ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம்

3 posters

Go down

ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் Empty ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம்

Post by விமந்தனி Sun 11 May 2014, 23:46

முதலில் ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தத்திற்க்கு வாழ்த்துக்கள்..!

உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் முருகானந்தம். வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில், இந்தியாவிலிருந்து நரேந்திரமோடி, கெஜ்ரிவால், அருந்ததிராய் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இவர்களுடன் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார், கோவையில் சேர்ந்த முருகானந்தம்.

அவர் சாதித்த சாதனை என்ன? அவருடைய வார்த்தைகளிலேயே படிப்போம்!
'என் ஊர் பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக் கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். குடும்பமே இடிஞ்சு போயிடுச்சு. வீட்டின் வறுமையைப் போக்க கிரில் பட்டறைக்குப் போனேன். அங்க புதுசு, புதுசா நிறைய முயற்சி பண்ணினேன். அம்மா வாசல்ல போடுற கோலத்தை வீட்டு ஜன்னல் ஆக்கினேன். இதனால, என் முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

ஆனா, எனக்கு ஒரு தொழில்லயே ரொம்ப நாள் ஒட்டாது. நான் கிளம்புறேன்னு சொன்னப்ப முதலாளி, 'நீயே இந்தக் கடையை வாங்கிக்கோ’னு சொல்லி பணத்துக்கு வழிகாட்டினார். கடையை எடுத்து நல்லாவே நடத்தினேன்.

எனக்குக் கல்யாணமும் ஆச்சு. ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க. என்னனு கேட்டப்ப, 'இது பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொல்லிட்டு விறுவிறுனு ஓடப் பார்த்தாங்க. நான் அவங்ககிட்ட இருந்து அதைப் பிடுங்கிப் பார்த்தா அழுக்கான துணி. 'ஏன் ஒரு நாப்கின் வாங்கக் கூடாதா?’னு மனைவியைத் திட்டினேன். அவங்களோ, 'அதுக்கு எல்லாம் செலவு பண்ணா குழந்தைக்குப் பால் வாங்க எங்க போவேன்’னு கேட்டாங்க.

அதோட மட்டும் இல்லாம பெரும்பாலான கிராமப் பெண்கள் வசதி இல்லாததால இதுமாதிரி அழுக் குத் துணிகளைத்தான் பயன்படுத்துறாங்கனு அவங்க சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோயிட்டேன்.

அப்பதான் நாப்கினை நாமே தயாரிக்கலாமேனு எண்ணம் எழுந்துச்சு. கடையில ஒரு நாப்கினை வாங்கி, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதுல பஞ்சு மாதிரி ஒரு பொருள் இருந்துச்சு. உடனே பஞ்சை நல்லா அடைச்சு நாப்கின் தயாரிச்சேன். இதை யார்கிட்டே போய் சோதனை பண்ண முடியும். என் மனைவிகிட்ட போய் தயக்கமா நின்னேன்.

இப்படியே என்னோட சோதனைகள் தொடர்ந்தது. ஆனா, ஏகப்பட்ட ஏமாற்றம். ஒருகட்டத்துல என் மனைவிக்கு என் மேல ரொம்பக் கோபம்வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கனு சொல்லி கண்டபடி திட்டிட்டாங்க. வேற வழி இல்லாம நான் பக்கத்துல இருந்த மருத்துவக் கல்லூரி பெண்களிடம் என் ஆராய்ச்சியைச் சொல்லி உதவி கேட்டேன். பல பெண்கள் என்னை பைத்தியக்காரன் மாதிரி பார்த்துட்டு, திட்டினாங்க. சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாங்க. சில வாரங்களில் அவங்களாலும் தொடர்ந்து ஒத்துழைக்க முடியலை. வேற வழி இல்லாம என்னையே சோதனை எலியாக்க முடிவு பண்ணினேன்.

என் நண்பரின் கறிக் கடையில் இருந்து சூடான ரத்தத்தை வாங்கிட்டு வந்து இடுப்பில் ஃபுட்பால் பிளாடரில் நிரப்பிக்கிட்டேன். நடுவில சின்னக் குழாய் மூலமா நாப்கினை நோக்கி இணைச்சுக்கிட்டேன். பிளாடரை அழுத்தினா ரத்தம் நாப்கினில் விழும். இந்த நாப்கினுக்காகப் பலவிதமான பஞ்சுகளை வெச்சுப் பரிசோதிச் சேன். இந்தச் சோதனையில் என் வேட்டி எல்லாம் ரத்தம் கொட்டினது. ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத நாற்றம் வரும். இதைப் பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு ஊர்ல தகவல் பரவிடுச்சு. என் மனைவி கோவிச்சுக்கிட்டு என்னைவிட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுப்போயிட்டாங்க!

சோதனைக்காக என் பட்டறையில் இருந்த கடைசி ஸ்கிராப் வரைக்கும் வித்துட்டேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை மட்டும் போகலை. சில பெண்கள் உபயோகப்படுத்தின நாப்கின்களைச் சேகரிச்சு, அதை வீட்டுல காயவெச்சு சோதனை செஞ்சேன். என் அம்மா இதைப் பார்த்து எனக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கனு தனியா போயிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து என்னை ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.

கண்ணீரோட நான் என் கிராமத்தைவிட்டு கிளம்பினப்ப, என் கூடவந்த ஒரே ஜீவன் நான் வளர்த்த நாய் மட்டும்தான். அதோட கோவைக்கு கிளம்பி வந்துட்டேன். ரூம் பிடிச்சுத் தங்கி வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு ஓயாம உழைச்சேன். அப்புறம்தான் வெளிநாட்டு கம்பெனிக்காரன் பயன்படுத்தறது ஃபைன் மரப் பஞ்சுனு தெரிஞ்சுது. அதைக்கொண்டு நாப்கின் தயாரிக்கிற இயந்திரம் எட்டுக் கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க.

நான் ஃபைன் மரப் பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பண்ணினேன். சுமார் ஆறு மாசம் ரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிச்சுட்டேன். இதுக்கு 65 ஆயிரம் செலவாச்சு. இயந்திரத்தைத் தயாரிச்சு முடிச்சப்ப என் கையில் ஒரு பைசா இல்லை. சேமிப்பு, இருந்த சொச்ச சொத்து எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா, அதுல தயாரிச்ச ஒரு நாப்கினை ஒரு கல்லூரி பொண்ணு பயன்படுத்திட்டு, 'அண்ணா, இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு’னு சொன்னப்போ கதறி அழுதுட்டேன்.

அது என் பல வருஷக் கனவு. அதுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கேன். தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நான் தயாரிச்ச இயந்திரம் மூலமாப் பெண்களே சுலபமா நாப்கினைத் தயாரிக்க முடியும். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான்.
சமீபத்துல ஐ.ஐ.டி., 'சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு’ என் கண்டுபிடிப்பைத் தேர்வு செஞ்சது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ. இங்க எல்லாம் போய் சிறப்பு விருந்தினராகப் பேசி இருக்கேன். ரத்தன் டாடா, நாராயணமூர்த்தி ஆகியோரும் என் திட்டத்துக்கு உதவ முன்வந்து இருக்காங்க.

என்னோட நோக்கம், இந்தியாவுல இருக்கிற அத்தனை ஏழைப் பொண்ணுங்களுக்கும் என் கண்டுபிடிப்பு போய் சேரணும். இனி எந்த சகோதரியும் மாதவிடாய் காலங்கள்ல அழுக்குத் துணியைப் பயன்படுத்தக் கூடாது...''


ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் Empty Re: ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம்

Post by T.N.Balasubramanian Mon 12 May 2014, 06:11

ஆனந்தம் மேலிடுகிறது பெண்களுக்கு
முருகானந்தம் கண்டுபிடிப்பால் !
ஒபாமாவிடம் விருது பெற்றவுடன்
மாநில அரசும் மத்ய அரசும் விழித்துக்கொண்டு
ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கலாம் .
எதாவது அரசியல்வாதி இதை வியாபாரம் ஆக்கினாலும் ஆக்குவார்
ஏழை எளிய மக்களுக்கு இது போய் அடைந்தால் நல்லது
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் Empty Re: ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம்

Post by கோ. செந்தில்குமார் Mon 12 May 2014, 06:57

முயற்சி திருவினையாக்கும்...! பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்...!! சகோதரர் திரு. முருகானந்தம் விருதுகள் பல குவித்திடல் வேண்டும். அருமையான தயாரிப்பு. நடுவண் மற்றும் தமிழக அரசுகளுக்கு இது எங்கே தெரிய போகிறது. தெரியவே கூடாது. இதையும் வைத்து அரசியல் செய்வார்கள்...
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் Empty Re: ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம்

Post by விமந்தனி Mon 12 May 2014, 14:33

கோ. செந்தில்குமார் wrote:நடுவண் மற்றும் தமிழக அரசுகளுக்கு இது எங்கே தெரிய போகிறது. தெரியவே கூடாது. இதையும் வைத்து அரசியல் செய்வார்கள்...
சரியாக சொன்னீர்கள். நம்மவர்கள் எதையும் அரசியல் ஆக்குவார்கள்.


ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம் Empty Re: ஒபாமாவிடம் விருது பெறவுள்ள கோவை முருகானந்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
» பிளஸ் 2 புத்தகத்தில் அருணாசலம் முருகானந்தம்; கவுரவம் அளித்தது பள்ளிக்கல்வித்துறை
» தீவிரவாதிகளின் சொர்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கறிது.. ஒபாமாவிடம் பிரதமர் புகார்...
» நப்கின் நாயகன் படிக்காத மேதை முருகானந்தம்
» ஸ்லம்டாக் படத்திற்கு ஆறு ஆஸ்கர் விருது; ரகுமானுக்கு 2 விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum