புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் ஆசை - படுதலம் சுகுமாரன் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடை வீதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் வேல்ராஜ்.
''உன்னைத்தான் தேடிகிட்டிருந்தேன்,'' என்று, வழி மறித்த முத்து, தோளில் தொங்கிய கலர் துண்டால், வியர்வையை துடைத்துக் கொண்டார்.
''சொல்லுங்க மாமா,'' என்றான் வேல்ராஜ்.
''உன்கிட்ட பேசணும்; அவசர வேலை எதுவும் இல்லையே?''
''அவசர வேல ஒண்ணும் இல்ல மாமா; நீங்க சொல்லுங்க, என்ன விஷயம்ன்னு. உங்களை பாக்கறதே அபூர்வம்; எப்பவும் கட்சிப் பணின்னு, கால்ல சக்கரத்தக் கட்டிகிட்டு ஓடிகிட்டே இருப்பீங்க.''
''அந்த ஓட்டத்துக்கு, ஒரு அர்த்தம் கொடுக்கணும்ன்னுதான் உன்னை தேடிக்கிட்டிருந்தேன்,'' என்றவர், வேல்ராஜை வேப்பமர நிழலுக்கு தள்ளிக்கொண்டு போனார்.
''பாரு வேல்ராஜ்... என் அரசியல் வாழ்க்கையில, பல பேருக்கு பாடுபட்டு, அவங்கள மேல ஏத்தி விட்டிருக்கேன். உனக்கே தெரியும்... இன்னைக்கு எம்.பி.,யா இருக்கிற மாடசாமிக்கு, ஆரம்பத்துல அரசியல்ல ஆனா ஆவன்னா கூட தெரியாது; வெட்டியா திரிஞ்சுகிட்டிருந்தான். இன்னைக்கு அவன் எம்.பி.,யானது யாரால...
''எம்.எல்.ஏ.குருசாமி... நான் வளத்த பையன். இன்னிக்கும் இந்தப் பக்கம் வந்தா, என்னைப் பாக்காம போக மாட்டான். அவ்வளவு ஏன்... கவுன்சிலர் மாரி, நான் சொல்லி, மக்கள் ஓட்டு போட்டதால ஜெயிச்சவந்தானே... இது போக மேலிடத்தில், எனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, எத்தனை பேருக்கு வட்ட, மாவட்ட பதவிகள் வாங்கி கொடுத்திருக்கேன் தெரியுமா,'' என்று, வரிசைப்படுத்திக் கொண்டு போனார்.
'இதையெல்லாம், எதுக்கு நம்மகிட்ட சொல்கிறார்...' என்று நினைத்து, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் வேல்ராஜ்.
''ஊரில யார் யாருக்கோ செய்றேன். இப்ப, எனக்கு வேண்டிய பையனான உனக்கு, ஒரு நல்லது செய்யணும்ன்னு ஆசை,'' என்றவர், அரை மணி நேரமா, தன் ஆசையை விவரமாக எடுத்து சொன்னார். அயர்ந்து போனான் வேல்ராஜ்.
''இதெல்லாம் சாத்தியமா மாமா,'' என்று, சந்தேகத்துடன் கேட்டான்.
'' நீ முதல்ல சரின்னு, ஒரு வார்த்தை சொல்லு. அப்புறம் நடக்கிறத பாரு,'' என்று, மீசையை முறுக்கினார் முத்து.
''கடைக்கு போய்ட்டு வர, இத்தனை நேரமா?'' என்று கேட்டாள் மனைவி சரோஜா.
''வழியில, முத்து மாமாவப் பாத்தேன்,'' என்றான் மகிழ்ச்சியுடன்.
''அவரா... ஆகாயமே, தன் கையில இருக்கிற மாதிரி, அலப்பறை செய்துகிட்டு திரிவாரே... அவர்கிட்ட எல்லாம் ஏன் சிக்குறீங்க... பாத்தும் பாக்காத மாதிரி வரவேண்டியதுதானே.''
''அவர அவ்வளவு அலட்சியமா பேசக் கூடாது சரோ... என்ன இருந்தாலும், வயசுல, அனுபவத்தில பெரியவரு.''
''அடடா... என்ன அவர்மேல திடீர் மரியாதை. நீங்க தான் உறவுன்னு சொல்லிக்கிட்டு திரியறீங்க. அவர் எப்பவாவது, நம்ம வீட்டு நல்லது, கெட்டதுக்கு எட்டி பாத்ததுண்டா?''
''அதுக்கெல்லாம் சேத்து வச்சு, ஒரு நல்லது செய்றேன்னு சொல்லியிருக்கார்.''
கணவனை கூர்ந்து பார்த்தாள் சரோஜா. வேப்பிலை அடிச்சது போல், ஒரு தினுசாக அவன் இருப்பது தெரிந்தது.
'' அப்படி என்ன நல்லது செய்யறதா சொல்லியிருக்கார்... அதென்ன திடீர்ன்னு உங்க மேல கரிசனம்.''
''அது இருக்கட்டும் சரோஜா, என்னெ பத்தி, என்ன நினைக்கறே?''
''என்ன கேள்வி இது... கல்யாணமாகி பத்து வருஷம் கழிச்சு.''
''சும்மா சொல்லு. நான் நல்லவந்தானே... நாலு பேர் மதிக்கும்படி வாழுறவந்தானே, வீட்டுக்கு போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன் உன்னையும், குழந்தைகளையும், நல்லா கவனிச்சுக்கிறேன், இல்லையா?''
'' இப்ப என்ன சொல்ல வர்றீங்க.''
''நாலு பேருக்கு மட்டும் தெரிஞ்ச நான், நாடறியும்படி பெரிய ஆளா வந்தா, உனக்கு சந்தோஷம் தானே... வந்து... முத்து மாமா, என்னை கட்சிக்கு வரச் சொல்றாரு. என்னை எதிர்காலத்துல, ஒரு எம்.எல்.ஏ.,யாகவோ, எம்.பி.,யாகவோ ஆக்கி, அழகு பாக்கணும்ன்னு பிரியப்படறாரு. அந்த அளவுக்கு இல்லேன்னாலும், ஒரு கவுன்சிலரா வந்தாலும் நல்லதுதானே... அவர் என்னை, அப்படி ஆக்கி விடறதா சொல்றாரு; அவருக்கு தான், எம்மேல எவ்வளவு பிரியம் பாத்தியா...''
முறைத்தாள். ''சாப்பிட்டுட்டு வேலைக்கு போற வழியைப் பாருங்க. நாம கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கறது அவருக்கு பிடிக்கல போலிருக்கு; ரொம்ப காலமா இழுத்துகிட்டிருந்த சொத்து சம்பந்தமான வழக்கு, நமக்கு சாதகமா தீர்ப்பாகி, கொஞ்சம் வசதியா இருக்றது அவருக்கு பொறுக்கல.''
''அங்கதான், மாமாவ தப்பா நினைக்கறே, மாமா சல்லி காசு எதிர்பாக்கல. கட்சியில, அவருக்கு இருக்கிற செல்வாக்க வச்சே, என்னை வளர்த்து காட்டுறேன்னு அடிச்சு சொல்றார்.''
''குழந்தை கூட நம்பாது,'' என்று, எழுந்து, சமையலறைக்கு போனாள் சரோஜா.
அவள் பின்னாலேயே போன வேல்ராஜ், ''என்ன பொசுக்குன்னு எழுந்து போறே... நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பத்தி பேசிக்கிட்டிருக்கேன்.''
''ஏங்க... உங்களுக்கே, இது வேடிக்கையா தோணல. மாமாவை பாத்தாராம்... அவர் ஏதோ சொன்னாராம். வந்துட்டிங்க அபிப்ராயம் கேட்க. அவரெல்லாம் ஒரு மனுஷன், அவர் சொல்றதெல்லாம், ஒரு வார்த்தைன்னு கேட்டுகிட்டு வந்திருக்கிங்க பாருங்க. உங்களைச் சொல்லணும். நேத்து வரைக்கும், நல்லாதானே இருந்தீங்க. காசு வந்ததும், சபலமும் சேர்ந்து வருதோ, இன்னொரு தரம் அரசியல், அது இதுன்னு பேசினீங்க...''என்று கூறியவள், பாத்திரங்களை, 'டணார் டிணாரென்று' தரையில் உருட்டினாள்.
''இதெல்லாம் லேடீஸ்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கக் கூடாது வேல்ராஜ். அவங்களுக்கு, என்ன தெரியும் பாவம். சாதிக்கணும்னா, இந்த தடைகளை எல்லாம் தாண்டித்தான் வரணும். தேடி வர்ற வாய்ப்பை, தவறவிடக் கூடாது ராஜா.''
........................................

''அண்ணன் அரசியல்ல கிங் மேக்கர். ஒருத்தரை உசத்தணும்ன்னு முடிவு செய்துட்டா, உசிரைக் கொடுத்தாவது முடிப்பாரு. அவர் உங்களைப் பாக்கறது, குரு பகவான் பாக்கறது மாதிரி. அரசியல்ல, ஒரு பிடி பிடிச்சா எங்கயோ போயிடலாம்ல,'' என்றான், முத்துவுடன் வந்த கலர் வேட்டி.
''பணம் பறிக்கத்தான் நீங்க திட்டம் போடறீங்கன்னு சரோஜா சொல்றா மாமா,'' என்றான் வேல்ராஜ்.
''அடக்கடவுளே...'' கேட்கக் கூடாததை கேட்க நேர்ந்தது போல, காதுகளை பொத்திக் கொண்டார் முத்து.
''வேணாம் தம்பி, எடுத்த எடுப்பில, இப்படி ஒரு சந்தேகம் வந்த பின், நான், உன்னை வற்புறுத்த முடியாது, விட்டுடு,'' என்று, விலகி நடந்தார்.அவரை பின் தொடர்ந்து போனான் வேல்ராஜ்.''அவ சந்தேகப்பட்டால் என்ன மாமா. நான் நம்பறேன் உங்கள. தூண் மாதிரி, நீங்க துணைக்கு இருக்கும் போது, இறங்கி சாதிக்கலன்னா, பின் எப்போ அரசியலுக்கு வந்து, நானும் பெரியாளாகிறது,'' என்று, அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
''சரோஜா, இத ஒரு நல்ல வாய்ப்பாதான், நான் நினைக்கிறேன். மாமா தெளிவா சொல்லிட்டாரு... 'இது நாள் வரைக்கும், உனக்குன்னு ஒண்ணும் செய்யல, படிக்கிற நாள்ல, ஒரு பென்சில் கூட வாங்கித் தந்ததில்ல; உன் குடும்பத்துக்கும், ஒண்ணும் செய்யல. எல்லாத்துக்குமா சேத்து, என் உயிர் போறதுக்குள்ள, உனக்கு ஒரு நல்லது செய்றேன்'னு சொல்றார். அவர் மேல உனக்கு நம்பிக்கை இல்லாட்டாலும், எம்மேல நம்பிக்கை வைக்கணும் நீ,'' என்றான்.
''அரசியல பத்தி உங்களுக்கு என்னங்க தெரியும். எதுக்கு இந்த விபரீத ஆசை.''
'' எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டா, பதவிக்கு வர்றாங்க. நீச்சல் கத்துக்கிட்டா தண்ணியில இறங்குறாங்க. நாலெழுத்து படிச்ச எனக்கு தெரியாதா, நல்லதும், கெட்டதும். உன்கிட்ட சொல்லாம, செய்ய எவ்வளவு நேரமாகும். உனக்கு மரியாதை கொடுக்கணும்ன்னுதானே கேட்டுக்கிட்டிருக்கேன்,'' என்றான் வேல்ராஜ். பேச்சில் கோபம் வெளிப்பட்டது. கணவனை தீர்க்கமாக பார்த்தாள். அவன் திடமாக நின்றான். பெருமூச்சு விட்ட சரோஜா, ''இனி, உங்களை தடுத்து நிறுத்த முடியாது,'' என்றாள்.''அப்படிதான் வச்சிக்க.''
''ஆசை கண்ணை மறைச்சு, அறிவை மழுங்கடிக்குது. இவ்வளவு பேசின மாமா, அவரு ஏன் குறைந்தபட்சம் ஒரு வார்டு மெம்பராகக் கூட ஆகலன்னு கேட்டா, உங்களுக்கு கோபம் வரும். அரசியல் தப்புன்னு சொல்லல; ஆனால், நீங்க நம்பி இறங்கற ஆள் தப்புன்னு சொன்னா, அடிக்கவும் செய்வீங்க. போங்க... ஆனா, ஒரு வேண்டுகோள்... அதுவும், நீங்க எனக்கு மரியாத கொடுக்கறீங்கன்னு சொன்னதால கேட்கறேன். அதை மட்டும் செய்ங்க. அதுக்கு பின், நீங்க செய்ற எந்த செயலுக்கும், குறுக்கே நிற்க மாட்டேன்,'' என்று கூறியவள், அது என்ன வேண்டுகோள் என்பதையும் சொன்னாள்...
''பத்து நாளைக்கு, உங்க கை பணம் சல்லிக்காசு செலவழிக்கக் கூடாது.
பின்னால கொடுக்கிறேன்னோ, மொத்தமா தர்றேன்னோ வாக்கு கொடுக்க கூடாது. நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எந்த செலவுக்கும், பொறுப்பெடுத்துக்காதீங்க. பணம் பத்தி பேச்சு வரும்போது, வாயை இறுக்கமா மூடிக்குங்க. முத்து மாமாவும், மத்தவங்களும் எப்படி நடந்துக்கறாங்க; உங்கள எப்படி நடத்துறாங்கன்னு பாருங்க. பணம் கிடைக்காத நிலையிலும், அவங்க எதிர்பார்ப்பில்லாம வேலை செய்தாங்கன்னா, பதினோராம் நாள்ல இருந்து, நீங்க, முழு நேர அரசியல்ல இறங்கிடுங்க,'' என்றாள்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒற்றை அறையில், கட்சியின் மாவட்ட கிளை அலுவலகம். பெஞ்சில் உட்கார்ந்து, பழைய பேப்பரை பார்த்துக் கொண்டிருத்தார் முத்து. அவர் சகாக்களும், வழிமேல் விழி வைத்து வேல்ராஜை எதிர்பார்த்திருந்தனர். மழைக்கு கூட, அந்தப் பக்கம் ஒதுங்கியிராத வேல்ராஜ், கூச்சத்துடன் வந்து சேர்ந்தான். கரகோஷத்துடன் வரவேற்று, நாற்காலியில் உட்கார வைத்தனர். டீக்கு சொல்லியனுப்பினார் முத்து. டீயுடன் சிகரெட்களும் வந்தன.''எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை,''என்று கூறி, அவற்றை தவிர்த்தான் வேல்ராஜ்.
அவர்கள் குடித்தனர்; புகைத்தனர்.
''வந்துட்டேல்ல, இனி உனக்கு நல்ல காலம்தான். நாளைக்கே, வட்டச் செயலர் இங்க வர்றார்; எல்லாம்... உன்னைப் பாக்கத்தான். உன்னை பத்தி சொன்னதும் அசந்து போயிட்டார் போ,'' என்றார் முத்து. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து, கிளம்பும் போது, கலர் வேட்டியும், துண்டும் கொடுத்து, ''கட்சிக்காரனாயிட்டேங்கறதுக்கான அடையாளம் இது; தினமும் கட்டிக்க,'' என்றார்.
மறுநாள், அவர் கொடுத்த துணிகளை உடுத்திக் கொண்டு போனான். ''அடடா... ஒரு தோரணையே வந்துட்டுது போ,'' என்றவர், தன் சகாக்களை நோக்கி, ''இப்ப வேல்ராஜ பாக்றதுக்கு எப்படி இருக்கான்,'' என்று, கேட்டார்.
''மினிஸ்டர் மாதிரி இருக்காருண்ணே. அண்ணே... டீ சொல்லவா,'' என்றான் ஒருத்தன்.
''டிபனே சொல்லு; ஸ்வீட்டும் சேர்த்துக்கோ. வேல்ராஜ் கட்சியில சேந்துட்டதை நேத்தே கொண்டாடியிருக்கணும். இதுவே லேட்,'' என்றார். புறப்பட்ட ஆள், முத்துவின் காதில் என்னமோ கிசுகிசுத்தான்.
''அதெல்லாம் பாத்துக்கலாம் போ,'' என்று அனுப்பிவிட்டு, வேல்ராஜிடம், ''கட்சி ஆபீசுன்னா இந்த மாதிரி சின்னச் சின்ன செலவுகள் இருக்கும். டீயும், சிகரெட்டும் இல்லாம, ஒரு வேலையும் ஓடாது. அப்பப்ப கொஞ்சம் டிபன், சாப்பாடுன்னு கவனிக்கணும். ஏன்னா, நமக்கு வேலை செய்ய வந்தவங்க பாரு,'' என்றார். ''அது சரி,'' என்று தலையாட்டிக் கொண்டவன்,
''வட்டச் செயலாளரு வருவாருன்னிங்க,'' என்றான் வேல்ராஜ்.''அவருக்கு மேலிடத்திலிருந்து அழைப்பு; அதனால் என்ன, நாளைக்கு... நாம நேரிலயே போயிடுவோம்,'' என்றார்.அடுத்த நாள், 'போலாமா' என்று, கேட்டபடி வந்தான் வேல்ராஜ். ''அவர் வீட்டுக்கு வெறுங்கையோடு போக முடியாது. பூமாலை, பரிசுப் பொருள், கூட பத்து பேர்ன்னு ஒரு டாக்சியில போய் இறங்கினாதான், ஒரு கெத்தா இருக்கும். வண்டிக்கும் சொல்லியாச்சு; பணம் ஏதும் வச்சிருக்கியா... சும்மா ஆயிரம் இருந்தாக் கூட போதும்,'' என்று கேட்டார்.
''கொண்டு வரலையே...'' என்றான். அன்றைய பயணம் ரத்தாகி விட்டது.
அடுத்தடுத்து, அவன் வெறும் கையுடனே ஆபீஸ் பக்கம் போனான்.
''என்னப்பா நீ, ஒரு ஜாடை காட்டினால், சட்டுன்னு புடிச்சுக்க வேணாமா... சில்லரை செலவுகளுக்காவது, தயாராகி வர வேணாமா... என்னை விடு. உனக்காக, நான் பட்டினியா கூட வேலை பாப்பேன். மத்தவங்களை கொஞ்சமாவது கவனிக்க வேணாமா, உன்னை என்ன லட்சம், கோடியா கொண்டாரச் சொல்றேன்.
''நூறு, இருநூறு கூட இல்லைன்னா எப்படி... அவனவன் பெரிய ஆளா வரணும்ன்னு, பணத்தை தண்ணியா இறைச்சுக்கிட்டிருக்கான். நீ இப்படி தயங்கறியே... இப்ப நீ செலவழிக்கறது எல்லாம், விதை போடற மாதிரி. எதிர் காலத்துல, ஒண்ணுக்கு பத்தா விளையும். புரிஞ்சுக்க,'' என்றார்.
''நீங்க தானே ஒண்ணும் செலவழிக்க வேணாம்ன்னு சொன்னீங்க.''
''ஒரு பேச்சுக்கு சொல்றதுதான். உனக்கு விவரம் போதலை; நீயெல்லாம் அரசியலுக்கு லாயக்கில்ல,'' என்றவர், ''நாளைக்காவது, எதனா தேத்திட்டு வா,'' என்று சிடுசிடுத்தார். தலையாட்டிக் கொண்டு வந்தான். ஆனாலும், மறு நாளும், சும்மா தான் போய் நின்றான்.
''வௌங்காத பயலா இருக்கானே... ஒரு டீ, டிபனுக்கு கூட செலவழிக்காதவனை வச்சுகிட்டு, நாக்கு வழிக்க வேண்டியதுதான்,'' என்று, அவன் காது பட முணுமுணுத்தபடி, நழுவினார் முத்து.
அடுத்து வந்த நாட்களில், ஒவ்வொருவராக ஒதுங்கி போயினர். பின், வேறு ஒரு நபரை வளைத்து பிடித்து, 'நீங்ககௌல்லாம் எங்கயோ இருக்க வேண்டியவங்க... சொல்லுங்க. உங்களை மேலே கொண்டு வந்துடறோம்...' என்று, வலை வீசிக்கொண்டிருந்ததை பார்த்தபோது, வேல்ராஜுக்கு முகத்தில், தண்ணீர் வாரியடித்தது, போல் விழிப்பு வந்தது.
மாமா கொடுத்த கலர் வேட்டியை, துவைத்து, மடித்து கொண்டு போய் கொடுத்துவிட்டு, தன் வேலையை கவனிக்கத் துவங்கினான் அவன்.
படுதலம் சுகுமாரன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1