ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் !

3 posters

Go down

விஸ்வரூபம் ! Empty விஸ்வரூபம் !

Post by krishnaamma Mon May 12, 2014 7:28 pm

காலை மணி 7.30. பிரேமா பூஜைக்கு வேண்டிய பூக்களைப் பறிக்க வாசல் பக்கம் வந்தாள். கண்கள் தெருக்கோடியை அடிக்கடி நோக்கின. நடுநடுவே வீட்டின் உள்பக்கம் ஒரு கடைக்கண் வீச்சு. அவள் கணவர் பச்சை மிளகாய் பத்மநாபன் ஹால் சோபாவின் அமர்ந்திருக்கிறார். தான் உண்டு, தன் பேப்பர் உண்டு என்றில்லாமல் எதற்கெடுத்தாலும் பச்சை மிளகாய் காரம் ஏறப் பேசுவார். பாவக்காயின் கசப்பு, பாம்புக்கடி, பட்டாஸ் கட்டு என்று எல்லா ரஸமும், காரமும் இணைய பேசுவார். பெரிய கம்பெனி அதிகாரி. செக்கிங் அதிகாரியாக இருந்ததால் வேலை பொருத்தமாக இருந்திருக்கும். என்ன செய்வது பிரேமா மாட்டிக் கொண்டாளே?

அதோ... தூரத்தில் அவர்கள் வருகிறார்கள். தினம் பார்க்கும் காட்சி தான். எப்படியாவது பேசிவிட வேண்டும். இந்தப் பத்து, அதுதான் பிரேமாவின் பச்சை மிளகாய் பத்மநாபன் பார்த்தால் கத்துவார். கட்டாயம் ஒரு இன்டர்வ்யூ வேண்டும். அது சரி. அவர்கள் யார்? ஒரு ஐம்பது வயது பாட்டியும், அவளது ஏழு வயது பேரனும் தான் அவர்கள். துள்ளிக் குதிக்கும் கன்றுக்குட்டியாய்ப் பேரன், துவண்ட, கேரளாவிற்கு லாரியில் போகும் மாடாய் பாட்டி. உலகத்துக்கு உற்சாகத்தை எல்லாம் தேக்கிய பேரன். உள்ளம் உடைந்த பாட்டி. வீர நடை போடும் பேரன். விந்தி விந்தி நடக்கும் பாட்டி. பொங்கிப் பிரவகிக்கும் நீர்வீழ்ச்சியாக வார்த்தைகளைக் கொட்டும் பேரன். முக்கலும், முனகலுமாகத் திக்கித் தணறிப் பேசும் பாட்டி. கலையாத கஞ்சி போட்ட கராட்டே உடையில் பேசன். விலை அதிகமானாலும் கசங்கிய உடையில் எனக்கும் பேரனுக்கும் ரொம்ப தூரம் என்பது போல் கட்டிய புடவையில் பாட்டி. பேரன், பாட்டியின் பிள்ளையின் குழந்தையாகத்தான் இருப்பான்.

வயதான காலத்தில் பேபி சிட்டர்ஸ் என்ற குழந்தை வளர்ப்பு, பாட்டிக்கு வாய்த்து போலிருக்கிறது. மருமகளுக்கு என்ன கொள்ளை? அவள் தன் குழந்தையைக் கராட்டே வகுப்பிற்குக் கூட்டி போகலாமே? வேலைக்குப் போகிற பெண். தூங்கி எழுந்திருக்கவே மாட்டாள். மாமனார், மாமியார் சும்மா தானே வீட்டில் இருக்கிறார்கள். தண்டச்சோறுகள் வேலை செய்யட்டுமே என்று காலையிலம், மாலையிலும் பேரனுக்குத் துணையாக நடக்க வைக்கிறாளா? சரி. பாட்டியின் பிள்ளை என்ன செய்கிறான்? தம் பையனை வகுப்புகளுக்கு முடிந்தபோது கூட்டிப் போகலாமே? மனைவியுடன் காரில் ஊரெல்லாம் சுற்றுகிறானோ, ஸ்கூட்டரில் விர்விர்ரென்று பறக்கிறானோ யார் கண்டார்கள்? தாத்தாவாவது தன் மனைவிக்கு உதவலாமே? இந்தக் கராட்டே வப்பு முடிந்து திரும்பி வருவார்கள். 9 மணிக்குப் பையன் ஸ்கூல் யூனிபாமில். பாட்டி வேறு ஒரு புடவையில் நடந்து வருவார்கள். பள்ளிக்குக் கொண்டு விடுகிறாள் பாட்டி. மாலையில் மறுபடி எங்கியோ போகிறார்கள் எதற்கு?

வர வர பிரேமாவிற்கு சதா பாட்டி, பேரன் நினைப்பு. தோத்திரங்கள், ஸ்லோகங்கள் கூடக் கோர்வையாகச் சொல்ல முடியவில்லை. மறந்து போகிறது. இப்படி வாசலையே எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தால் என்ன நினைவில் நிற்கும்? மருமகள் வயிறார உணவு தருகிறாளோ இல்லையோ தெரியவில்லை. பாட்டியின் புடவை மட்டும் நன்றாக இருக்கிறது. தன் கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள நல்ல புடவை வாங்கித் தருகிறாளா மருமகள்? நல்ல குடும்பம்! தூங்கு மூஞ்சி தாத்தா, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாகப் பிள்ளை, சாட்டையைச் சொடுக்க மருமகள், பயந்தாங்கொள்ள பாட்டி. பேரன் நன்றாக வளர வேண்டுமே? போச்சுடா, மறுபடி மண்டை குடைய ஆரம்பித்து விட்டது பிரேமாவிற்கு.

இந்தக் கல்லுப்பிள்ளையார் கணவன் முன் பாட்டியிடம் பேச முடியுமா? பகவானே! என்று தான் பாட்டியுடன் பேசமுடியுமோ? தெரியவில்லையே. என்ன வேதனை இது? ஈரலில் பிடித்து விட்டது என்பார்களே. அது இது தானா? நாட்கள் ஓடுகின்றன. பத்மநாபனுக்கு சில நாட்கள் வெளியூர் போகும்படி வேலை வந்து விட்டது. பிரேமாவிற்கோ ஆச்சர்யமாக இருக்கிறது. என்னால் தனியாக இருக்க முடியாது. உங்கள் மூருடன் சேர்ந்து ஒரு÷க்ஷத்திராடனம் திட்டம் போடுங்கள் என்று கேட்கத் தோன்றவில்லை. அப்பாடா! போகட்டும். பாட்டியின் கதை கேட்க வேண்டும். ஆத்திரம் தீர அந்த அடங்காபிடாரி மருமகளையும், மனைவியின் தாசன் மகனையும் திட்ட வேண்டும். பாட்டிக்கு ஆறுதலாகப் பேசவேண்டும்.

சமையல் முக்கியமில்லை. ஸ்வாமிக்கு நாளைக்குச் சேர்த்து ஸ்லோகம் சொல்லிக்கலாம். இல்லை. மத்தியானம் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், சி.டியைப் போட்டு விடாலம். தூரத்தில்பாட்டியும், பேரனும் வருகிறார்கள். பிரேமா நடு ரோட்டிற்கே வந்து விடுகிறாள். "மாமி! உங்களிடம்பேச வேண்டம். எங்கள் வீட்டிற்கு வாருங்களேன்!'
பாட்டியின் கண்கள் சோகத்தையும் மீறி ஓர் ஓளி. முகத்தில் கம்பீரம் இருக்கிறது. பேச்சிலோ கனிவு. நாளை வருகிறேன் அம்மா! இன்று இவன் கராட்டே வகுப்பு முடிந்து, பள்ளியில் விட்டபின் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. கண்டிப்பாக நாளை சந்திப்போம் என்கிறாள். நாளைக்கா? என்ன செய்வது? இத்தனைநாள் பச்சை மிளகாய் படுத்தினார். என்று பகவானே படுத்துகிறாரே. வழியும் இல்லையே. பொறுத்துக் கொள்வோம்.

....................................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விஸ்வரூபம் ! Empty Re: விஸ்வரூபம் !

Post by krishnaamma Mon May 12, 2014 7:29 pm

ஒரு யுகம் போல், ஒரு நாள் கழிந்தது.

பேரனைப் பள்ளியில் விட்டு விட்டு, பாட்டி திரும்புகிறாள். பாட்டி தப்பிக்கவே முடியாதே. பிரேமா வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறாள். வாருங்கள் மாமி! எத்தனை நாள்களாக உங்களை இந்த தெருவில் காலையிலும், மாலையிலும் பார்க்கிறேன். இன்று தான் பேசமுடிகிறது. அந்தக் காலத்தில் மாமியார் படுத்தல் என்றால் இன்று மருமகள் படுத்தல், மருமகள் ராஜ்யம், அல்லி ராஜ்யம், ஆணவ ராஜ்யம் நடக்கிறது. நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள். காலையிலும், மாலையிலும் தெருவில் அலைய விடுகிறாள்.

உங்கள் பணக்ககார மருமகள், படித்த மருமகள், பண்பற்ற மருமகள் இப்படிப்படுத்துகிறாளே உங்களை. மடமடவென்று பிரேமா பொரிந்து தள்ளுகிறாள். என்ன சொல்கிறாய் குழந்தை எனக்கு மருமகளே கிடையாதே என்கிறாள் மாமி.
"அப்ப அந்த பையன்'
"என் பெண் வயிற்றுப் பேரன். எங்களிடம் வளர்கிறான்.'
"சரிதான். கலியுகம், பெண்களும் பெற்றோரைப் படுத்துகிறார்களா என்ன?'

மாமியின் கண் கலங்கிவிட்டது. இல்லையம்மா என் விதியைச் சுமக்கிறேன். நான்தான் என் பெண்ணை படுத்திவிட்டேன். நான், என் கணவர் இருவருமே படித்த, கல்லூரி பேராசிரியர்கள். ஒரே பெண். உலகத்தையே ஆளப் போகிறாள் என்பது போல அகிலாண்டேஸ்வரி என்று பெயர் வைத்தோம். கலைவாணியின் மறு அவதாரம் அவள். படிப்பு, பாட்டு எல்லாவற்றிலும் நல்ல தேர்ச்சி. சாப்ட்வேர் இஞ்சினியர் ஆனாள். 2

4 வயதிற்குள் 2 லட்சம், மாத சம்பளம். எங்கள் கடமையை முடிக்க வேண்டுமே என்று குணசீலன் என்ற இஞ்சினியருக்குத் திருமணம் செய்து வைத்தோம். எங்கள் வாழ்க்கையே தலைகீழாகிவிட்டது என்று மாமி அழ ஆரம்பித்து விட்டாள். பிரேமா அவசரமாகக் காபியைக் கலந்து கொண்டு வந்து குடிக்க வைக்கிறாள். மாமியின் முதுகைத் தடவிக் கொண்டே இருக்கிறாள்.
"ஐயோ மாமி. நான் ஏன் உங்களிடம் பேசினேன்? உங்கள் துக்கத்தை அதிகம் பண்ணிவிட்டேனே. நீங்கள் பாட்டுக்குப் பேரனுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தீர்களே. தவறு செய்து விட்டேனே. உங்கள் உள் நெருப்பைக் கிளறி ஊதிவிட்டேனே என்று புலம்புகிறாள். இதற்குத்தான் எதிலும் அவசரம் என்று பத்மநாபன் திட்டுவார். அவரைப் போய்ப் பச்சை விளகாய் பாவற்காய், கல்லுப் பிள்ளையார் என்றெல்லாம் கரித்தேனே. ஊர் வம்பில் மாட்டிக்காதே என்று அவர் சொல்வது சரிதான். பெண் புத்திபின் புத்தி ஆகிவிட்டதே. முதலிலேயே இல்லாத மருமகளைத் திட்டினேன் இப்போது மமியை அழவைத்து விட்டேன். சரி. நடப்பது நடக்கட்டும் என்ற விரக்தி வேறு வந்து விட்டது. எவ்வளவு நன்றாக என் தோள்களைப் பார்த்து பார்த்துச் செய்கிறார் பத்து. என் பெற்றோரைத் தன் தன் பெற்றோர் மாதிரிநடத்துகிறார். அவர்களை வெளி÷யூர் டூர் எல்லாம் கூட்டிப் போகிறார். எதையும் எனக்கு மதிக்கத் தெரியவில்லையே. அவருக்குப் பாம்புக்கடி என்று பெயர் வைத்தேனே. என்னை என்வென்று சொல்வது என்ற மன உளைச்சல், கணவர் மீது பரிவு ல்லாம் வருகிறது. பிரேமாவின் கண்களிலும் கண்ணீர்.'

மாமி தேறித் தெளிகிறாள். கதையைத் தொடர்கிறாள். நொண்டிக்கு நடராஜன் என்ற பெயரை, குருடனுக்கு கண்ணப்பன் என்ற பெயரை, ஊமைக்கு நாவுக்கரசன் என்ற பெயரை வைப்பதைப் போல நல்ல குணமே இல்லாத பணப்பேய்க்கு குணசீலன் என்று பெயர். கஷ்டம் நிறைந்த பெற்றோரின், கண்ணியமற்ற உளர்ப்பு இந்த ஒரே பையன். அகிலத்தையே ஆளப்போகிறாள் என்று நாங்கள் பெயர் வைத்த அகிலாண்டேஸ்வரி அவல நாயகியாக, அடிமை நாயக அவன் வீட்டிற்கு உழைக்கப் போனாள்.

ஆபிஸில் ஐநூறு பேர் அவளுக்குக் கீழே. வீட்டில் மூன்றுபேர் அவளை ஆட்டி வைத்தனர். வேலைக்குப் போகுமுன் சமையலை முடித்துவிட்டுப் போகவேண்டும். இரவு 8 மணிக்குத் திரும்பி வந்தால் கூடப் பஜ்ஜி போடு, போண்டா போடு என்று மாமியார் ரகளை. போடா விட்டால் கணவன் முதுகில் போடுவான். மாமியார் ஒரு வேலை செய்யமாட்டாள். அவளுக்கு நன்கு தெரிந்த வேலை. குணசீலனைக் கோபப்படுத்தி, அகிலாவை அடிக்க வைப்பதுதான். அடி தாங்க முடியவில்லை. வீட்டிற்கு வந்து விடுகிறேன். என் சம்பளத்தில் வாழ்ந்து கொள்வேன் என்றாள். தன் கை வலிக்கும் என்று கையால் அடிக்காமல், பாயைச் சுருட்டி அதால் அடிக்கிறானே பாவி என்று அழுவாள். சம்பளம் பூரா பிடுங்கிக் கொள்வதைச் சொல்லி சொல்லி அழுவாள்.

நாங்கள் என்ன பேராசிரியர்கள்? எங்களிடம் வரும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையைச் சொல்லித் தர தெரிய வேண்டாமா? கண்வன் வீட்டை விட்டு வரக்கூடாது. வெளியே வந்தால் உன் பிணம் தான் வரவேண்டும் என வசனம் பேசினோம். நாலு பேர் என்ன சொல்வார்கள் என்றோமே? கல்லானாலும் கணவன் என்று உளறினோமே, இப்போ, அந்த நாலு பேர்கள் எங்கே? ஆபிஸில் அகிலாவைத் திருட்டுத்தனமாகப் பார்த்து உன் செலவுக்கு, இந்தப் பணத்தை ஆபிஸ் டிராயரில் வைத்துக் கொள் என்று பிச்சை போடுவதைப் போல ஐநூறு, ஆயிரம் தந்தேனே? ஐயோ! மகாராணியாகச் சம்பாதித்தவளை, உன் விலங்குகளை உடைத்து விட்டு வெளியே வா என்று சொல்லாமல் நானே மேல பூட்டுபூட்டி, பிச்சையும் போட்டேனே.

என் பொண்ணைக் கொன்ற மகாபாவி அம்மா நான். நிறைமாத கர்ப்பிணியாக, அவள் பட்ட அடியும் உதையும் எத்தனை? விரட்டி விரட்டி அவன், அந்தக் குணசீலன், எங்களிடம் வாங்கிய பணமும் நகையும் எத்தனை? ஒரே பெண் அவள், அவளுக்குத் தானே... எங்கள் அத்தனை சொத்தும் அவன் எங்கள் வீடும் வேண்டும் என்ற போது அகிலா எதிர்த்தாள். அம்மா, வீட்டையும் எடுத்துக் கொண்டுநம்மை தெருவில் நிற்க வைத்த விடுவான்.

ஏற்கெனவே போன வருஷம் ஒரு பெரிய தொகை என் பெயரில் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறான் என்று கொலை செய்வானோ தெரியவில்லை. அவனும், அவன் பெற்றோரும் கூடிக் கூடிப் பேசுகிறார்கள். என்னைக் கண்டால் நிறுத்தி விடுகிறார்கள் என்றாள். அப்பொழுதாவது நாங்கள் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாமா. நீ படும் கஷ்டம் தாங்க முடியவில்லை. இந்த வீட்டை அவன் பெயருக்கு எழுதி வைத்து விடுகிறோம் என்றார் என் கணவர். நீ படும் கஷ்டம் தாங்க முடியவில்லை எங்களிடம் வந்து விடு என்று நாங்கள் சொல்லி இருக்க வேண்டாமா?

நல்லதோர் வீணை செய்து புழுதியில் எறிந்து விட்டோமே அம்மா? ஒரு நாள் போன் வந்தது. பெண் வீட்டிற்கு ஓடினோம். அகிலா கரிகட்டையாக இருந்தாள். போலீஸ் வந்தது. பேரனுக்கு 4 வயது. மலங்க, மலங்க முழிக்கிறான். அப்பாவைப் பார்க்கிறான், நடுங்குகிறான். எல்லாம் முடிந்துவிட்டது. கேஸ் நடக்கிறது. நான் கராட்டே வகுப்பு, ஸ்கூல், மாலையில் ராமகிருஷ்ண மடம், பேரனுக்குக் கீதை வகுப்பு என்று அலைகிறேன். பகல் நேரம் நான், என் கணவர் இருவருமே ஆதரவற்ற பெண்கள் விடுதியில் கம்ப்யூட்டர், ஆங்கிலம், கணக்கு எல்லாம் இலவசமாக சொல்லித் தருகிறோம்.
என் பேரன், அவன் அப்பன் மாதிரி பணப்பேய் ஆகக்கூடாது என்று நல்ல சத்சங்கம், தேவாரம், திருக்குறள் என்று பல வகுப்புகளுக்கு மாலையில் கூட்டிப் போகிறேன். நேற்று அகிலா கேஸ். அந்தக் குணசீலனும், அவன் பெற்றோரும் கோர்ட்டுக்கு வந்தனர். அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவது ஒன்று தான் அகிலாவிற்கு நாங்கள் செய்த தவறுக்கு பிராயசித்தம் இல்லாவிட்டால் அந்தத் திருடன் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க முயற்சி செய்வான்.

ஆதரவற்ற அத்தனை பெண்களுமே எங்களுக்கு அகிலாதான். அவர்களுக்கு உதவி, பேரனை வளர்ப்பது என்று எங்கள் நாள் ஓடுகிறது. பேரன் பெரியவனாகும் வரை பகவான் எங்களுக்குப் பலத்தைத் தரவேண்டும். அகிலாவை விரட்டிய குணசீலனை அவன் விதியும், கேஸும், போலீஸும் விரட்டுகிறது. திருமணமான ஐந்து வருடத்தில் அகிலா போய் விட்டாளே. டவுரி கேஸ், கொலைக்காரப் பாவி இன்ஷூரன்ஸ் பணத்திற்காக இதை செய்தானாம். போகட்டும் அம்மா. நிறைய அகிலாக்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, அவர்கள் விலங்குகளை உடைப்பது தான் எங்கள் வேலை என்றாள் மாமி. மாமி விஸ்வரூபம் எடுத்ததாகத் தோன்றியது.

பேசப் பேச மாமியின் அழுகை நிற்கிறது. முகத்தில் ஓர் ஒளி. மாமி நானும் இனி உங்களுக்குத் துணை. எனது எம்.சி.ஏ. படிப்பும் உங்கள் தொண்டில் பயன்படட்டும். நாளை காலை உங்கள் வீட்டிற்கு வந்து விடுதிக்கும் வருகிறேன் என்கிறாள் பிரேமா. பச்சை மிளகாய் பத்து, அவளைப் பரிவுடன் பார்ப்பதாக மனதிற்கு தோன்றியது. தூரத்தில் ஒரு பாடல் கேட்கிறது. மதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.

- கோமதி ராஜ்குமார்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விஸ்வரூபம் ! Empty Re: விஸ்வரூபம் !

Post by M.M.SENTHIL Mon May 12, 2014 10:32 pm

விஸ்வரூபம் ! 3838410834 விஸ்வரூபம் ! 3838410834 விஸ்வரூபம் ! 3838410834 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

விஸ்வரூபம் ! Empty Re: விஸ்வரூபம் !

Post by ஜாஹீதாபானு Tue May 13, 2014 1:44 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றிமபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விஸ்வரூபம் ! Empty Re: விஸ்வரூபம் !

Post by krishnaamma Tue May 13, 2014 2:09 pm

நன்றி பானு, நன்றி செந்தில் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விஸ்வரூபம் ! Empty Re: விஸ்வரூபம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum