புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 15 of 26 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Oct 21, 2014 10:14 pm

டாக்டர் சார்

1. கற்பகம் படத்திற்காக வாலி எழுதி ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடி ஒரு பாடல் பதிவு செய்யப் பட்டதா..
2. சித்தி படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் கற்பகம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டதா..

சந்தேகத்தை தெளிவு செய்யுங்களேன்...

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Oct 21, 2014 10:15 pm

என் கேள்விகள் ஒரு புறம்..

உங்கள் கட்டுரை...
என்னவென்று சொல்வது.. இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும்...
தங்களுடைய எழுத்துக்க அந்த வலிமை உள்ளது.
பாராட்டுக்கள்..

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 22, 2014 2:11 pm

வீயார் சார், நீங்கள் குறிப்பிடுவது போல் டாக்டர் ஐயா அவர்கள் நிறைய சினிமா சம்பந்தமாக பல அறிய தகவல்களை வைத்திருப்பார் போல் இருக்கிறது. நமக்காக இங்கு அவர் தந்து வருவது நாம் செய்த பலன். அவருக்கு என்றுமே நாம் கடமைப்பட்டிருக்கிறோம். வளர்க அவரது தொண்டு.


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Nov 01, 2014 7:31 am

மாணிக்கம் நடேசன் wrote:எம்.ஆர்.ராதாவின் அசத்தலான படம் ஒன்றை போட்டு எங்களை அசத்தி விட்டீர்கள், எங்கிருந்து இவற்றை எடுத்து வருகிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. தகவல்களுக்கும் தரமான கிடைப்பதற்கிறிய படங்களுக்கும் மிக்க நன்றி டாக்டர் சார்.

தொடரட்டும் உங்களது இந்த அற்புத பணி.
மேற்கோள் செய்த பதிவு: 1097683





அன்புள்ள திரு. மாணிக்க்கம் நடேசன்ன் அவர்களுக்கு,

தங்களின் இரு கடிதங்களுக்கும் நன்றி  !

எனக்கு நேரம் இருக்கும் போதேல்லாம் நிச்ச்சயம்  எழுதுகிறேன்,

மருத்துவப் பணியில் இருக்கும் எனக்கு நேரம் கிடைப்பது

என்பது அரிது.

எனினும் , நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேஎன்.


நன்றி ஐயா,



எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Nov 01, 2014 7:33 am

M.M.SENTHIL wrote:தொடர் பதிவிற்கு நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1097721



 நன்றி , திரு. எம். எம். செந்தில் அவர்களே !

எம்கேஆர்சாந்தாராம்



mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Nov 01, 2014 8:03 am

veeyaar wrote:டாக்டர் சார்

1. கற்பகம் படத்திற்காக வாலி எழுதி ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடி ஒரு பாடல் பதிவு செய்யப் பட்டதா..
2. சித்தி படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் கற்பகம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டதா..

சந்தேகத்தை தெளிவு செய்யுங்களேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1098487






நன்றி , திரு. வியார் சார் !

உங்க்களீன் இரு கடிதங்களுக்கும் நன்றிகள் பல !





முதல் கேள்விக்கு எனது பதில் :


எனக்குத் தெரிந்தவரையில் ' கற்பகம் '  படத்தில் ஏ. எல். ராகவன் - எல் .ஆர்.

ஈஸ்வரி - இவர்களின் பாடலை பதிவு செய்து பின்னர் இசைத்தட்டாக

வந்ததாக நினைவு இல்லை.

அப்படி ஒரு பாடல் வெளி வந்திருக்கும்  என்று

என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் படத்தில் அந்த

பாடலை ஷீலாவும் முத்துராமனும் தான் பாடுவதாகத்தான்

படமாக்கி இருக்க வேண்டும் - ஆனால் அவர்களின் டூயட் படத்திற்க்கு

அவசியம் இல்லை என்பதே என் கருத்து !


நம் சகோதரர் திரு. நீலமேகம் கூட இதைத்தான் குறிக்கின்றார் !






இரண்டாவது கேள்விக்குப் பதில் :


" கற்பகம்" படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியவர்

வாலி !

வாலியை வைத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியது

குறித்து கவிஞர் கண்ணதாசன் அதிருப்தி அடைந்தார் என்பது

ஒரு ' கிசு - கிசு '   செய்தி !

எனவே அவரை சமாதானப் படுத்தும் நோக்கில் ,

கே. எஸ்.. ஜி , கவிஞர் கண்ணதாசனை " சித்தி " படத்தில்

பாடல்களை எழுதச் சொன்னதாகவும் ஒரு 'கிசு- கிசு '

செய்தி !


( " கிசு- கிசு "   என்பதை " குசு- குசு"  என்று படித்துவிட வேண்டாம் ! )


" கற்பகம் "  படத்திற்கு இசை :

மெல்லிசை மன்னர்கள் .


"சித்தி " படத்திற்கு இசை :

மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் தனித்து !



" கற்பகம் " வெளிவந்தது : 1963 ஆம் ஆண்டு !


" சித்தி" வெளிவந்தது 1966  ஆம் ஆண்டு !



இன்னொன்று :

மெல்லிசை மன்னர்களின் அற்புதமான கலவை கொண்ட ' கற்பகம்'

பாடல்களுக்கும் ,

தனித்துவம் கொண்ட அற்புத இசையமைப்பு கொண்ட

மெல்லிசை மன்னர் எம். எஸ். வி. அவார்களின்

பாடல்களுக்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள்

அறியாததா, என்ன !


எனவே கண்ணதாசன் எழுதி, 'கற்பகம்' படத்தில்

' சந்தீப்போமா' பாடல் இடம் பெற

வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.






தொடர்ந்து எழுதுங்கள், வியார் சார் !



 " கற்பகம்" பாடல்காள் !

இன்று மாலைக்குள் !




எம்கேஆர்சாந்தாராம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 01, 2014 4:44 pm

அருமையான படம்.... கற்பகம்....
நன்றி ஐயா...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Nov 01, 2014 4:59 pm

M.Saranya wrote:அருமையான படம்.... கற்பகம்....
நன்றி ஐயா...
மேற்கோள் செய்த பதிவு: 1100966


மிக்க  நன்றி சரண்யா சகோதரி அவர்களே,

இதோ, " கற்பகம் " பாடல்கள் !




எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Nov 01, 2014 5:09 pm

[ b] h2]
" கற்பகம் " பாடல்கள் !
[/b] [ [/h2]




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 2iv8



' கற்பகம் '  படத்தை கே. எஸ். ஜி இயக்கத்தில்

கே.எஸ். ஜிக்கு  சொந்தமான :

" அமர்ஜோதி "

என்கிற பட நிறுவனம் எடுக்க முடிவான போதே அந்த படத்திற்கு

இசையமைப்பு :

" மெல்லிசை மன்னர்கள் "

என்று முடிவு செய்யப்பட்டது !

இந்த படத்தை தயாரிப்பதற்கு சற்றே கால இடைவெளியில்

' முக்தா பிலிம்ஸ் '  படக் கம்பையில் இருந்து :


" இதயத்தில் நீ "  ( 1963 )


திரைப்படத்திற்கு இசையத்த மெல்லிசை மன்னர்

எம். எஸ். விஸ்வநாதன் கவிஞர் வாலியின் திறமைய கண்டு

மெச்சி,  :


" இத்தனை காலம் நீங்கள் எங்கிருந்தீர்கள்  "


என்று மெல்லிசை மன்னர், வாலியைப் பார்த்து கேட்கும்

அளவில் , வாலியின் பாடல் எழுதும் திறன் மிகவும் உயர்ந்து

காணப்பட்டது !


எனவே மெல்லிசை மன்னர், தன் கண்களில் தென்பட்ட

படத்தயாரிப்பாளர்களை சந்தித்து வாலியை சிபார்சு செய்யத்

தொடங்கினார் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 1THIuxk5T2GcTR1RIqUQ+untitled





(  மெல்லிசை மன்னருக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் மிகப்

பெரிய " புரிதல் '  அத்தான் - ' Chemistry '  இருந்தது என்பது

என்னவோ உண்மை !  அதனால் திறமை உள்ளவர்களை

ஊக்குவிக்க அவர் என்றும் விரும்பினார் என்பதும் உண்மை ! )






   " அத்தை மடி மெத்தையடி !

ஆடி விளையாடம்மா ! "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 PxLAYrGhTU2aKt4EsSvx+j72u





  " உங்களைப் பற்றி எம். எஸ். வி அவர்கள் என்னிட்டம்

நிறைய சொன்னார் ! மகிழ்ச்சி ! முதலில் ஒரே ஒரு பாட்டு

உங்களுக்குத் தருகிறேன், மற்றவை பிறகு பார்ப்போம் ! "




சொன்னார் : கே. எஸ். கோபாலகிருஷ்ணன், வாலியிடம் .



" எங்கே, எம். எஸ். வி க்கு நீங்கள் எழுதின பாட்டு ஒன்று

சொல்லுங்கள், கேட்போம் ! "


கேட்டார் இயக்குனர் திலகம்.




 " உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்.

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவு இருக்கும் ! "



" இதயத்தில் நீ " ( 1963 )  - வாலி


மேற்கண்ட பாடலை பாடிக்காட்டினார் வாலி!



" ஓ.கே ! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !

நாளைக்கு ஆபிசுக்கு வாங்க!

வண்டி அனுப்புகிறேன் ! "


கே. எஸ். இப்படி கூறிவிட்டு சென்றார் !




மறுநாள் காலை.........




வாலியின் இருப்பிடத்திற்கு கார் வந்தது.

கே. எஸ். ஜி யின் ஆபிஸ் :


" வாலி !  ஒரு தாலாட்டுப் பாடல் வேண்டும் !

அந்த குழந்தையின் அத்தை முறை கொண்ட ஒரு

பெண் ஒருத்தி பாடும் தாலாட்டு பாடல் !

அந்த பெண் எப்படி அந்த குழந்தைக்கு தாலாட்டுப் பாடலை

பாடுவாள் என்று சொல்லுங்கள், பார்ப்போம் ! "




இதில் வேடிக்கை என்னவென்றால்......

இயக்குனர் திலகம் கே. எஸ். ஜிக்கே திரைப்படங்களுக்கு

பாடல்களை எழுத நன்றாகத் தெரியும்.........இது பற்றி அடியேன் முன்னரே

உங்களுக்கு சொல்லிவிட்டேன் !

இப்போது விஷயம் தெரிந்தவர் முன்பு வாலி நன்றாக பாடி

பேர் எடுக்கவேண்டிய நிலைமை !




வாலி கொஞ்சம் கூட தயங்க வில்லை !

' பாட' ஆரம்பித்துவிட்டார் :




 
   " அத்தை மடி மெத்தையடி !

ஆடி விளையாடம்மா !

ஆடும் வரை ஆடிவிட்டு

அல்லிவிழி மூடம்மா ! "




கே. எஸ். ஜி துள்ளிக் குதித்தார் !

வாலியின் முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டார் !


" சபாஷ் !  சரியான பாட்டு !

நான்  எண்ணியதற்கும் மேலாக நீங்கள் எழுதி விட்டீர்கள் ! "


வாலியின் பாடல் ஓ.கே ஆனது !



இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும் :

இயக்குனர் என்கிற வகையில் , கே. எஸ். ஜி அவர்கள்,

பாடலாசிரியர்களிடம் பாடலை எழுதி வாங்கும் போது பாடல்களை

அவர்கள் முதலில் எழுதுவதே கே. எஸ்.ஜிக்கு திருப்தி ஏற்பட்டு

விட்டால் அந்த பாடல் வரிகளை அவர் ஏற்றுக்கொள்வார் !

மாறாக, கே. எஸ். ஜி திருப்தி ஏற்பட்ட போதிலும் மேலும்

மேலும் பாடல் வரிகளை எழுதச் சொல்லி கவிஞர்களை

துன்புறுத்தும் வழக்கம் அவர்களுக்கு இல்லை !

' முதலில் எனக்குப் பிடிக்கும் வரிகளை இவர்கள் எழுதிவிட்டால்

பின்னர் எதற்காக மேலும் அவர்களை எழுதச் சொல்லவேண்டும் ? '

என்று வாதாடுவார் !



ஒரு சம்பவம் :


" அருகில் வந்தாள் , உருகி நின்றாள் "

என்கிற ஏ. எ,. ராஜா பாடிய " களத்தூர் கண்ணம்மா "

பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசனை மேலும்

மேலும் சரணங்களை எழுதுமாறு ' டார்ச்சர்'  கொடுத்தாராம்

அந்த படத்தை முதலில் இயக்கிய இயக்குனர் :

டி. பிரகாஷ் ராவ் !


கண்ணதாசன் எழுதினார்.....

எழுதினார்.......

எழுதின்னார்.....

எத்தனை சரணங்கள் தெரியுமா ?


51   சரணங்கள் !


பார்த்தார், ஏ. வி. எம் பட அதிபர் செட்டியார் !

கண்ணதாசனிடம் சொன்னார் , செட்டியார் :


" அய்யா ! இந்த டி. பிரகாஷ் ராவ் ஒரு தெலுங்கர் !

தமிழ் அவ்வளவாக அறியாதவர் !

எனவே நீங்கள் இதுதும் நிறுத்திக் கொள்ளவும் !

நீங்கள் எழூதிய இத்தனை சரணங்களில் நாங்கள்

மூன்றை மட்டும் ( ! )

எடுத்ட்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிடுகின்றோம் ! "


என்றாராம் !


விளைவு ?

அந்த டி . பிரகாஷ் ராவ் , பின்னால் வேறு ஒரு பிரச்சனையின்

விளைவாக மாற்றப்பட்டு " களத்தூர் கண்ணம்மா " வை இறுதியாக



ஏ. பீம்சிங்


இயக்கினார் !




" அத்தை மடி மெத்தையடி  "

மகிழ்ச்சி :

http://www.mediafire.com/listen/mvhdlmbb6q37wu2/Karpagam-1963_-_Athai_Madi_Methaiyadi-PS-Vaali.mp3



" அத்தை மடி மெத்தையடி  "

இன்னொன்று :

http://www.mediafire.com/listen/psv2c4j64mf4toq/Karpagam-1963_-_Athai_Madi_Methaiyadi(Sad)-PS-Vaali.mp3





2 . " மன்னவனே அழலாமா , கண்ணீரை விடலாமா ! "







 " முதலில் ஒரு பாட்டு "  என்று வாலியிடம்

' சும்மாங்காட்டி '

சொன்ன கே. எஸ். ஜி , இப்போது சப்பு கொட்டினார்.....அத்தான் ...

' ஜொள்ளிட்டார் ' !

' இந்த வாலிக்கு இன்னொரு பாடலைக் கொடுத்தால் என்ன ? "

என்று எண்ண ஆரம்பித்தார் !


" கருவாட்டைத்தான் கூவி விற்க வேண்டும் !

சந்தனத்தை அப்படி விற்க வேண்டியதில்லை ! '


தானாக விற்பனை ஆகிவிடும் !

வாலியின் நிலைமை இப்படித்தான் !  ஜாலி



" ஹலோ வாலி !

இதோ இன்னொரு பாட்டுக்கான ' சிட்டுவேஷன்! '


" இளம் மனைவியை சதி வேலையால் இழந்த கணவன்,

இன்னொரு பெண்ணை விருப்பம் இல்லாமல் மணந்து

கொள்கிறான் ....ஆனால் அவளை அவன் மணந்த பின்னரும்

அவளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான்.......

தன் முதல் மனைவியின் நினைவுடனேயே இருக்கின்றான்.

அவனை, அந்த முதல் மனைவி நேரில் வந்து பாடினால்

அந்த பாடலை நீங்கள் எப்படி எழுதுவீர்கள் ? "


' கிடுக்குப் பிடி' போட்டார் கே. எஸ். ஜி, வாலையைப் பார்த்து !


வாலி சற்று யோசித்து எழுத ஆரம்பித்தார் :



" மன்னவனே அழலாமா !  கண்ணீரை விடலாமா "


கே. எஸ். ஜி மகிழ்ச்சி அடைந்தார்......

ஆனால் வாலியின் இந்த வரிகளில் கே. எஸ். ஜி பரவசம்

அடைந்தார் :



" என் உடலில் ஆசை இருந்தால் என்னை நீ மறந்து விடு !

என் உயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ் விடு ! "


கூடவே மெல்லிசை மன்னர்களின் இசையிலும் ,, காமரா மேதை

கர்ணனின் ஒளிப்பதிவும் அந்த பாடல் வரிகளை உயரத்தில் தூக்கி

வைத்தன !


பாடல் :




http://www.mediafire.com/listen/zy7y4r5ze6y5og7/Karpagam-1963_-_Mannavane-PS-Vaali.mp3



####################################################



3. " ஆயிரம் இரவுகள் வருவதுண்டு !

ஆனால் இதுதான் முதல் இரவு ! "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 15SMx3dyQCxP14zPgR1A+3s0g





இயக்குனர் திலகத்திற்கு இப்போது வாலியை இலேசில்

வீட மனம் வரவில்லை !

அடுத்த பாடலுக்கு ' சிட்டுவேஷ' ஐ சொல்லிவிட்டார் !



" கல்யாணம் ஆகி, முதல் இரவுக்கு கிளம்பும் தன்

தோழிக்கு, கல்யாணம் ஆகாத பருவப் பெண் எப்படி

அவளை வாழ்த்திப் பாடி வழி அனுப்புவாள் ? "


வாலி எப்படி பாடலை எழுதினார் ?




வாலி, " ஆயிரம் இரவுகள் "  பாடலை

முழுமையாக எழுதவில்லை !


பின்னே ?

அறைகுறையாக சொற்களை சரியாக நிரப்பாமல் :


FILL  - UP  THE   BLANKS  

முரையில் எழுதிவிட்டார் !


எப்படி ?




தோழி பாடுகின்றாள் :



 
 " வயதில் வருவது ஏக்கம் !

அது வந்தால்  வராதது ------------- ! "



" வந்தது மாமலர் கட்டில் !

இனி வீட்டினில் ஆடிடும் ----------------- ! "



" வருவார் வருவார் பக்கம் !


உனக்கு வருமே வருமே __________________ ! "



" தருவார் தருவார் நித்தம்

இதழ் தித்திக்க தித்திக்க ___________________ ! "




  கல்யாணம் ஆகாத கன்னி , முதல் இரவைப் பற்றி

"  BOLD "   ஆக , தைரியமாக பாடத்தயங்கித்தான் இந்த :


" கோடிட்ட இடங்களை நிரப்பும் "  

பாடல் !


அப்புறம் ?

அப்புறம் என்ன......

தியேடரில் இந்த பாடலை திரையில் வரும்போது மக்கள்


" கோடிட்ட இடங்களை நிரப்பினார்கள் ! "


" தூக்கம் "


" தொட்டில் "

" வெட்கம் "

" முத்தம் "


என்று ஒரே ஆரவாரம்.....ஆரவாரம் !


இறுதியில் பாடலை அந்த பெண் பாடுவதாக இப்படி

எழுதுகிறார் :



" யாரோ சொன்னார் கேட்டேன் - நான் கேட்டதை

உன்னிடம் சொன்னேன் !


நானோ சொன்னது பாதி !

இனி தானாய் தெரியும் மீதி ! "



இந்த பாடல் ஹிட் ஆனதுதான் உங்களுக்குத் தெரியுமே ! நன்றி  

பாடல் :

http://www.mediafire.com/listen/wlcjugb68z94gk9/Karpagam-1963_-_Aayiram_Iravugal-PS-Vaali.mp3



 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



4 .  " பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்,

பார்வையிலே படம் புடிச்சாம் ! "





இந்த பாடலும் வாலி எழுதிய பாடல்தான் !

பாடலைப் பாடியவரும் பி. சுசீலா அம்மாதான் !

பாடலின் இசை மெல்லிசை மன்னர்கள்தான் !


ஆனால்...............................


இந்த பாடல் ( முதலில் ) இடம் பெற்றது :


" கற்பகம் "  படத்தில் அல்ல !


' பின்னே  எந்த படத்தில் ஐயா இந்த பாடல் இசையமைக்கப் பட்டது ? "


என்றா கேட்கிறீர்கள் ?

சொல்றேன் !

இந்த பாடல் முதலில் கே. எஸ்.ஜி , ' கற்பகம் " படத்தை அடுத்து

இயக்கி வெளிவந்த :


" கை கொடுத்த தெய்வம் " ( 1965 )

படத்திற்காக பாடப் பட்டது !



" எப்படி ஐயா இதனை சொல்கிறீர்கள் !

ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ? "


என்றா கேட்கிறீர்கள் ?




"  ஆதாரம்  இல்லாத சாந்தாராமா !  "   போட்டிக்கு ரெடி



இந்த பாடலில் இடம் பெற்ற இந்த வரிகளை படியுங்கள் :




" யமுனையிலே வெள்ளம் இல்லை.....

விடியும் வரை கதை படிச்சான் ? "



" கற்பகம் " படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரம் பாடுவதாக

அமைந்த இந்த பாட்டில்:

" வட நாட்டில் பாயும் யமுனை நதி எங்கே வந்தது ? "

சொல்லுங்கய்யா !     கூடாது



" காவேரியில் வெள்ளம் இல்லை "

அல்லது

" தாமிரபரணியில் வெள்ளம் இல்லை ! "


என்று ஏன் வரவில்லை ?


ஏன் யமுனை ?


சொல்றேன் !


" கை கொடுத்த தெய்வம் " படத்தில் கே. ஆர் . விஜயா பாடுவதகத்தான்

இந்த பாடல் இசையமைக்கப் பட்டது !

கே. ஆர். விஜாயா வின் கதாபாத்திரம் ' கை கொடுத்த தெய்வம் '

படத்தில்ல் வட இந்தியாவில் உள்ள பாட்னா அல்லது வேறு ஊரில்

வசிப்பதாக வருகிறது !

எனவே வட இந்தியாவில் வசிக்கும் கே. ஆர். விஜயா இந்த

பாட்டை பாடுவதற்கு ஏற்ப :


" யமுனையிலே வெள்ளம் இல்லை ! "


என்கிற வரியை வாலி எழுதியுள்ளார் !


சரியா ?     சிரி சிரி




இன்னொன்று  :


இந்த     பாடலை ' கற்பகம் '  படத்தில் பாடும் சாவித்திரி ஏற்றுக்கொண்டு நடிக்கும்

கண்ணியமான பாத்திரத்தை களங்கப் படுத்துவதைப் போன்று

அமைந்துள்ளதாக, படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள், தங்கள்

அதிருப்தியைத் தெரிவித்தது என்பது உண்மை !

அதற்கு இயக்குனர் கே. எஸ். ஜி , எந்த விதமான விளக்கமும் அப்போது

சொல்ல்லவில்லை என்பதும் உண்மை !

ஆனால் , துடுக்குத்தனமான பாத்திரத்தை ஏற்று வித்தியாசமாக நடித்த

' கை கொடுத்த தெய்வம் ' கே.  ஆர். விஜாவுக்கு இந்த பாடல் சரியாக

பொருந்துகிறது என்பதும் உண்மை !  
 




ஆனாலும் இந்த பாடலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு !

" கற்பகம் "  படத்தின் 100 வது நாள் வெற்றி விழாவுக்கு கண்ணதாசன் அவர்கள்

அழைக்கப்பாட்டார்.

அப்போது மேடையில் பேசிய பிரபல தயாரிப்பாளர் :


சின்ன அண்ணாமலை


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 4N9gFPW0RMyGMXWiY6d9+KannadasancenterwithK_Kamarajright



 இடது ஓரத்தில்

" ஸ்மால் " ( ! )  அண்ணாமலை !




கண்ணதாசனை புகழ்ந்து பேசும் ஆசையில் வாலியை இப்படி

பேசி விட்டார் !

என்ன பேசினார் :


" சில சமயங்களில் குதிரைப் பந்தயத்தில் " நோஞ்சான் குதிரை "

கூட எப்படியோ மூக்கை நுழைத்து ஜெயித்து விடுகிறது ! "


ஆனால், பின்னர் பேச வந்த கவிஞர் கண்ணதாசன் , சின்ன அண்ணாமலையின்

பேச்சை கண்டித்தார் !

வாலியை பாராட்டினார் !



கண்ணதாசன் சொன்னார் :


" வாலி மிகச் சிறந்த கவிஞர், இதில் சந்தேகமே இல்லை !

இதோ, அவர் " கற்பகம் " படத்தில் எழுதியுள்ள ஒரு பாடல் :

" பக்கத்து வீட்டு பருவ மச்சான் "

இந்த பாடலில் வாலி எழுதியுள்ள ஒரு வரியினைப் படியுங்கள் :




" மனசுக்குள்ளே தேரோட்ட

மை விழியில் வடம் புடிச்சான் ! "



இந்த வரிகள் ஒன்றே போதும் அவர் ஒரு சிறந்த கவிஞர்

என்பதை நிரூபிக்க ! "


என்று சொன்னாராம் !





http://www.mediafire.com/listen/acnls24502yx0bz/Karpagam-1963_-_Pakkathu_Veettu_Paruva_Machaan-PS-Vaali.mp3



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Rajinikama





" எம். எஸ். வி யை சந்திப்பதற்கு முன்னர்

எனக்கு சோற்றுக்கு வழி இல்லை !

அவரை சந்தித்த பிறகு

எனக்கு சோறு திங்க நேரம்மில்லை ! "



----   கவிஞர்  வாலி !







%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




அடுத்து :



" நாயகன் "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Imagescamw





உருவான கதை !





எம்கேஆர்சாந்தாராம்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 01, 2014 7:45 pm

நன்றி
எம்கேஆர்சாந்தாராம் அவர்களே ! மிக மிகப் பயனுள்ள - உயிரோட்டமான செய்திகள் உங்களுடையவை !
எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 1571444738 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 15 of 26 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக