ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை என்ன தெரியுமா?

+2
T.N.Balasubramanian
krishnaamma
6 posters

Go down

எடை என்ன தெரியுமா? Empty எடை என்ன தெரியுமா?

Post by krishnaamma Fri May 09, 2014 7:09 pm

எடை என்ன தெரியுமா? HQ4JEmWhTUKDEKuVtfnA+E_1399458413

இங்கிலாந்து நாட்டை அரசி எலிசபெத் அரசாண்டு கொண்டிருந்த காலம். அப்போது அவருடைய அவையிலே கவிஞர்களும், போர்ப்படைத் தலைவர் களும், கப்பற்படைத் தலைவர்களும் கூடியிருந்தனர்.சர் வால்டர் ராலி என்பவர் கப்பற்படைத் தலைவர்களில் ஒருவர். அவர் அமெரிக்காவிலிருந்து புகையிலையைக் கொண்டு வந்தார். அவர் புகை பிடிக்கும் பழக்கத்தையும் கற்றுக் கொண்டு இருந்தார்.

ஒரு தடவை அவர் அரசியோடு கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது புகையிலையின் பெருமைகளைப் பற்றிப் பேசினார். மேலும், புகையிலைப் பற்றித் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
புகையிலையை நெருப்பில் பற்ற வைத்து அதிலிருந்து வெளிவரும் புகையைக் குடித்தால் மனம் அமைதி அடையும் என்பதுடன், தம்முடைய புகையிலையைக் குழாயிலிருந்து கிளம்பும் புகையினுடைய எடை எவ்வளவு என்று நிச்சயமாய்ச் சொல்ல முடியும் என்றும் சொன்னார்.

அதைக்கேட்ட அரசி ஆச்சரியம் அடைந்ததுடன், ""அது எப்படி முடியும்? இது வெறும் புரளி,'' என்று கூறினாள்.
அதற்கு ராலி, ""நான் நிச்சயமாகத் தான் சொல்லுகிறேன். பத்து நிமிடம் புகையிலைக் குழாயில் புகையிலைத் தூளைப் போட்டுப் புகைபிடித்தால் புகையின் எடையைத் துல்லியமாக நான் சொல்லுவேன்,'' என்றார்.
""உம்மால் முடியவே முடியாது. பந்தயம் கட்டுகிறேன்,'' என்று அரசி உறுதியாகக் கூறினாள்.
""அப்படியானால் சம்மதம்!'' என்றார் ராலி.

அவர் உடனே தம்முடைய ஆளைக் கூப்பிட்டுப் புதிய புகையிலைக் குழாய் ஒன்றை கொண்டு வரச் சொன்னார்.
புகையிலை டப்பியையும், தராசுப் படிக் கல்லையும் கொண்டுவரச் செய்து டப்பியிலிருந்து கொஞ்சம் புகையிலையயை எடுத்துத் தராசில் போட்டு நிறுத்து, பின் புகையிலைக் குழாயில் வைத்தார்.

பிறகு அரசியைப் பார்த்து, ""இந்தப் புகையிலையின் எடையைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் இதைப் பற்றவைத்துக் குடிக்கப் போகிறேன். பத்து நிமிடம் ஆனதும் சொல்ல வேண்டும்,'' என்று கூறினார்.
""சரி!'' என்றாள் அரசி.

ராலி அந்தக் குழாயிலிருந்த புகையிலையைப் பற்ற வைத்துப் புகைபிடித்துக் கொண்டிருந்தார். பற்ற வைத்த புகையிலையிலிருந்து உண்டான புகை ராலியின் வாய்க்குள் கொஞ்சமும், காற்றில் கொஞ்சமும் போய்க் கொண்டிருந்தது.

பத்து நிமிடம் ஆனதும் அரசியார், ""நிறுத்து நிறுத்து!'' என்றாள்.
உடனே, ராலி குழாயிலிருந்து புகையிலையின் நெருப்பை அணைத்து விட்டார்.
அரசியார் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, ""வாய்க்குள்ளும் காற்றிலும் போன புகையை எப்படிப் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தப் போகிறீர்?'' என்று கிண்டல் செய்தார்.

"அரசியாரே சற்றே பொறுத்தருள வேண்டும்,'' என்று கூறினார் ராலி.
""ஆகா, நீங்கள் காற்றிலும் வாயிலும் கலந்து போன புகையைப் பிடித்துக் கொண்டு வருகிறவரைக்கும் நான் காத்திருக்க வேண்டுமா? நல்ல பேச்சு!'' என்று கூறி சிரித்தாள் அரசி.

ராலி பதிலொன்றும் பேசாமல் புகையிலைக் குழாயில் மீந்திருந்த புகையிலையை மிகவும் ஜாக்கிரதையாகத் தராசுத் தட்டில் கொட்டி அதை எடை போட்டார். பற்ற வைப்பதற்கு முன்னால் இருந்த எடையிலிருந்து இந்த எடையைக் கழித்தார். பிறகு அரசியைப் பார்த்துப் புகையிலைப் புகையின் எடை இவ்வளவு என்று, முன்னும் பின்னுமுள்ள எடை வித்தியாசத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

அதைக் கேட்ட அரசி ஆச்சரியம் அடைந்து அவர் சொன்னதை ஒப்புக் கொண்டு, அவருடைய அறிவுத் திறனைப் புகழ்ந்தாள். தான் பந்தயமாக வைத்த நூறு பொன்னை அவருக்குக் கொடுத்தாள்.

""நாட்டில் எத்தனையோ பேர் பொன்னையும் பொருளையும் கரியாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நீங்களோ கரியையே பொன்னாக்கி விட்டீர்கள்,'' என்று ராலியைப் புகழ்ந்து கொண்டாடினாள் அரசியார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எடை என்ன தெரியுமா? Empty Re: எடை என்ன தெரியுமா?

Post by T.N.Balasubramanian Sat May 10, 2014 12:32 am

எடை என்ன தெரியுமா? 103459460மகிழ்ச்சி:மகிழ்ச்சி

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எடை என்ன தெரியுமா? Empty Re: எடை என்ன தெரியுமா?

Post by சிவா Sat May 10, 2014 8:10 am

எடை என்ன தெரியுமா? 3838410834 


எடை என்ன தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எடை என்ன தெரியுமா? Empty Re: எடை என்ன தெரியுமா?

Post by கிருஷ்ணா Sat May 10, 2014 10:41 am

வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்னு சும்மாவா சொல்லியிருக்காங்க  மகிழ்ச்சி 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

எடை என்ன தெரியுமா? Empty Re: எடை என்ன தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Sat May 10, 2014 3:36 pm

நல்ல கதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எடை என்ன தெரியுமா? Empty Re: எடை என்ன தெரியுமா?

Post by ரா.ரா3275 Sat May 10, 2014 3:44 pm

எடை என்ன தெரியுமா? 3838410834
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எடை என்ன தெரியுமா? Empty Re: எடை என்ன தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum