புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
31 Posts - 44%
jairam
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
13 Posts - 4%
prajai
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
9 Posts - 3%
jairam
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழரைச் சனி என்ன செய்யும்?

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue May 27, 2014 5:27 pm

ஏழரைச் சனி என்ன செய்யும்? KaKsH9adRpm78DDhIKur+2

காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது.

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்.

முதல் சுற்று:

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு…’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue May 27, 2014 5:29 pm

இரண்டாவது சுற்று:

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா…?’’ என்று தயங்குவீர்கள்.

அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?

வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.

கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனிபகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue May 27, 2014 5:29 pm

மூன்றாவது சுற்று:

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம்.

ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல… சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Tue May 27, 2014 8:44 pm

திரு செந்தில் அவர்களுக்கு,

நான்காவது ஏழரை பற்றி சொல்லவில்லையே. நான் கேள்விப்பட்டவரையில் நான்காவது ஏழரையில் மரணம் நிச்சயம் என்பதாக நம்பிக்கை உண்டு. எனக்கு ஜோதிட சாஸ்திரம் தெரியாது. நீங்கள் அறிந்ததை சொல்லலாம்.

அன்புடன் நண்பன்
சிவம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 27, 2014 11:30 pm

7 1/2 நாட்டு சனி என்பது ,
நான் அறிந்த வரையில் ,
பிறந்த ராசியில் இருந்து , அதன் முதல் ராசிக்கு சனி வரும்போது, ஏழரை நாட்டு சனி ஆரம்பம் . அந்த ராசியில் ரெண்டரை ஆண்டு சனி சஞ்சாரம் . அடுத்த சஞ்சாரம் ரெண்டரை ஆண்டிற்கு பிறகு , உங்கள் ராசிக்கு வரும் அடுத்தது உங்கள் ராசிக்கு அடுத்த ராசிக்கு போகும் . அங்கு ரெண்டரை ஆண்டு வாசம்
உதாரணமாக . இந்த ஆண்டு , விரூச்சிக்க ராசியில் சனி பகவான் நுழைக்கிறார் என்றால் ,
தனுர் ராசிக்கு 71/2 நாட்டு சனி ஆரம்பம் (விருசிகம் -தனுர் ராசிக்கு முந்தைய ராசி -ராசிக்கு முதல் வீடு )
முதல் ரெண்டரை ஆண்டு விருசிகம் / அடுத்த ரெண்டரை ஆண்டு தனுர் /அடுத்த ரெண்டரை ஆண்டு
மகர ராசி இல் சஞ்சாரம் . அதாவது டிசம்பர் 2014 தனுர் ராசிக்காரர்களுக்கு 7 1/2 நாட்டு சனி ஆரம்பம் என்றால் , மகர ராசிகாரர்களுக்கு ஜூன் 2017 சமயத்தில்  7 1/2 சனி ஆரம்பம்

12 வீடுகள் இருக்கின்றன (மேஷம் முதல் --மீனம் வரை )
இந்த 12 வீடை கடக்க 12 க்ஷ்2 1/2 =30 ஆண்டு ஆகும்
அதாவது 30 வருடத்திற்கு ஒரு முறை சனியின் தாக்கம் 7 1/2 ஆண்டுகள் இருக்கும் இருக்கும்.
பிறக்கும் போதே 7 1/2 சனியில் பிறந்தால் ,  அவருடைய  61 /62 வயதிலேயே முன்றாம் சுற்று சனி வந்துவிடும் .
முதல் சுற்று சனியே 27 1/2 வயதில் தான் வந்தது என்றால் ,85 வயதுக்கு பிறகுதான் முன்றாம் சுற்று வரும் .  

சனியின் ஒரு சுற்று 30 ஆண்டுகள் ஆவதால் , நாலாவது சுற்று வரும் போது , 90/ 117 1/2 ஆவது  வயதில் ஆரம்பித்து  120 இல் ஆரம்பித்து 147 இல் முடியும் என்பதால்  4 சுற்றில் மரணம்  என்று ,( உயிர் வாழ்வதில்லை  என்ற காரணத்தால்) கூறி இருக்கலாம்    

எந்தன் விளக்கம் தவறு என்றால் தெளிவு படுத்துங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 27, 2014 11:34 pm

நல்ல பதிவு செந்தில் புன்னகை நன்றி !  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 27, 2014 11:35 pm

T.N.Balasubramanian wrote:7 1/2 நாட்டு சனி என்பது ,
நான் அறிந்த வரையில் ,
பிறந்த ராசியில் இருந்து , அதன் முதல் ராசிக்கு சனி வரும்போது, ஏழரை நாட்டு சனி ஆரம்பம் . அந்த ராசியில் ரெண்டரை ஆண்டு சனி சஞ்சாரம் . அடுத்த சஞ்சாரம் ரெண்டரை ஆண்டிற்கு பிறகு , உங்கள் ராசிக்கு வரும் அடுத்தது உங்கள் ராசிக்கு அடுத்த ராசிக்கு போகும் . அங்கு ரெண்டரை ஆண்டு வாசம்
உதாரணமாக . இந்த ஆண்டு , விரூச்சிக்க ராசியில் சனி பகவான் நுழைக்கிறார் என்றால் ,
தனுர் ராசிக்கு 71/2 நாட்டு சனி ஆரம்பம் (விருசிகம் -தனுர் ராசிக்கு முந்தைய ராசி -ராசிக்கு முதல் வீடு )
முதல் ரெண்டரை ஆண்டு விருசிகம் / அடுத்த ரெண்டரை ஆண்டு தனுர் /அடுத்த ரெண்டரை ஆண்டு
மகர ராசி இல் சஞ்சாரம் . அதாவது டிசம்பர் 2014 தனுர் ராசிக்காரர்களுக்கு 7 1/2 நாட்டு சனி ஆரம்பம் என்றால் , மகர ராசிகாரர்களுக்கு ஜூன் 2017 சமயத்தில்  7 1/2 சனி ஆரம்பம்

12 வீடுகள் இருக்கின்றன (மேஷம் முதல் --மீனம் வரை )
இந்த 12 வீடை கடக்க 12 க்ஷ்2 1/2 =30 ஆண்டு ஆகும்
அதாவது 30 வருடத்திற்கு ஒரு முறை சனியின் தாக்கம் 7 1/2 ஆண்டுகள் இருக்கும் இருக்கும்.
பிறக்கும் போதே 7 1/2 சனியில் பிறந்தால் ,  அவருடைய  61 /62 வயதிலேயே முன்றாம் சுற்று சனி வந்துவிடும் .
முதல் சுற்று சனியே 27 1/2 வயதில் தான் வந்தது என்றால் ,85 வயதுக்கு பிறகுதான் முன்றாம் சுற்று வரும் .  

சனியின் ஒரு சுற்று 30 ஆண்டுகள் ஆவதால் , நாலாவது சுற்று வரும் போது , 90/ 117 1/2 ஆவது  வயதில் ஆரம்பித்து  120 இல் ஆரம்பித்து 147 இல் முடியும் என்பதால்  4 சுற்றில் மரணம்  என்று ,( உயிர் வாழ்வதில்லை  என்ற காரணத்தால்) கூறி இருக்கலாம்    

எந்தன் விளக்கம் தவறு என்றால் தெளிவு படுத்துங்கள் .

ரமணியன்

நீங்க சொல்வது தான் சரி என்றே எனக்கு படுகிறது ஐயாபுன்னகை விளக்கத்துக்கு நன்றி !  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 11:43 pm

எந்த ஒரு செயலும் சரியான முடிவையோ பலனையோ தரவில்லை என்றால் அது தொடங்கியது எழரையா இருக்கும்...இல்லேன்னா தொடங்கியதிலிருந்தே ஏழரையா இருக்கும்...இது எப்டி இருக்கு?...

ஏழரைச் சனி என்ன செய்யும்? 224747944

ஏழரைச் சனி என்ன செய்யும்? Rஏழரைச் சனி என்ன செய்யும்? Aஏழரைச் சனி என்ன செய்யும்? Emptyஏழரைச் சனி என்ன செய்யும்? Rஏழரைச் சனி என்ன செய்யும்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 28, 2014 12:13 am

ரா.ரா3275 wrote:எந்த ஒரு செயலும் சரியான முடிவையோ பலனையோ தரவில்லை என்றால் அது தொடங்கியது எழரையா இருக்கும்...இல்லேன்னா தொடங்கியதிலிருந்தே ஏழரையா இருக்கும்...இது எப்டி இருக்கு?...

ஏழறைய இருக்கு
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 28, 2014 5:25 am

ரா.ரா3275 wrote:எந்த ஒரு செயலும் சரியான முடிவையோ பலனையோ தரவில்லை என்றால் அது தொடங்கியது எழரையா இருக்கும்...இல்லேன்னா தொடங்கியதிலிருந்தே ஏழரையா இருக்கும்...இது எப்டி இருக்கு?...
அஞ்சரைக்குள்ள வண்டி தெரியும் நீங்க சொல்றது எழரைக்குள்ள வண்டியா இருக்குமோ ராரா? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக