ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Empty தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Sat May 10, 2014 8:39 am

First topic message reminder :

தங்க ஆபரணங்கள்… சீர், பிறந்த வீட்டின் பெருமை சொல்லும் அடை யாளம், ஸ்டேட்டஸ் சிம்பல், சென்ட் டிமென்ட், அன்பு பரிசின் நினவுச் சின்னம், அழகு என்று நம் கலா சாரத்திலும், வாழ்விலும் நம் கூடவே ஒட்டி உறவாடும் உலோக உறவுகள் என்று சொன்னால், அது மிகையில்லை!

தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, பவளம், வைரம் என அவற் றில் நம் பயன்பாடுகளின் பட்டிய லும் நம் வசதி, பொருளாதாரம் கார ணமாக நீண்டுகொண்டே இருக்கிறது. வீட்டில் கஷ்டமான சமயங் களில் ஆபத்பாந்தவனாக கைகொடுத்துக் காப்பாற்றுவதுகூட இந்த நகைகள்தான். இன்னொருபுறம், இந்த ஆபரணங்களுக்காக பணம் செலவழிப்பது சிறந்த முதலீடாகவும் இருக்கிறது. இப்படி வாழ்க்கை முழுக்க நம் கூட வரும் இந்த நகைகளை எப்படிப் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டும், பாராமரிக்க வேண்டும் என்று உங்களுக்கு குறிப்பு சொல்கிறது இந்தப் புத்தகம்.

தங்கத்தின் தரம் நிரந்தரமாக இருக்க..!

விண்ணைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை. இருந்தும் கிராமில் தொடங்கி கிலோக்கள் வரை அனைவரும் பொருளாதார நிலைக்கேற்ப தங்கம் சேர்க்கத்தான் விழைகின்றனர். தங்க நகைகளை வாங்கும்போது, அதன் தரத்தை உறுதி செய்வதற்காக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? ஜஸ்ட் ஹேவ் எ லுக்!

1. தங்கத்தின் தூய்மையில்தான் அதன் தரம் இருக்கிறது. இந்தத் தூய்மையின் சதவிகிதத்தை குறிக்கிறது ‘டச்’ அளவீடு. 24 கேரட் தூய தங்கம் என்பது 100 டச்.

2. தூய்மையான தங்கத்தில் (100 டச்) நகைகள் செய்ய முடியாது. அதனுடன் செம்பு சேர்த்து, 22 கேரட்டில்தான் செய்வார்கள். அதாவது அதிகபட்சம் 88 அல்லது 90 டச் வரை.

3. அடிக்கடி விளம்பரங்களில் கேட்கும் வார்த்தை ’916′ கோல்ட். அப்படி என்றால்…? ’916′ என்பது மேலே சொன்ன ’22 கேரட்’ தங்க நகைகளைக் குறிக்கும் அடையாளச் சொல். 91.6% தூய்மையான தங்கம் என்பதுதான் இதன் அர்த்தம்.

4. பொதுவாக ’916′, ’22′ கேரட் என்ற குறியீடுகள் ’90 டச்’ வரையுள்ள தங்க நகைகளைக் குறிக்கும் அடையாள வார்த்தை. ’916 கே.டி.எம்’, ’916 ஹால்மார்க்’ என்ற குறியீடுகள் ’92 டச்’ தரத்தைக் குறிக்கும் அடையாள வார்த்தை. ’92 டச்’தான் நகைகளுக்கான உச்சபட்ச தரம்!

5. ‘கே.டி.எம்’ நகைகள் என்பது, செம்புக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படுகிற ஒரு வகை பொடியைக் குறிக்கும் சொல். இந்த ‘கே. டி.எம்’ பொடியை பயன்படுத்தி நகையை வார்க்கும்போது, அதன் பெரும் பகுதி காற்றில் கரைந்து விடுவதால், அது நகையுடன் குறைந்த அளவே கலக்கும்; அதனால் ஒரு நகையில் தங்கத்தின் சதவிகிதம் அதிக அளவு இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு.

6. ‘ஹால்மார்க்’ எனப்படுவது தரத்தை நிர்ணயிக்கும் முத்திரை! இ ந்த முத்திரை, ஒரு நகையில் ’92 டச்’ தூய தங்கம் இருக்கிறது என்ப தை உறுதிசெய்யும்.

7. பொதுவாக, தங்க நகைகளில் இந்த ’22 கேரட்’, ’916′, ‘ஹால்மார்க் முத்திரை’ போன்றவை பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றை வைத் துதான் நகையின் தரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் வாங்கும்போது இந்த அடையாளங்கள் குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்து விடுங்கள்.

8. ’22 கேரட்’, ‘கே.டி.எம்’ போன்ற குறியீட்டு வார்த்தைகளை, நகை தயாரிக்கும் யாரும் பொறித்து விடமுடியும் என்பதால், ஜாக்கிரதை.

9. ‘ஹால்மார்க்’ முத்திரையை நகை தயாரிப்பவர்களோ, அந்நியர்களோ பொறித்துவிட முடியாது. ‘ஹால்மார்க்’ என்பது அரசு நிறுவனம் தரும் முத்திரை என்பதால், அந்த முத்திரையுள்ள நகை கள் நம்பிக்கைக்கு உரியன என்கிறார்கள், இத்துறையில் உள்ள நிபுணர்கள்.


Last edited by சிவா on Sat May 10, 2014 8:40 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Empty Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Sat May 10, 2014 8:44 am

கவரிங்!

தங்க நகைகளைப் பயன்படுத்த முடியாத நேரங்களில், அதைப் போலவே ஜொலிஜொலிக்கும் கவரிங் நகைகள்தான் கைகொடுக்கும். இதிலும் விதம்விதமான வளையல், செயின், ஆரம், நெக்லஸ், கம் மல், மோதிரம் என அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டி ருக்கி ன்றன. காசு கொடுத்து வாங்கும் அந்த நகை களுக்கும் கொடுக்க வேண்டும்தானே கவனம்?!

78. ‘தங்கம் மாதிரியே இருக்குதே இந்த கவரிங்… எப்படி?’ என் பவர்களுக்கு… செம்பு நகைகளின் மேல் தங்க முலாமை சரியான விகிதத்தில் கலந்து பூசுவதில்தான் இந்த நகைகள் அந்த ஜொலிஜொலிப்பை பெறுகின்றன.

79. எத்தனை கிராம் தங்கம், முலாமாகப் பூசப்படுகிறது என்பதில்தான் கவரிங் நகையின் தரமும் விலையும் இருக்கிறது.

80. இன்று இதன் சந்தை, எதிர்பாராத விதமாக விரிவடைந்து ள்ளதால், அரை கிராம், 1 கிராம், 2 கிராம், 4 கிராம் என பலவகை கோட்டிங்களில் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. நம் வசதிக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

81. இதன் கோட்டிங் அளவுதான், அதன் பள பளப்புத் தரத்தை நிர்ணயிக்கும். உதார ணமாக, அரை கிராம் கோட்டிங் நகைகள்… 6 மாதம், 1 கிராம் கோட்டிங் நகைகள்… 1 வருடம் என அதன் கோட்டிங் அளவே, அதன் பளபளப்புக்கான ஆயுளை நிர்ண யிக்கும்.

82. அரை கிராம் கோட்டிங் நகையை எப் படி அடையாளம் காணுவது…? அதில் 500 என்று சீல் பொறிக்கப்பட்டு இருக்கும். அதே போல, ஒரு கிராம் கோட்டிங் நகை களில் 1000 என்றும், 2 கிராம், 4 கிராம் நகைகளில் முறையே 2, 4 எனவும் பொறி க்கப்பட்டிருக்கும்.

83. கவரிங் நகைகளில் போலிகள் அதிகம் புழங்கும் என்பதால், பெயர் பெற்ற கடைகளில் வாங்குவதுதான் சிறந்த வழி. அதுவும் கியாரன்டியுடன் வாங்குவது ரொம்ப நல்லது.

84. பேன்ஸி ஸ்டோர்களில் மிகக்குறைவான விலைகளில் கியாரன்டி இல்லாமல் கிடைக்கும் கவரிங் நகைகள், மைக்ரோ கவரிங் வகை நகைகள். இவற்றை அணிந்த ஒரு வாரத்தில்கூட கறுத்து விடலாம் என்பதால் வாங்குவதற்கு முன் யோசியுங்கள்.

85. கவரிங் நகைகள் கறுத்து விடுவதோடு மட்டுமல்லாமல், சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கி, அணியும் இடத்தில் புண்கூட உண்டாகும். எனவே, கூடுதல் ஜாக்கிரதை உணர்வு தேவை!

பராமரிப்பு:

86. கவரிங் நகைகளை அணிபவர்கள், அவற்றைத் தொடர்ந்து அணியாமல், தேவைப்படும் சமயங்க ளில் மட்டும் அணிந்தால் சீக்கிரம் கறுக்காது.

87. பயன்படுத்திய பின்பு, உப்பு இல்லா த நல்ல தண்ணீரில், சோப் போடாமல் கழுவி, ஈரம் போகத் துடைத்து மென் மையான துணி, அல்லது பேப்பரில் வைத்தால்… பொலிவுடன் இருக்கும்.

88. கவரிங் நகைகளை அணியும் சமயங்களில் அதன் மேல் உப்பு தண்ணீர், வியர்வை படாமல் பார்த்துக்கொண்டால் நீண்ட நாட்கள் கறுக்காமல் இருக்கும்.

89. பயன்படுத்திக் கொண்டிருக்கும் கவரிங் நகை கறுக்க ஆரம் பித்தால், உடனே மாற்றுவதுதான் நல்லது. பாலிஷ் போட்டாலும் நீண்ட நாள் உழைப்பதற்கு உத்திரவாதம் இல்லை.


தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Empty Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Sat May 10, 2014 8:45 am

ஃபேஷன் ஜுவல்லரி…

டீன்-ஏஜ் யங்ஸ்டர் மட்டுமில்லை… இள வயது அம்மாக்களும் இப்போதெல்லாம் ஃபே ஷன் ஜுவல்லரி நகைகளை அழ கழகாக அணிந்து வலம் வருகிறார்கள். அவர்களுக்காக…

90. பெரும்பாலான ஃபேஷன் நகைகள் கல் வைத்துதான் செய்யப்பட்டிருக்கும். அந்த நகைகளை அணியும்போது, அவை மற்ற நகைகளுடன் உராயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சீக்கிரம் உடைந்து போகாமல் இருக்கும்.

91. ஸ்டோன் நகைகள் அதிகம் பயன்படுத் துவோர், கையில் எப்போதும் சிறியதாக கம் டியூப் (பசை) வைத்திருப்பது நல்லது. கல் உதிர்ந்து விழும்போது உடனே ஒட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

92. நெக்லஸ் வாங்கும்போது கடைகளில் அதற்கான சிறப்பு பாக்ஸில்தான் போட்டுக் கொடுப்பார்கள். அதிலேயே அந்த நெக்லஸை வைத்திருந்தால்தான், அதன் வடிவம் மாறாமல் இருக் கும். இல்லையென்றால் முறிந்து, பயன்படுத்த முடியாதபடி வீணாகும்.

93. நெக்லஸ் செயின், ஹ¨க்கில் இருக்கும் கோல்டன் கோட்டிங், வெயில் காலத்தில் வியர்வைக் கசிவால் சிலருக்கு கழுத்தில் அலர்ஜியை உண்டாக்கலாம். அதைத் தவிர்க்க, அதன் மேல் நெயில் பாலிஷை (நெயில் கலர்) தடவ, அந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். கவரிங் நகையென்றாலே அலர்ஜி ஏற்படும் என்பவர்கள், ஆசைக்குகூட அதைப் போடாமல் தவிர்ப்பதுதான் நல்லது.

94. ‘ஸ்டெட்’ எனப்படும் கம்மல் நகைகள் அதிகம் பயன்படுத் துபவர்கள், அதை ஒரு அட்டையில் ஓட்டை போட்டு அதில் பொருத்தி வைத்துவிட்டால், சரியான சமயத்தில் ஜோடியாக எடுத்துக் கொள்ள முடியும்.

95. வளையல்கள் அதிகம் வைத்திருப்பவர்கள், வளையல் ஸ்டாண்டுகளில் மாட்டி வைத்து விட்டால் ஜோடி மாறாமல் அவசரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.


தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Empty Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Sat May 10, 2014 8:45 am

வொயிட் கோல்ட்…

இன்றைய இளைஞர்களின் பெரு விருப்பமாக இருப்பது வொ யிட் கோல்ட். இதில் மோ திரம், பிரேஸ்லெட் போ ட்டுக் கொள்வது அவர்களின் ஃபேஷன். சரி, அது என்ன வொயிட் கோல்ட்..?

96. தங்கத்தின் மீது வெள்ளை நிற கோட்டிங் கொடுத்து செய் யப்படும் நகைகள்தான், வொயிட் கோல்ட் நகைகள். வெள்ளை நிற கோட்டிங்கில் நிக்கல், துத்தநாகம், பல்லேடியம் என்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன.

97. ஒரு நகையில் தங்கம், மற்ற உலோகங்கள் எத்தனை சதவிகிதம் கலக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்துதான், இந்த ஒயிட் கோல்ட் நகையின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, 14 கேரட் வொயிட் கோல்ட் நகை என்றால், அதில் 58.3% தங்கம் இருக்கும். மீதி இருப்பவை மற்ற உலோகங்களால் ஆன கோட்டிங்.


தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Empty Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Sat May 10, 2014 8:47 am

பச்சை மரகதமே…பச்சை மரகதமே!

நவரத்னங்களில் முத்து, பவளம், வைரத்துக்கு அடுத்தபடியாக மரகதக் கல்லும் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கல்லின் மகத்துவம்…

98. மரகதக்கல்லின் மனம் கவரும் பச்சை வண்ணம்தான் அதன் சிறப்பு. ஜோதிடத் தில் நம்பிக்கை உள்ளவர்கள், அதன் குணம் பற்றி தெரிந்த பின்பு ராசிக்கு ஏற்ப அணி ந்து கொள்வது நல்லது. நம்பிக்கை இல்லாதவர்கள்.. இதன் அழகு நிறத்துக்காக அணியலாம்.

99. ஒரிஜினல் மரகதக்கல் பளபளப்புடனும் சரியான ஃபினி ஷிங்கிலும் கிளாரிட்டியுடனும் இருக்கும். செயற்கையாகத் தயாரிக்கப்படும் கல்லில் கிளாரிட்டி மங்கலாக இருக்கும்.

100. இதையும் ‘கேரட்’ குறியீட்டால்தான் அளவிடுகிறார்கள். இதன் தரம், கிளாரிட்டி, ஃபினிஷிங் அடிப்படையில் இதன் விலை. ஒரு கேரட் 200 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை தரத்தைப் பொறுத்து வேறுபடும்.

உங்கள் நகைகள் உங்களுக்கான சொத்து, அடையாளம். அதை கட்டிக் காப்பாற்றுங்கள்

[thanks] கதிரவன்.காம் [/thanks]


தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Empty Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Sat May 10, 2014 8:51 am


தங்கத்தின் தரம்

தங்கத்தின் தரம் கேரட் (KARAT) என்ற அலகால் அறியப்படுகிறது. சுத்தமான தங்கம் என்பது 24 கேரட் ஆகும். அதாவது 99.9%. முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்கள் 24 கேரட் தங்க கட்டியாக வாங்குவார்கள். இதனை கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது. நகை செய்ய வேண்டுமெனில் தங்கத்துடன் சில உலோகங்களை சேர்த்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதன் தரம் 22 கேரட், 18 கேரட் தங்கமாக மாறுகிறது. இது தான் ஆபரணத் தங்கமாகும்.

24 கேரட் என்பது 99.9%
22 கேரட் என்பது 91.6%
18 கேரட் என்பது 75.0%
14 கேரட் என்பது 58.5%
10 கேரட் என்பது 41.7%
9 கேரட் என்பது 37.5%
8 கேரட் என்பது 33.3%

ஹால்மார்க்:

நாம் வாங்கும் தங்கம் 22 கேரட்டா அல்லது 18 கேரட்டா என்று எப்படி தெரிந்து கொள்வது. இதற்குதான் ஹால்மார்க் முத்திரை உதவுகிறது.

ஹால்மார்க் தர சான்றிதழை வழங்குவது யார்?

இந்திய அரசின் தர கட்டுப்பாடு அமைப்பான “பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு ” (Bureau of Indian Standards) என்ற அமைப்பு தான் ஹால்மார்க் முத்திரையை வழங்குகிறது. இதைத்தான் BIS முத்திரை பதித்த நகைகள் என்றும் கூறுவார்கள். இந்த முத்திரை கொடுப்பதற்கு நாடு முழுவதும் பல டீலர்களை லைசென்ஸ் கொடுத்து நியமித்திருக்கிறார்கள். இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். நகை கடை உரிமையாளர்கள், பொற்கொள்ளர்களிடமிருந்து வாங்கிய நகைகளை இந்த டீலர்களிடம் கொடுத்து தரத்தை பரிசோதிக்கின்றனர். அவ்வாறு பரிசோதிக்கும் நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 கேரட் எனில் 75% ஹால்மார்க் முத்திரையும் தருகின்றனர்

கவனிக்க வேண்டிய விஷயம்:

ஹால்மார்க் முத்திரை உள்ள நகை என்ற விவரம் மட்டும் போதாது, அதற்கு கீழே அந்த நகையின் தரம் எவ்வளவு என்பதயும் (91.6% or 75%) குறிப்பிடப்பட்டிருக்கும். அது தான் முக்கியம்.

நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.

எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.


தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Empty Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா Sat May 10, 2014 8:54 am


தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

உலக மக்கள் அனைவராலும் மிகவும் விரும்பக்கூடிய மற்றும் விலைமதிப்பற்ற உலோகம் தங்கமாகும். தங்கம் அனைவரும் அணியக்கூடிய ஒரு அற்புதமான நகை, அது மட்டுமல்லாமல் பணவீக்கம் மற்றும் சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி போன்றவற்றை ஈடுகட்டவும் உதவும். இதன் மற்றோரு முக்கிய பண்பு என்னவென்றால், இதை உலகம் முழுவதும் எளிதாக விற்க முடியும்.

இந்தியர்கள் தங்கத்தை தூய்மை மற்றும் செல்வ வளமையின் சின்னமாகவே நினைக்கிறார்கள். நீங்கள் தங்க நகைகள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் வருமாறு.

1. தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, தரம் மற்றும் விலை போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டும்.

2. தூய்மை - தங்கத்தின் தூய்மையை கேரட் எனப்படும் அலகால் தெரிந்து கொள்ளலாம்.தூய தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது.எனவே வெள்ளி, செம்பு,நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற கலவையை தங்கத்துடன் சேர்ப்பதால் நகைகள் வலிமையுடனும் நீண்ட நாள் பயன்படுத்துவதாகவும் உள்ளது. பொதுவாக 18கே, 22கே அல்லது 24கே என தங்கத்தின் தூய்மையை அளவிடலாம்.

3. விலை-தங்க நகைகளின் விலை தங்கத்தின் தூய்மை, அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள கலவை, அதன் வேலைப்பாடுகள், செய்கூலி போன்றவற்றை பொறுத்து உறுதி செய்யப்படும்.

4. நிறம் - மஞ்சள் நிற தங்கம்,வெள்ளை நிற தங்கம் மற்றும் ரோஸ் தங்கம் என தங்கத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. நீங்கள் தங்கத்தை பல நிறங்களின் கலவையாக பெற விரும்பினால், வேறுபட்ட இரண்டு நிறங்களின் கலவையை பயன்படுத்தலாம். சுத்தமான தங்கத்துடன் மற்ற உலோகத்தை கலப்பதால், வேறுபட்ட நிறங்கள் கொண்ட தங்கத்தை பெறலாம். பலாடியம் மற்றும் வெள்ளி போன்ற வெள்ளை உலோகங்களை கலப்பதால் வெள்ளை நிற தங்கம் உருவாகிறது. இது பெரும்பாலும் அமெரிக்காவில் திருமண நகைகளாக பயன்படுகிறது. தங்கத்துடன் செம்பு கலப்பதால் மென்மையான பிங்க் நிறம் கொண்ட ரோஸ் தங்கம் கிடைக்கிறது. பச்சை, ஊதா மற்றும் கருப்பு போன்ற நிறங்களிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் மஞ்சள் நிற தங்கம் அனைவராலும் கவரப்படுகிறது. மேலும் இதுவே உயர்ந்த மற்றும் விலைமதிப்பற்ற ஒன்றாகும்.

5. அடையாளங்கள் - இந்தியா உட்பட்ட பல நாடுகளில் ஒவ்வொரு தங்க நகைகளும் கேரட் அல்லது அதன் தூய்மையை ஒரு தெளிவான முத்திரையால் குறிப்பிடுகிறார்கள்.இந்த அடையாளங்கள் ஹால்மார்க் திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பிரபலமான தங்க நகை கடைகள் அவர்களது முத்திரை மற்றும் அடையாள முத்திரைகளை அவர்களே தங்க நகைகளில் முத்திரையிடுகின்றனர். இந்திய அரசாங்கம் பிஐஎஸ் எனப்படும் ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் எனப்படும் சர்வதேச ஹால்மார்க் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் எனப்படும் ஹால்மார்க் திட்டத்தின் கீழ் தங்க நகைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற நகை கடைகள் தங்களது நகைகளை பிஐஎஸ் ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற மையத்திலிருந்து பெறலாம்.

6. நகை கடைகளின் நற்பெயர்- தங்கத்தை ஒரு நம்பிக்கையான கடையில் தான் வாங்க வேண்டும். அந்த நகை கடையுடன் ஒரு நீண்ட கால உறவு இருக்க வேண்டும். நம்பகத்தன்மை மற்றும் போலி இல்லாத, நிரூபிக்கப்பட்ட தங்கம் கொண்ட கடைகளாக இருக்க வேண்டும்.


தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Empty Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by கிருஷ்ணா Sat May 10, 2014 11:19 am

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 103459460 சாமானியர்கள் நைட்ரிக்அமிலம் வாங்கி வைத்துக்கொள்ள முடியுமா? அப்படியே வைத்திருந்தாலும் கடைக்கார்ர் நகைமீது ஊற்ற விடுவாரா? புன்னகை 
வெள்ளிக்கொலுசு அணிந்து கடல் நீரில் கால் வைத்தால் கறுத்த கொலுசு நல்ல வெள்ளி நிறம் வரக்கண்டிருக்கிறேன். அதன் வேதிவினை தெரியாது.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு - Page 2 Empty Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum