ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயம்படாத விளையாட்டை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்! - ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டும் தமிழறிஞர்

Go down

காயம்படாத விளையாட்டை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்! - ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டும் தமிழறிஞர் Empty காயம்படாத விளையாட்டை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்! - ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டும் தமிழறிஞர்

Post by சிவா Wed May 14, 2014 2:44 am

காயம்படாத விளையாட்டை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்! - ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டும் தமிழறிஞர் P41

[noguest] தமிழர்களின் வீர விளையாட்​டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துத் தீர்ப்பளித்து இருப்பதால், அதிர்ந்து​போய் இருக்கிறது தமிழகம். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் தமிழக கிராமத்தினர் இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் நீண்ட நெடுங்​காலமாக நடை​பெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு, கடந்த சில வருடங்களாகவே புளு கிராஸ் அமைப்பின் மூலமாகச் சோதனை வந்தது. ஜல்லிக்கட்டை தடைசெய்யக் கோரி அந்த அமைப்பினர் நீதிமன்றத்துக்குச் சென்றதால் சில கட்டுப்பாடு​களுடன் இதை நடத்திக்கொள்ள இடைக்கால அனுமதியை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

இறுதித் தீர்ப்பில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத் தடைவிதித்து உத்தரவிட்டதால்... அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள், அதில் பங்கேற்கும் வீரர்கள், பார்வையாளர்கள் மட்டுமின்றி தமிழ் அமைப்பினரும் கொந்தளிக்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசினார் வரலாற்று ஆய்வாளரும் தமிழ் அறிஞருமான தொ.பரமசிவன். ''தமிழர்களின் பாரம்பரியம் மிகுந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து இருக்கிறது. இது எங்களைப் போன்றவர்களை மிகுந்த மனவேதனை அடையச் செய்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலமாகத் தமிழர்களின் பண்பாட்டு வேர் அறுக்கப்பட்டு இருப்பதாகவே நினைக்கிறேன்.

நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் யார் எப்படி வாதிட்டார்கள், என்ன விஷயங்களை முன்வைத்தார்கள் என்பது தெரிய​வில்லை. ஆனாலும், மாடுகள் அபாயகரமான கொடிய விலங்கோ அல்லது வன விலங்கோ அல்ல. வெளியில் இருந்து அவற்றைக் கொண்டுவருவதாகச் சொல்வது தவறானது. காங்கயம், ஆலம்பாடி வகை மாடுகள் அனைத்துமே வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள்​தான். வீடுகளில் வளர்க்கப்படும் மற்ற பிராணிகளைப் போலவே இவையும் பராமரிக்கப்படும்.

ஜல்லிக்கட்டை பொறுத்தவரை, ஊடகங்கள் அதனை மாடு அடக்குதல் என்று தவறாகச் சித்திரித்துவிட்டன. உண்மையில்... மாடு அடைதல் என்பதே சரியான சொல். மாட்டின் திமிலை பிடித்துக்கொண்டு 30 அடி தூரம் சென்றாலே வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்படுகிறான். இந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மாடுகளை எந்த விதத்திலும் துன்புறுத்துவது கிடையாது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை அடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வீரர்கள் கையில் ஈட்டியுடன் களத்தில் நிற்பார்கள். பாய்ந்து வரும் மாட்டின் முதுகில் ஈட்டியால் குத்திச் சாய்ப்பார்கள். இங்கே அது மாதிரியான எந்தச் சம்பவமும் நடப்பது இல்லை. இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் கைகளை மட்டுமே நம்பிக் களம் இறங்குவார்கள். மாடுகளுக்காவது கொம்பு இருக்கிறது... வீரர்களுக்குக் கைகளைத் தவிர எந்த ஆயுதமும் கிடையாது.

இந்த விளையாட்டில் பங்கேற்கும் மாடுகள் பிடி​படாமல் இருக்க, தப்பி ஓட முயற்சி செய்யுமே தவிர, யாரையும் விரட்டிச் சென்று முட்டுவது கிடையாது. மாடுகளை இதற்குத் தயார்படுத்துவதற்காகத் துன்புறுத்துவதாகச் சொல்வதில் துளியும் உண்மை இல்லை என்பதைக் களத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாலே புரியும்.

இந்த மாடுகள் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. பூஜை செய்து வணங்குகிறார்கள். இப்படி வணக்கத்துக்கு உரியதாக வைத்திருக்கும் மாடுகளைத் துன்புறுத்துவதாகச் சொல்வது தவறான வாதம்.

இந்துக்களோடு மட்டும் அல்லாமல் கிறிஸ்துவர்​களோடும் மாடுகள் தொடர்பு உடையதாக இருக்கின்றன. இந்து விழாக்களின்போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது போலவே, திண்டுக்கல் மாவட்டத்தில் கத்தோலிக்க தேவாலய விழாவின்போது கிறிஸ்துவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள். அதனால் மக்களின் சமயங்களோடு இரண்டற கலந்துவிட்ட இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு விளையாட்டு இருக்கிறது. பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் இந்த விளையாட்டுக்களை தடைசெய்வது அந்தந்த சமூகத்தின் அடையாளத்தை அழிக்கும் செயல்.

பொதுவாக, ஆபத்து இல்லாத விளையாட்டே கிடையாது. சைக்கிள் பழக வேண்டுமானால்கூட கீழே விழுந்து முட்டியில் காயத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் பழகிவிட முடியாது. ரத்த காயம் படாத விளையாட்டை உலகத்தில் இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

சூது விளையாட்டில்கூட அதன் காய்கள் எதிரில் இருப்பவரின் நெற்றியில் தெறித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியதாக சங்கப் பாடலகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் ரத்தம் வருகிறது என்பதற்காக எந்த விளையாட்டுமே விளையாடக் கூடாது என சொல்லிவிட முடியுமா? இந்த விளையாட்டில் பாதுகாப்பு சரியில்லை என்றால் அதைச் சீர்ப்படுத்த என்ன செய்ய வேண்டும் என சொல்லலாம். சில கட்டுப்​பாடுகளை விதிக்கலாம். நெறிமுறைகளை வகுக்க​லாம்'' என்றார். [/noguest]

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தமிழக அரசு மேல்​முறையீடு செய்ய இருக்கிறது. இறுதித் தீர்ப்புக்குக் காத்திருப்போம்!


[thanks] விகடன் [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum