ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வப் புலவர் சேக்கிழார்!

3 posters

Go down

தெய்வப் புலவர் சேக்கிழார்! Empty தெய்வப் புலவர் சேக்கிழார்!

Post by சாமி Mon May 26, 2014 7:30 am

தெய்வப் புலவர் சேக்கிழார்! OqyG3kQTLKwrOxSzXyXW+sekkizhaar

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வம்மலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி


சேர, சோழ, பாண்டிய மண்டலங்களோடு கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் ஆகியவற்றுடன் ஐந்து மண்டலங்களாகப் பண்டைத் தமிழகம் விளங்கிற்று. இது தென்னார்க்காடு மாவட்டத்தின் வட பகுதி தொடங்கி, சித்தூர் மாவட்டம் வரை விரிந்து பரந்து விளங்கியது. சோழமன்னர் ஆட்சியில் சயங்கொண்ட சோழமண்டலம் என வழங்கப்பெற்றது. பாலாறு பாய்ந்து வளம்பெருக்கும் இந்நாடு சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருபத்துநான்கு கோட்டங்களாகப் பகுக்கப்பட் டிருந்தது. சோழமன்னன் கரிகாற்பெருவளத்தான் தொண்டை மண்ட லத்தை வளப்படுத்த நாற்பத்தெண்ணாயிரம் வேளாளர் குடும்பங் களை இந்நாட்டில் குடியேற்றினான்.

இமவான் மகளாகிய பார்வதிதேவி தொண்டை நாட்டில், காஞ்சி மாநகரில், கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தார். பெருமான் அவரோடு திருவிளையாடல் புரியத் திருவுளங் கொண்டு கம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டுவருமாறு செய் தருளினார். அம்பிகை அதனைக் கண்டு சிவலிங்கம் கரைந்து சிதை யாமலிருத்தற்பொருட்டு அச்சிவலிங்கத்தைத் தம் இரு கைகளாலும் மார்போடு தழுவினார். பெருமான் மனங் குழைந்தவராய் அம்மை யின் தனத் தழும்பும் கைவளைத் தழும்பும் தன்மீது தோன்ற வெளிப்பட்டு அருள் புரிந்ததோடு அம்பிகையிடம் இரு நாழி நெல் லளித்து, அதனைக் கொண்டு அனைத்து அறங்களையும் செய்து கொண்டு இத்தலத்தில் இருக்க எனக் கூறி மறைந்தார். அம்பிகை அந்நெல்லை அந்நாட்டு வேளாளர்களிடம் அளித்து, விளைத்துப் பல்வகை அறங்களையும் பாங்குறச்செய்து வந்தாள்.
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தெய்வப் புலவர் சேக்கிழார்! Empty Re: தெய்வப் புலவர் சேக்கிழார்!

Post by விமந்தனி Mon May 26, 2014 9:06 am

தெய்வப் புலவர் சேக்கிழார் பற்றி மேலும் அறிந்துகொள்ள தொடரட்டும் உங்கள் தொடர்!


தெய்வப் புலவர் சேக்கிழார்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெய்வப் புலவர் சேக்கிழார்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெய்வப் புலவர் சேக்கிழார்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தெய்வப் புலவர் சேக்கிழார்! Empty Re: தெய்வப் புலவர் சேக்கிழார்!

Post by சாமி Tue May 27, 2014 10:59 pm

தொண்டை மண்டல வேளாண் குடியினர் ஏரால் எண்டிசை யிலும் புகழ்வளர்த்ததோடு வாய்மையிலும் வழுவாது வாழ்ந்து வந்தனர். முற்பிறப்பில் தன் மனைவியை வஞ்சித்துக் கொன்ற அந்தணன் ஒருவன், இப்பிறப்பில் வணிகனாய்த் தோன்றி, செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தான். இறந்த அவன் மனைவி தன்னைக் கொன்ற கணவனை வஞ்சித்துக் கொல்லும் நோக்கோடு பேயாய் அவனைப் பின் தொடர்ந்து வந்தாள். வணிகன் பழையனூரை அடைந்தபோது, அப்பேய், அழகிய பெண் உருவத்தோடு அவன் முன் தோன்றி, அவன் மனைவியாய் அவனோடு உடனுறைய முற்பட்டது. வணிகன் ஐயுற்று அவளை ஏற்க மறுத்தான்.

அப்பெண் அவ்வூர் வேளாண் அவையினரைக் கூட்டி முறையிட்டாள். வேளாளர், வணிகனைச் சமாதானப்படுத்தி, அவளால் ஏதேனும் தீங்கு நேரின் நாங்கள் அனைவரும் தீப்பாய்ந்து உயிர் துறப்போம் என வணிகனைத் தெருட்டி உடனுறையச் செய்தனர். அன்றிரவு பேய்ப்பெண் வணிகனைக் கொன்று மறைந்தாள். மறுநாள் காலை வணிகன் பேய்ப் பெண்ணால் இறந்த செய்தி அறிந்து, தாங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில் அனைவரும் தீப்பாய்ந்து உயிர் துறந்தனர். தொண்டை நாட்டு வேளாண்குடியினர், வாய்மையில் வழுவா தவர் என்பதற்கு இது சான்றாகும்.

தொண்டைநன்னாடு அருளாளர்களையும் அறிஞர்கள் பலரை யும்தமிழுலகத்திற்குத் தந்த பெருமையுடையது. தொண்டைவள நாட்டில் விளங்கிய இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான புலியூர்க் கோட்டத்தில் குன்றைவள நாட்டின் தலைநகராக விளங்கியது குன்றத்தூர். இவ்வூர் சென்னையைச் சார்ந்த போரூருக்கு அருகிலுள்ளது.

குன்றத்தூரில், சோழ மன்னன் கரிகாலனால் குடியேற்றப்பட்ட கூடல்கிழான், புரிசைகிழான் போன்ற வேளாளர் குடும்பங்களில் சேக்கிழார் குடியும் ஒன்றாகும். சோழமன்னர்களால் நன்கு மதிக்கப்பட்ட இக்குடியில், அருண்மொழித்தேவரும் அவரது தம்பியார் பாலறாவாயரும் தோன்றினார்கள். பெற்றோர் தம்பிள்ளைகட்கு இராஜசோழனின் இளமைப் பெயராகிய அருண்மொழித்தேவர் என்ற பெயரை யும், ஞானசம்பந்தரின் திருப்பெயராகிய பாலறாவாயர் என்ற பெய ரையும் வைத்துள்ளமை அவர்கட்கு இராஜராஜன் மீதும் ஞானசம்பந் தர் மீதும் கொண்டிருந்த பத்திமையை வெளிப்படுத்தும்.

(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தெய்வப் புலவர் சேக்கிழார்! Empty Re: தெய்வப் புலவர் சேக்கிழார்!

Post by Dr.S.Soundarapandian Sat Jun 28, 2014 1:55 pm

தெய்வப் புலவர் சேக்கிழார்! 103459460 பாடகன் அன்பு மலர் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தெய்வப் புலவர் சேக்கிழார்! Empty Re: தெய்வப் புலவர் சேக்கிழார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum