ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்?

4 posters

Go down

என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்? Empty என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்?

Post by சிவா Sun May 18, 2014 8:26 pm


இதற்கு முன்னர் இரண்டு முறை (1977 மற்றும் 1989-ல்) நடந்ததைப் போல, ஊழல் மற்றும் காங்கிரஸுக்கு எதிரான மக்கள் மனநிலையின் பலன் பெருமளவுக்கு பா.ஜ.க-வுக்கு சாதகமாகவே போயிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, சுமார் 15 முதல் 20 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பஞ்சாபில் நான்கு இடங்களைப் மட்டுமே பெற்றது.

பஞ்சாப் ஆறுதல்; ஹரியானா ஏமாற்றம்

பஞ்சாபில் அகாலி தளமும், காங்கிரஸும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்த நிலையில் இவற் றுக்கு மாற்றாக வந்த ஆ.ஆ.க. மக்களைப் பெருமளவு கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை. அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் ஆ.ஆ.க. இங்கு ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு வளர வாய்ப்புகள் இருக்கின்றன. தொடக்கத்தில் பஞ்சாபில் தங் களுக்கு இத்தகைய வாய்ப்பு இருப் பதை உணர்ந்திராத ஆ.ஆ.க. இங்கு அதிகத் தீவிரம் காட்டவில்லை.

இல்லாவிடில் வெற்றி வாய்ப்பு கள் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். டெல்லிக்கு அடுத்த படியாக ஆ.ஆ.க. நம்பியிருந்தது ஹரியானா வைத்தான். சந்தர்ப்பவாதப் போக்குடன் பிற்போக்கான காப் பஞ்சாயத்துகளுக்குக்கூட, தங்களுடன் இணைந்து பணியாற்றும் படி அழைப்பு விடுத்திருந்தும் தோல்வி தான் மிச்சியது.

டெல்லி போச்சு

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆ.ஆ.க-வுக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் நாடாளு மன்றத் தேர்தலில் தங்களது வாக்கு மோடிக்கே என்று தெரிவித்திருந்தனர். அத்தகைய வர்களின் சதவீதம் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்து வந்ததைப் பார்க்க முடிந்தது. காங்கிரஸுக்கு எதிராக மகாராஷ் டிரத்தில் வீசியிருக்கும் சூறாவளி முழுமையாகவே பா.ஜ.க. - சிவசேனா கூட்டணிக்கு சாதகமாகப் போய்விட்டதையே மீரா சன்யால், மேதா பட்கரின் தோல்வி காட்டுகிறது.

எதிர்பார்ப்பும் நடந்ததும்

டெல்லியில் ஆ.ஆ.க. பெரும் வெற்றி பெற்றபோது அகில இந்திய அளவில் அது சுமார் 40 முதல் 50 இடங்கள் வரை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸின் ஊழலை, ஆ.ஆ.க. கடுமையாகத் தாக்கியபோது பெரும் ஆதரவை வழங்கிய ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள், ஆ.ஆ.க-வின் எதிர்ப்பு பா.ஜ.க., மோடி, அம்பானி என்று விரிவடைந்தபோது ஆ.ஆ.க-வின் சிறு தவறுகளைக்கூட ஊதிப் பெரிதாக்கிக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆ.ஆ.க. பெற்ற வெற்றியில் தொலைக்காட்சி ஊடகங் களுக்கு முக்கியப் பங்கு இருந்ததைப் போலவே இப்போது ஆ.ஆ.க-வின் செல்வாக்கு சரிந்திருப் பதிலும் அவற்றுக்குப் பங்கிருக்கிறது.

செய்ய வேண்டியது

ஆகவே, அமைப்பு ரீதியாகத் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்வதும் வலிமைப்படுத்திக் கொள்வதும் அக்கட்சி உடனடியாக செய்ய வேண்டிய வேலைகள். பிரபலமானவர்களைக் கொண்டே கட்சியை வளர்த்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அத்துடன் பிற கட்சிகளைப் போல சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுப்பதை (காப் பஞ்சாயத்து, முஸ்லிம்கள் கொஞ்சம் வகுப்புவாதத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற ஷாஷியா இல்மியின் பேச்சு) ஆ.ஆ.க. முற்றிலுமாகக் கைவிடுவது மிகவும் அவசியம். இந்தக் கட்சி மிகவும் வித்தியாசமான, நேர்மையான கட்சி என்று பலரும் இன்னமும் நம்புகின்றனர். அதுவே அதன் பலம். அதை ஆ.ஆ.க. தக்கவைத்துகொள்ள வேண்டும்.

- க. திருநாவுக்கரசு, சமூக-இலக்கிய விமர்சகர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்? Empty Re: என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்?

Post by ரா.ரா3275 Sun May 18, 2014 9:25 pm

அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் கைக்குழந்தை.இங்கே அரசியல் திமிங்கலங்களே மூச்சுத் திணறி கரையொதுங்கக் கூட வழியின்றிக் காணாமல் போயிருக்கின்றன.

ஆகவே,அவரின் நேர்மை அரசியல் முழக்கம் வெறும் கூப்பாடு என்ற பிம்பத்தை மிக எளிதாக ஏற்படுத்திவிடுவார்கள் கை தேர்ந்த அரசியல் பழம் தின்று அதிகாரக் கோட்டை போட்டவர்கள்.மிக எச்சரிக்கையாக அரசியல் பால பாடம் பயில இந்த ஐந்தாண்டுகளை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்? Empty Re: என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்?

Post by கோ. செந்தில்குமார் Mon May 19, 2014 7:22 am

டெல்லியில் மீண்டும் சட்டசபை தேர்தல் வந்தால் ஆம் ஆத்மி கட்சியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் தோற்பது உறுதி...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்? Empty Re: என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்?

Post by T.N.Balasubramanian Mon May 19, 2014 8:56 am

போன தேர்தலிலேயே ஆ ஆ கட்சியும் பாஜ கவும் சிறிதே வித்தியாசத்தில் இருந்தனர் . கோமாளித்தனத்தால் பதவியை தொலைத்த கேஜ்ரிவால் திரும்ப வருவது என்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகும் .
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்? Empty Re: என்ன செய்யப்போகிறார் கேஜ்ரிவால்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum