ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுக புருஷன் கிரிஷ்ணரின் ``யோக சூத்திரங்கள் ``

Go down

யுக புருஷன் கிரிஷ்ணரின் ``யோக சூத்திரங்கள் ``  Empty யுக புருஷன் கிரிஷ்ணரின் ``யோக சூத்திரங்கள் ``

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun 11 May 2014 - 1:49

யுக புருஷன் கிரிஷ்ணரின் ``யோக சூத்திரங்கள் ``  1538829_215910691951555_8060166730495155958_n

கீதை 6:11 யோகத்தை அப்பியாசிக்க ஒருவர் தனித்த ஒரு இடத்தை தேர்ந்து கொள்ளவேண்டும் ! அங்கு ஒரு ஆசணத்தை அமைக்க தரையின் மீது தர்ப்பை புல்லை பரப்பவேண்டும் !அதன் மீது மான் தோலை விரித்து அதன் மீது மெல்லிய துணியால் மூட வேண்டும் ! இந்த ஆசணம் உயரமாகவோ தாழ்வாகவோ இருக்க கூடாது !முக்கியமாக அந்த இடத்தில் தூய்மையான சிந்தனைகள் மட்டுமே சிந்திக்கபட்டதால் தூய்மை நிறம்பியதாக மாற்றம் பெறவேண்டும் !

கீதை 6:12 அதன் மீது சாதகன் அமர்ந்து தன் மனத்தை ஒன்றின் மீது குவித்து அப்பியாசிப்பதால் மனதையும் ;புலன்களையும் ; செயல்களையும் கட்டுபடுத்த பயின்று அதன் மூலம் ``ஆத்துமசுத்தி`` பெறுவதால் பரிசுத்தம் அடையவேண்டும் !!

கீதை 6:13 உடலையும் கழுத்தையும் இதயத்தையும் நேர்கோட்டில் இறுத்தி நுனிமூக்கின் மீது மனதை குவிக்கவேண்டும் ! இவ்வாறாக அலையும் மனதை அடக்கி ; பயத்தை நீக்கி ; உடலுறவை தவிர்த்து உண்ணதமான கடவுளை மனதிற்குள் தியானித்து வரவேண்டும் ! கடவுளுடன் ஒத்திசைவதையே வாழ்வின் லட்சியமாக்கி கடவுளுக்குள் நிலைக்க பயிலவேண்டும் !!

கீதை 6:14 இவாறாக மனதையும் ;புலன்களையும் ; செயல்களையும் தொடர்ந்து கட்டுப்படித்தி பழக்குவதால் யோகசாதகனின் மனம் பரிசுத்தம் அடைந்து ஞானத்திற்குள் வளர்ந்து கடவுளின் பரலோக ராஜ்ஜியத்தின் தொடர்புக்கு உள்ளாகிறான் !!

கீதை 6:15 அதாவது கிரிஸ்ண குருகுலத்தின் பாதுகாப்பில் வளர்ந்து லவ்கீக உலகின் ஆளுமையை உடைத்து பரலோக ராஜ்ஜியத்தின் பிரஜை ஆகிறான் !!

கீதை 6:16 அத்தகைய சாதகன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உண்ணலாகாது ! அதுபோல அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்கலாகாது ! அது அவனின் முன்னேற்றத்தை தடுத்து விடும் !!

கீதை 6:17 உணவு ,தூக்கம் , பொழுதுபோக்கு ,உழைப்பு இவற்றில் அளவுமுறையை கற்றுகொண்டு கடைபிடிப்பதால் உலக ஆளுமையை தடுத்து கொண்டு ஒருவன் யோகசாதனைகளில் எளிதில் முன்னேறமுடியும் !!

கீதை 6:18 யோகசாதகன் யோகத்தை அப்பியாசிக்கும் போது தனது மனதின் செயல்பாடுகளை நெறிப்படித்தி அடக்கி ஆள்வதால் உண்ணதமானவரோடு ஒத்திசைந்து லவ்கீக இச்சைகளிலிருந்து விடுபடுகிறான் ! பேரின்பசுவையை உணர்வதால் சிற்றின்ப தாகம் உடையபெறுகிறான் ! அப்படிப்பட்டவனே யோகத்தில் நிலைத்தவனாவன் !!

கீதை 6:19 காற்று வீசாத இடத்தில் விளக்கின் பிளம்பு ஆடாமல் இருப்பதுபோல ; மனம் கட்டுபட்ட சாதகன் தனது தியானத்திலேயே மூழ்கி தன்னிலும் உண்ணதமானவரிலும் நிலைக்கிறான் ! அவனே ஞானம் விளைவிக்க பெற்றவனாகிறான் !!

கீதை 6:20 யோகத்தை அப்பியாசிப்பதால் மெய்ஞானம் எனப்படும் முற்றுணர்வை அடைந்த நிலையில் சாமாதி நிலை சித்திக்கிறது ! அந்த நிலையில் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகள் அனைத்தையும் கடந்து ஆத்துமா உண்ணதமானவரோடு அய்க்கியம் அடையும் !

கீதை 6:21 முற்றுணர்தல் என்ற நிலையில் ஒருவன் தூய்மையடைந்த மனதால் தன்னை ஆத்துமசொருபமாய் தெளிந்து ஆத்துமபரிபூரணத்தை உனர்ந்து தன்னில்தானே நிறைந்துள்ள ஆனந்தத்தை கண்டடைவான் ! அந்த ஆனந்த பெருநிலையில் மட்டுமே ஒருவன் ஞானேந்திரியங்கள் விளிக்க பெற்று உண்ணதமான கடவுளின் எல்லையில்லா பேரானந்தத்தை உணர்ந்து அதில் திளைக்க முடியும் !!

கீதை 6:22 இன்னிலையை எய்தியவன் ஒருபோதும் தெய்வீக பேரானந்தத்தை விட்டு விலகி செல்லான் !ஏனெனில் இதை விட பெரிய வெறு எதுவும் எங்கும் இல்லை என்பதை அறிவான் !!

கீதை 6:23 இந்த நிலையில் அவன் எதனாலும் அசைக்கபடுவதில்லை ! மாபெரும் துண்பத்தின் மத்தியிலும் அவன் கலங்காதிருப்பான் ! இந்த லவ்கீக உலகிலிருந்து எழும்பும் அனைத்து துயறங்களிலிருந்தும் உண்மையான விடுதலை அடையும் வழி இதுவே !!

கீதை 6:24 யோக அப்பியாசத்தில் ஒருவன் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் ஈடுபடவேண்டும் ;ஒருபோதும் வழிவிலகி செல்லலாகாது ! மன மயக்கங்களால் எழும்பும் எல்லா இச்சைகளையும் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் அகற்றிவிட வேண்டும் ! எல்லா புலன்களையும் எல்லா வகையிலும் அடங்கிய மனதால் அடக்கி நெறிபடுத்த வேண்டும் !!


கீதை 6:25 கொஞ்சம் கொஞ்சமாக ; படி படியாக முன்னேறி சுய அறிவை ஒடுக்கி உண்ணதமான ஞானத்தில் நிலைவரப்பட வேண்டும் இவ்வாறாக மனமானது ஆத்துமாவில் ஒடுங்கி அதற்குள் நிலைக்க வேண்டும் ; வேறெதையும் மனம் நாடலாகாது !!

கீதை 6:26 நிலையில்லாமல் எதைப்பற்றியாவது ஓயாது சிந்திக்கும் இயல்பால் மனமானது அலைபாயும் போது ; ஒருவன் அதை மீண்டும் இழுத்து ஆத்துமாவுக்குள் ஒடுக்க வேண்டும் !

கீதை 6:27 என் மூலமாக மனதை உண்ணதமான கடவுளில் நிலைபெற செய்கிற யோகியானவன் எளிதில் மிக உயர்ந்த முற்றுணர்வை அடைந்து பேரானந்தத்தில் திளைப்பான் ! அவன் ஸ்தூல உடம்பால் விளையும் மூவகை குணங்களிலிருந்தும் விடுபட்டு ; பரமாத்துமாவின் இயல்போடு தொடர்புடைய தனது ஜீவாத்துமாவை கண்டறிவான் ! இவ்வாறாக தன் மேல் வந்த பரம்பரை பாவங்கள் மற்றும் கடந்தகால பாவங்களின் பதில் விளைவுகளிருந்து தப்புவான் !!

கீதை 6:28 இவ்வாறாக தன்னை தானே கட்டுபடுத்துவதில் வெற்றியடைந்த யோகி ;இடையறாத சகஜயோக பயிற்சியால் லவ்கீக உலகின் அனைத்து சீரழிவுகளிலிருந்தும் தப்புவான் ! உண்ணதமான கடவுளின் பரிபூரண பேரானந்தத்தில் திளைத்து பொங்கி வழியும் அன்பால் பக்தி தொண்டாற்றுவான் !!

கீதை 6:29 உண்மையான யோகி எல்லா மனிதர்களிலும் கடவுளின் ஆவியையும் பரமாத்துமாவையும் உணர்வான் !அத்தோடு அவர்களனைவரும் கடவுளின் சொரூபங்கள் என்பதையும் அறிவான் ! மேலும் தன்னை உணர்ந்த மனிதன் என் மூலமாக எங்கெங்கும் எல்லாவிடத்தும் உண்ணதமான கடவுளையே உணர்வான் !!

கீதை 6:30 யார் எங்கும் கடவுளை உணர்கிறானோ ; யார் அனைத்தையும் கடவுளின் பகுதியாய் உணர்கிறானோ ; அவன் என்னை விட்டு விலகுவதுமில்லை ; நான் அவனை கைவிடுவதுமில்லை ! என் குருகுலத்திற்குள் எப்போதும் வாசம் செய்வான் !!

கீதை 6:31 அப்படிப்பட்ட யோகியானவன் கடவுளுக்கு பக்தி தொண்டாகவே அனைத்தையும் செய்து வரும் நிலையில் சற்குருவாகிய என் மூலமாகவே கடவுளை தொடர்பு கொள்ளுவதால் எப்போதும் எந்த சூழ்னிலையிலும் என்னிலும் கடவுளிலும் நிலைத்திருப்பான் !!

கீதை 6:32 அந்த முற்றறிவு நிரம்பிய ஞானியானவன் ; தன்னைபோலவே பிறரையும் பாவிப்பான் ! அவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ; நிறையையும் குறையையும் தனதாகவே பாவித்து பொறுமையும் பிரார்த்தனையும் செய்வான் ! ஆறுதலும் செய்வான் !!

தியானத்தின் கூறுகள் :

1)சுற்றுப்புற சூழ்நிலை

முதலாவது தியானம் செய்ய தனித்த ஒரு இடத்தை ஒவ்வொருவரும் அமைத்துக்கொள்வது நல்லது அங்கு தியானம் மற்றும் ஆன்மீக சிந்தனைகள் நல்ல சிந்தனைகள் மட்டுமே சிந்திக்கப்படும் படியும் மற்ற அலுவல்களை சிந்தனைகளை அலசடிகளை தவிர்த்து விடுவதும் நல்லது

ஒரு குறிப்பிட்ட சிந்தனைகளை மட்டுமே ஒரு இடத்தில் நாம் சிந்தித்து வந்தோமானால் அந்த இடத்தில் அந்த உணர்வுகள் எண்ண அலைகள் பதிவுகள் மட்டுமே நிரம்பி நின்று அடுத்து உங்களை எளிதில் அது ஆட்கொண்டு மன ஒருமைப்பாடு சித்திக்கும்

இதற்கு தனித்த அறை ஒன்று வேண்டுமே ! அது இயலாவிட்டாலும் தனித்த ஒரு ஆசனம் ஏற்பாடு செய்து கொள்ளலாம்

தியானத்திற்கென்று ஒரு துண்டு . நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் தர்ப்பை . தற்போது நாட்டு மருந்து கடைகள் ஊர் ஊருக்கு இருக்கும் அதில் தர்ப்பையில் பாய் விலைக்கு கிடைக்கும்

ஒரு நபர் உட்காரும் அளவில் ஒரு விரிப்பு . அதன் மேல் தர்ப்பை பாய் . அதன் மேல் ஒரு விரிப்பு . இது எளிய ஆசனம் - தனித்த அறைக்குரிய சூழ்நிலையை அது நல்கும்

தியானம் செய்யும் பொது மட்டும் அமர்ந்து தியானித்து பிரார்த்தனை செய்யவேண்டும் . உடனே எழுந்து அதை பாதுகாப்பான இடத்தில் வைத்து விடவேண்டும்

அதற்கு முன்பாக நாமும் தயாராக வேண்டும் அது மனதை விட்டு மற்ற சிந்தனைகளை ஒதுக்கிவைத்து விடுவது . உடலை தூய்மை செய்து கொள்வது குளித்து விட்டு செய்யலாம்

அல்லது எளிதான வழி குரான் மூலமாக முகமது நபிக்கு சொல்லப்பட்டுள்ளது

கை காலை அலம்பி முகத்தை நீரால் கழுவி ; உடை மீது தண்ணீரை தெளித்து ; தண்ணீரால் உச்சந்தலையை தடவிக்கொள்வது

இது குளிப்பதற்கு சமமானது ; தீட்டுகள் விலகும்

அடிப்படையில் இது நம்மை - நமது மனதை தியானிப்பதற்கு ஆயத்தப்படுத்துவது

அத்தோடு கடவுளின் சமூகத்திற்கு செல்லும்போது அசிரத்தையாக இல்லாமல் முடிந்தளவு சுத்தமாகி அவரிடம் பிரார்த்திப்பது

கடவுளை சந்திக்க முடிந்தளவு சுத்தமாகிறோம் என்ற முயற்சி அவருக்கும் நமக்கும் ஒத்ததிர்வை உண்டாக்கும்

இவ்வாறு சுத்தமாகி மேற்கண்ட ஆசனத்தை விரித்து அதன் மீதும் கொஞ்சம் ஜலத்தை தெளித்துவிட்டு அமர்ந்து தியானத்தை தொடங்குங்கள்

சாதாரணமாகவே கூட அமர்ந்து கொள்ளலாம் கைகளை கோர்க்காமல் கடவுளிடம் ஏந்திய நிலையில் தியானிப்பது நல்லது என்பது என் அனுபவம்

முடிந்தளவு தலையை கழுத்தை முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொள்வது நலம்

2)தியானம் :

தியானத்தை பிரார்த்தனையாக தொடங்குவது நலம்

கடவுளிடம் நேரடியாக நாம் பிரார்த்திக்க கூடாது என்பதல்ல ; ஆனாலும் பாவத்திலும் மாயைகளிலும் சுய நீதியால் நல்லவனாக கருதிக்கொண்டு தவறு செய்யும் மனித இயல்பாலும் நாம் நேரடியாக செல்வதைக்காட்டிலும் சற்குருநாதர்கள் மூலமாக செல்வது நம்மை மறைத்துக்கொண்டு அவர்களின் மூலமாக பிரார்த்திப்பது உத்தமமானது அது எல்லா தீட்டுகளையும் களைந்து விடும்

ஆவியான கடவுளிடமிருந்து வெளிப்பட்டவைகள் எல்லாம் பரமாத்மா - அதாவது நாராயணன் - இவர் அருவ உருவம் - நமது ஆத்மா இவரின் ஒரு பின்னம் - அதாவது ஜீவாத்மா . ஆகவே ஜீவாத்மாவுக்கு சற்குரு நாராயணன்

இந்த பரமாத்மா என்ற அருவ உருவத்திலிருந்து உருவமாக தோன்றியவை எல்லாம் - பஞ்ச பூதங்கள்- சரீரங்கள் அனைத்தும் சிவன் . அதாவது சரீரத்திற்கு சற்குரு சிவன்

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே உம்மை துதிக்கிறேன் என்று மெதுவாக சொல்லிக்கொண்டே உங்கள் சிந்தனையை மூக்கு நுனியில் குவித்து உங்கள் சுவாசமாகிய ஆவியில் ஒன்றரத்தொடங்குங்கள்

பரத்திலே ஆவியாக உள்ள உன்னதமான கடவுளை நோக்கி அழைத்தவாறே அதே கடவுள் உங்களுக்குள் உயிராக ஓடிக்கொண்டுள்ளாரே அந்த உயிரிலே ஒன்றுங்கள் என்பதுவே கிரிஸ்ணரின் யோக சூத்திரம்

யோகத்தின் முக்கூறுகளை இயமம் ; நியமம் ; ஆசனம் என்றும் வகைப்படுத்தலாம் . அதில் நியமம் மற்றும் ஆசனமே மேலே சொல்லப்பட்டது

அடுத்ததாக இயமம் என்பது தியானத்தின் மூலமாக ஆன்ம பலம் பெற்ற சாதகன் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உலகத்திலும் கடமைகளிலும் பக்தி தொண்டிலும் எப்படி நடக்கவேண்டும் அதன் மூலமாக பக்குவம் அடைதலே ஞானமாக உள்விளைய முடியும் என்பதைப்பற்றியது

இது ஒவ்வொரு சாதகனுக்கும் கடவுளுக்கும் சர்குருநாதர்களுக்கும் உள்ள தனிப்பட்ட விசயம் - ரகசிய உறவு என்று கூட சொல்லலாம்

அவர்கள் உங்களை வழிநடத்தட்டும் !!

நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே
ஓம் நமோ சிவாய !!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum