Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
+4
ரா.ரா3275
SajeevJino
சதாசிவம்
சிவா
8 posters
Page 1 of 1
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
விடுதலைக்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த தேர்தல் ஒருவகையில் வித்தியாசமான முடிவைத் தந்திருக்கும் தேர்தல். 282 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எம்.பி-கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் 18% வசிக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம்கூட வெல்லவில்லை. மத்தியப் பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் எவரும் தேர்வுசெய்யப்படவில்லை. 543 தொகுதிகளில் மொத்தம் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தினர். இந்திய மக்கள்தொகையில் 14% பங்குவகிக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வெறும் 4.4% மட்டுமே.
சிதறிய முஸ்லிம் வாக்குகள்
மோடியின் வெற்றிவாய்ப்புகுறித்து முஸ்லிம்கள் கவலைப்பட்டதும், மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு இருந்த சாத்தியமும் இயற்கைதான். ஆனால், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பெரும்பாலான தொகுதிகளில்கூட வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அவர்கள் இல்லை என்பதே நிதர்சனம். மேலும், பா.ஜ.க. எதிர்ப்பின் அடையாளமான அவர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறிப்போய் அது பா.ஜ.க-வுக்குச் சாதகமாக ஆகியிருக்கிறது என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம். சான்றாக, உத்தரப் பிரதேசத்தின் மீரட், மொராதாபாத், சம்பல் போன்ற பல தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்ள, பா.ஜ.க. எளிதாக வெற்றிபெற்றுள்ளது.
கூடுதலாகக் கவனிக்க வேண்டிய விஷயம், பா.ஜ.க-வில் போட்டியிட்ட ஐந்து முஸ்லிம்களும் தோல்வி கண்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் கட்சியிலிருந்து ஒருவர் வென்றது மட்டுமே விதிவிலக்கு. தவிர, தேர்தல் முடிவு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள சில தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக விழுந்திருப்பதும் தெரியவருகிறது. வாரணாசியில் ஷியா முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரிகிறது. இவை விதிவிலக்குகள்தானே தவிர, பொதுவான நிலவரமாகக் கருத முடியாது.
தேர்தல் முறையின் கோளாறு
தேசிய ஜனநாயகக் கூட்டணி அபாரமான பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்றாலும், மொத்த வாக்குகளில் வெறும் 31% வாக்குகளிலேயே பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றுவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 38.5% வாக்குகளைப் பெற்று 336 இடங்களைப் பெற்றுவிட்டது. ஆக, வாக்குகள் சிதறியதே பா.ஜ.க-வின் மகத்தான வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதாலேயே பா.ஜ.க-வின் வெற்றியைக் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதத் தேவையில்லை.
மூன்று விஷயங்கள்
எது எப்படியிருந்தாலும் பா.ஜ.க. வெற்றி கண்டாயிற்று. இப்போது முஸ்லிம்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை அலச முனையும்போது, காவிப் பரிவாரத்தின் முக்கிய கோஷங்கள் மூன்று நினைவுக்கு வருகின்றன - ராம ஜென்மபூமி, பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்
சினை ஆகியவை. இவற்றில் ராம ஜென்மபூமி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. மற்ற இரண்டு பிரச்சினைகளையும் பா.ஜ.க. கையில் எடுக்க முடியும். ஆனால், எடுக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி. குறைந்தபட்சம் மாநிலங்களவையில் தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காதவரை அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் எந்த நடவடிக்கையிலும் பா.ஜ.க. இறங்காது. அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை நீக்குவார்களோ என்று இஸ்லாமிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். இப்போதைக்கு இது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் உள்ள வாசகங்களைத் திருத்துவது சாத்தியமே இல்லை.
வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஒரு பள்ளி
வாசலில் பயான் (சொற்பொழிவு) ஆற்றிய இமாம் ஒருவர், “இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தொடங்கி, சிலுவைப் போர்களையும், மங்கோலியர்களின் தாக்குதல்களையும் தாங்கி வளர்ந்தது. அன்று சந்தித்த சோதனைகளைவிட புதிதாகச் சோதனைகள் எதுவும் நமக்கு வந்துவிடப்போவதில்லை.எல்லாம் அல்லாவின் நாட்டப்படியே நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளைக் கண்டு இஸ்லாமியர்கள் கலக்கம் கொள்ளத் தேவையில்லை” என்று கூறியதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
இதுதான் நடப்பு நிலை. கலக்கம் கொள்ளத் தேவையில்லை என்பதல்ல, கலக்கம் கொள்வதில் பயனில்லை என்பதே சரி. என்ன நடக்குமோ என முஸ்லிம்கள் மனங்களில் சற்றே கலக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க-வின் முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படும் சாத்தியம் இருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்கிற மோடியும் பா.ஜ.க-வும் வெளிப்படையாக முஸ்லிம்களைத் தாக்கிப் பேசவோ, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கவோ இல்லை.
ஆரம்ப கட்டத்திலேயே தமது பிம்பத்தைக் குலைத்துக்கொள்ள முனைய மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. பிரதமராக மோடியின் உடனடிக் கவனம் வெளிப்
படையாகப் பார்க்கும்போது வளர்ச்சி, விலைவாசி, ஊழல் போன்றவற்றின் மீதுதான் இருக்குமென்று இப்போதைக்குத் தெரிகிறது. ஆனால், சங்கப் பரிவாரத்தின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்களை மோடி அரசு எப்படிக் கையாளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
[thanks]- ஆர். ஷாஜஹான், எழுத்தாளர்[/thanks]
Re: தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
நன்றாக இருக்கும் மக்கள் மனதை ஏன் இதுபோன்ற கட்டுரைகளை எழுதி குழப்ப வேண்டும்? உண்மையில் மதத் தலைவர்கள் தங்கள் பிழைப்பை நடத்த இதுபோன்ற கட்டுரைகளை எழுதச் சொல்கிறார்களோ என்னவோ தெரியவில்லை..நாட்டின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் அதற்கு நாம் என்ன என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவதை விடுத்து இது போன்ற புலம்பல்கள் அவசியமா?
இந்தியாவில் அனைவருக்கும் ஒரே உரிமை, மதச்சார்பின்மை என்ற நிலையில் வாதிக்கும் பொழுது பொது சிவில் சட்டம் வருவதால் என்ன பாதிப்பு வந்து விடும். அனைவருக்கும் தண்டனைச் சட்டம் ஒன்று தானே ?? மதம் பார்த்து ஒருவருக்கு சவுக்கடியும், இன்னொருவருக்கு நெய்விளக்கு ஏற்று என்று சட்டம் சொல்லவில்லையே ? இந்நிலையில் மதத்தின் பெயரால் தங்களுக்குச் சாதகமானதை மட்டும் வைத்து கொண்டு பாதகமானதை விடுத்து பொதுவாக கருத வேண்டும் என்று எத்தனை நாளைக்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிப்பது.
மதம் ஜாதியின் பெயரால் இனி ஓட்டு விழாது என்பதை தலைவர்கள் உணர வேண்டும்.
நாடாளு மன்றத்தில் தங்களின் சதவீதம் குறைகிறது என்று வருத்தப்படும் இவர்கள் ராணுவத்தில், பொது சேவை நிறுவனத்தில், வரி செலுத்துவதில் எத்தனை சதவீதம் பங்களிக்கின்றனர் என்பதையும் எழுதி நியாப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஒவ்வொரும் தங்களின் இனத்தை காக்கவே நாடாளுமன்றத்தில் பங்குபெற வேண்டும் என்று நினைக்கின்றனர். நாட்டை காக்க கொஞ்சமாவது நினையுங்களேன். இன்னமும் கோட்டா பேசியே குட்டையை குழப்பும் இதுபோன்றவர்களை என்ன செய்வது.
இந்தியாவில் அனைவருக்கும் ஒரே உரிமை, மதச்சார்பின்மை என்ற நிலையில் வாதிக்கும் பொழுது பொது சிவில் சட்டம் வருவதால் என்ன பாதிப்பு வந்து விடும். அனைவருக்கும் தண்டனைச் சட்டம் ஒன்று தானே ?? மதம் பார்த்து ஒருவருக்கு சவுக்கடியும், இன்னொருவருக்கு நெய்விளக்கு ஏற்று என்று சட்டம் சொல்லவில்லையே ? இந்நிலையில் மதத்தின் பெயரால் தங்களுக்குச் சாதகமானதை மட்டும் வைத்து கொண்டு பாதகமானதை விடுத்து பொதுவாக கருத வேண்டும் என்று எத்தனை நாளைக்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிப்பது.
மதம் ஜாதியின் பெயரால் இனி ஓட்டு விழாது என்பதை தலைவர்கள் உணர வேண்டும்.
நாடாளு மன்றத்தில் தங்களின் சதவீதம் குறைகிறது என்று வருத்தப்படும் இவர்கள் ராணுவத்தில், பொது சேவை நிறுவனத்தில், வரி செலுத்துவதில் எத்தனை சதவீதம் பங்களிக்கின்றனர் என்பதையும் எழுதி நியாப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஒவ்வொரும் தங்களின் இனத்தை காக்கவே நாடாளுமன்றத்தில் பங்குபெற வேண்டும் என்று நினைக்கின்றனர். நாட்டை காக்க கொஞ்சமாவது நினையுங்களேன். இன்னமும் கோட்டா பேசியே குட்டையை குழப்பும் இதுபோன்றவர்களை என்ன செய்வது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
.
நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..
குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல
.
நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..
குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல
.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
எந்த மதமும் இனமும் மொழியும் இகழப்படக் கூடாது என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
அருமையாக சொல்லியுள்ளீர்கள் சஜீவ் .....SajeevJino wrote:[link="/t110451-topic#1065407"].
நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..
குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல
.
Re: தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
ராஜா wrote:[link="/t110451-topic#1065480"]அருமையாக சொல்லியுள்ளீர்கள் சஜீவ் .....SajeevJino wrote:[link="/t110451-topic#1065407"].
நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..
குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல
.
நன்றி நண்பரே
.
Re: தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
திரு. சதாசிவம் அவர்களின் கருத்து மிகச்சரியானது. பாராட்டுகிறேன்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
ஒற்றுமையை வளர்க்க பாடுபடுவோர் பலர் .
வேற்றுமையை உண்டாக்கி குளிர் காய நினைக்கும் வீணர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள் .
காலம் தான் பதில் சொல்லவேண்டும் .
ஒற்றுமையை வளர்ப்போம் .
ரமணியன்
வேற்றுமையை உண்டாக்கி குளிர் காய நினைக்கும் வீணர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள் .
காலம் தான் பதில் சொல்லவேண்டும் .
ஒற்றுமையை வளர்ப்போம் .
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
நடக்கிற அனைத்தும் நன்மைக்கே என்றே நான் நினைக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்
mmani15646 wrote:[link="/t110451-topic#1065669"] திரு. சதாசிவம் அவர்களின் கருத்து மிகச்சரியானது. பாராட்டுகிறேன்.
மிக்க நன்றி...
மக்கள் உணர்ந்தால் சரி...
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Similar topics
» தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.
» தமிழக சட்டமன்ற தேர்தலும் - முஸ்லிம்களும்
» தோனியின் முடிவுகளும், தொடரும் சர்ச்சைகளும்...
» முஸ்லிம்களும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்ற வேண்டும்: பாஜக எம்.பி.
» கூவம் ஆற்றை மேம்படுத்த அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளும் முடிவுகளும்
» தமிழக சட்டமன்ற தேர்தலும் - முஸ்லிம்களும்
» தோனியின் முடிவுகளும், தொடரும் சர்ச்சைகளும்...
» முஸ்லிம்களும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்ற வேண்டும்: பாஜக எம்.பி.
» கூவம் ஆற்றை மேம்படுத்த அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளும் முடிவுகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum