புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
6 Posts - 20%
viyasan
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_m10 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:26 am

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற ஓட்டு விகிதம் மற்றும் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து ருசிகரமான புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அது குறித்த ஒரு கண்ணோட்டம் வருமாறு:–

17.16 கோடி வாக்குகள்

* 16–வது பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியை அலங்கரிக்கப்போகும் பா.ஜனதா, இந்த தேர்தலில் ஏறத்தாழ 17.16 கோடி வாக்குகளை பெற்றுள்ளது. 31 சதவீத ஓட்டு விகிதத்தை பெற்ற அக்கட்சி 282 இடங்களை அள்ளியது.

* 19.3 சதவீத ஓட்டு விகிதத்தை பெற்ற, அதாவது 10.7 கோடி வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 44 இடங்களையே பெற முடிந்தது.

* 4.1 சதவீத ஓட்டு விகிதம் பெற்று (2.3 கோடி ஓட்டுகள்) 3–வது இடத்தை பிடித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த 34 வேட்பாளர்கள் 2–ம் இடத்தில் வந்து வெற்றியை தவறவிட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

* சமாஜ்வாடி கட்சி 3.4 சதவீத ஓட்டு விகிதத்தை பெற்றுள்ளது. இருப்பினும் அந்த கட்சியால் 5 இடங்களில் வெற்றி பெற்று விட்டது.

* 3.8 சதவீத ஓட்டு விகிதத்தை பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

* 37 இடங்களை கைப்பற்றிய அ.தி.மு.க. 3.3 சதவீத ஓட்டு விகிதத்தை பெற்றுள்ளது. ஆனால் இதே அளவு (3.3 சதவீதம்) ஓட்டு விகிதத்தை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியால் வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

பிஜூ ஜனதாதளம் – தி.மு.க.

* பா.ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் (20 தொகுதிகள்) வெற்றி பெற்று 5–வது இடத்தை பிடித்துள்ள பிஜூ ஜனதாதளம், ஓட்டு விகிதத்தில் (1.7 சதவீதம்) 14–வது இடத்தில் தான் உள்ளது.

* தி.மு.க. இதே அளவு (1.7 சதவீதம்) ஓட்டு விகிதத்தை பெற்றிருந்தது. ஆனால் மக்களவையில் கால் பதிக்க, தி.மு.க.வுக்கு இந்த ஓட்டு விகிதம் கைகொடுக்கவில்லை.

* இதைப்போல 1.9 சதவீத ஓட்டு விகிதம் பெற்ற சிவசேனா, 18 இடங்களை கைப்பற்றினாலும், 2 சதவீத ஓட்டு விகிதம் பெற்ற ஆம் ஆத்மி 4 இடங்களையே பெற முடிந்தது. 1.6 சதவீத ஓட்டு விகிதம் பெற்ற தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

18 கட்சிகள்

* இந்த தேர்தலில் 18 கட்சிகள், 1 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டு விகிதம் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு (0.8 சதவீதம்), மதசார்பற்ற ஜனதாதளம் (0.7) சிரோமணி அகாலிதளம் (0.7) மற்றும் இந்திய தேசிய லோக்தளம் (0.5) ஆகிய கட்சிகள் 1 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டு விகிதங்களை பெற்றுள்ளன.

* மற்ற கட்சிகளான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, லோக் ஜனசக்தி, தே.மு.தி.க., பா.ம.க. (0.4 சதவீதம்), ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா, ம.தி.மு.க., நாகா மக்கள் முன்னணி, அப்னா தளம் உள்ளிட்ட மிக குறைந்த வாக்கு சதவீதத்தையே பெற்றுள்ளன.

சுயேச்சைகளின் ஓட்டு சதவீதம்
*
இந்த தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சைகள் 3 சதவீத வாக்கு விகிதத்தை பெற்றுள்ளன. இது ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் பெற்ற வாக்கு விகிதத்தை விட அதிகமாகும்.

இந்த தேர்தலில் அசாமின் கோக்ரஜார் தொகுதியில் இருந்து நபா குமார் சரணியா, கேரளாவில் இருந்து நடிகர் இன்னசென்ட், ஜாயிஸ் ஜார்ஜ் ஆகிய 3 பேர் சுயேச்சைகளாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

2009–ம் ஆண்டு தேர்தல்

* கடந்த 2009–ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில், பா.ஜனதாவின் வாக்கு சதவீதம் தற்போது அதிகரித்துள்ளது. அந்த தேர்தலில் பா.ஜனதா 18.8 சதவீத வாக்கு விகிதமே பெற்றிருந்தது. ஆனால் காங்கிரசின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை விட தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி 28.55 சதவீத வாக்கு விகிதம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு விகிதமும் குறைந்துள்ளது. கடந்த தேர்தலில் 6.17 சதவீத வாக்கு விகிதம் பெற்று, அதிக வாக்கு விகிதம் பெற்ற கட்சிகளின் வரிசையில் இந்த கட்சி அப்போதும் 3–வது இடத்தை பிடித்திருந்தது. எனினும் அந்த தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1,652 கட்சிகளின் அனைத்து வேட்பாளரும் தோல்வி

* இந்த தேர்தலில் 1,687 அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில் 35 கட்சிகளை சேர்ந்த 540 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 3 சுயேச்சைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* பகுஜன் சமாஜ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, தேசிய மாநாடு உள்ளிட்ட 1,652 கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரும் வெற்றி பெறவில்லை.

* சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களித்துள்ளனர். இது 21 கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:27 am

வயதானவர்கள் நிறைந்த புதிய பாராளுமன்றம்: படித்தவர்கள் குறைவு

அமைய உள்ள 16-வது பாராளுமன்றத்தில், 253 எம்.பி.க்கள், அதாவது 47 சதவீதம் பேர், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். எனவே, இந்த பாராளுமன்றம்தான், வயதானவர்களை அதிகம் கொண்டதாக உள்ளது. 86 வயதான பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானிதான், மிக அதிக வயதானவர் ஆவார். 13 சதவீதம்பேர் (71 எம்.பி.க்கள்) 40 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். தென்சென்னை எம்.பி. ஜெயவர்த்தன் உள்பட 5 பேருக்கு 26 வயதுதான் ஆகிறது.

அதே சமயத்தில், இந்த பாராளுமன்றத்தில் படித்தவர்கள் குறைவாக உள்ளனர். 75 சதவீதம்பேர் தான் பட்டதாரிகள். 6 சதவீதம்பேர் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். 13 சதவீதம்பேர், உயர்நிலைப்பள்ளி தேர்வைக்கூட முடிக்கவில்லை.




 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:28 am

பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்கு

தேர்தல் ஆணையம் முதல் முறையாக இந்த தேர்தலில் ‘நோட்டா’ என்ற பொத்தானை வாக்களிக்கும் கருவியில் அறிமுகப்படுத்தி இருந்தது. ‘நோட்டா’ என்பதற்கு ‘மேற்காணும் வேட்பாளர்களில் யாருக்கும் ஓட்டு அளிக்க விருப்பம் இல்லை’ என்பது அர்த்தம்.

இந்த தேர்தலில் 543 தொகுதிகளில் வாக்களித்த, மொத்த வாக்காளர்களில் 59 லட்சத்து 97 ஆயிரத்து 54 பேர் (மொத்த ஓட்டில் 1.1 சதவீதம்) நோட்டாவுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். மாநில அளவில் புதுச்சேரியில் 3 சதவீதம் பதிவாகி இருந்தது. இவ்வாறு மற்ற மாநிலங்களில் வாக்கு விவரம் சதவீதத்தில் வருமாறு:–

மேகாலயா–2.8, குஜராத், சத்தீஷ்கார், தத்ரா–நாகர் ஹவேலி தலா–1.8, பீகார்–1.6, ஒடிசா, மிசோரம், ஜார்கண்ட், டாமன் டையூ தலா–1.5, சிக்கிம், தமிழ்நாடு தலா–1.4, மத்தியபிரதேசம்–1.3, திரிபுரா, கேரளா, கோவா, ராஜஸ்தான் தலா–1.2, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அருணாச்சலபிரதேசம் தலா–1.1. மிகக் குறைவாக 0.3 சதவீத நோட்டா வாக்குகள் லட்சத்தீவுகள், அரியானா, நாகலாந்தில் பதிவாகி இருக்கிறது. பஞ்சாப்–0.4 சதவீதங்களாகும்.

நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வதோரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு அடுத்தபடி மூன்றாவது இடம் நோட்டாவுக்கு (18,053) பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம் இந்திய கம்யூனிஸ்டு, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளை விட குறைவாகும்.





 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:29 am

20 மாநிலங்களில் காங்கிரஸ் பூஜ்ஜியம்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

அவை வருமாறு:–

தமிழ்நாடு, கோவா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி, இமாச்சலபிரதேசம், ஜம்மு–காஷ்மீர், சிக்கிம், திரிபுரா, நாகலாந்து, ஆந்திரா, லட்சத்தீவு, சண்டிகார், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ, தத்ராநகர் ஹவேலி.



 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:30 am

அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தென் சென்னை, வாரணாசி தொகுதிகள்

இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகள் என்ற பெருமையை தென் சென்னையும், வாரணாசியும் பெற்று உள்ளன. கடந்த ஏப்ரல் 24–ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் 42 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதேபோல் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி உள்பட 42 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்குள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக தென் சென்னை தொகுதியில் 43 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதற்கு முன்பு 2004–ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகபட்சமாக இந்த தொகுதியில் 35 வேட்பாளர்கள் மோதினார்கள்.

எனவே தொடர்ச்சியாக 3 பாராளுமன்ற தேர்தல்களில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி என்ற பெருமை தென் சென்னைக்கு கிடைத்து உள்ளது.




 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:31 am

இந்திய வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குப்பதிவு

இந்தியாவின் 16-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நேற்று வரை 9 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் மிக நீண்ட காலமாக நடந்தாலும், அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள இந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பது, சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். இதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த தேர்தலில் ஏராளமான புதிய வாக்காளர்கள் வாக்களித்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதற்கு முன்பு அதிக அளவாக, கடந்த 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும் ஒரு காரணம் ஆகும். கடந்த 2009&ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 58.19 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.



 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun May 18, 2014 8:42 am

புள்ளி விவரங்களை தனித்தனியாக பதிவு செய்து
அனைவருக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளிர்கள் தல
சூப்பர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun May 18, 2014 12:06 pm

 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் 3838410834  பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் 3838410834  பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் 3838410834  பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 18, 2014 9:49 pm

நோட்டவுக்கு விழுந்த வாக்குகள் அரசியல் கட்சிகளுக்கு 'நோட் திஸ் பாய்ன்ட்' என்று சொல்லும் வாக்குகள்...60 லட்சம் வாக்குகள் ஒருகோடியாகாமல் பார்த்துக்கொண்டால் சரி...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 12:25 pm

 பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள் 10309650_868898573126757_4265838398685937233_n

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக