒரு நாள் —ஊருக்குள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த போஸ்டரைப் படித்த மக்களில், பலர் வாய் விட்டுச் சிரித்தனர். சிலர் நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

'வருகிற ஞாயிறன்று காலை, 7:00 மணியளவில், நம் நாப்பாடி பாலம் சீரமைப்புப் பணி துவங்க உள்ளது. இப்படிக்கு, கதிர்வேலு...' என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

'என்ன செய்யப் போறான்... வெளியூர்ல இருந்து ஆளுங்கள புடிச்சிட்டு வருவானோ... உள்ளூர் பயலுகளே ஒருத்தன் கூட வர மாட்டேனுட்டானுக. இதுல எப்படி வெளியூர் ஆளுக வருவானுங்க...'
'சொந்த செலவுல செய்வானோ! அப்படிச் செய்யணும்ன்னா ஏகப்பட்ட செலவாகுமே... அவன்கிட்ட ஏது அத்தனை காசு... அவனே வேலை வெட்டி இல்லாத பய...' 'அட உடுவே. ஞாயத்துக்கிழம பாத்துடுவோம்; அவன் அப்படியென்ன கிழிக்கறான்னு...' என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டனர்.

பிரசிடெண்ட்டுக்கு கோபமாகவும், அதே நேரம் அதிர்ச்சியாகவும் இருந்தது. 'இந்தப் பய, இம்புட்டு தைரியமா போஸ்டரடிச்சு ஒட்டியிருக்கான்னா... பின்னாடி ஏதாச்சும் சமாச்சாரம் இருக்கும்...' என்று நினைத்து, பொறுமிக் கொண்டிருந்தார்.ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியிலிருந்தே வேடிக்கை பார்க்க, கிராமத்து மக்கள், நாப்பாடி பாலத்தருகே கூடத் துவங்கினர்.

ஏழு மணி வாக்கில், 'சர் சர்' என, மூன்று லாரிகள் வந்து நிற்க, அதில், முதல் லாரியின் முன்புறமிருந்து குதித்து இறங்கிய கதிர்வேலு, லாரியின் பின்புறத் தடுப்பை இறக்கி, அதனடியில் ஒரு ஸ்டூலை வைத்தான். பின், லாரிக்குள்ளிருந்து பத்துப்பதினைந்து பேர் இறங்கினர். அதில், ஒரு சிலரை, கதிர்வேலுவே தூக்கி, கீழே இறக்கி விட்டான்.

அதே போல, மற்ற ரெண்டு லாரிகளில் இருந்து ஆட்கள் இறங்க, அவர்களைப் பார்த்து, வேடிக்கை பார்க்க திரண்டிருந்த கூட்டம், 'கொல்'லென்று, சிரித்தது.

காரணம்... அவர்கள் எல்லாம் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஊனமுற்றோர். அவர்களில் பலருக்கு கை மற்றும் கால் ஊனம்; சிலருக்கு பார்வையே இல்லை; ஒன்றிரண்டு பேர்களால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை.
'இதென்ன கொடுமையாயிருக்கு... இவங்கள வெச்சு என்ன செய்ய முடியும்...'
'ஹே...ஹே...ஹே... சின்னப்புள்ளத் தனமாவுல்ல இருக்கு...' என்று கூட்டத்தினர் கேலியும், கிண்டலும் செய்து கொண்டிருந்தனர்.

கடைசியாய் வந்து நின்ற லாரியிலிருந்து மண்வெட்டி, கடப்பாரை, இருப்புச் சட்டி இத்யாதிகள் இறங்க, அவற்றையெல்லாம் எடுத்து, மாற்றுத் திறனாளிகளிடம் கொடுத்தான் கதிர்வேலு.
அவற்றை வாங்கிக் கொண்ட அவர்கள், 'மளமள'வென்று, வேலையில் இறங்கினர். தங்களால் இயன்றவற்றை சிறிதும் தயக்கமில்லாமல், சிரித்த முகத்துடன் செய்ய ஆரம்பித்தனர். ரெண்டு மணி நேரத்தில், பாலத்தின் பக்கவாட்டு மேடு, கால்வாசி காணாமல் போயிருந்தது.

''டேய்... இவங்களாள என்ன செய்ய முடியும்ன்னு நெனைச்சோம். ஆனா, பெரிய வேலையை சுளுவாச் செய்றாங்களேடா,'' என்றான் கூட்டத்தில் ஒருவன் ஆச்சரியத்துடன். மாற்றுத் திறனாளிகளின் வேலைத் திறனைப் பார்த்து, கூடியிருந்த அனைவரும், மூக்கில் விரலை வைத்து பிரமித்து நின்றனர்.
தகவல் பிரசிடெண்ட்டுக்கு போனது. வந்து பார்த்தவர், சற்று ஆடித்தான் போனார். 'அடடே... இது சுளுவான வேலையாத்தான் இருக்கும் போலிருக்கே... நாமதான் பெருசா நெனச்சிட்டோம். இப்ப என்ன செய்றது... இந்தக் கதிருப்பய சாதிச்சுட்டான்னா, பேரு வாங்கிடுவானே... அப்புறம் நமக்கெதிரா தேர்தல்ல நின்னாலும் நிப்பான். எதையாவது செஞ்சு, இதைத் தடுத்தாகணும்; இல்லாட்டி மொதலுக்கே மோசம் வந்துடும்...'என்று நினைத்த அவரின் குறுக்குப் புத்தி, வழக்கம் போல், தாறுமாறாய் யோசிக்கத் துவங்கியது.

அந்த நேரம் பார்த்து, கால் சூம்பிப்போன ஒரு மாற்றுத்திறனாளி, ஒற்றைக் காலை இழுத்து இழுத்து நடந்தபடி மண் சட்டி சுமந்து வந்தவர், சட்டென மயங்கி விழ, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தன் பிரலாபத்தை ஆரம்பித்தார் பிரசிடெண்ட்.

''அடப் பாவிப் பயலே... குருவி தலைல பனங்காயை வெச்சா அது தாங்குமாடா. பாவம் அவனே ஒத்தக் காலுடன், நடக்கமாட்டாமக் கெடக்கான். அவனை ஏமாத்திக் கூட்டிட்டு வந்து, இப்படி கொடுமைப் படுத்தறியே இது நியாயமா,''என்றார் கோபத்துடன்.
அதைச் சற்றும் கண்டு கொள்ளாமல், கதிர்வேலு அந்த மனிதருக்கு முதலுதவி செய்தான். ஐந்தே நிமிடத்தில் கண் விழித்த அந்த மாற்றுத் திறனாளியிடம், ''போதும்ங்கய்யா. உங்களால முடியல போலிருக்கு; நீங்க வேணா போயி கொஞ்சம் ஓய்வெடுங்களேன்,'' என்று, தணிவான குரலில் சொன்னான்.

''ஆரு சொன்னது என்னால முடியலன்னு; நானென்ன இந்தூரு ஆளுங்களாட்டம் சோம்பேறியா, இல்ல சோப்ளாங்கியா,''என சொல்லி, அவர், தன் மண்சட்டியைத் தூக்கிக் கொண்டு முன்னைவிட வேகமாக, காலை, இழுத்து இழுத்து நடந்தார். அவரைப் பார்க்க, கதிர்வேலுக்கு பெருமிதமாயிருந்தது.
மதிய உணவுக்குப்பின், மீண்டும் வேலை தொடர்ந்த போது, பாலத்தின் பக்கவாட்டு மேட்டுப்பகுதி, முக்கால் வாசி, கரைந்து போயிருந்தது.
மவுனமாக அந்த இடத்தை விட்டு அகன்றார் பிரசிடெண்ட்.

மாலை நெருங்கும் வேளையில், பாலத்தின் அடிக்கண்களை அடைத்திருந்த மண்ணைக் குடையும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. வெற்றியை நெருங்கி விட்டோம் என்கிற உத்வேகம், அந்த மாற்றுத் திறனாளிகளை மேலும் ஊக்கப்படுத்த, இருள் கவ்வும் முன்பே, அடிக்கண்களில் ஒரு கண்ணின் அடைப்பு நீக்கப்பட்டது. அதன் வழியாக எல்லாரும் உள்ளே புகுந்து, மறு வழியே வருவதை கவனித்த பொது மக்கள், உணர்ச்சி மயமாகினர்.

''அடச்சே... இது ஆவுற காரியந்தான்னு நம்ம மண்டைக்குப் புரியாமப் போச்சே... கை, கால் இயங்காத இவங்க அதச் செஞ்சு காட்டிப் புரிய வெச்சிட்டாங்களே... இதுக்கு மேலேயும் நாம பாத்துக்கிட்டு இருக்கறது நியாயமில்ல,'' என்று, உரக்க சொன்ன ஒருத்தன், வலிய தன்னையும் அப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ள முனைய, அவனைத் தொடர்ந்து பலர் களமிறங்கினர். கதிர்வேலுவின் கண்களில், நீர் துளிர்த்தது.
தொடர்ந்து எல்லாருமாய்ச் சேர்ந்து பணியாற்ற, இரவுக்குள், எல்லா அடைப்புகளும் நீக்கப்பட்டு, நாப்பாடி பாலம் புது வடிவமாகி மிளிர்ந்தது.

சொல்லி வைத்தாற் போல், மறுநாள் பெய்த பேய் மழையால், நாப்பாடி பாலத்தை எதுவும் செய்ய முடியவில்லை. கிராம மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து, பாலத்தின் மேல் நின்று, அதனடியில் நான்கு கண்களுக்குள்ளும் புகுந்து ஓடும் நீரை, மனமகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.
இப்போதெல்லம் அந்த கிராமத்தில், மாற்றுத் திறனாளிகளை யாரும் மரியாதைக்குறைவாக நடத்துவதில்லை. பஞ்சாயத்தில் கூட அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
மழைக்காலங்களில், பாலத்தின் மேல் தண்ணீர் ஓடுவதில்லை. யாரும் சரவணம்பட்டி கிராமத்திற்கு, ஆவாரம்பாளையத்தை சுற்றிப் போவதில்லை. சரவணம்பட்டி பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மழைக்காலங்களிலும் வகுப்புக்குப் போய் வருகின்றனர்.

முகில் தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்?
» சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
» ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும் ?
» செசெ வின் முடியும்-நம்பி முடியும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum