ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

+4
Dr.சுந்தரராஜ் தயாளன்
சதாசிவம்
விமந்தனி
சாமி
8 posters

Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by சாமி Sun May 25, 2014 9:13 am

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூவம் சுத்தமாக இருந்ததாகவும், அதில் படகுகள் சென்றதாகவும் ஒரு கற்பனையான நம்பிக்கை சமீபகாலமாக வலுவடைந்து வருகிறது. கூவத்தைச் சுத்தப்படுத்த ரூ. 3,833 கோடியில் மற்றுமொரு புதிய திட்டத்தை அரசு இப்போது தொடங்கியுள்ள நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூவம் ஆறு எப்படி இருந்தது என்று சிந்திக்க இது நல்ல தருணம்தான்.

கூவம் கடைசியாக எப்பொழுது சுத்தப்படுத்தப்பட்டு, நல்ல தண்ணீர் ஓடியது என்று தேடினால், ஆதாரங்கள் மிகவும் குழப்பமாக உள்ளன. 1780-களை ஒட்டி காஞ்சீவரம் பச்சையப்ப வள்ளல், கூவம் நதியில் குளித்ததாகக் கதைகள் உண்டு. கோமலீஸ்வரன் பேட்டையில் அவர் வாழ்ந்தார். அப்போது கூவம் ஆறு இந்தப் பகுதிக்கு அருகில் இருந்ததால், உயர்குடி மக்கள் அந்த இடத்தில் வாழ்ந்துவந்தனர். இப்போதும்கூட அப்பகுதியில் ஒரு தெருவுக்குப் பச்சையப்பர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு அரசியல் கட்சியை நினைவுபடுத்துவது போல, அந்தப் பெயர் சி.பி.எம். தெரு என்று துரதிருஷ்டவசமாகச் சுருக்கப்பட்டுவிட்டது.

கூவம் ஆற்றின் துறையில் உள்ள கோமலீஸ்வரன் கோயிலில் ஒரு சடங்கு இருக்கிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் கடவுளை வழிபடுவதற்கான மலர்கள் பரிசல் மூலம் கொண்டுவரப்படும் அந்த விழாவுக்குப் பரிசல் திருவிழா என்று பெயர்.

இந்தக் கோயிலுக்கு எதிர் கரையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் 1730-களில் நெசவாளர் குடியிருப்பு உருவாக்கப்பட்டது. இந்த இடம் தாழ்வான பகுதி, ஆற்றில் வெள்ளம் வந்தபோதெல்லாம் வழக்கமாகக் கரைப் பகுதி மூழ்கியிருக்கிறது. இதன் காரணமாக டாம்ஸ் ரோட்டில் (அணைத் தெரு), அடிக்கடி கரை எழுப்பப்பட்டதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூவம் வறண்டுவிட்டது. 1815-ல் கொடிக்கம்பம் இருக்கும் பகுதி அருகே, கடலோடு கூவம் கலக்கும் இடத்தில் மணல்மேடு உருவாகி ஆற்றை அடைத்ததால், அப்பகுதி தோண்டப்பட்ட திறந்துவிடப்பட்டது.

அதன் காரணமாக மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டன. கடல் பகுதி திறந்துவிடப்பட்டதால், விஷமுள்ள கடல் பாம்புகள் கூவம் ஆற்றுக்குள் வர ஆரம்பித்தன. அடுத்த இரண்டு மாதங்களில் 18 பேர் கடல் பாம்புகள் கொத்தி இறந்தனர். அந்தப் பகுதி மீண்டும் மணலால் மூடப்பட்ட பிறகு, கூவம் ஆற்றில் தேங்கியிருந்த ஒரே திரவம் சாக்கடைத் தண்ணீராக மட்டுமே இருந்தது.

அப்போது அந்த ஆறு, பண்டைய ரோமின் முதன்மை சாக்கடையான குளோகா மேக்சிமாவுடன் ஒப்பிடப்பட்டது. 1861-ல் வெளியான ஓர் ஆய்வறிக்கை வேப்பேரி, திருவல்லிக்கேணியிலிருந்து பல ஆண்டுகளாக வெளியேறிய கழிவுநீரில் திடக் கழிவு அதிகம் இருந்ததால், கூவம் ஆறு பின்னோக்கிப் பாய ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறது.

அதிகச் சாக்கடைநீர் வந்ததால் 1870-ல் நாற்றமடிக்கும், பொறுத்துக்கொள்ள முடியாத கழிவுநீர்க் குட்டையாக அது இருந்திருக்கிறது. 1871-ல் வெளியான சுகாதார ஆணையரின் அறிக்கை, "புறக்கணிக்கப்பட்ட, உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும் கூவம் ஆறு, சென்னை நகரத்துக்கு அவப்பெயரைப் பெற்றுத் தரும் வகையில் இருக்கிறது" என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டி இருந்தது. அதே அறிக்கை, நம்பிக்கையளிக்கும் ஒரு குறிப்புடன் முடிவடைந்திருந்தது - ஆற்றிலிருந்து கழிவுநீரை மடைமாற்றுதல், கரைகளைச் சுத்தப்படுத்துதல், ஆற்றுப்படுகைகளை ஆழப்படுத்துதல் போன்றவற்றுக்கான திட்டங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன என்று.

அதேநேரம், பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியிருந்தது. அது சென்னை பல்கலைக்கழகத்துக்குப் பின்னால் கூவம் ஆற்றுடன் இணைந்தது. இந்தக் கால்வாய், தொடர் மடைகளின் வழியாக இயங்கியது. அந்த மடைகளில் கடைசியானதைச் சென்னை பல்கலைக்கழகத்துக்குப் பின்னே பார்க்கலாம். கூவத்தில் படகைச் செலுத்தலாம் என்பதற்குத் தவறான அடையாளமாக அது சுட்டிக்காட்டப்படுகிறது.

1883-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுஅவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூவத்தைச் சுத்தப்படுத்திய முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இன்னும் ஒரு சில ஆண்டுகளில், கழிவுநீரிலிருந்து முற்றிலும் விடுபட்டுக் கூவம் சுத்தமாகிவிடும்" என்று அது பிரகடனப்படுத்தி இருக்கிறது. அதே வாசகத்தைத்தான் 143 வருஷங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்! தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: வள்ளி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty Re: கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by விமந்தனி Mon May 26, 2014 9:25 am

சாமி wrote:1883-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுஅவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூவத்தைச் சுத்தப்படுத்திய முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இன்னும் ஒரு சில ஆண்டுகளில், கழிவுநீரிலிருந்து முற்றிலும் விடுபட்டுக் கூவம் சுத்தமாகிவிடும்" என்று அது பிரகடனப்படுத்தி இருக்கிறது. அதே வாசகத்தைத்தான் 143 வருஷங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!
இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருப்போம்.
(அதுசரி, கூவத்தை சுத்தப்படுத்தி விட்டால், கழிவு நீரை எவ்வாறு வெளியேற்றுவது? அதற்க்கு தனி வாய்க்கால் வெட்டுவார்களா?)


கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty Re: கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by சதாசிவம் Mon May 26, 2014 10:17 am

விமந்தனி wrote:[link="/t110486-topic#1065751"]
சாமி wrote:1883-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுஅவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூவத்தைச் சுத்தப்படுத்திய முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இன்னும் ஒரு சில ஆண்டுகளில், கழிவுநீரிலிருந்து முற்றிலும் விடுபட்டுக் கூவம் சுத்தமாகிவிடும்" என்று அது பிரகடனப்படுத்தி இருக்கிறது. அதே வாசகத்தைத்தான் 143 வருஷங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!
இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருப்போம்.
(அதுசரி, கூவத்தை சுத்தப்படுத்தி விட்டால், கழிவு நீரை எவ்வாறு வெளியேற்றுவது? அதற்க்கு தனி வாய்க்கால் வெட்டுவார்களா?)


பிற நகரங்களில் எப்படி வெளியேற்றுகிறார்கள் என்று யோசித்தாலே உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். துரதிஷ்டமாக இந்தியாவில் பல நீர்நிலைகள் நகராட்சி, ஊராட்சி ஆகியவற்றின் திறமையின்மையாலும் தொலைநோக்கு பார்வை இன்மையாலும் நாசம் செய்யப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் கழிவுநீர் தனியே வெளியேற்றப்பட்டு சுத்திகரிகப்பட்டு அதன் பின்னே கடலிலோ, நதியிலோ கலக்கப்படுகிறது மக்கள் கண்களுக்குகூட படாமலே இது நடைபெறுகிறது.

ஆனால் இங்கே நிலைமை வேறு, இப்படி ஒரு திட்டம் வந்தாலும் அதில் இது பாதிக்கப்படுகிறது, அது பாதிக்கப்படுகிறது கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று கூறி ஆதாயம் பார்க்கும் அரசியல் கூட்டமே இங்கு நிறைந்துள்ளது. ஊடகங்கள் எப்படி குழப்பினாலும் அதில் கண்டிப்பாக உண்மை இருக்கிறது என்று தானும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பும் அறிவார்ந்த மக்களும் இங்கு நிறைந்துள்ளனர்...இது மாறாத வரை கூவம் மாறாது.

நல்ல பதிவு பதித்தமைக்கு நன்றி சாமி..

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty Re: கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by சதாசிவம் Mon May 26, 2014 10:25 am

விமந்தனி wrote:[link="/t110486-topic#1065751"]
சாமி wrote:1883-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுஅவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூவத்தைச் சுத்தப்படுத்திய முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இன்னும் ஒரு சில ஆண்டுகளில், கழிவுநீரிலிருந்து முற்றிலும் விடுபட்டுக் கூவம் சுத்தமாகிவிடும்" என்று அது பிரகடனப்படுத்தி இருக்கிறது. அதே வாசகத்தைத்தான் 143 வருஷங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!
இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருப்போம்.
(அதுசரி, கூவத்தை சுத்தப்படுத்தி விட்டால், கழிவு நீரை எவ்வாறு வெளியேற்றுவது? அதற்க்கு தனி வாய்க்கால் வெட்டுவார்களா?)


நதி இல்லாத பிற நகரங்களில் எப்படி வெளியேற்று கிறார்கள் என்று யோசித்தாலே உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்....வளர்ந்த நாடுகளில் கழிவு நீர் மக்களின் கண்களுக்குக் கூட தெரியாமலேயே அழகாக சுத்திகரிக்கப்பட்டு கடலிலோ, நதியிலோ கலக்கப்படுகிறது.

ஆனால் இங்கு நகராட்சி, ஊராட்சி ஆகியவற்றின் தொலைநோக்கு பார்வையின்மையாலும், திறமையின்மையாலும் பல நீர்நிலைகள் காணாமல், அழிந்து, வீணாகப் போகிறது..ஒரு அருமையான திட்டத்தை தயாரித்தாலும் அதில் இது பாதிக்கபடுகிறது, கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று ஏதேதோ கூறி அதை தனக்கு லாபமாகும் அரசியல் கட்சிகளே இங்குள்ளது.. ஊடகங்கள் சொல்லும் வார்த்தைகள் உண்மையென நம்பி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பும் அறிவார்ந்த மக்களும் இங்கு நிறைந்துள்ளதுள்ளனர்.. இந்நிலையில் கூவம் எப்படி சுத்தமாகும். முதலில் இவை இரண்டும் சுத்தமான பிறகு தான் நாடே சுத்தமாகும்.

நல்ல பதிவு பதித்தமைக்கு நன்றி சாமி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty Re: கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 26, 2015 7:03 am

200 வருடங்கள் முன்பு கூவம் ஆறு மிகவும் சுத்தமாகத்தான் இருந்திருக்கிறது. கபாலீஸ்வரர் போன்ற கோவில்களுக்கு செல்லும்முன்பு கூவத்தில் குளித்துவிட்டுத்தான் செல்வது வழக்கமாம். அதன் இன்றைய நிலைக்கு காரணம் ஆங்கிலேயர்களின் முட்டாள்தனம் தான். அவர்கள் கோட்டை மற்றும் துறைமுகம் கட்ட தேர்ந்தெடுத்த இடம் தவறான ஒன்றாகும். வடசென்னைக்குப் பதில் தென்சென்னையை தேர்வு செய்திருந்தால் கூவம் இப்படி ஆகியிருக்காது.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty Re: கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by monikaa sri Sun Apr 26, 2015 7:26 am

நல்ல பதிவு!நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty Re: கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by T.N.Balasubramanian Sun Apr 26, 2015 9:34 am

முன் காலத்தில் பச்சையப்ப முதலியார் , கூவத்தில் குளித்து ,தன், தினசரி வேலைகளை ஆரம்பித்தார் என்று கேள்வி .

கூவம் சுத்தம் செய்வது ,மனது வைத்தால் நிச்சயம் முடியும் .
சுருக்கமாக கூறவேண்டுமெனில் ,
அசுத்தம் கலக்கும் நீர் தாரைகளுக்கென தனி பாதை , குழாய் மூலம் , இணைத்து ,
சுத்திகரித்து ,கூவத்துடன் இணைக்கலாம் . அதில் உற்பத்தி ஆகும் (மீதேனா !) வாயுவை,
உபயோகிக்கலாம்.
முடியாது என்பதே இல்லை .
மக்கள் ஒத்துழைக்கவேண்டும் . அரசாங்கம் ,கண்கொத்தி பாம்பாக செயல்படவேண்டும் .
ரமணியன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty Re: கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by krishnaamma Mon Apr 27, 2015 11:41 pm

T.N.Balasubramanian wrote:முன் காலத்தில் பச்சையப்ப முதலியார் , கூவத்தில் குளித்து ,தன், தினசரி வேலைகளை ஆரம்பித்தார் என்று கேள்வி .

கூவம் சுத்தம் செய்வது ,மனது வைத்தால் நிச்சயம் முடியும் .
சுருக்கமாக கூறவேண்டுமெனில் ,
அசுத்தம் கலக்கும் நீர் தாரைகளுக்கென தனி பாதை , குழாய் மூலம் , இணைத்து ,
சுத்திகரித்து ,கூவத்துடன் இணைக்கலாம் . அதில் உற்பத்தி ஆகும் (மீதேனா !)  வாயுவை,
உபயோகிக்கலாம்.  
முடியாது என்பதே இல்லை .
மக்கள் ஒத்துழைக்கவேண்டும் . அரசாங்கம் ,கண்கொத்தி பாம்பாக செயல்படவேண்டும் .
ரமணியன்

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1133052

ரொம்ப சரியான வார்த்தைகள் ஐயா புன்னகை.இப்போ தான் தினமலரில் ஒரு செய்தி பார்த்தேன் அதன் லிங்க் இதோ புன்னகை

கூவம் நதிக்கரையில் அமைகிறது 22 கி.மீ., துாரத்திற்கு தொடர் நடைபாதை!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty Re: கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by நவீன் Tue Apr 28, 2015 1:03 am

இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருப்போம் இதே போன்று ஆட்சி நடந்தால் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Empty Re: கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum