ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று....!

+7
சிவா
ரா.ரா3275
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
கிருஷ்ணா
விமந்தனி
11 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty வரலாற்றில் இன்று....!

Post by விமந்தனி Mon May 05, 2014 11:10 pm

First topic message reminder :

1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற
பெயருடனிருந்த இயக்கத்திற்கு
தமிழீழ விடுதலைப் புலிகள்
என்று பெயர் மாற்றப்பட்டது.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by விமந்தனி Tue Jun 10, 2014 12:01 am

வரலாற்றில் இன்று....! - Page 6 H9j3kQnSbW1fJEGw76zQ+June-10

1190 - மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.

1786 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.

1801 - சிவகங்கையின் சின்னமருது "ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்" என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.

1838 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேய குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1846 - கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.

1886 - நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேஎர் கொல்லப்பட்டனர்.

1898 - அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: நோர்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.

1944 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.

1945 - ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.

1956 - இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1967 - இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1984 - தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக
இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.

1986 - யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 - இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.

1996 - வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1998 - முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.

1999 - கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.

2003 - நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

2006 - ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.


வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by விமந்தனி Wed Jun 11, 2014 12:01 am

வரலாற்றில் இன்று....! - Page 6 1Iu5PG0BTpupMvPKu84t+June-11

1774 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

1788 - ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.

1805 - மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1837 - பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.

1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.

1935 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.

1937 - சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1938 - இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: ஜப்பானியப் படைகளை எதிர் கொள்ள சீன அரசு மஞ்சள் ஆற்றை பெருக்கெடுக்க விட்டதில் 500,000 முதல் 900,000 வரையான பொதுமக்கள்
கொல்லப்பட்டனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் இத்தாலியில் ஜெனோவா மற்றும் டூரின் நகர்கள் மீது குண்டுகளை வீசின.

1940 - இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.

1963 - தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.

1981 - ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.

2002 - அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.

2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.

2007 - கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.


வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by ஜாஹீதாபானு Wed Jun 11, 2014 3:15 pm

தொடர் பகிர்வுக்கு நன்றீ விமந்தினி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by விமந்தனி Wed Jun 11, 2014 10:46 pm

ஜாஹீதாபானு wrote:தொடர் பகிர்வுக்கு நன்றீ விமந்தினி


ஆதரவிற்கு நன்றி பானு.


வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by விமந்தனி Thu Jun 12, 2014 12:02 am

வரலாற்றில் இன்று....! - Page 6 V1X2LaUQP2OpAK7XHLsF+June-12

1429 - நூறாண்டுகள் போர்: ஜோன் ஒஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.

1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய இராணுவத் தளபதி தொமஸ் கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

1830 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.

1898 - பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1899 - ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநீலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 117 பேர் கொல்லப்பட்டனர்.

1902 - ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

1934 - பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.

1935 - பொலீவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் ஜெர்மனியரிடம் சரணடைந்தனர்.

1943 - நாசி ஜெர்மனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.

1964 - தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.

1967 - சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1987 - மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.

1990 - ரஷ்யக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ரஷ்யாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.

1991 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.

1991 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1998 - லெப்டினண்ட் கேணல் திருவடி நினைவுநாள்.

1999 - நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.

2003 - தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.

2005 - அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில்
உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.

2006 - கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.

2006 - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.


வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by ஜாஹீதாபானு Thu Jun 12, 2014 5:48 pm

தகவலுக்கு நன்றி விமந்தினி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by விமந்தனி Thu Jun 12, 2014 11:49 pm

ஜாஹீதாபானு wrote:தகவலுக்கு நன்றி விமந்தினி

தொடர் பின்னூட்டத்திற்கு நன்றி பானு. நன்றி


வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by விமந்தனி Fri Jun 13, 2014 12:00 am

வரலாற்றில் இன்று....! - Page 6 GOOTy657QmKdBCYDM6Hd+June-13

1871 - லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1881 - ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

1886 - பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.

1886 - பாவாரியாப் பேரரசன் இரண்டாம் லுட்விக் மியூனிக்கின் ஸ்டார்ன்பேர்க் ஆற்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டான்.

1917 - முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.

1925 - சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.

1934 - ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பறக்கும் குண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.

1948 - ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1948 - மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.

1952 - சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.

1955 - சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1978 - இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்.

1981 - லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளைத் தீர்த்தான்.

1983 - பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.

2006 - நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.

2007 - திருகோணமலையில் மேர்சி கோப்ஸ் என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.


வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by விமந்தனி Sat Jun 14, 2014 12:02 am

வரலாற்றில் இன்று....! - Page 6 Pjhe6LYTyKOHVx5q3bjA+June-14

1789 - பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.

1800 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.

1807 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் போலந்தின் பிரீட்லாந்து என்ற இடத்தில் ரஷ்யப் படைகளுடன் மோதி வெற்றி பெற்றனர்.

1821 - வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.

1846 - கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.

1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.

1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1931 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.

1940 - போலந்தின் 728 போர்க் கைதிகள் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.

1941 - அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.

1941 - எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியம் நாட்டை விட்டு அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.

1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

1967 - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.

1967 - மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1982 - போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.

1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.


1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.

2002 - கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.

2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2007 - காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.


வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by விமந்தனி Mon Jun 16, 2014 4:48 pm

வரலாற்றில் இன்று....! - Page 6 NmSjSF0aRq6ZmtRH3gjS+June-15

கிமு 763 - மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள் பதிந்தார்கள்.

923 - பிரான்சின் முதலாம் ரொபேர்ட் மன்னன் கொல்லப்பட்டான்.

1184 - நோர்வேயின் ஐந்தாம் மாக்னஸ் மன்னன் ஃபிம்ரெயிட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.

1246 - இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் ஆஸ்திரியாவின் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.

1389 - கொசோவோவில் இடம்பெற்ற சமரில் ஒட்டோமான் படைகள் செர்பியர்களையும், பொஸ்னியர்களையும் தோற்கடித்தனர்.

1667 - சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்ற பிரெஞ்ச் மருத்துவர் முதன் முதலில் மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார்.

1752 - மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.

1775: அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார்.

1808 - ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னனாக முடி சூடினான்.

1836 - ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்காவின் 25வது மாநிலமானது.

1844 - இறப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.

1846 - இலங்கையின் ரோயல் ஏசியாட்டிக் சபை என்ற அமைப்பு தனது முதலாவது இதழை வெளியிட்டது.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பீட்டர்ஸ்பேர்க் நகர் அமெரிக்கப் படைகளின் முற்றுகைக்குள்ளானது.

1904 - நியூ யோர்க்கில் ஜெனரல் ஸ்லோகம் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1021 பேர் கொல்லப்பட்டனர்.

1911 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1938 - பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சாய்ப்பான் தீவை கைப்பற்றினர்.

1954 - ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கூட்டமைப்பு யூஏஃபா சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது.

1984 - யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கையின் கடல் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1996 - ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில்
200 பேர் காயமடைந்தனர். நகரின் மத்திய பகுதி பெரும் சேதத்துக்குள்ளானது.

2007 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.

2009 - ரிச்மண்ட் ஹில் முருகன் கோவில் கொடியேற்றம்.

2009 - ஸ்காபோரோ பெரிய சிவன் கோவில் தீர்த்தம்.


வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று....! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று....! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று....! - Page 6 Empty Re: வரலாற்றில் இன்று....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum