புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 20 of 26 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Apr 17, 2015 5:06 pm

   

  தொகுப்பு எண் : 9




சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !
 






  தமிழ்த் திரைப் படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்கள்

உண்டு !

அவைகளை பல் வேறு இசையமைப்பாளர்களும் , பாடலாசிரியர்களும்

பாடகர்களும் மற்றும் பாடகியர்களும் ஒன்று சேர்ந்து அவைகளை இனிய

பாடல்களாக நமக்கு அளித்து வருகின்றனர் !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 M32EOvm0SYa4ESrxNuWA+24frPartha_G5V1GGM2_256901g


  ( அந்த கால ' ஜெமினி பட நிறுவனத்திற்கு '   சொந்தமான

இசைக் குழு ! சும்மாங்காட்டி ஒரு ' சாம்பிளுக்கு ' !    )  






அவர்கள் ஈன்று கொடுக்கும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பிரசவம்

போலத்தான் !

ஆனால் சில சமயங்களில் அவைகள் ' சுகப் பிரசவங்கள் ' ஆக அவை

அமைவதில்லை !

அந்த சமயங்களில் ...........


சில சுவையான சம்பவங்களும் நடந்து   விடும் !






   

  அந்த சம்பவகளில்

சிலவற்றை சொல்வதே இந்த கட்டுரையின்

நோக்கம் !




ஒரே கட்டுரையை ஒரே சமயத்தில் நான் எழுத நினைக்கும் அனைத்தையும்

என்னால் தர இயலாது !


எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் .....

ஒவ்வொரு பாடலுக்கும் - அதனை ஒட்டி நடந்த

சுவையான சம்பவத்தை யும் அவ்வப்போது எழுதிவிடலாம்

என்று எண்ணியுள்ளேன் !


ஆகவே இந்த கட்டுரை மிகப் பெரியதாக இருக்கும் என்பதோடு இந்த

கட்டுரை நான் எழுதி முடிக்க அதிக நாட்கள் கூட ஆகிவிடலாம்

என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் !




எச்சரிக்கை !





    நான் இங்கே கொடுக்கக்கபோகும் பாடல்களும் அதற்கான

சுவையான சம்பவங்களும் :


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ,

கண்ணதாசன் ,

மற்றும்

வாலி .......

இந்த மாதிரியான பாடலாசிரியர்களுடன் ....

மருதகாசி -  கே.பி. காமாட்சி  - போன்ற

மற்ற பாடலாசிரியர்களும்

இடம் பெறக்கூடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் !     சூப்பருங்க




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




முதலில் ...........

கவியரசு கண்ணதாசன் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 EbL9CF5XTIWSKMInLVLW+kannadasan






1. " மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் "

" ராஜபார்ட் ரங்கதுரை "    - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர் .





" ராஜபார்ட் ரங்கதுரை "  !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 OMTxrfxnSLGNFs5G5YmM+raa






குகநாதன் கதை வசனத்தில் , பி . மாதவன் இயக்கிய படம் !

திரைப் படங்கள் தோன்றாத பொழுது தமிழகத்தில் நாடகங்கள்தான்

மக்களின் பொழுது போக்கும் !

அந்த கால கட்டத்தில் , அதாவது , நம் இந்திய சுதந்திர போராட்டக்

காலங்களில் நாடக சபாக்கள் பல, நாடகங்களை நடத்தில் மக்களை

மகிழ்வித்து வந்தது !

தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் ,

பம்மல் சம்பந்த முதலியார்

போன்றவர்கள் பல சபாக்களை நிறுவி நாடகங்களை பல

ஊர்கள் தோறும் நடத்தி வந்தனர் .




அத்தகைய காலகட்டங்களை நினைவுபடுத்தும்

வகையில் நடிகர் திலகத்தை வைத்து

எடுத்த படம்தான் :

" ராஜபார்ட் ரங்கதுரை " !




(  சமீபத்தில் வெளிவந்து மண்ணைக் கவ்விய :

" காபியத் தலைவன் "

என்கிற படமும்  " ரா . ர "   படம் மாதிரிதான் !  

ஆனால் இந்த படம் எப்படி ?  :  " நோ கம்மெண்ட்ஸ் "   பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 1757813334





  " ராஜபார்ட் ரங்கதுரை " படத்தில் ஒரே ஒரு ' டூயட் ' பாடல் !



" மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் "


 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 PCVuWhJaTjGp9UWlZiuF+hqdefault




பாடலை என்னவோ , படு 'அசால்ட் '   ஆக கண்ணதாசன்

எழுதிவிட்டார் !


மெல்லிசை மன்னர் அவர்களும் கண்ணதாசனை விட .....

படு ....படு .....படு  ...' அசால்ட் ' ஆக  :


" டியூன் "

போட்டுவிட்டார் !


ஆனால் என்ன பிரயோஜனம் !

" ஏன், என்னப்பா ஆச்சு ? "

என்று கேட்கிறீர்களா !


அங்கேதான் பிரச்சனை !


மெல்லிசை மன்னர் ஒரே ஒரு ' டியூன் '  ஐப் போட்டிருந்தால்

பிரச்சனையே இல்லை !


( இப்போது நமக்கு " வாய்த்துள்ள "   இசையமைப்பாளர்கள் சிலர்

ஒரு பாடலுக்கு ஒரு  ' டியூன் ' போட ஒரு நாளை க்கு  2 லட்சம்

வாடகையாக  ஒரு கப்பலையே அமர்த்துக் கொள்ளும்

' பரிதாப நிலை ' மெல்லிசை மன்னருக்கு இல்லை !

குளிர் பதனம் செய்யாத , பாய் போட்ட அறையில்  லொட

லொட '   மின் விசிறி வசதியுடன் மெல்லிசை மன்னர் போட்டது

ஒரு டியூன் இல்லை !


பின்னே ?




 

    மெல்லிசை மன்னர்

' மதன மாளிகை ' பாடலுக்கு

போட்ட ' டியூன் ' கள் :

ஏழு !  




7  டியூன் களில்  எந்த " டியூன் " ஐ எடுப்பது ?

எவை களை விட்டுவிடுவது ?

மெல்லிசை மன்னர் தலையை சொறிந்தார் !

கண்ணதாசனை நோக்கினார் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 U6LvTtkQSJi8GThImX4L+download(2)


 " அண்ணே !   இந்த பாட்டுக்கு எந்த ' டியூன் ' ஐ  நான்

தேர்ந்தெடுப்பது , நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கண்ணே ! '


மெல்லிசை மன்னர் , கவியரசை கெஞ்சினார் !



கண்னதாசன் :


" தம்பி விசு !  எழுதுவது ஏன் வேலை !

மெட்டமைப்பது உன் வேலை !

உன் வேலையை செய் ! "




மெல்லிசை மன்னர் யோசித்தார் ......



" சரி , முதலில்  போட்ட  டியூன் ' , பாடலில் முதலில் வரும்


" தொகையறா " வுக்கு

போட்டுவிடலாம் !

ஆனா   .....பாடலுக்கு எந்த  டியூன் ? "



உதவி செய்ய வேண்டிய கண்ணதாசன் காலை வாரி விட ....

மெல்லிசை மன்னர் வேறு என்ன செய்வார் ?


கண்ணதாசனைத் தவிர அங்கே இருந்த இசைக் கருவிகளை வாசித்துக்

கொண்டிருக்கும் நிபுணர்களின் உதவியை நாடினார் !



" அண்ணே !   கடைசி 2 ' டியூன் களை ' ப போடுங்கண்ணே ! "


மெல்லிசை மன்னர் ' கடைசி 2 'டியூன் ' களை போட்டார் !

" வேலைக்கு ஆகவில்லை ! "

அந்த மாதிரியான பாடல் யாருக்கும் பிடிக்கவில்லை !




" அண்ணே !  டியூன் 3  -ம்  , டியூன்  6  -ம்  " மிக்ஸ் " செய்யுங்க , அண்ணே ! "



மெல்லிசை மன்னர்   3  +  6   =  " மிக்ஸ் " செய்தார் !


" லம்பாடி லுங்கி கிழிந்தது ! "


......ஹி...ஹி ...ஹி ...  புரியலே ?

அத்தானா ......பாட்டு " போனி " ஆக வில்லை !




  மெல்லிசை மன்னருக்கு :

" தாவு "

தீர்ந்த மாதிரி ஆகிவிட்டது !


என்ன செய்வது !

நேரமோ ஆகிக் கொண்டிருந்தது !




இந்த மாதிரி பாடல்களை எழுதி 'டியூன் ' போட்டு  பாடல்களை

படிக்க பல மணி நேரங்கள் ஆகலாம் அல்லவா !

இடையில் எல்லோருக்கும் :

காப்பி , மற்றும் ' டீ "

உண்டு !


காபி , டீ  கொண்டு வரும் பையன் அங்கே அவர்களுக்கு காபி , டீ

சப்ளை செய்து கொண்டெ அங்கே நடக்கும் :


" கூத்து - சண்டை "    யை


வேடிக்கை பார்த்துக் கொண்டெ இருந்தான் !

நடுவில் காபி , டீ கொண்டு வர வெளியெ போய்க்கொண்டும்

இருந்தான் !



நேரம் ஆக மெல்லிசை மன்னர் சலித்துவிட்டார் !


" மதன மாளிகை " என்கிற  சொல்லுடன் அந்த பாடல் ஆரம்பம் ஆகினார்

அனைவரையும் அந்த பாடல் பிடித்து ' சூபர் ஹிட் ' ஆகிவிடும் என்பதை

மெல்லிசை மன்னர் விரும்பினார் !


அங்கே இருந்த அனைவரும் " மதன மாளிகை " என்கிற பதத்தை

மிகவும் விரும்பினர் !



இடையில் ' காபி - டீ ' சப்ளை !

காபி சப்ளை செய்த பையன் மறுபடியும் மறுபடியும்

அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டே இருந்தான் !



அந்த பையனுக்கு பொறுக்க வில்லை !


பேசிவிட்டான் !


என்ன சொன்னான் ?





    " சார் !

அந்த மூணாவது  டியூன் ஐயும்

எழாவது டியூன் ஐயும்

" மிக்ஸ் " பண்ணிப் பாருங்கள் !

பாட்டு நன்றாக வரும் ! "





 அந்த பையன் அப்படி சொன்னதும் கவியரசு வுக்கு கோபம்

வந்து விட்டது !



" அட பொடியா ! இது என்ன காபி கடையா !

பாலோடு காப்பி டிக்காஷனை  'மிக்ஸ் '

பண்றதுக்கு !  உன் வேலையைப் போய்

பாருடா !  "




ஆனால் மெல்லிசை மன்னர் , அந்த பையன் சொன்னதைக் கேட்டு

கோபம் கொள்ளாமல் யோசிக்க ஆரம்பித்தார் !


அட !






 


    இந்த பையன் சொன்னது போலவே நாமும்

" டிரை " செய்தால் என்ன ! "


டியூன் 3 ஐயும்  டியூன் 7 ஐயும் ' மிக்ஸ் ' செய்தார் !


அட !


" மதன மாளிகை " பாட்டு பிறந்துவிட்டது !



ஆமாம் !


இப்போது நாம் கேட்டுக்கொண்டிருக்கும்

" மதன மாளிகை " பாடலுக்கு

' டியூன் " களை  தீர்வு செய்தது !

ஒரு டீக்காரப் பையன்தான் !







கொஞ்சம் கூட " ஈகோ " பார்க்காமல் ...

" பந்தா " இல்லாமல்

பழகும் ஒரே இசையமைப் பாளர்

நம் மெல்லிசை மன்னர் ஒருவர்தான் !





%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





 


     அடுத்து :


பாட்டுக் கோட்டை யார் !



" குட்டி  டிரைலர் " !





   


  ..........................................

.......................' பாச வலை ' ( 1954 ) பாடல் பதிவு நேரம் ....

மெல்லிசை மன்னர் ஒடி தன அறைக்குச் சென்று

கதவைத் தாஜித்துக் கொண்டார் !

அந்த அறையில் யாரும் இல்லை !

அழுதார் மெல்லிசை மன்னர் !

வாய் விடு விழுதார் !

கண்களில் கண்ணீர் தாரையாக கொட்ட

அழுதார் .......


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 Fdz0XHOKT6GO1SMwWjni+imagesCAF6GTW8


ஏன் அழுதார் ?



தொடரும்




எம்கே ஆர்சாந்தாராம்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 18, 2015 2:59 pm

எம். கே. ஆர். சாந்தாராம் அவர்களே !

நீங்கள்

தங்கத்தில் உடலெடுத்து
சந்தனத்தில் நிறமெடுத்து
வந்ததொரு கலையையா !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 06, 2015 4:50 pm

Dr.S.Soundarapandian wrote:எம். கே. ஆர். சாந்தாராம் அவர்களே !

நீங்கள்

தங்கத்தில் உடலெடுத்து
சந்தனத்தில் நிறமெடுத்து
வந்ததொரு கலையையா !
மேற்கோள் செய்த பதிவு: 1131394




உங்களின் அன்பு மிகு மடலுக்கு மிக்க

நன்றி ,

திரு. டாக்டர் . செளந்திரபாண்டியனார்

அவர்களே ! பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 1571444738



மேலே , நான் விவரித்த ' மதன மாளிகை ' பாடல் வந்த பிறகு

அந்த பாடலைப் போலவே இசையமைத்து வந்த இன்னொரு பாடலை

நான் இங்கே குறிப்பிடுவது நன்று என்று நினைக்கின்றேன் !


இதோ !





சிட்டுக்குருவி " ( 1978 ) படத்தில் இருந்து :


" என் கண்மணி / உன் காதலில் / இளமாங்கனி/உனைப் பார்த்ததும் / சிரிக்கின்றதே ! "


எஸ் பி பி / சுசீலா / பாஸ்கர் ஆகியோர் !


இசை : ' இசை ஞானி

பாடல் : ' வாலி




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 5xrL4TzsR8CkowHIIRdR+imagesqnq




இந்த பாடலைப் பற்றி :





1. இசை ஞானி இளைய ராஜா வளர்ந்து வரும் நேரம் :



பாடல்களில் புதுமையை புகுத்துவதைப் பற்றி இசை ஞானி தனது இரண்டாவது படமான :

" பாலூட்டி வளர்த்த கிளி " யில் இருந்தே ஆரம்பித்துவிட்ட்டார் .

இந்த படத்தில் இடம் பெற்ற பாடலான :


" நான் பேச வந்தேன் "

எஸ் பி பி - ஜானகி பாடல் பாடலில் இருவரும் :

வெவ்வேறு ' டியூன் ' களில் 'ஹம்மின்ங்க் ' செய்து பாடுவதை

இப்போதும் நாமும் கேட்டுக்கொண்டுதானே இருக்கின்றோம் !


" காற்றினிலே வரும் கீதம் " படப் பாடலிலும் .....பாடலின் இறுதியில் இதே போன்று

மாறுபட்ட டியூங்அள் வரும் அல்லவா !



இப்படி ' ஹாமனி ' கெடாமல் ஒன்றுக்குக்கும் மேற்பட்ட டியூன் களில் இசையமைப்பதை

மேல் நாட்டு இசைப் படி :



" COUNTER POINT "


என்று சொல்லுவர் !



" சிட்டுக்குருவி ' படத்தில் இயக்குனர்கள் தேவராஜ் - மோகன் இருவரில் - தேவராஜ் , இளையராஜாவிடம் :


" படத்தில் கதாநாயகனும் , கதாநாயகியும் ஒரே பஸ் இல் அமர்ந்து ஒருவரை ஒருவர்

' முறைத்துக் " கொண்டே ( ! )

தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லாமல் பயணிக்கும் போது பாடும் பாட்டு

ஒன்று வேண்டும் ! "


என்று சொன்னவுடன் அந்த " CONCEPT ' ஐ " பக் " என்று பிடித்துக் கொண்டார்,

இளையராஜா!



இந்த பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட டியூன் களை பயன்படுத்தினால் என்ன ?

என்று தோன்றியதன் விளைவே :


" என் கண்மணி "


பாட்டு !




இளையராஜா, வாலியை அழைத்து தன் எண்ணத்தை சொன்னார் !

வாலி ' பக் ' என்று அதனைப் பிடித்துக்கொண்டார் !


விளைவு ?


இதோ பாடல் !












பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 CE73T7oyTFmZpPKUe5Hi+imagesrpr




ஆண் :




" என் கண்மணி ...

இளமாங்கனி

சிரிக்கின்றதே

நான் சொன்ன ஜோக் ஐ க் கேட்டு நாணமோ ! "









பெண் :





' உன் காதலில்...

எனைப் பார்த்ததும்

சிரிக்கின்றதே

நீ நகைச்சுவை மன்னன்

இல்லையோ ! "







மேற்கண்ட இரண்டு 'பாரா'க்களை

சேர்த்துப் படித்தாலும்....


தனித் தனித்....தனித் தனியாஅகப் படித்தாலும்

அர்த்தம் புரியும் !



1. முதலில் எஸ் பி பி பாடினார் !

2. சுசீலா பாடவேண்டிய இடங்களில் இசையைப் போட்டு 'ரொப்பி' னார்கள் !

3. பின்னர் சுசிலா பாடினார் !

4. ' ரொப்பிய ' இசையை நீக்கிவிட்டு ' சுசீலா வை நுழைத்தார்கள் !

5, பாடல் ஓ கே !

6. சரி, பஸ் இல் போவதை பாடலில் எப்படி " காட்டு"வது ?


" கருவாடு கூடை , முன்னாடி போ ! "

" தேனாம்பேட்டை சூப்பர் மாகெட் இறங்கு "


போன்ற " பஞ்ச் " வசனங்கள் இளையாராஜாவின் அண்ணன் பாஸ்கரை விட்டு

பேச வைத்தார்கள் !




பாடல் சூபர் ஹிட்




இப்படி நான் எழுதியதால் , இளையராஜா என்னவோ

மெல்லிசை மன்னரின் " மதன மாளிகை " பாடலை

" காப்பி " அடித்தார் என்று நான் சொல்லவந்த தாக

தயவுசெய்து எண்ணவேண்டாம் !


ஏன் தெரியுமா ?



" எனக்கும் இசைக்கும்

பல மைல்கள் / கிலோ மீட்டார்கள்

தூரம் ! என்ன கொடுமை சார் இது



எம்கே ஆர் சாந்தாராம் .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2015 5:13 am

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 3838410834

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 08, 2015 10:26 am

இந்த வரிகளை ' போன்ற " பஞ்ச் " வசனங்கள் இளையாராஜாவின் அண்ணன் பாஸ்கரை விட்டு
பேச வைத்தார்கள் !' பேசியது மேஜர் சுந்தர்ராஜன் என்றுதான் நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். குழப்பத்தை நீக்கிய டாக்டர் ஐயா, உங்களுக்கு மிக்க நன்றி. உங்களது இப்புனித பணி மேலும் தொடரட்டும்.


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Jul 09, 2015 5:45 pm

  மடல்களை வரைந்த :


1. திரு . அய்யாசாமி

மற்றும்

2. மாணிக்கம் நடேசன்


- இவர்களுக்கு நன்றி !





################################################







      சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !



பாடல் :  2 .  





 " குட்டி ஆடு தப்பி வந்தா

குள்ள நரிக்குச் சொந்தம் "


-  படம் :  " பாச வலை " ( 1954 )




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 KiRKOf8SGyCokzBfrJAu+44db0abfb0375789b75904614c6d4f40_m





பாடல் : பாட்டுக் கோட்டையார் !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 CkGSPV0YRfe43oG4y6Hn+pattukottai-kalyanasundaram




அந்த காலத்தில் ......ஏன்.......

இந்த காலத்தில் கூடத்தான் .....பிற மொழிகளில்

: ஹிட் " ஆனா பாடல்களை தமிழில் " காப்பி " அடிப்பதை

ஏறக்குறைய எழுதாத சட்டமாக ஆகிவிட்டது ......அல்லவா !


முன்பு எல்லாம் ....அப்படி காப்பி அடிக்கப் பட்டதை சற்று

அடக்கமாக சொல்லி ஒத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கின்றோம் !

ஆனால் .... இப்போது :


" ஆமாம் யா ! காப்பி அடித்தி உள்ளோம் , அதனால்

என்ன ? "

என்று கேட்கும் அளவுக்கு சற்று " துணிந்து "  விட்டார்கள் !




ஆனால் ........

மெல்லிசை மன்னர்கள் அந்த மாதிரியான

" காப்பி " அடிக்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை ,

இதனை அவர்கள் ஆரம்பித்தில் இருந்தே கடை பிடித்துக்

கொண்டு இறுதி வரைக்கும் அப்படி இருந்தனர் / இருக்கின்றார் !


அவ்வளவு ஏன் , இளையராஜா கூட ஆரம்ப கால

கட்டங்களில் சில பாடல்களை பிற மொழிகளில் இருந்து

" சுட்டிருக்கின்றார் " !

ஆனால் மெல்லிசை மன்னர்கள் அப்படி இல்லை !

ஒரு சில பாடல்கள் , அதன் மூலப் பாடல்களின்

" concept "
ஐ பயன்படுத்தி இருப்பார்கள் .........ஆனால் அது

" காப்பி " அல்ல !



( எடுத்துக் காட்டு : " மாலையிட்ட மங்கை " யில் வரும் மிகப்

பிரபலமான பாடல் " செந்தமிழ்த் தேன்மொழியாள் " பாடல் ,

இந்தியில் " ஆன் " படத்தில் அவர்களது குருநாதர் நெளஷாத்

இசையமைத்த பாடல் ஒன்றின்  " கான்செப்ட் " !    )  





100 படங்களுக்கும் மேலாக படங்களை தயாரித்து

வெளியிட்ட :


" மாடர்ன் தியேட்டர்ஸ் "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 V7bM62JlQUyW76F2xTzd+1418324161-1074_Modern-Theatres-in-its-heyday






   அதிபர்

டி. ஆர் . சுந்தரம்





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 SkFNlPVqQtOC40jE7J3A+1418324037-748_TR-Sundaram



அப்படி இல்லை !

தான் தயாரிக்கும் அனைத்தூ படங்களிலும்

ஒரு சில பாடல்களாவது பிற மொழி களில் வெளிவந்த

படங்களின் பாடல்களை " காப்பி " அடிப்பதையே

" தொழில் "

ஆக கொண்டிருந்தார் !




 இந்த :

" இரு துருவங்களும் "

ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் !




மெல்லிசை மன்னர்கள் , நறுக்கு தெறித்தாற்பூல

" மாடர்ன் தியேட்டர்ஸ் " அதிபரிடம் சொல்லிவிட்டனர் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 C549EWkSwqRXbmMoX5Sr+DSC06885





" ஐயா !   எங்களுக்கு " காப்பி " அடிக்கும் பழக்கம்  இல்லை ,

ஆனால் உங்களுக்கு மிகவும் பிடித்தவாறு இசையமைப் போம் !

உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் ! "


என்று சொல்லிவிட்டனர் !





மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் தலையாட்டினார் !




" சுகம் எங்கே  " ( 1954 )

இந்த படத்திற்கு முதன் முதலில் இரட்டையர்கள்

' மாடர்ன் தியேட்டர்ஸ் '  க்கு இசையமைத்தனர் -  அத்தனைப்

பாடல்களும் மெல்லிசை மன்னர்களின் :

" ஒரிஜினல் ட்டின் களே "


மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் மிகுந்த மகிழ்ச்சி

அடைந்தார் !


( எனினும் " மாடர்ன் தியேட்டர்ஸ் " அதிபரின் பழக்க தோஷம்

விடவில்லை !

என்ன ஆச்சு ?

யாருக்கும் தெரியாமல் " டாக்ஸி டிரைவர் " என்கிற இந்திப்படத்தில்

இருந்து ஒரு பாடலை உருவி  " சுகம் எங்கே " படத்தில் சேர்த்து விட்டார் !

அது தனி கதை ! )  




" பாசவலை "




மெல்லிசை மன்னர்கள் , " மாடர்ன் தியேட்டர்ஸ் "

இல் இசையமைக்கும் இரண்டாவது படம் !


இந்த படத்திலாவது , வேறு மொழிப் பாடல் ஒன்று கூட இல்லாதவாறு

அவர்கள் பார்த்துக்கொள்ள படாத பாடு பட்டனர் !


இதற்காக அவர்கள் சேலத்திற்கு முகாமிட்டு வந்திருந்தனர் !



அந்த " பாச வலை "  படத்தில் ஒரு பாடல் :


அப்போதெல்லாம் ஒரு பாடல் காட்சிக்கு இரண்டு பாடலாசிரியர்கள்

கூட ஒன்றாக அமர்ந்து பாடலைப் படைக்கும் பழக்கம்

இருந்தது !

யார் எழுதிய பாடல் வரிகள் சிறப்பாக இருக்கின்றதோ அவர்

எழுதிய பாடல் வரிகள் பாடலில் இடம் பெறும் !

இரு பாடலாசிரியர்களும் சிறப்பாக எழுதியிருந்தால்..... ?

ஒன்றும் பிரச்சனை இல்லை ......இருவரின் வரிகளும்

ஏற்றுக்கொள்ளப்பட்டு , அவை  பாடலில் இடம் பெறும் !



போட்டியின்றி , பொறாமை இல்லாத நற்காலம் அது !


இப்போது " பாசவலைக்கு " வருவோம் !


" பாச வலை "  படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு இரண்டு

பெரிய பாடலாசிரியர்கள் அங்கே பாடலை எழுதிக்கொண்டு

இருந்தனர் !



ஒருவற் : கண்ணதாசன் !


இன்னொருவர் : மருதகாசி !


இரண்டு பேர்களும் பாடல் சரியாக வருவதற்கு முயற்சி செய்து

கொண்டிருந்தனர் !



சரி பட்டு வரவில்லை !


பாடல் சரியாக வராமல் " வளிச்சுக்கொண்டெ " ......ஹி ..ஹி

இழுத்துக்கொண்டே  சென்றது !


ஒரு நாள் இல்லை , இரண்டு நாள் இல்லை !


ஒரு வாரம் ஆகிவிட்டது !


மெல்லிசை மன்னர்களுக்கு ரொம்ப கடுப்பு ஆகிவிட்டனர் !

வெறும் மன உளச்சலுக்கு ஆகிவிட்டனர் !





[color:94e4= #330000]இந்த சமயத்தில் ...........


" மாடர்ன் தியேட்டர்ஸ் "   நிறுவன மேனேஜர் :

சுலைமான் , மெல்லிசை மன்னர்களை சந்திக்க உள்ளே

வந்தார் .....


சொன்னார் :





" விசு !  ஒரு வார காலமாக இந்த பாடலின் வரிகள் ,

யாருக்கும் சரிபட்டு வரவில்லை !

எனக்குத் தெரிந்த ஒரு  புதியவர் எழுதியதை படித்துப் பார்த்து,

அவை உங்களுக்குப் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் ! "




அந்த புதியவர் யார் என்று சுலைமான் , மெல்லிசை

மன்னரிடம் சொல்லவில்லை, சொல்லியிருந்தாலும் கூட யாருக்கும்

அந்த புதியவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியாது !


சுலைமான் சொன்னதைக் கேட்டு மெல்லிசை மன்னர் சீறினார் .....

பின் வருமாறு சொன்னார் :




   " அட போய்யா !

இங்கே இரண்டு ஜாம்பவான்கள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் !.....

எவனோ பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறானாம் ! ...

பார்க்கணுமாம் ! '





 சுலைமான் முகத்தில் ஈயாடவில்லை !

பதில் பேசாமல் போய்விட்டார் !


மறு நாள் .......

சுலைமான் வந்தார் , மெல்லிசை மன்னரை சந்தித்தார் .....

அந்த புதியவரைப் பற்றி சொன்னார் .....

அந்த பேப்பரில் எழுதிய பாடல் வரிகளைப் படிக்க கொடுத்தார் ....


மெல்லிசை மன்னர் ....சீறினார் !

சுலைமான் போய்விட்டார் !



அதன் பின்னர்      ......?


சுலைமான் முகமது கஜினி ஆகிவிட்டார் !


" என்னய்யா சொல்றே ? "

என்றா கேட்கிறீர்கள் !


ஒண்ணும் இல்லே ......

மெல்லிசை மன்னரிடம் அடிக்கடி

" படை "    எடுத்து

புதியவரைப் பற்றி சொல்ல சொல்ல......



மெல்லிசை மன்னரும் அதே போல் சீறுவார் !





 கரைப்பார் கரைத்தால்

கல்லும் கரையும்

அல்லவா !



நாட்கள் நகர்ந்து கொண்டெ போனதே தவிர

வரிகள் கிடைக்கப் பெறாமல் இரு பாடலாசிரியர்கள்

வெறிச்சோடிக் கிடக்க , மெல்லிசை மன்னர்கள்

விரக்தியின் விளம்பில் இருந்தனர் .......

அப்போது ......




" மாடர்ன் தியேட்டர்ஸ் " மானேஜர் சுலைமான்

மீண்டும் அதே பல்லவியைப் பாட வந்தார் !






" என்னய்யா இது ! ரொம்ப ரோதனையாப் போச்சு !

கொண்டாயா அந்த பாட்டை !

என்னத்தை அவன் கிழித்திருகிறான் என்று பார்ப்போம் ! "



======== மெல்லிசை மன்னரின் வெறுப்புடன் பேச்சு !





சில நிமிடங்களில் , வெளியில் நின்றிருந்த அந்த

இளவயது வாலிபருடன் பாடலுக்கான " சிட்டிவேஷனை " சொல்லி

வாங்கி வந்தார் , சுலைமான் !

எழுதிக் கொடுத்த அந்த வாலிபன் 'விருட் ' என்று நடையை

கட்டிவிட்டார் !




மெல்லிசை மன்னர் அந்த வாலிபன்

" எழுதிக் கிழத்ததை "

படித்துப் பார்த்தார் :





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 CiafXaCQQ6vHDoX0RCqC+ar747pattukottai-kalyanasundaram




" குட்டி ஆடு தப்பி வந்தா

குள்ள நரிக்குச் சொந்தம் !


குள்ள நரி மாட்டிக்கிட்டா

கொறவனுக்குச் சொந்தம் !


தட்டுக் கேட்ட மனிதர் கண்ணில்

பட்டதெல்லாம் சொந்தம் !


சட்டப்படி பாக்கப் போனா

எட்டடிதான் சொந்தம் ! "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 Nzme0SHS2C2OIYgNxMsg+download



இப்படி வரிகள் போய்க்கொண்டே இருந்தன !


படித்துப் பார்த்த மெல்லிசை மன்னர் பரவசமானார் !


அந்த பாடல் காட்சிக்கு எற்றவாறு செதுக்கி வைத்தாற்போல ,

வந்து விழுந்தன வார்த்தைகள் !



அது மட்டுமா ! தான் நினைத்தமாதிரி பாடல் எப்படி வரவேண்டுமோ

அது மாதிரியே சரியான வார்த்தைகளைப் போட்டு பாடல்

வரையப்பட்டிருந்தது !





 " பலே ! பலே ! பாடல் பிரமாதம் !........

எழுதிய ஆளை அழைத்து வா , சுலைமான் ! "



சொன்னார் மெல்லிசை மன்னர் !




சுலைமான் , வெளியெ சென்றார் !

" ஓடிப் போக " எத்தனித்த அந்த நபரை அழைத்து வந்தார் !



" இவர்தான் பாட்டு எழுதியவர் ! "

என்றார் சுலைமான் !




பனை மரத்தில் பாதி !

அந்த அளவுக்கு அவரின் உயரம் !




அவர்தான் :



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 SPD3kpOJRTaNnhOGDhfm+ar747pattukottai-kalyanasundaram



அவரை மனதாரப் பாராட்டிய மெல்லிசை மன்னர்

பாடல்வரிகளை மீண்டும் படித்தார் .....



20 நிமிடங்களில் மெட்டமைத்து இசையமைத்தும் விட்டார் !




[color:94e4= #000000]ஆனால் .......

மெல்லிசை மன்னர் மனம் ஒடிந்து விட்டார் !


என்னவாம் ?


இத்தனை சிறப்பாக எழுதிய ஒருவரை

புறக்கணிக்கப் பார்த்தோமே !

அவரை அவமானப் படுத்திவிட்டோமே !"


உள்ளூற மெல்லிசை மன்னரின் மனம் வாட்டியது !





அன்று இரவு .......


" மாடர்ன் தியேட்டர்ஸ் "  வளாகத்தில் இருந்த பூஜை அறைக்குள்

தஞ்சம் அடைந்தார் மெல்லிசை மன்னர் !


பூஜை அறையின் கதவை சாத்தி , தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார் !



சுவரில் , தன தலையை முட்டி மோதி

" மடார் " , " மடார் "

என்று தன்னைத் தானே அடித்துக்கொண்டார் !





" எண்டா , விஸ்வநாதா ! அதுக்குள்ளெ உனக்கு அவ்வளவு

திமிரா !

அறிவு கெட்டவனே !

நீ என்ன பெரிய ஆள் என்ற நினைப்பா ?

ஓர் ஆள் நன்றாக பாடலை எழுதிக் கொண்டு வந்து படிக்கச்

சொல்கிறான், அதனை படித்துக் கூடப் பார்க்காமல்

நாட்களை கடத்தினாயே,  உனக்கு எவ்வளவு

கொழுப்பு ? "



தன மனசாட்சியை , தானே கேட்டு அழுத்தி அழுது இரவு பூரா

பூஜை அறையிலே பொழுதை போக்கினார் !


அன்று இரவு , மெல்லிசை மன்னர் சாப்பிடவில்லை !

யாருடனும் பேசவில்லை !

மற்றவர்கள் எவ்வளவோ சமாதானப் படுத்தியும்

அவர் ஆறுதல் அடையவில்லை !




மெல்லிசை மன்னரின் பல நல்ல

குணங்களில் இதுவும் ஒன்று !







அன்றிலிருந்து மெல்லிசை மன்னர்

ஒரு சபதம் மேற்கொண்டார் :



என்ன சபதம் அது ?






        " இனிமேல் , யார் வந்து என்னைப் பார்க்க

வேண்டும் என்றால் , அவருக்கு ஒரு 10 நிமிடங்கள்

ஆவது ஒதுக்கி அவரிடோ பேசி அனுப்புவது ! "




 





ஆமாம், மெல்லிசை மன்னரை , அடியேன் 3 முறை

சந்தித்த போதும்

அந்த " இசை தெய்வம் "  எனக்கு 10 நிமிடங்களுக்கும் மேல்

( ஒவ்வொரு சந்திப்பிலும் ! )

பேசி உரையாடியதை என்னால் எப்படி

மறக்க முடியும் , ஐயா !    




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 GPx5yTRkRnuQ09rcEVzM+DSC04486



    (  மெல்லிசை  மன்னர், இந்த கட்டுரை

எழுதியவரை  பார்த்துக்கொண்டே

அவருடன்......ஹி.....ஹி ..... அவனுடன்

உரையாடுகின்றார் !    )  





 பாட்டுக்கோட்டையாரின்

அந்த பாட்டு !








%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



  அடுத்த பாடல் :

வாலி !





 எம்ஜிஆரின் கோபம் !

கொஞ்சம் கூட பயப்படாத  வாலி !

கோபத்தைத் தீர்த்த

அந்த பாடல் !





எம்கேஆர்சாந்தாராம்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 8:36 pm

அய்யா பிரமாதம் ...... எம் எஸ் வி எவ்வளோ பெரிய மகான்...... எவ்வளோ அடக்கம் , வாழ்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் பாடம் கற்கிறார் . .. அவர் உடல் நலம் சீக்கிரம் முன்னேற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் .
உங்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அய்யா . அற்புதமான பதிவு . பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 3838410834 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 20 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Aug 18, 2015 9:35 am

அருமை நண்பரே நீண்ட நாட்களாகிவிட்டது காத்திருக்கிறோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 9:49 am

ஆமாம் அண்ணா, ரொம்ப நாளாய் உங்களை காணவில்லையே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 18, 2015 10:38 am

டாக்டர்சார் அவரது பணியில ரொம்ப பிசியா இருப்பாருன்னு நெனைக்கிறேன்.


Sponsored content

PostSponsored content



Page 20 of 26 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக