புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
19 Posts - 3%
prajai
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:43 am

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை 10172786_667867823286318_5960659694963720843_n

புதுடில்லி : தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான, 'ஜல்லிக்கட்டு' போட்டிகளை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 'மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவை மீறப்படுவதை ஏற்க முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாரம்பரிய விளையாட்டு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில், காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதான இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.இதற்காக, ஆண்டு முழுவதும் விரிவான ஏற்பாடுகளை, இப்போட்டிகளை நடத்துபவர்கள் மேற்கொள்வர். இந்தப் போட்டிகளை, ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து ரசிப்பதும் வழக்கம்.தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் என்றில்லாமல், சில குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே, இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வந்ததால், இதைப் பார்க்கும் ஆர்வம், பிற பகுதி மக்களுக்கு அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றே.இந்நிலையில், 'ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதால், அந்த போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, பிராணிகள் நல அமைப்புகள் சார்பில், புகார் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

நல அமைப்புகள்

கடந்த ஆண்டில், இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், 'வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை, கடுமையான நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்' என, அனுமதித்தது. இதையடுத்து, தீவிர கெடுபிடிகளுடன், கடும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.இந்த வழக்கு விசாரணையின்போது, 'ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள், பலவிதமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால், போட்டிகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்' என, பிராணிகள் நல அமைப்புகள் வலியுறுத்தின.தமிழக அரசு, தன் வாதத்தில், 'அரசு மற்றும் கோர்ட் விதித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன' என, தெரிவித்தது.இந்நிலையில், வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: ஜல்லிக்கட்டை முறைப்படுத்துவதற்கு, 2011ல் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது. ஜல்லிக்கட்டு நடத்துவதால், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன; காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்களும், போட்டியில் பங்கேற்பவர்களும் காயப்படுகின்றனர். ஜல்லிக்கட்டை நடத்த, என்ன தான் விதிமுறைகள் அரசு கொண்டு வந்தபோதிலும், அந்த விதிமுறைகள், முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மீது, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றுவது, காளைகளின் வாலை முறுக்குவது போன்ற, பலவிதமான சித்ரவதைகளுக்கு காளைகள் உட்படுத்தப்படுகின்றன.

விலங்கு உரிமை

மனிதர்களுக்கு மட்டும் தான் அடிப்படை உரிமை உள்ளது என, கூற முடியாது; விலங்குகளுக்கும் உள்ளது. அந்த உரிமையை மீறி, விலங்குகளை துன்புறுத்த முடியாது.பல நாடுகளில், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இருப்பதாகவும், இது காலம் காலமாக தமிழகத்தில் ஒரு பாரம்பரிய விளையாட்டு என்றும், அதை தடை செய்யக் கூடாது என்றும், தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை, நியாயமானது அல்ல. விலங்குகளைத் துன்புறுத்தி, ஒரு விளையாட்டை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால், காலம் காலமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த வீர விளையாட்டை, இனிமேல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்ட காளைகள், இனிமேல், விவசாய தொழில்களில் ஈடுபடுத்தப்படும்.

'ரேக்ளா ரேஸ்'களுக்கும் தடை:

'ஜல்லிக்கட்டு' போட்டிகளுக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 'ரேக்ளா ரேஸ்' எனப்படும், மாட்டு வண்டி போட்டிகளுக்கும் தடை விதித்துள்ளனர். இது குறித்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும் போது, 'தமிழகம், மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில், வண்டிகளில் மாடுகளை பூட்டி, அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லும் போட்டி நடத்தப்படுகிறது; அந்த போட்டிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.

மேலும், இத்தகைய போட்டிகள் நடைபெறாமல் தடுக்க, தேவையான கண்காணிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள, விலங்குகள் நல வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சட்டசபைகளிலும், பார்லிமென்டிலும், விலங்குகள் துன்புறுத்தலை தடுக்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஜல்லிக்கட்டிற்கு தடை எதிர்த்து மேல்முறையீடு: விழா குழுவினர் கருத்து

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. தை இரண்டாம் நாளில், அனைத்து கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், அலங்காநல்லுார், பாலமேடு ஜல்லிக்கட்டு சுற்றுலா பிரசித்தி பெற்றது.


அதிர்ச்சி:

ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்த தடை இருந்த போதும், கோர்ட் வழிகாட்டுதல்படி நடந்தன. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த, மீண்டும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது, விழாக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்று தர வேண்டும், என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாராயணசாமி, பேரூராட்சித் தலைவர், பாலமேடு: உழவு மாடுகளுக்கு, தை இரண்டாம் நாள் கொம்பில் துண்டு கட்டி, அதை அவிழ்க்க, மாமன் மச்சான் உறவு முறையில் இருப்பவர்களுக்கு சவால் விடுவோம். மஞ்சமலை ஆற்றில் நடக்கும் துண்டு அவிழ்க்கும் நிகழ்ச்சி, பின் ஜல்லிக்கட்டாக மாறியது. மாடு பிடி வீரர்களை, வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஜல்லிக்கட்டிற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வருத்தமளிக்கிறது.நான்கு ஆண்டுகளாக, பேரூராட்சி சார்பில் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகள் துன்புறுத்தப்படவில்லை; வீரர்கள் காயம்படவில்லை. இத்தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

பாலாஜி, ஜல்லிக்கட்டு விழாக்குழு கவுரவத் தலைவர், அலங்காநல்லுார்: ஜல்லிகட்டு நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்ப்பர். விலங்குகள் நல வாரியத்தினர் கொடுத்த தகவலின்படி ஜல்லிக்கட்டு நடத்த, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. தமிழக பாரம்பரிய விளையாட்டிற்கு எதிரானது. தமிழக அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்

ராஜசேகர், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர், மதுரை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது எதிர்பாராதது. மாநிலத்தில் நுாற்றுக்கணக்கான இடங்களில் நடந்த இந்த வீர விளையாட்டு, பல்வேறு காரணங்களால் தற்போது, 30 இடங்களில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது.ஜல்லிக்கட்டில், ஓரிரு வினாடிகள் மட்டும் காளைகள் களத்தில் நிற்கின்றன. பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனியில் நடக்கும் இதுபோன்ற விளையாட்டுகள் குறித்தும், கோர்ட்டில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. 400 கிலோ எடையுள்ள மாடு, 110 கிலோ எடை வரை, சாதாரண நிலையில் தாங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி பகுதியில் கூட, 400 ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

[thanks] தினமலர் [/thanks]



ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:50 am


ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு : அலங்காநல்லூரில் கருப்புகொடி

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பதை தொடர்ந்து அலங்காநல்லூர் கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது. இந்த உத்தரவு அலங்காநல்லூர் உள்பட மதுரை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் என பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் தடையை எதிர்த்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தெருக்கள் தோறும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

ஜல்லிகட்டு காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் கிராம பொதுமக¢களும் தங்கள் வீடுகளிலும், ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியிலும் கருப்புக்கொடிகளை ஏற்றி வைத்து தங்கள் துக்கம், எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதேபோல் மாவட்டத்தின் பாலமேடு, அவனியாபுரம், சக்குடி உள்ளிட்ட ஊர்களிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கருப்புக் கொடியேற்றியுள்ளனர்.

ஜல்லிக் கட்டு காளைகள் வளர்த்து வரும் அலங்காநல்லூர் கோவிந்தராஜ் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜல்லிக¢கட்டிற்காக, ஆண்டு முழுவதும் ஜல்லிகட்டு காளைகளை பெற்ற பிள்ளைகளைப் போல் பேணிக¢காத்து வளர்க்கிறோம். காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.

காளைகளுக்கு சத்தான உணவு, பராமரிப்பு, பாதுகாப்பு, பயிற்சி என அத்தனை விஷயங்களிலும் தனிக்கவனம் காட்டுகிறோம். இங்கே மிருகவதை என்ற பேச்சுக¢கே இடமில்லை. இதை விலங்குகள் நலவாரியம் உணர்ந்து தமிழர்களின் உணர்வுக¢கு மதிப்பளித்து, பாரம்பரிய இந்த வீர விளையாட்டு தொடர வழி செய்யவேண்டும், என்றார்.

மாடுபிடி வீரர் குறவன்குளம் நாகராஜன் கூறுகையில், பத்தாண்டுகளுக்கும் மேலாக மாடுபிடி வீரராக இருக்கிறேன். வெளிநாடுகளில் காளைகளை மொத்தமாக அவிழ்த்து விட்டு ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்குவார்கள். ஆனால் வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளையை பெரும் கும்பல் வழிமறித்தாலும் தனி ஒருவர்தான் அடக்குகிறார். இதில் துன்புறுத்தல், மிருகவதை இல்லை. எதிர்பாராமல் நடக்கும் ஓரிரு சம்பவங்களுக்காக இதற்கு தடை விதிப்பது நியாயமல்ல. மாநில அரசு மீண்டும் நீதிமன்றத்தை அணுகி ஜல்லிக்கட்டை மீட்டுத்தர வேண்டும்என்றார்.

அலங்காநல்லூர் கிராம பிரமுகர் சிதம்பரம் கூறுகையில், ஜல்லிகட்டிற்கு தடை விதிக¢கப்பட்ட இந்த நாளை பாரம்பரியமிக்க ஒட்டுமொத்த தமிழர்களுக்கான துக்க நாளாகவே கருதுகிறோம். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஊர் முழுக்க கருப்பு கொடியேற்றியுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இந்த நீதிமன்றத் தடையை நீக்கவேண்டும். ஜல்லிக¢கட்டு காளைகள் இனம் மட்டுமல்லாது, தமிழர் கலாச்சார, வீர அடையாளமும் காக்கப்படவேண்டும், என்றார்.



ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 11:11 am

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு: தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர் முடிவு

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்புச் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2007-ம் ஆண்டு விலங்குகள் நலவாரியம் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட் டுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு வாதிட்ட தன் அடிப்படையில் ஜல்லிக் கட்டு நடத்த பல்வேறு வழிகாட் டுதல்களுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2009-ம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டு முறைப் படுத்தும் சட்டம்’ தமிழக சட்ட சபையில் இயற்றப்பட்டதன் மூலம் சில ஆண்டுகளாக ஜல் லிக்கட்டு நடத்தப்படுகிறது. அப்போது பல இடங்களில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலைப் பின்பற்றவில்லை என விலங்குகள் நல வாரியம் சாரபில் உச்ச நீதிமன்றத்தில் ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் ஜல்லிக்கட்டுக்கு முற்றிலும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தென் மாவட்ட மக்களிடம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக் கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அதன் மாநிலச் செயலர் ஒண்டிராஜ் கூறிய தாவது: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

தமிழக கிராமம்தோறும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நாள டைவில் குறைந்துகொண்டே வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை 26 இடங்களில் நடைபெற்றுள்ளது. இவை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முன்னிலையில் நடைபெற் றவை. இதனால் ஜல்லிக்கட் டின்போது விதிமீறல்கள் வெகு வாகக் குறைந்துவிட்டன.

எங்கேனும் விதிமீறல் இருந்தால் அந்த ஊரில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கலாம். அதை விடுத்து ஒட்டுமொத்தமாக தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இதுபற்றி பேசவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.



ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 08, 2014 12:10 pm

தீர்ப்பு வருத்தம் அளிக்கும்படி உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 08, 2014 12:19 pm

Indha varusham namma siva kalandhukkalaamnnu irundhaaru, ippadi sollittaangalae!




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 08, 2014 12:28 pm

யினியவன் wrote:[link="/t110081-topic#1062209"]Indha varusham namma siva kalandhukkalaamnnu irundhaaru, ippadi sollittaangalae!

வாங்கண்ணா நலமா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 08, 2014 6:21 pm

நலம் பானு. நீங்க எப்படி இருக்கீங்க?

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 09, 2014 11:03 am

அய்யோ ஜல்லிக்கட்டு நடக்குதே அதுதான் எங்க ஊர்னு பெருமை அடிக்க முடியாதா :-(



கிருஷ்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 9:44 am


ஜல்லிக்கட்டு: தமிழர்கள் நடத்தும் அறப்போருக்கு ஆதரவு- வைகோ

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழர்கள் நடத்தும் அறப்போருக்கு ஆதரவு தெரிவிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"வீரத்தின் வெளிப்பாடாம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது, தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரியப் பண்பாட்டு உரிமையை மறுக்கின்ற அநீதி ஆகும். தமிழர்கள், ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தங்கள் பிள்ளைகளைப் போல, வீடுகளில் போற்றிப் பாதுகாத்து வளர்க்கின்றார்கள். அந்தக் காளைகள் சீறிப் பாய்ந்து வருகிறபோது வீர வாலிபர்கள் அதன் கொம்புகளையும், திமிலையும் பற்றிப் பிடித்துத் தங்கள் துணிச்சலையும், வேகத்தையும் நிலைநாட்டுகின்றார்கள்.

இதற்குத் தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறி இருக்கின்ற காரணம் எவ்விதத்திலும் ஏற்கத் தகுந்தது அல்ல. மாடுகளைத் துன்புறுத்துவதாகச் சொல்வது உண்மைக்கு மாறானது. மெக்சிகோ, ஸ்பெயின் போன்ற மேலை நாடுகளில் மாடுபிடிப் போட்டியில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு காளைகளைத் துன்புறுத்திச் சாகடிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டில், மாடுகள் மீது பாய்கின்ற இளைஞர்கள், ஒரு சிறு தார்க்குச்சியைக் கூடப் பயன்படுத்துவது கிடையாது. உயிரைப் பணயம் வைத்து, வெறுங்கைகளால் மாடுகளைப் பிடிக்கின்ற இளைஞர்களுக்குத்தான் காயம் ஏற்படுகின்றது.

நாள்தோறும் எண்ணற்ற சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. பலர் உயிர் இழக்கின்றனர். அதற்காக இனிமேல் சாலைகளில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று உத்தரவிட முடியுமா?

தமிழர்களின் நெடிய பாரம்பரியப் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றான, பல நூறு ஆண்டுகளாகத் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்து இருக்கின்ற ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது, கிராமப்புறங்களில் வாழுகிற வீரத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர் நாகரிகத்தின் மீது தொடுக்கப்பட்ட அத்துமீறலாகவே இந்தத் தீர்ப்பு அமைந்து உள்ளது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தென்பாண்டி மண்டலத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகத் தமிழர்கள் மேற்கொள்ளும் அறப்போருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது'' எனக் கூறியுள்ளார்.



ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 9:54 am

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருப்பது வருத்தமளிக்கிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் கொண்டாட்டங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இளைஞர்களின் உடல் மற்றும் மனஉறுதியைச் சோதிக்கும் இவ்விளையாட்டு, வீரத்தின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடரச் செய்ய வேண்டும் என்பது நிச்சயம் தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கும்.

ஆண்டுதோறும் இல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால், ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, இவ்வீரவிளையாட்டு தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி அளிக்கவேண்டும். அந்தவகையில் தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை நீக்க மறுபரிசீலனை செய்கின்ற வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.




ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக